PDA

View Full Version : உன் நினைவில் - என் வாழ்க்கை



நம்பிகோபாலன்
26-05-2008, 05:56 AM
சந்தோஷத்தில்
எழுத எண்ணும் பொழுதெல்லாம்
நம் இருவரும் சேர்ந்திருந்த
பொழுதுகள் மேலோங்கி
நினைவில் நிழலாடி போகிறது
சுகமான நேரங்கள்
மனதில் சந்தோஷ சுமையாகி
இனிமையாகவே செல்கிறது
வாழ்க்கை

உன்னில் நான் தொலைந்து
போனதும்
உன்னை தொலைத்த பொழுதும்
வாலிப வாழ்கையின்
விடுகதை இருவருக்குமே
விடை தெரியாமல்
போன விசித்திரத்தை
இன்றும் நினைக்கும்
பொழுது சிரிப்புடன்
கலந்த விழியோர நீர்
இனிக்குதடி…

என்றேனும்
நாம் நடந்த
பாதச்சுவடுகள்
கடற்கரையில்
உனக்கு தென்பட்டால்
உன் நினைவில்
நான் வாழ்வது
உன் உணர்வுகளில்
உறுதியாகிபோகட்டும்
என்றும் உன் நினைவில்
மட்டுமே வாழும்…….

Narathar
27-05-2008, 05:41 PM
மனது
உங்களுக்கு மட்டுமல்ல
அவளுக்கும் உண்டு
உங்கள் காதல்
உண்மையெனில் அவள்
வருவால் உண்மையினில்