PDA

View Full Version : கொழும்பு 2019மயூ
24-05-2008, 07:21 PM
இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே... என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்........... என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்... தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.


பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம்.

அமரன்
24-05-2008, 08:16 PM
சிறிய ஓய்வின் பின்னர் மயூவின் சிறுகதைப் படையல். வழக்கம் போலவே தொய்வில்லாத நடை. மனதில் பதியும் எளிய கட்டமைப்பு. பாராட்டுக்கள் மயூ..

வயிற்றின் பசிக்கு மனித உயிர்கள் பறிக்கப்படுவதை, செய்திகளிலும், ஆவணப்படங்களிலும் பார்த்து வேதனைப்பட்டிருக்கின்றேன். நம் நாட்டிலும் அந்நிலை எனும்போது வேதனை அதிகமாகிறது.

இலங்கையின் மொத்த வருமானத்தின் பெரும்பகுதி யுத்தத்திற்கு இரையாகிறது. வறுமை மக்களை வதைக்கிறது. யுத்தத்தின் பிடி நீடித்தால், நீங்கள் சொல்வது நிச்சயம் நிகழும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாகரிகம் வளராத, காட்டு மிராண்டிகள் வாழ்ந்த காமலென சரித்திரம் சொல்லும் காலங்களில் கூட நிகழாத ஒன்று, நாகரிகத்தின் உச்சவளர்ச்சிக் காலத்தில் நிகழ்கிறது.. நிகழப்போகிறது.. உணர்ந்து செயல்படுவோர்தான் யாருமில்லை.

நெளிந்த இன்டிக்கா கார்.. கைத் துப்பாக்கி.. காதில் தோடு. கண்ணிமையில் வளையம்.. பகட்டான இளைஞர்களின் வாழ்க்கை. உணவுக்காக சந்தியாவைக் கொன்றார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது சிரமமாக உள்ளது.

இலங்கையில் ஆண்களின் வக்கிர வயசுக்கோளாறால் பெண்கள் பாதிக்கப்படுவது பொதுவானது. தமிழினப் பெண்கள் எனில் பெரும்பாலும் இனவெறியால் சிதைக்கப்படுவர்.

சந்தியா என்பது தமிழுக்கும் சிங்களத்துக்கும் பொருந்தும் பெயரானாலும், சந்தியாவை தமிழாகவும், இளைஞர்களை இனவாத சிங்களவர்களாகவும் உருவப்படுத்த தோன்றுகிறது.

படித்ததும் பிறந்தவற்றை சொல்லி விட்டேன்.. தவறெனில் மன்னியுங்கள்.

ஓவியன்
25-05-2008, 02:09 AM
இந்தக் கதையில் வரும் பாண் என்றால் “பிரெட்” என்பதை நான் கூறியே ஆகவேண்டும். ஏனென்றால் இலங்கையில் மட்டும் தான் 'பாண்' என்ற சொற்பிரயோக பாவிக்கப் படுகிறது....

1995 ஆம் ஆண்டு பாணின் விலையை 4 ரூபாவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதே அரசாங்கத்தின் ஆட்சியில் இன்று பாணின் விலை சுமார் 40 ரூபா...!!!

இதனை விட வேறு என்ன வேண்டு, மயூவின் கதைக் கருவின் யதார்த்தத்தை உணர்த்த.......! :frown:

அன்புரசிகன்
25-05-2008, 03:02 AM
ஒருகணம் நெஞ்சு விறைத்தது.. இந்த கதையின் கடைசிக்கு முதல் வசனத்தை படித்தவுடன்...... இன்னும் அந்த படபடப்பு உள்ளது........ இந்தக்கதையில் கற்பனையிலும் நிஜம் விஞ்சி நிற்பதுதான் மனதிற்கு வேதனை.....


இந்தக் கதையில் வரும் பாண் என்றால் “பிரெட்” என்பதை நான் கூறியே ஆகவேண்டும். ஏனென்றால் இலங்கையில் மட்டும் தான் 'பாண்' என்ற சொற்பிரயோக பாவிக்கப் படுகிறது....

1995 ஆம் ஆண்டு பாணின் விலையை 4 ரூபாவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதே அரசாங்கத்தின் ஆட்சியில் இன்று பாணின் விலை சுமார் 40 ரூபா...!!!

இதனை விட வேறு என்ன வேண்டு, மயூவின் கதைக் கருவின் யதார்த்தத்தை உணர்த்த.......! :frown:

அண்ணோய்................. இதெல்லாம் போன வருசக்கதை... இப்போது றோயல் பேக்கரியில் ஜெயசூரியாவின் துடுப்பாட்டம் போல் செஞ்சரி போட்டுட்டுது...

Narathar
25-05-2008, 03:20 AM
வயிற்றுக்கு பாண் (ரொட்டி ) கிடைக்கிறதோ இல்லையோ உடைந்த இண்டிகா காரிலாவது வர இன்னும் பத்து வருஷத்தில் பெட்ரோல் கிடைக்குமா என்பதுதான் இன்னொரு சந்தேகம்.....

இன்றைய பெற்றோல் விலை 157
டீசல் விலை 120 அளவில் நாராயணா!!!!!

ஓவியன்
25-05-2008, 03:31 AM
அண்ணோய்................. இதெல்லாம் போன வருசக்கதை... இப்போது றோயல் பேக்கரியில் ஜெயசூரியாவின் துடுப்பாட்டம் போல் செஞ்சரி போட்டுட்டுது...

அடடே அண்மித்த நேர்முக வர்ணனை எனக்குக் கிடைக்காம போயிற்றே...!! :D

விகடன்
25-05-2008, 04:45 AM
ஒருநாள் என்ன ஒரு நாள் மயூ..
இது இப்பவும் நடக்கின்றது. தோடு குத்தியவர்கள் இல்லை. ஆனால் தோட்டாவோட அலைபவர்கள்தான்.
கற்பை சூறையாடாமல் விட்டனரே..................

நாடு போகும் போக்கைப் பார்த்தால் ஒருவன் உழைத்து வாழ்க்கை நடத்த முடியாதுதான். ஒரு காலத்தில் பறித்து தின்று வாழவேணடிவரும். அப்போது மற்றவர் பிணங்களில் சிலர் உயிர்வாழ்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை. நல்லதொரு விழிப்புணர்ச்சி கதை. ஆனால் உரியவர்களைத்தான் சென்றடையாது :D

ஓவியன்
25-05-2008, 04:47 AM
வயிற்றுக்கு பாண் (ரொட்டி ) கிடைக்கிறதோ இல்லையோ உடைந்த இண்டிகா காரிலாவது வர இன்னும் பத்து வருஷத்தில் பெட்ரோல் கிடைக்குமா என்பதுதான் இன்னொரு சந்தேகம்.....

இன்றைய பெற்றோல் விலை 157
டீசல் விலை 120 அளவில் நாராயணா!!!!!

உண்மைதான் நாரதரே, இலங்கையின் இன்றைய செய்தி இது...


இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் உயர்த்தப்படுகின்றன.

இதன்படி பெற்றோல் ஒரு லீற்றர் 30 ரூபாவால் உயர்த்தப்படுகிறது. இதன் அடிப்படையில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 157 ரூபாவாகும்.

டீசல் 30 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் டிசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 110 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது எனப் பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ எச் எம் பௌசி தெரிவித்திருந்த நிலையிலேயே 24 மணித்தியாலங்களுக்குள் இந்த விலையுயர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன


மூலம் - தமிழ்வின் (http://www.tamilwin.com/view.php?2a36QVH4b3dj9Eq34d0IWnL2b02R7GQb4d3aOpD4e0dfZLukce0cg2h32ccebj0M2e)

மயூ
25-05-2008, 09:57 AM
அமரன் நீங்க கூறியவை அனைத்தும் சரி...
ஒரு விடயத்தை நான் சரிவரக் கூறவில்லை என்று நினைக்கின்றேன். அதாவது நான் கடுக்கன் குத்திய இளைஞர்களாய் சித்தரித்தது, மேட்டுக்குடி இளைஞர்களை அல்ல.. வீதியில் கிடைத்தை அபகரித்து வாழும் ஒரு கூட்டம். உதாரணமாக எங்காவது கலவரம் நடக்கும் போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கடைகளில் புகுந்து கொள்ளைபோடம் கயவர்களைக் கண்டதில்லையா.. அப்படியானவர்களை மனதில் வைத்து கதையை எழுதினேன். தமிழ் சிங்களம் என்று நான் நினைத்து எழுதவில்லை.. அப்படி ஒரு தோற்றம் வரக்கூடாது என்பதற்காகத்த்தான் அப்படியான ஒரு பொதுவான பெயரைப் பாவித்தேன்.

ஓவியன் அவர்களே இலங்கை அரசியலில் பாண் விலை மிக முக்கியமான ஒரு விடையமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இம்முறை பாண்விலை பல மடங்கு உயர்ந்தும் சிங்களவர்கள் அவ்வளவாக கொதிப்படையவில்லை காரணம் யுத்தத்தில் பெரும் வெற்றியீட்டுவது போலத் தெரியும் ஒரு மாயை!

விராடன் அனபு இருவருக்கும் கருத்துக்களுக்கு நன்றி!!!

ஓவியன்
25-05-2008, 10:01 AM
ஓவியன் அவர்களே

மிகுந்த வருத்தத்துடன்..... :frown: :frown: :frown:

மயூ
25-05-2008, 10:10 AM
மிகுந்த வருத்தத்துடன்..... :frown: :frown: :frown:
அப்ப.. இப்படி கூப்பிடலாமா? ஓவியன் ஐயா இல்லாட்டா ஓவியன் தாத்தா!!!!
எல்லாம் திருமணம் செய்திட்டீங்க... நாங்க இன்னும் பச்சைப் பாலகர்கள்... வேற எப்படிக் கூப்பிடுறதாம்!!!!

ஓவியன்
25-05-2008, 10:12 AM
நாங்க இன்னும் பச்சைப் பாலகர்கள்.!!!!

உது பச்சைப் பொய்..!! :lachen001:

மயூ
25-05-2008, 10:18 AM
உது பச்சைப் பொய்..!! :lachen001:
அது சரி.. இனி பச்சப்பொய், சிவப்புப் பொய என்டு எத்தனை வகைகளை சொல்லப்போறீங்க???
நாங்க இன்னும் பச்சப் குழந்தைகள்... நம்பாட்டி நம்மள நேரில பார்த்து இரத்தக் கண்ணீர் விட்ட அன்பை கேட்டுப்பாருங்க

சுட்டிபையன்
25-05-2008, 10:21 AM
மயூ கதை சாறி நிஜம் நல்லா இருக்கு

ஓவியன்
25-05-2008, 10:21 AM
நம்பாட்டி நம்மள நேரில பார்த்து இரத்தக் கண்ணீர் விட்ட அன்பை கேட்டுப்பாருங்க

உங்க பாட்டியை நேரிலே பார்த்து அன்பு இரத்தக் கண்ணீர் வடித்தாரா...??? :D

என்ன கொடுமை இது மயூ..!! :aetsch013:

அமரன்
25-05-2008, 03:51 PM
நெளிந்த இன்டிக்கா எனும்போதே, கலவரத்தில் களவாடிக காராக இருக்குமென உணர்ந்தேன். அந்த உணர்வை கதையின் எதார்த்தமும் எளிமையும் பிந்தள்ளிவிட்டன. நன்றி மயூ..

Keelai Naadaan
25-05-2008, 03:56 PM
கதையை படித்தேன். நண்பர்களின் கருத்துகளையும் படித்தேன். மனம் வேதனை படுகிறது.
யுத்தம் விரைவில் ஓயட்டும்

விகடன்
25-05-2008, 04:34 PM
யுத்தம் விரைவில் நிரந்தரத் தீர்வை நாடட்டும்

logini
26-05-2008, 05:36 AM
மயூ இன்னும் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ இது நடக்க போகின்றது.

SivaS
01-06-2008, 04:00 AM
இன்றய இலங்கை தமிழரின் நிலை தமிழர் யாவர்க்கும் தெரிந்ததே ஆனால் வெளி நாட்டு அரசுகள் இதை உணர முடியவில்லயா இல்லை உணர மறுக்கின்றனவா?

shibly591
01-06-2008, 04:33 AM
நல்ல கதை மயூ..லோஜினி சொன்னதைப்போல விரைவிலேயே இது நடக்கக்கூடும்.