PDA

View Full Version : ஒலிம்பிக் 2008 பீஜிங்க்



சுட்டிபையன்
24-05-2008, 01:07 PM
2008ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் திருவிழா ஆரம்பமாக இன்னமும் 75 நாட்களே உள்ளன அவை பற்றிய செய்திகளை இங்கே தொடராக பதிவோம்


ஒலிம்பிக் போட்டிக்கான உத்தியோகபூர்வ ஆங்கில இணையத்தளம்
(http://en.beijing2008.cn/)

http://www.ellusion.be/blog/wp-content/uploads/2007/12/beijing-olympic-2008.jpg

அமரன்
24-05-2008, 01:10 PM
வா ராசா வா..
காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க நினைக்க,
வருகைப்பதிவேட்டில் உனது பெயர் இருக்க...
கொள்ளைகொள்ளும் உனது பதிவுகள் அழைக்க...
நான் ஓடோடி வந்தேன் படித்து சுவைக்க..

மன்றத்தில் யாருக்கும் ஒலிம்பிக் காய்ச்சல் தொற்றலையோன்னு நினைச்சேன். உனக்கு தொற்றி இருக்கு.
உன் மூலம் என்னைப் பிடித்த ஜுரம், மன்றத்தில் இனி வேகமாகப் பரவிடும்.

சுட்டிபையன்
24-05-2008, 01:26 PM
வா ராசா வா..
காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க நினைக்க,
வருகைப்பதிவேட்டில் உனது பெயர் இருக்க...
கொள்ளைகொள்ளும் உனது பதிவுகள் அழைக்க...
நான் ஓடோடி வந்தேன் படித்து சுவைக்க..

மன்றத்தில் யாருக்கும் ஒலிம்பிக் காய்ச்சல் தொற்றலையோன்னு நினைச்சேன். உனக்கு தொற்றி இருக்கு.
உன் மூலம் என்னைப் பிடித்த ஜுரம், மன்றத்தில் இனி வேகமாகப் பரவிடும்.

அமரா நான் எப்போ, எங்கே, எப்படி வருவேணு யாருக்கும் தெரியாது ஆனால் வரவேன்டிய நேரத்துக்கு வர வேன்டிய இடத்துக்கு வந்துடிவம்லோ.

அதுதான் சு... சு... சுட்டீஈஈஈஈஈ..............:icon_rollout:

சுட்டிபையன்
24-05-2008, 01:49 PM
ஒலிம்பிக் தீபம் ஏதன்ஸிலிருந்து பீஜீங்க்க்கு சென்ற பாதை
http://www.meyul.com/wp-content/blogs.dir/1/files/torchroute/torch-route.jpg
http://www.mercopress.com/ImgNoticias/Olimpic-route.jpg
http://www.qbtpl.net/images/Olympic_Torch_Route_Map.jpg

அமரன்
24-05-2008, 01:50 PM
அடங்கு ராசா அடங்கு.. அவரே அடங்கிட்டார்..

சுட்டிபையன்
26-05-2008, 07:17 AM
ஒலிம்பிக் என்றால் என்ன பொருள் என்பது உங்களுக்குத் தெரியுமா?"இளைஞர்களும் சமாதானமும்"என்பதுதான் பொருள். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், பல்வேறு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்திய நகரங்களும் இளைஞர்கள்மீதான கல்வியிலும் செல்வாக்கிலும் எப்பொழுதும் கவனம் செலுத்திவருகின்றன. இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சியை பரப்புவதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. 2008ஆம் ஆண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் முறையாக சீனாவில் நடைபெறும். சீனாவில் குறிப்பாக பெய்சிங்கில் இளைஞர்களிடையில் ஒலிம்பிக் எழுச்சி பற்றிய கல்வி எப்படி நடத்தப்பட்டு வருகின்றது என்பதை இப்பொழுது அறியலாம்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டு கமிட்டியும், சீனக் கல்வி அமைச்சகமும் "2008ஆம் ஆண்டு பெய்சிங்கின் துவக்கநிலை மற்றும் இடைநிலை பள்ளிக்கூட மாணவர்களுக்கான கல்வி பற்றிய திட்டத்தை"கூட்டாக வகுத்து, பெய்சிங் வட்டாரத்திலுள்ள 20 ஒலிம்பிக் கல்விக்கான மாதிரி பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டன. இந்த பள்ளிக்கூடங்களில் பெய்சிங் 9வது பள்ளிக்கூடம் இடம்பெறுகின்றது. இந்த பள்ளிக்கூடத்தில் ஒலிம்பிக் கல்வி எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றி மாணவர்கள் வருமாறு கூறுகின்றார்கள்-



"ஒவ்வொரு வாரமும் தேசியக் கொடி ஏற்ற விழா"நடைபெறுவது வழக்கம். முன்பு விழா நடைபெறும் போது, தேசியக் கொடியின் கீழே உரை நிகழ்த்த வேண்டும். இப்பொழுது, இதை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுடன் இணைத்து, ஒலிம்பிக் அறிவுப் பற்றிய உரையை மாணவர்கள் நிகழ வேண்டும். வாரத்துக்கு ஒரு வகுப்பு ஒரு முறை. அனைவரும் உரை நிகழ்த்தும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு, நாங்கள் ஒலிம்பிக் பற்றிய அறிவை சேகரிக்க வேண்டும். இதன் மூலம், ஆசிரியர் மாணவர்களுக்கு நேரடியாக பாடம் சொல்லிக்கொடுப்பதைவிட மேலும் அதிக அறிவை பெறலாம். அத்துடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு கூட்டம் நடைபெறும் போது, இது பற்றிய கல்வியும் நடத்தப்படும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

உரை நிகழ்த்துவதை தவிர, ஒலிம்பிக் அறிவுப் போட்டிக்கான பல ஒலிம்பிக் கல்வி நடவடிக்கைகள் நடைபெறும். இந்த நடவடிக்கைகள் மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய அறிவை மாணவர்கள் அறிந்து கொள்வதோடு, விளையாட்டுகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் மேலும் ஆர்வம் கொண்டுள்ளனர். மேலும் முக்கியமானது என்னவென்றால், அவர்கள் ஒலிம்பிக் எழுச்சியின் சில முக்கிய அம்சங்களை படிப்படியாக கிரகித்துகொள்ளலாம். செங் மொங் என்பவர், 9வது பள்ளிக்கூடத்தில் ஒரு சாதாரன மாணவர், அவர் செய்தியாளரிடம் கூறியதாவது-

ஒலிம்பிக் விளையாட்டுகளின் எழுச்சியில், எங்களுக்கு தெரிந்த சில அறிவை தவிர, எங்களின் அன்றாட படிப்பு மற்றும் வாழ்க்கையும் இந்த அறிவை பிரதிபலிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, "மேலும் உயரம், மேலும் வேகம், மேலும் வலிமை"என்பது, ஒருவரின் சுய நம்பிக்கையைப் பிரதிபலிக்க வேண்டும். போன முறை நான் நிகழ்த்திய உரையின் தலைப்பு "சவாலை எதிர்நோக்கிய எனக்கு துணிவு உண்டு"என்பதாகும். எனது துணிவு என்றால், இன்னல்களையும் சவாலையும் எதிர்நோக்க துணிவைக் கொண்டுள்ள நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்பதாகும் என்றார்.


9வது இடைநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஒலிம்பிக் கல்வியில் பெற்றுள்ள உணர்வை, தமது நடவடிக்கைகளில் வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, பள்ளிகூடத்தின் சுற்றுப்புற தூய்மையில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்துகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் மேலும் அக்கறையை அதிகரித்துள்ளனர். முன்பைவிட மேலும் அதிகமான நேரத்தை விளையாட்டுகளில் செலவழிகின்றனர்.

9வது பள்ளிக்கூடம் தவிர, இதர ஒலிம்பிக் கல்வி மாதிரி பள்ளிகூடங்களும் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். பெய்சிங் மாநகரின் சுங்வென் பகுதியிலுள்ள குவாங் சி மென் பள்ளிக்கூடத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் உருவாக்கப்பட்ட பத்து மீட்டர் உயரமுடைய 4 ஒலிம்பிக் பண்பாட்டு சுவர்கள் ஒலிம்பிக்கின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை விளக்கிக் கூறுகின்றன. ஹைதியன் பகுதியிலுள்ள யாங் பாங்தியன் மைய துவக்கப் பள்ளிகூடத்தில் உள்ள சிறு மாணவர்கள் ஒரு வகுப்பு, ஒரு நாடு என்ற வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மாதிரியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெய்சிங் மாநகர அரசின் கல்வி கமிட்டிக்கு இன்னொரு திட்டம் உண்டு. அதாவது, பெய்சிங்கிலிருந்து 200 பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பை உருவாக்குவதாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, இந்த பள்ளிக்கூடங்கள் அதனதன் தொடர்பு நாட்டிடம் அல்லது பிரசேதத்திடம் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்த பள்ளிக்கூட மாணவர்கள் உரிய பிரதிநிதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு, அவர்களின் போட்டிகளைப் பார்வையிடுவார்கள்.

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி மற்றும் சீனக் கல்வியமைச்சகத் திட்டத்தின் படி, ஒலிம்பிக் பற்றிய கல்வி இவ்வாண்டு முழு சீனாவிலும் 40 கோடி இளைஞர்களிடையில் மேற்கொள்ளப்படும். இதற்காக, சீனக் கல்வியமைச்சகம் இவ்வாண்டு நாடு முழுவதிலும் 500க்கும் அதிகமான முன்மாதிரி ஒலிம்பிக் கல்வி பள்ளிக்கூடங்களை நிறுவும்.



அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில் நாடுமுழுவதிலும் இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளி மாணவர்களிடையில், பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், சமூகவியல் ஒலிம்பிக், ஒரே உலகம், ஒரே கனவு என்ற தலைப்பில் ஒலிம்பிக் கல்வியை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கையில், படம் எடுப்பது, ஓவியம் தீட்டுவது, கவிதை, அழகு கையெழுத்துக் கலை முதலிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒழுக்கப் பயிற்சியை நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில், உடல் பயிற்சியில் ஈடுபட்டு, துணிவு எழுச்சியையும் தனி குணத்தையும் வளர்க்க வேண்டும். இதுவே, ஆற்றல் மிக்க புதிய கல்வி அமைப்புமுறையாகும். எனவே, ஒலிம்பிக்கின் முக்கிய அம்சம், கல்வியாகும். இளைஞர்கள் உலகின் எதிர்காலமாவர். ஒலிம்பிக்கின் எதிர்காலமும் அவர்களே. அவர்களிடையில் ஒலிம்பிக் பற்றிய கல்வியை நடத்துவது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 9வது இடைநிலை பள்ளிக்கூடத்தின் தலைவர் மா பௌ செங் கூறியதாவது-

ஒலிம்பிக் கல்விக்கான முன்மாதிரி பள்ளிக்கூடங்களை நிறுவுவதன்மூலம், நாங்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செழுமையான ஒலிம்பிக் கல்வி மரபுரிமை செல்வத்தை தயாரிக்க வேண்டும். சீனாவிற்கும் பெய்சிங்கிற்கும் முழு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் எங்கள் சொந்த பங்கை ஆற்ற வேண்டும் என்றார்.

நன்றி சீன வானொலி

சுட்டிபையன்
26-05-2008, 07:31 AM
http://farm2.static.flickr.com/1064/846090188_7c04670cff.jpg
ஒலிம்பிக் பிரதான விளையாட்டு அரங்கு
http://img26.picoodle.com/img/img26/4/5/26/f_Img21407810m_aabfbe1.jpg
http://img26.picoodle.com/img/img26/4/5/26/f_Img21407810m_71461e9.jpg
http://img26.picoodle.com/img/img26/4/5/26/f_Img21407811m_9de9d7c.jpg
Total land surface: 258,000 sq m

சுட்டிபையன்
26-05-2008, 07:39 AM
http://img32.picoodle.com/img/img32/4/5/25/f_Img21407361m_2e16646.jpg
http://img32.picoodle.com/img/img32/4/5/25/f_Img21407361m_ec5cdd4.jpg
http://img32.picoodle.com/img/img32/4/5/25/f_Img21420542m_a573239.jpg
உள்ளக ஒலிம்பிக் விளையாட்டு திடல்

மனோஜ்
26-05-2008, 09:31 AM
ஓலிம்பிக்கை சிறப்பாய் பகிந்து வரும் சுட்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.கமலக்கண்ணன்
26-05-2008, 01:15 PM
ஓலிப்பிக்கை மிக அற்புதமாய் தமிழிமன்றத்தில் ஒளிரவைக்கும் சுட்டிக்கு வாழ்த்துக்கள்...