PDA

View Full Version : என்ன தவறு செய்தேன்



நம்பிகோபாலன்
22-05-2008, 11:29 AM
யோசித்து கொண்டே
எழுதுகிறேன்
உன்னிடம் பிறந்த
நம் நட்பு
புரிதலின் அலைவரிசையில்
இருவரும்
சொல்ல தவித்த
காதல்
சின்ன சண்டைகளும்
செல்ல கோபங்களும்
மொளனத்தின்
சிரிப்புடன் முடிந்த
பொழுதுகளும்
அத்தனையும் இனிமை
ஏனோ பணத்தின்
வழி நம்மை
பிரித்ததா இல்லை
நாமே பிரிந்தோமா
புரியவில்லை
இன்றும் தனிமையில்
அழுது
யோசித்து கொண்டே
இருக்கிறேன்
என்ன தவறு செய்தேன் என்று..

ஷீ-நிசி
22-05-2008, 01:28 PM
வரிகளில் வலி புரிகிறது.... தொடர்ந்து பயணியுங்கள்!

arun
22-05-2008, 07:05 PM
அருமை அருமை தொடருங்கள் பாராட்டுக்கள்

அறிஞர்
22-05-2008, 07:18 PM
பிரிதல் யோசிக்க வைக்கிறது.
பதில் கிடைக்கா... பல கேள்விகளில்
இதுவுமொன்றோ.....

அருமை அன்பரே...

அனுராகவன்
23-05-2008, 12:46 AM
வரிகளில் ஆதங்கம்
சொல்லாமல் சொல்லும்
வலிகள்,வேதனைகள்
மிக அழகிய வரிகள்..
இன்னும் பல கவிகள்
வர வாழ்த்துக்கள்..

நம்பிகோபாலன்
23-05-2008, 04:36 AM
அனைவரின் பின்னூட்டதிற்க்கும் நன்றி...

ஆதி
23-05-2008, 04:54 AM
காதல்கள் கவிதைகள் வடிப்பதிலும் படிப்பதிலும் தனிச் சுகம் ஒன்று உண்டு..

அந்த சுகத்தை அனுபவித்தேன்..

வார்த்தைகளில் வலி ரத்தமும் சதையுமாய் பின்னப்பட்டிருக்கிறது..

பாராட்டுக்கள் நம்பி

விகடன்
23-05-2008, 05:45 AM
மனதில் பூட்டி வைத்திருந்த காதல் அங்கேயே புதைக்கப்பட்டிருப்பதை கவிதையாக தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் நம்பிகோபாலன்

அமரன்
23-05-2008, 09:24 PM
சோகப்படங்களும், சோகம் சுமந்து வரும் பாடல்களும் எளிதில் எல்லாரையும் அடைந்து விடுகிறன. சோகத்திற்குக் காரணம் காதல் எனில் வெற்றி உறுதி. அப்படியான ஒரு கவிதை தந்து அனைவரையும் கவர்ந்த நம்பிக்கு ஒரு ஷொட்டு.

பாதைகள் முடிவதில்லை..
பயணங்கள் முடிகின்றன..

Narathar
23-05-2008, 10:17 PM
இதைத்தான் நிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பார்களோ?
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ................

பிரிந்தவர்கள் கூட வாழ்த்துகிறேன்