PDA

View Full Version : துறவிமனம்



சுகந்தப்ரீதன்
21-05-2008, 02:13 PM
சிரிப்பும் அழுகையும்
சுகமும் சோகமும்
விருப்பும் வெறுப்பும்
காதலும் காமமும்
ஆசையும் அழிவும்
............................
இப்படியும் அப்படியுமாய்
இன்னும் எத்தனையோ
இருவேறு துருவங்களால்
துருவப்பட்டு துயரப்பட்டு
துவண்டு வீழ்கிறது
துணையற்ற துறவிமனம்..!!

அறிஞர்
21-05-2008, 02:30 PM
துணையற்ற் துறவி வாழ்க்கை
ரொம்ப பரிதாபம் தான்...

இப்படி, அப்படி
இழுபடும் வாழ்க்கை... சுபீ...

வாழ்த்துக்கள்

மதி
21-05-2008, 02:41 PM
துணையற்ற மனிதரெல்லாம் துறவியாவதில்லை. துறவியாவோர் துணை தேடுவதில்லை.. துணையற்ற துறவி மனம் என்பதில் எனக்கு கருத்து முரண்பாடு உண்டு.. :)
தலைப்பு மூலம் நீண்ட நாள் கழித்து கவிதைகள் பகுதியில் நுழைந்துள்ளேன்..

வாழ்த்துகள் தலீவா..

அனுராகவன்
22-05-2008, 12:37 AM
முற்றமு துறந்த
துறவி மீண்டும்
ஆசைக் கொள்வ
தில்லை உலகில்..

இறையிடன் ஒன்றி
விட்ட அவர்கள்
பிறகு உடல்
ஒரு துன்ப
பொருளே!!

நன்றி சுபீ..
நல்ல கவி..
தொடருங்கள்....

சுகந்தப்ரீதன்
22-05-2008, 09:06 AM
துணையற்ற் துறவி வாழ்க்கை
ரொம்ப பரிதாபம் தான்...

இப்படி, அப்படி
இழுபடும் வாழ்க்கை... சுபீ...

வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அறிஞர் அண்ணா..!!

துணையற்ற மனிதரெல்லாம் துறவியாவதில்லை. துறவியாவோர் துணை தேடுவதில்லை.. துணையற்ற துறவி மனம் என்பதில் எனக்கு கருத்து முரண்பாடு உண்டு.. :)
தலைப்பு மூலம் நீண்ட நாள் கழித்து கவிதைகள் பகுதியில் நுழைந்துள்ளேன்..

வாழ்த்துகள் தலீவா..
முரண்பாடுதான் வாழ்வின் சமன்பாடு என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு தொண்டனே..!!


நன்றி சுபீ..
நல்ல கவி..
தொடருங்கள்....
மிக்க நன்றி அக்கா...!!

umesh
22-05-2008, 09:26 AM
சிரிப்பும் அழுகையும்
சுகமும் சோகமும்
விருப்பும் வெறுப்பும்
காதலும் காமமும்
ஆசையும் அழிவும்
............................
இப்படியும் அப்படியுமாய்
இன்னும் எத்தனையோ
இருவேறு துருவங்களால்
துருவப்பட்டு துயரப்பட்டு
துவண்டு வீழ்கிறது
துணையற்ற துறவிமனம்..!!

அருமையான கவிதை தொடருங்கள்

umesh
22-05-2008, 09:27 AM
முற்றமு துறந்த
துறவி மீண்டும்
ஆசைக் கொள்வ
தில்லை உலகில்..

இறையிடன் ஒன்றி
விட்ட அவர்கள்
பிறகு உடல்
ஒரு துன்ப
பொருளே!!

நன்றி சுபீ..
நல்ல கவி..
தொடருங்கள்....
வாழ்த்துக்கள் அருமையாய் இருக்கிறது.. தொடருங்கள்

ஆதி
22-05-2008, 09:30 AM
எல்லாம் துறந்தவர்தானே துறவி..

துறவிகள் துவல மாட்டர் சுகந்தா.. துவல்கிறவர் துறவி இல்லை..

முனிவர் என்று சொல் ஒற்றுக் கொள்கிறேன், துறவிகள் உலக இன்பத்தில் இருந்து விடுப்பட்டவர்கள்.. முனிவர்கள் உலக இன்பத்திலும் விரவியவர்கள்..

ஷீ-நிசி
22-05-2008, 01:39 PM
எல்லாம் கிடைத்தாலும் மனதின் நிலை எப்பொழுதும் இதுவேதான்...
என்னப்பா சுகந்தா, இப்பவே இப்படியான கவிதை?! :)

வாழ்த்துக்கள்!

சுகந்தப்ரீதன்
26-05-2008, 03:27 PM
அருமையான கவிதை தொடருங்கள்
மிக்க நன்றி உமேஷ்..!!

எல்லாம் துறந்தவர்தானே துறவி....
ஆமாம் நண்பா.. துறவிக்கும் மனமென்ற உயிரொன்று உடலோடு இருக்கத்தான் செய்கிறது..!! எல்லாவற்றையும் துறந்தால்தானே துறவி.. ஒன்றை உடன் வைத்திருந்தாலும் அது மானிடபிறவி நண்பா..மானிட பிறவி..!!

எல்லாம் கிடைத்தாலும் மனதின் நிலை எப்பொழுதும் இதுவேதான்...
என்னப்பா சுகந்தா, இப்பவே இப்படியான கவிதை?! :)
வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி கவிஞரே..!!
இப்ப மட்டுமல்ல எப்பவும் அப்பப்ப இப்படித்தான்...!!

சூரியன்
26-05-2008, 04:17 PM
சுகந் அண்ணா உங்களுக்கு என்ன ஆச்சு இந்த மாதிரி கவிதையெல்லாம் எழுதுறீங்க.
இருந்தாலும் கவிதை அழகா இருக்கு.

சுகந்தப்ரீதன்
29-05-2008, 11:22 AM
சுகந் அண்ணா உங்களுக்கு என்ன ஆச்சு இந்த மாதிரி கவிதையெல்லாம் எழுதுறீங்க.
இருந்தாலும் கவிதை அழகா இருக்கு.
நன்றிடா தம்பி.. கவிதை அழகா இருக்குன்னு சொன்னதுக்கு..!!

அப்புறம் அண்ணன் அப்ப அப்ப அப்செட் ஆயி ஆப்செண்ட் ஆகும்போது இப்படியெல்லாம் எழுத தோணுதுடா.. வேற ஒன்னுமில்லை..சரியா..சூரியா..??!!

பூமகள்
29-05-2008, 11:51 AM
துணையற்ற துறவி போல்
மனம் சில சமயம்..
மொட்டைப் பாறையில்
கடலடியில்..
தவமிருக்கும்..

வந்து வந்து போகும்
அலைகளுக்கிடையில்..
குதித்து வரும்..
நண்டுகளும்..
குட்டி மீன்களும்..
சிரிப்பூட்டப் பார்க்கும்..
மௌனமான மனதை..

வீழ்ந்து எழும்
அலை கடலினை
உற்றுப் பார்த்து
சாந்தமாகும் மனம்..

திரும்பிப் பார்க்க...
இருண்டிருக்கும் வானம்..
நட்சத்திரம் கண்சிமிட்ட..
யாரோ சென்ற காலடியில்..
மீண்டும் தன் காலடி
தேடும் மனம்....!!

-------------------------------------
இங்கு துறவி மனம் என்பது எல்லாவற்றையும் விரும்பாத வெற்று மனம்... என்று கொள்ள வேண்டும்... அதாவது எம்டி ஹார்ட்.. சில சமயம்.. இப்படியான மனோநிலை நமைக் கடந்து போகும்... சுபி.... இந்த அர்த்தத்தில் தானே எழுதியிருக்கே??!! :icon_ush::icon_ush:

அழகிய குறுங்கவிதை.. சாரி.. எனக்கு குட்டியா எழுத வரலை.. பெரிசா பின்னூட்டகவிதை எழுதிட்டேன்...சுகு..!!

வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!! :)

நதி
30-05-2008, 08:32 AM
இங்கு துறவி மனம் என்பது எல்லாவற்றையும் விரும்பாத வெற்று மனம்... என்று கொள்ள வேண்டும்... அதாவது எம்டி ஹார்ட்.. சில சமயம்.. இப்படியான மனோநிலை நமைக் கடந்து போகும்... சுபி.... இந்த அர்த்தத்தில் தானே எழுதியிருக்கே??!! :icon_ush::icon_உஷ்:
[/COLOR]

அவரு துணையற்ற துறவி எங்கிறாரு..
பிறகு உடலுடன் உயிருறவாடினால் மானிடப்பிறவி எங்கிறாரு..
துறவிகளும் மானிடப்பிறவி என்று இந்தப்பிறவி சொன்ன பிறகும் எம்டிஹேர்டு என்று சொல்றீங்களே ஞாயமா இது??
எதையுமே விருப்பாத இதயம் எதற்காக துவண்டு விழவேணும்?

கவிஞரே! கொஞ்சம் பொழிவது

அமரன்
30-05-2008, 08:40 AM
சிரிப்பும் அழுகையும்
சுகமும் சோகமும்
விருப்பும் வெறுப்பும்
காதலும் காமமும்
ஆசையும் அழிவும்

இருவேறு துருவங்களால்

:confused::confused::confused::confused::confused::confused:

சுகந்தப்ரீதன்
05-06-2008, 09:14 AM
வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!! :)

மிக்க நன்றி பூ வாழ்த்தியமைக்கு..!! உன்னோட அழகிய கவிதைக்கும் எனது வாழ்த்துக்கள்..!!:icon_b:


எதையுமே விருப்பாத இதயம் எதற்காக துவண்டு விழவேணும்?
அதுதான.. எதுக்காக துவண்டு விழனும்..??!:wuerg019:

:confused::confused::confused::confused::confused::confused:
:cool::cool::cool::rolleyes::rolleyes::rolleyes: