PDA

View Full Version : ஒருங்குறியில் குமுதம் : தீவிரமான ஆராய்ச்சி



sarathecreator
21-05-2008, 06:12 AM
கூகிள் தேடுபொறியில் 'ஒருங்குறி'யில் தேடினால் அவற்றின் முடிவுகளாக
எத்தனையோ வலைப்பூக்கள்தான் வந்தன. 'குமுதம்' வராமலேயே இருந்தது. இப்போது
அந்தக் குறையைப் போக்க 'குமுதம்' ஒருங்குறியில்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக குமுதம் தனக்குறிய தனி எழுத்துருவில் வலம் வந்தது. ஆனால்
கூகிள் தேடுபொறியானது 'ஒருங்குறி' யில் தேடுவதை ஆதரித்தும்,
ஒருங்குறியில் தட்டெழுவதற்கான வசதிகளை தினம் தினம் புதுப்புது வழிகளில்
கவுரவித்தும் வந்தது.

இதனால் 'ஒருங்குறி'த் தேடுதல் முடிவுகளால் மேலும் பலர் 'கூகிள்' வாயிலாக
'குமுதம்' இணையத்தளத்துக்குப் புதிய பார்வையாளர்களாக, காண்போராக
ஆகுவதற்கு ஒரு வாய்ப்பாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, 'தேடுபொறியின்' மூலம் புதிய காண்போர்களைப்
பெறுவதற்காகவே 'விகடன்', 'தினகரன்', 'தினமலர்', 'குமுதம்' முதலிய
பத்திரிகை ஊடகங்கள் இப்போது அவர்களாகவே ஒருங்குறிக்கு
மாறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

முன்னெப்போதையும் விட மிக வேகமாக இயங்குகிறது.
ஆஹா - பண்பலை வானொலியையும் அங்கே நேரடியாகக் கேட்டு மகிழலாம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்கான தனிப்பட்ட பயனர் கணக்கைக்
குமுதம் தளத்தில் துவங்கி அதன் மூலம் உள்ளே நுழைந்து படித்து / கேட்டு /
பார்த்து மகிழ்வதுதான். வாழ்க வளமுடன்.

குறுக்கெழுத்துப்போட்டி, வாக்கெடுப்பு,சுடொக்கு, ஆறுவித்தியாசங்கள்
முதலியவை விளையாட்டுப் பகுதியில் உள்ளன.

டாட்காம் ஸ்பெஷல் என்று ஒரு மெனு உள்ளது. அதில் உள்ள பெரும்பாலான
உறுப்புகள் ஏனோ தமிங்கிலீஷில் உள்ளது. அதை அவர்கள் ஏன் அப்படி விட்டு
வைத்திருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

குமுதம் 'வெப்டிவி' செம்ம கலக்கு கலக்குது.
courtesy : http://tamizh2000.blogspot.com/2008/05/blog-post_4853.html (http://tamizh2000.blogspot.com/2008/05/blog-post_4853.html)

சூரியன்
21-05-2008, 06:20 AM
நல்ல தகவல்.