PDA

View Full Version : முதிர்க்கன்னி



shibly591
21-05-2008, 03:59 AM
கனவுகளோடு
விடியும் காலை
கனவாகவே
இருண்டு போகிறது

மொழி பெயர்க்கப்படாத
துயர்களின் வெளியீடாக
கன்னமெங்கும் கண்ணீர்

புன்னகையின் விலாசத்தை
இன்னும் விசாரித்துக்
கொண்டுதான் இருக்கின்றன
என் உதடுகள்

நொறுங்கிப்போன
உணர்வுகளைச் சுமந்தபடி
புயலழித்த பூவனமாய்
கிழிகிறேன் நான்

நேற்று
வினாடிகளாய்க் கரைந்தன
ஆண்டுகள்
இன்று
ஆண்டுகளாய்க் கரைகின்றன
வினாடிகள்

மஞ்சள் கயிறு
இருக்க வேண்டிய இடத்தில்
கிளிஞ்சல் கயிறு

ஒழுகும் உயிரின்
ஒவ்வொரு துளியிலும்
உலர்ந்தபடி
நாதஸ்வரமும்
மேளதாளமும்

இனி
மணமுடிக்க
மனிதன் தேவையில்லை
மரணமே
நீ
இருக்கிறாய்

-நிந்தவூர் ஷிப்லி

அறிஞர்
21-05-2008, 01:41 PM
இனி
மணமுடிக்க
மனிதன் தேவையில்லை
மரணமே
நீ
இருக்கிறாய்

அருமையான கவிதை...
வயது சென்ற கன்னிகள் பற்றி
தெளிவான பார்வை..

கடைசி நாலு வரிகள்
வெகுவாய் சிந்திக்க வைக்கிறது..

அனுராகவன்
22-05-2008, 12:42 AM
மஞ்சள் கயிறு
இருக்க வேண்டிய இடத்தில்
கிளிஞ்சல் கயிறு


மிக நல்ல வரி..
எத்தனை எத்தனை மனிதர்களின் இறுதி நிமிட நினைவுகள்..
மனகஸ்டம் யாரிக்கில்லை..அந்த நிமிட எண்ணத்தால் வாழ்க்கை பழியாகிறது..
நன்றி கவிஞரே!!
தொடருங்கள்..