PDA

View Full Version : உன் போலில்லை நான்



shibly591
21-05-2008, 03:58 AM
என் முதுகுப்பக்கம்
செருகப்பட்ட
வாளின்
பிடியைச் சுமந்திருந்தது
உனது கைகளா..?

என்னை நோக்கி
ரண மழை
பொழிந்த மேகம்
உனது வானிலிருந்துதான்
வந்ததா?

இரவுகளில்
வலிக்க
வலிக்க
அழுதுகொண்டிருக்கும்
என் கண்ணீரின்
தீவிர ரசிகையா நீ…?

மனப்பரப்பில்
பிரளயம் செய்யும்
பூகம்ப அதிர்வுகள்
உன்னாலா நிகழ்கின்றன..?

நம்பவே முடியவில்லை

வளர்த்து விட்ட
பாகனையே
மதம் கொள்ளும் யானைகள்
கொல்லத்துணிவது போல
பின்னத்தொடங்கி விட்டாய்
எனக்கெதிரான
உன் சூழ்ச்சி வலைகளை..

உனது புன்னகைகளின்
பின்புலமாக
எனது
கண்ணீர்த்துளிகள்
இருக்குமாயின்
எனக்கொன்றுமில்லை
பொம்மையாகிறேன்
உனது கைகளில்…

காரணம்
உன் போலில்லை
நான்…..!

அறிஞர்
21-05-2008, 01:43 PM
வளர்த்து விட்ட
பாகனையே
மதம் கொள்ளும் யானைகள்
கொல்லத்துணிவது போல
பின்னத்தொடங்கி விட்டாய்
எனக்கெதிரான
உன் சூழ்ச்சி வலைகளை..

உனது புன்னகைகளின்
பின்புலமாக
எனது
கண்ணீர்த்துளிகள்
இருக்குமாயின்
எனக்கொன்றுமில்லை
பொம்மையாகிறேன்
உனது கைகளில்…

காரணம்
உன் போலில்லை
நான்…..!
வெகுளித்தனத்தை.... ஆதாயமாக்கி...
அழிக்க துடிக்குது ஒரு இனம்..
அதற்கு எதிராய் மற்றொரு இனம்..

அருமை அன்பரே..

Keelai Naadaan
21-05-2008, 04:49 PM
காரணம்
உன் போலில்லை
நான்…..!


கடைசி வரிகளில் கனம் அதிகம். மனதை நெகிழ செய்கிறது.

arun
21-05-2008, 07:03 PM
அற்புதம் பாராட்டுக்கள்

அனுராகவன்
22-05-2008, 12:10 AM
என் முதுகுப்பக்கம்
செருகப்பட்ட
வாளின்
பிடியைச் சுமந்திருந்தது
உனது கைகளா..?


மிக உறுக்கமான வரி..
வலிகளும்,வேதனையும் சுமந்து வருகிறது..
என் வாழ்த்துக்கள்..
தொடருங்கள்..

ஷீ-நிசி
22-05-2008, 01:25 PM
மிக அழகு.... கவிதையில் மனம் கொள்ளை போனது... வாழ்த்துக்கள்!

shibly591
30-07-2008, 02:50 AM
இந்தக்கவிதையை பாராட்டிய ஷீ-நிசி அனு ஆரென் கீழை நாடன் அறிஞர் அனைவருக்கும் நன்றி சொல்ல (ரொம்ப தாமதமாக) இப்போது கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறேன்...

நன்றிகள் கோடி

சிவா.ஜி
30-07-2008, 04:18 AM
கிஷோரின் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன் காதல்...வலியை ஏற்கலாம், ஆனால் வதத்தை ஏற்கக்கூடாது. இனிப்பான தேனைத் தரும் தேனீதான்....ஆனால் வேதனையைத்தரும் அதன் கொட்டுதலை ஏற்கிறோமா?
கவிதை மிக அழகு. வார்த்தைகள் அருமையாகப் பொருந்தியுள்ளன. வாழ்த்துகள் ஷிப்லி.

அகத்தியன்
30-07-2008, 04:41 AM
வாழ்த்துக்கள் நண்பரே. மிக தெளிந்த நீரோடை போல கவிதை செல்கின்றது.

உங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களில் பாதியினை அவளுக்கும் கொடுத்துவிடுங்கள் என்ன சரியா? :icon_b: :icon_b:;) ;)

shibly591
30-07-2008, 05:12 AM
கவிதையின் பாடுபொருள் குறித்து கிஷோரின் கருத்துக்களும் சிவா.ஜி யின் கருத்துக்களும் கரியானவைதான்...

உயரிய அன்பின் வெளிப்பாடே அக்கவிதை என்பதால் பொறுத்தருள்க....

பாராட்டுக்களுக்கு நன்றிகள்..

அகத்தியன் அவர்களே....

அவளுக்கு சரிபாதியாக எதைக்கொடுத்தாலும் வாங்க மாட்டேன் என்கிறாளே..
பின்ன எப்படி கொடுப்பதாம்..........????????????????ஃ

அகத்தியன்
30-07-2008, 05:28 AM
அப்ப முழுசா கொடுக்கிறது

shibly591
30-07-2008, 05:32 AM
:mad::mad::mad::mad::mad:

:icon_p::icon_p::icon_p:

:sauer028::sauer028::sauer028:

:mini023::mini023::mini023:

:eek::eek::eek::eek:

:confused::confused::confused:

:traurig001::traurig001::traurig001:

கதை புரிந்ததா............???

shibly591
30-07-2008, 05:39 AM
நன்றி நண்பரே....

உங்கள் கருத்தையும் நான் ஏற்றுக்கொண்டதாகச்வொல்லியிருக்கிறேனே....

நன்றி நண்பரே.....

lenram80
30-07-2008, 08:43 PM
வில்லன்கள் என்று யாரும் இல்லை. நாமே சில சமயம் நாயகனாக, வில்லனாக, காமெடியனாக.....அவளுக்கு ஏற்பட்ட சூழ்நிலை என்னவோ?

ஏமாற்றப்பட்டால் - பழி வாங்கக் கூடாது.
மீண்டும் ஏமாறாமல் இருக்கவேண்டும்..

வாழ்த்துக்கள் ஷிப்லி

shibly591
01-08-2008, 06:16 AM
நன்றி நண்பரே.

ஏமாற்றப்பட்டால் - பழி வாங்கக் கூடாது.
மீண்டும் ஏமாறாமல் இருக்கவேண்டும்..

நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்....