PDA

View Full Version : வேலைக்கு போகும் என் மனைவி!!



poo
04-04-2003, 03:08 PM
ஊருக்கு முன்னெழுந்து
உலைவைத்து மதிய உணவையும் முடித்து
மஞ்சள் பூசிய மங்களவதியாய் தேனீர் கோப்பையோடு
எனை செல்லமாய் எழுப்புகையில்
உன் பாசவலையில் சிக்கித் தவிப்பதை
அழகாய் உணர்கிறேன்..

நானும் உதவுகிறேன் என்றால்
நீங்களொரு குழந்தையென -என்னையும்
தயார்படுத்தி..
அவளை ஆட்டோவிலும்
என்னை அந்தக்கால சைக்கிளிலும்
ஏற்றி அணுப்பும் உன் அணுசரனை -அகிலமே
உன் அன்புதானென அழத் தோணுகிறது..

தெருமுனை மறையும்வரை கையசைத்துவிட்டு..
அடுத்த அரைமணியில்
அவசர அவசரமாய் அடித்து பிடித்து
அரசுப் பேருந்தில் அலுவலகம்
பயணிக்கும் உன்னை நினைத்தால்
கண்கள் பனிக்கின்றன..

உன்னை இல்லத்தரசியாய்
வைக்கத்தான் ஆசை..
என்ன செய்ய நடுத்தர வர்க்கமென்றால்
வேதனைகளை தாங்கும்
இன்னல்தரசியாய்த்தான்....

இன்னல்களையும்
இன்பமாய் தாங்கும் உன் இதயம்-
எனக்கொரு இமயமாய்த்தான்
தெரிகிறது..!!!

இளசு
04-04-2003, 03:25 PM
யதார்த்த பெருஞ்சுவரில்
மென்மனம் மோதி நோகும் பாட்டு.
உணர்ச்சிக் கவிஞன், உண்மைக்கவிஞன் நீ.
எத்தனை பாராட்டினாலும் தகும்.

rambal
04-04-2003, 04:47 PM
என்ன எழுதுவது என்பது தெரியாததால்
கண்கள் பணிக்கின்றன..
பாராட்டுக்கள் பூவிற்கு ...

Narathar
05-04-2003, 07:06 AM
அருமையான கவிதை பூ !!
ஏன் உங்கள் அந்தக்கால சைக்கிளிலேயே உங்கள் மனைவியை "டபுள்ஸ்" கூட்டிக்கொண்டு போகக்கூடாது??

aren
05-04-2003, 08:09 AM
கவிதையின் மூலம் நீங்கள் உங்கள் மனைவியிடம் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்று நன்றாகத்தெரிகிறது. கொடுத்து வைத்தவள் (நீங்களும்தான்).

நன்றி வணக்கம்
ஆரென்

anushajasmin
05-04-2003, 11:01 AM
மிக யதார்த்தமாக அமைந்த கவிதை... சிறகடிக்கும் பூவிற்குள் இது போல்
ஒரு சோக கதையை எதிர்பார்க்கவில்லை

இளசு
31-12-2003, 06:19 PM
இதயத்தை விரலால் வடிக்கும் விந்தைக்கவி..

புத்தாண்டு வாழ்த்துகள்.

Nanban
05-01-2004, 11:28 AM
புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல, பலகாலம் முன்னர் வந்த கவிதை ஒன்றை தேடிப் பிடித்து, வாழ்த்துச் சொல்லி....... புதுமையே........ உன் பேர் தான் இளசுவோ.....

என்றாலும், பூவிற்கும், இளசுவிற்கும் நல்வாழ்த்துகள்.......

poo
05-01-2004, 12:37 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா....

இந்த கவிதையை வெளிக்கொண்டுவந்து சில மாற்றங்களை மீண்டும் எனக்குள் ஏற்படுத்திவிட்டீர்கள்....

நண்பன் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

நிலா
06-01-2004, 08:26 PM
கவிதை அருமை பூ!
துன்பத்திலும் தோள் கொடுப்பவள்தானே துணைவி!
கணவன் கஷ்டப்படுகையில் சும்மா(பொருளாதார அடிப்படையில்) வீட்டிலிருப்பதைவிட அவனுக்குத்தோள் கொடுக்க வேலைக்குச்செல்வதை எந்தப்பெண்ணும் பாரமாக எண்ணமாட்டாள்!வேலைக்குச்செல்வது பெண்ணுக்கு சுதந்திர உணர்வை உருவாக்கும்.கவலை வேண்டாம் பூ.!

puppy
06-01-2004, 08:40 PM
பாராட்டுக்கள் பூ.....கவிதை நன்று.......

முத்து
06-01-2004, 10:27 PM
அருமையான கவிதை பூ ...
வார்த்தைகளால் விளாசித் தள்ளியிருக்கும் விதம் அருமை ...
பாராட்டுக்கள் ...

rambal
08-04-2004, 05:23 PM
சாதாரண நிகழ்வுகல்ள்..
சாமான்யமான வார்த்தைகள்..
இருந்தபோதும் ஜொலிப்பதின் காரணத்தை எண்ணிப்பார்த்தால்?
இந்தக் கவிதையின் கரு...

மீண்டும் பாராட்டுக்கள் பூவிற்கு..

மன்றத்தின் ஜீவக் கவிதைகளில் இதுவும் ஒன்று..

poo
16-06-2004, 11:00 AM
என் தேவதையின் பிறந்தநாளில் இதை மீண்டுமொருமுறை வாசித்துக் கொள்கிறேன்....

என் உள்ளத்தரசியே... உலகம் வசப்படும் காத்திருப்போம்.....

சேரன்கயல்
17-06-2004, 02:54 AM
என் தேவதையின் பிறந்தநாளில் இதை மீண்டுமொருமுறை வாசித்துக் கொள்கிறேன்....
என் உள்ளத்தரசியே... உலகம் வசப்படும் காத்திருப்போம்.....
_________________
என்றென்றும் அன்புடன்
அன்பு- பூ....


தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லிவிடு பூ...
உன் தேவதையின் பிறந்த நாள்தான்...என் தேவதையை பெற்றவரது பிறந்த நாளும்... :lol:

மறந்தேவிட்டேன்...என் மருமகளுக்கும்(தங்கையின் மகள்)அதே நாள்தான் பிறந்த நாள்..

kavitha
17-06-2004, 04:57 AM
...என் தேவதையை பெற்றவரது பிறந்த நாளும்
இங்கே தேவதை என்பது நறுமுகையையா? நறுமுகையின் அன்னையையா சேரன்?

இக்பால்
17-06-2004, 05:07 AM
பூமா தேவி தங்கைக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்தும்

உரித்தாகட்டும். :)

இங்கே தேவதை என்பது நறுமுகையையா? நறுமுகையின் அன்னையையா சேரன்?
செலீனா நறுமுகையின் அம்மாதான் கவிதா தங்கை. :)
அவருடைய பெற்றவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள். :)

-அன்புடன் அண்ணா.

mythili
17-06-2004, 05:12 AM
அண்ணிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்துக்களை சொல்லுங்கள் அண்ணா. :) :)

அன்புடன்,
மைதிலி.

சேரன்கயல்
17-06-2004, 06:09 AM
இங்கே தேவதை என்பது நறுமுகையையா? நறுமுகையின் அன்னையையா சேரன்?
_________________
கவி

அண்ணன் இக்பால் சொன்னதுபோல...தேவதை என்று இங்கே குறிப்பிட்டது நறுமுகையின் அன்னையை(என் மனைவியை)...

தஞ்சை தமிழன்
17-06-2004, 07:30 AM
நண்பர் பூவின் கவிதை படித்து மகிழ்ந்தேன்.

அன்பான மனைவியின் அன்பு பிடியில் கிடப்பதும் ஒரு சுகம்தான் நண்பரே.

கவிதை என் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது சலனத்தை தென்றாய் வந்து.

உங்களை அன்பு பிடியில் வைத்திருக்கும் சகோதரிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பரஞ்சோதி
17-06-2004, 09:01 AM
என் தேவதையின் பிறந்தநாளில் இதை மீண்டுமொருமுறை வாசித்துக் கொள்கிறேன்....

என் உள்ளத்தரசியே... உலகம் வசப்படும் காத்திருப்போம்.....

என் சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.


நண்பா இந்த நம்பிக்கையை தான் தான் உன்னிடம் எதிர்பார்த்தேன். வசப்படும் நாள் மிக அருகில்...

பரஞ்சோதி
17-06-2004, 09:03 AM
பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இக்பால்
17-06-2004, 11:45 AM
அண்ணிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்துக்களை சொல்லுங்கள் அண்ணா.



பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


இந்த இரண்டு அன்புப் பதிவுகளும் பார்த்தபிறகு ஒரு சின்ன உணர்வு.
நான் என் மனைவியின் பிறந்தநாள் பற்றி சொல்லவில்லை. 13-ல் முடிந்தது.
நான் சரியாக வர இயலாததாலும், மேலும் குழந்தைகள் தேர்வுகள் போய்க்
கொண்டிருப்பதாலும் சரியாக கொண்டாட முடியவில்லை.

எனவே கெய்ஸிரே பிறந்தநாள் இந்த மாதம் 24-ல் வருகிறது. முன்கூட்டியே
என் மன்ற உறவுகளுக்கு சொல்லி விடுகிறேன்.
அப்புறம் அடுத்த மாதம் ஜூலை 11 திருமண நாளும் வருகிறது. :)

-அன்புடன் இக்பால்.

மன்மதன்
17-06-2004, 12:00 PM
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா..


பூவின் இந்த கவிதை படிக்க படிக்க என்றும் புதுசாய் தெரிகிறது..

அன்புடன்
மன்மதன்

poo
17-06-2004, 03:34 PM
சேரன்... நமக்குள் இருக்கும் ஒற்றுமை தொடர்வதையெண்ணி ஆனந்தமாக இருக்கிறது....

வாழ்த்துக்களுக்கு நன்றி உறவுகளே... உங்கள் வாக்கு பலிக்கட்டும்!!

சேரன்கயல்
17-06-2004, 03:41 PM
இந்த இரண்டு அன்புப் பதிவுகளும் பார்த்தபிறகு ஒரு சின்ன உணர்வு. நான் என் மனைவியின் பிறந்தநாள் பற்றி சொல்லவில்லை. 13-ல் முடிந்தது.
-அன்புடன் இக்பால்.

ஜூன் 13 என்றால், அது என் திருமண நாள் இக்பால் அண்ணா...
:D

சேரன்கயல்
17-06-2004, 03:42 PM
சேரன்... நமக்குள் இருக்கும் ஒற்றுமை தொடர்வதையெண்ணி ஆனந்தமாக இருக்கிறது....

வாழ்த்துக்களுக்கு நன்றி உறவுகளே... உங்கள் வாக்கு பலிக்கட்டும்!!

ஆம் பூ...அதே மகிழ்ச்சியில் நானும்... :)

அசன் பசர்
18-06-2004, 06:26 AM
நன்கு பழுத்த அனுபவங்களே
எம் உறவை பதியவைத்திருக்கின்றது
இந்நிலைதான் எம்மை உற்சாக படுத்துகிறது
ஆயிரங்கோடி
வாழ்த்துக்கள்
அன்பு பூ

kavitha
18-06-2004, 08:14 AM
பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்..
கவிதை எழுதிய பூவிற்கும்... வாழ்த்துகள்.
அசன் பசர் அவர்களே! நலமா? எங்கே தற்போது உங்களை அதிகம் காண இயலவில்லை...

அறிஞர்
21-06-2004, 12:14 PM
வாழ்த்துக்கள்.. பூ..... பிறந்த நாள்... திருமண நாள் வாழ்த்துக்கள்.. இக்பால் அண்ணா...

விகடன்
28-07-2008, 10:07 AM
உத்தியோகம் பார்க்கும் குடும்பப் பெண், அன்றாடம் செய்யும் பணிகளை சிறுகவிதையின் மூலம் சொல்லிவைத்த விதம் அழகு.
கருத்தாழத்துடன் கூடிய கவிதை அண்ணா. பொதுவாக பலரதவாழ்க்கையில் நிகழ்வதும் கூட....
பாராட்டுக்கள் அண்ணா.

shibly591
29-07-2008, 09:24 AM
படிப்பவர்பள் கண்களை கொஞ்சம் ஈரமாக்கும் கவிதை..

வாழ்த்துக்கள் விராடன்..

சுகந்தப்ரீதன்
19-10-2008, 10:46 AM
வேலைக்கு போகும் நடுத்தரவர்க்க மனைவி பற்றிய கவிதை அருமை.. வாழ்த்துக்கள்.. பூ.. அண்ணா..!! ஆனால் அதற்க்கும் கீழுள்ள வர்க்கத்தில் குழந்தைகளும் வேலைக்கு போகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வோமே..!!


படிப்பவர்பள் கண்களை கொஞ்சம் ஈரமாக்கும் கவிதை..
வாழ்த்துக்கள் விராடன்..அன்புள்ள ஷிப்லிக்கு.. பின்னூட்டம் இடுகையில் ஏன் இத்தனை அவசரம் உங்களுக்கு..?? கவிதை எழுதியவரை விட்டுவிட்டு பின்னூட்டம் இட்டவரை மட்டும் வாழ்த்தி இருக்கிறீர்கள்..?? ஏற்கனவே வேறொருதிரியில் நீங்கள் செய்த இந்த தவறை தென்றல் சுட்டிக்காட்டியதை நீங்கள் அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்..!!

shibly591
20-10-2008, 09:06 AM
வேலைக்கு போகும் நடுத்தரவர்க்க மனைவி பற்றிய கவிதை அருமை.. வாழ்த்துக்கள்.. பூ.. அண்ணா..!! ஆனால் அதற்க்கும் கீழுள்ள வர்க்கத்தில் குழந்தைகளும் வேலைக்கு போகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்வோமே..!!

அன்புள்ள ஷிப்லிக்கு.. பின்னூட்டம் இடுகையில் ஏன் இத்தனை அவசரம் உங்களுக்கு..?? கவிதை எழுதியவரை விட்டுவிட்டு பின்னூட்டம் இட்டவரை மட்டும் வாழ்த்தி இருக்கிறீர்கள்..?? ஏற்கனவே வேறொருதிரியில் நீங்கள் செய்த இந்த தவறை தென்றல் சுட்டிக்காட்டியதை நீங்கள் அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்..!!

மன்னிக்க வேண்டும் நண்பரே..

மீண்டும் மீண்டும் ஒரே தவற்றுக்கு மன்னிப்புக்கேட்பதற்காக இன்னொரு தடவை மன்னியுங்கள்

இதே தவறு இனியும் நிகழாதிருக்க என்னை திருத்திக்கொள்கிறேன்..

நன்றிகள்

உமாமீனா
01-03-2011, 09:54 AM
இக் காலத்து இல்லத்தரசிகளை பற்றி கணவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பார்கள் என்று யோசிக்க வைத்தமைக்கு நன்றி - வர்ணித்த விதம் அருமை