PDA

View Full Version : விராடனும் சாரதி அனுமதி அட்டையும்...



விகடன்
18-05-2008, 07:31 AM
விராடனும் சாரதி அனுமதி அட்டையும்...


பல்கலைக்கழக படிப்பெல்லாம் முடித்து முதன் முதலாக வெளிநாட்டி உத்தியோகம் என்று வந்தது அமீரகத்திற்குத்தாங்க. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2005 ஆம் ஆண்டு மே மாதம் வந்தேங்க.
நான் இணைந்த கம்பனியோ காலை எழு மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் ஏழு மணிக்குத்தான் நிறைவுபெறும். இதில் என்ன கொடுமை என்றால், எங்களை ஏற்றிச் செல்ல கொம்பனியிலிருந்தே போக்குவரவிற்கு வாகன ஒழுங்கு ஏற்படுத்தபட்டிருந்தது. என்னுடன் ஏழு உத்தியோகத்தர்களை அது ஏற்றிச்செல்லும். சுருக்கமாக சொன்னால் ஷாயாவில் உள்ளா பெரும்பாலான இடங்களை அலசிக்கொண்டே செல்லவேண்டியிருக்கும். ஏனெனில் ஒவ்வொருவரும் இருக்கும் இடம் அப்படி அங்கும் இங்குமாக இருந்தது. வேலைத்தளமோ துபாயாக இருந்தது.
ஆகையால் நாங்கள் (என்னுடன் மூவர் வருவார்கள்) அதிகாலை 6.00 மணிக்கெல்லாம் வாகனத்தில் ஏறி அமர்ந்திட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அப்படியாயின் பல்துலக்கு குளித்து வெளிக்கிட எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.
இத்துடன் முடிவடைந்ததா என்ன? பின்னேரப் பொழுதிலும் கொம்பனி போக்குவரவு பகுதி எங்களுக்கான வாகனத்தை நேரத்திற்கு அனுப்பி வைக்காது. சில வேளைகளில் 7.10 இற்கு வந்திடும், பல வேளைகளில் 7.40 இற்கு அண்ணளவாகத்தான் வரும். பின்னேர வாகன நெரிசலை சொல்லவே வேண்டாம். 120 வாகன மானி வாசிப்பில் போனால் 1 மணித்தியாலத்தில் போய் சேர்ந்திடலாம் அதுவே 60 இறுகும் 40 இற்கும் இறங்கு வந்திட்டால் எமது நிலை.....???
இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமாயின் சொந்தமாக ஒரு வாகனத்தை எடுத்தால் அன்றி வேறு வழி இல்லை.
முதலில் வாகன அனுமதிப் பத்திரம் பெறுவதென்று முடிவெடுத்துக் கொண்டேன். அதற்கு கொம்பனியிலிருந்து "என்.ஓ.சி (ஆட்சேபனை இல்லை என்று சொல்லும்வகையிலமைந்த கடிதம்)" எடுக்க வேண்டும். அதற்கு அழகாக ஒரு கடிதத்தினை கடவுச் சீட்டையும் தற்காலிகமாக பதிவு செய்வதற்காக தருமாறு விண்ணப்பித்து இரு வாரங்கள் பொறுத்திருந்தேன். என்னை அலுவலகம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு மனித வளத்திலிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது. சந்தோசத்தில் ஓடிச் சென்றேன். அங்கே "என்.ஓ.சி." மட்டுமே இருந்தது. கடவுச் சீட்டை கேட்டபோது, அதற்கு பிரத்தியேகமாக ஒரு விண்ணப்பப்படிவம் இருப்பதாகவும். அதை நிரப்பி உரியவர்களிடம் கையொப்பமும் பெற வேண்டும் எனவும் கேட்டிருந்தார்கள்.
சரி என்று சொல்லிவிட்டு வந்து அந்த விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக்கொண்டு தேவைப்பட்ட மூன்று கையொப்பங்களையும் பெற்று கையளித்தேன். அன்றைய தினத்திலிருந்தே அண்ணளவாக ஒரு கிழமை எடுத்தார்கள் எனது கடவுச் சீட்டை என்னிடம் தர. எல்லாம் வந்துவிட்டது, இனி ஏதாவது ஒரு பயிலுனர் பாடசாலையில் இணையவேண்டியதுதான்.
அப்போது எனது ஒரு நண்பன் திடீர் என்று விளித்துக்கொண்டான். அவனோ தலமை அலுவலகத்தில் பணி புரிபவன். குறிப்பிட்ட எமது புரொஜெக்ட் காரணமாக எமது அலுவலகத்திற்கு அருகாமையிலேயே இன்னொரு அலுவலகத்தில் தற்காலிகமாக (எவ்வளவு காலமென்று திட்டமிடப்படாத நிலையில்) பணிபுரிந்து வந்தான். அவனும் என்னுடனேயே சேர்ந்து வாகன ஓட்டுனர் பயிலும் பாடசாலையில் இணையவிரும்புவதாக கூறினான். அவனிற்காக மேலும் இரண்டு கிழமைகள் பொறுத்திருந்தேன்.


பதிவுகளை மேற்கொள்ள வெளியே செல்ல வேண்டும். எமது அலுவலகமோ இரவு ஏழு மணிவரை வேலை. பயிற்றுனர் பாடசாலையோ பிற்பகல் 4.30 உடன் மூடிவிடுவர். வேறு வழி இல்லை. தலமையிடம் சென்று சொன்னேன். அதற்கு அந்த தலமை ஒரு பதில் உரைத்தது " இன்றைக்கு மட்டும் பதிவு செய்வதற்காக அனுப்புகிறேன். வேலை நேரங்களை குழப்பாமல் போய் வந்தால் சரி. அதற்கு தகுந்தால் போல் உன்னுடைய வகுப்புக்களை அமைத்துக்கொள்" என்று.
என்ன செய்வது ?
களத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தாச்சு. இனியென்ன. சரி என்று தலை ஆட்டி புறப்பட்டேன் பதிவினை மேற்கொள்ள.

நாங்கள் இருவரும் எங்களுடைய பதிவுகளை மேற்கொண்டதோ நவம்பர் மாதம் 2 ஆந்திகதி.

இந்தக்காலத்தில் அமீரகத்தில் ஒரு சட்டத்தை அமுலிற்கு கொண்டுவந்தார்கள். அதாவது 2005 வவம்பர் மாதம் வரை ஒரு பரீட்சை தவறவிட்டாலோ அல்லது சித்திபெறத்தவறினோ அடுத்த பரீட்சையை 7 வகுப்புக்களின் பின்னர் எதிர்கொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த நவம்பர் மாதத்திலிருந்து அது இரத்து செய்யப்பட்டு, ஒரு பரீட்சைக்கும் அடுத்த பரீட்சைக்கும் இடைப்பட்ட குறிகிய கால இடைவேளை ஒரு மாதகாலம் என்னும் சட்டத்தை அமுலிற்கு கொண்டுவந்தனர்.

சரி நடந்தது நடந்துவிட்டது. பழகி எடுத்திடலாம். எனக்கு இலங்கையில் வேறு அனுமதி பத்திரம் இருக்கிறதுதானே. என்றெண்ணி இருந்தேன். ஒரு வாரமா? இரண்டுவாரமா?
முன்று மாதங்களில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது குறிப்பிட்ட பயிலுனர் பாடசாலையிலிருந்து,
மிகுதி பணத்தையும் கட்டிவிட்டு உங்களுடைய வகுப்புக்களை தொடரவும் என்று சொல்லி.... அத்துடன் எனக்கு பழக்க இருக்கும் பயிற்றுனர் கையடக்கத் தொலைபேசி எண்ணையும் தந்தனர்.



தொடரும்...

ஓவியன்
18-05-2008, 07:36 AM
ஆஹா ஆரம்பித்தாகி விட்டதா...???

அசத்துங்க, எதிர்பார்புடன் நானும்..... :)

விகடன்
18-05-2008, 07:52 AM
:) :) :)
இப்படி ஒரு பதிவைப் போட்டால் சுகந்தப் பிரீதன் போன்ற அனுமதிப் பத்திரம் எடுக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் பலர் அமீரகத்தில் இது ஒரு எட்டாக்கனி என்றி முடிவெடுத்து விட வித்திட்டதாக போயிடுமோ என்றெண்ணி தவிர்த்து வந்தேன்.
ஆனால் இன்று எனக்கு நிகழ்ந்த சில சிரிப்பூட்டும் கசப்பான நிகழ்ச்சிகளை சந்தித்ததும் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டியதின்றென்று முடிவெடுத்துவிட்டேன்.

சுகந்தப்பிரீதன் இதை கண்டால் ஒரு சுத்து சுத்துமே......

சூரியன்
18-05-2008, 08:08 AM
அப்பரம் என்ன ஆச்சு?:cool:

விகடன்
18-05-2008, 08:21 AM
ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு தித்திக்கும் செய்தியாக வந்திட்ட அந்த தகவலின்படி உடனேயே எனக்காக அமர்த்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருந்த அந்த பயிற்றுனரிற்கு அலைபேசியிலிருந்தே அழைத்தேன். காரணம் எனது அலைபேசி இஅலக்கத்தையும் அவருக்கு தெரியப்படுத்தியதாக இருக்குமல்லவா!!!
மறு முனையிலிருந்து பதிலளித்த பயிற்றுனர், குறிப்பிட்ட ஒரு தினத்தை சொல்லி, தனக்கு எனது அலுவலகம் இருக்குமிடம் பரீட்சயமில்லை என்றும் எமது இடத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள ஒரு பெரிய சொப்பிங்மோலிற்கு வந்து நிர்பதாகவும், அவ்விடத்திற்கு வந்திடுமாறும் சொல்லியிருந்தார்.
வேறுவழியில்லை. நானும் ஒத்துக்கொண்டேன். முதல் நாள் அவர் அழைக்குமிடங் சென்று அவரிற்கு எனது இடத்தை காண்பித்துவிட்டால் பிற்காலத்தில் பிரச்சினை இருக்காது என்று நினைத்தேன்..

அவர் குறிப்பிட்ட தினமும் வந்தது. மதிய உணவு வேளை, எனது உணவை துறந்தேன். அன்று மட்டுமல்ல, அன்றிலிருந்து எனது அனுமதிப்பத்திரம் எடுக்கும் காலம் வரை துறப்பதற்கும் முடிவெடுத்திருந்தேன்.
குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வெளியில் வந்து டாக்சிக்கு காவல் நிற்கலானேன். பல டக்சிகள் என்னை கடந்து சென்றன. ஒன்றையும் தவற விடாது மறித்தேன்... மறித்தேன், மறித்துக்கொண்டே இருந்தேன். அனைத்திலும் வெற்றிடமின்றி இருந்ததால் எவருமே என்னிடம் வரவில்லை. இதற்கிடையில் எமது கொம்பனி போக்குவரவுப் பிரிவிற்கு அழைத்து எனது இக்கட்டான நிலையையும் இன்று மட்டும் ஏதாவது வாகன ஒழுங்கு செய்து தருமாறும் கோரியிருந்தேன். முதலில் ஒருவரும் இல்லை என்று சொன்ன பொறுப்பாளன், பின்னர், மதிய உணவு வேளை, இப்போதைக்கு ஒருவரும் வர மாட்டார்கள், 2.00 மணிக்கு பின்னர் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லலானான். அவன் சொன்ன 2.00 மணிக்கெல்லாம் நான் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் கட்டளையை பற்றி அவனுக்கு என்ன தெரியும்.
இதற்கு மேலும் அவனுடன் கதைத்தாக் ஆத்திரமும், பதற்றமுந்தான் மீதமாகும் என்றெண்ணிய நான் பயிற்றுனர் சொன்ன அந்த இடத்தை நோக்கி ஓடி ஓடி நடக்கலானேன். மதிய வேளை, மத்தியகிழக்கில்.. எப்படி இருக்கும்.????
கிட்டத்தட்ட கால் பங்கு தூரன் (2 கி.மீற்றர்) நடந்திருப்பேன். என்னை கடந்த டக்சி நான் மறிக்க நிறுத்தினான். ஓடிச்சென்று ஏறிக்கொண்டேன். அடுத்த 4 நிமிடங்களில் சேர வேண்டிய அந்த இடத்திற்கு வந்தடைந்தேன். பணத்தை டக்சிக்காரனிடம் கொடுத்துவிட்டு ஓடிச்சென்று பயிற்றுனர் சொன்ன அடையாளங்களை வைத்து அவனது வாகனத்தை பிடித்து அவனையும் பிடித்துக் கொண்டேன். வாகனத்தினுள் வளிப் பதப்படுத்தியை போட்டுக்கொண்டிருந்தவன் என்னையும் உள்ளே அமரச் சொல்லி, எனது தாமதத்திற்கு நக்கலாக சில வார்த்தைகளை உதிர்த்துவிட்டு, தனது பேச்சை ஆரம்பித்தான்.

அதாவது, தான் எனக்கு முதன் கொடுக்கும் மாணவன் இருக்கும் இடத்திற்கும் நான் இருக்கும் இடத்திற்கும் அதிக தூரமிருப்பதால் வந்து போவது தனக்கு சரமும் நஷ்ட்டமும் என்று சொன்னான். அப்படி தான் வர வேண்டுமாகில் என்னுடன் இன்னும் இரண்டு பேரை எடுத்து தரவேண்டும், அவர்களுக்கு என்னை தொடர்ந்து வகுப்புக்களௌ கொடுத்துவிட்டு தான் போனால் தனக்கு பிரியோசனமாக இருக்குமென்றான். அப்படி இயலாவிடில் தான் வரப்போவதில்லை எனவும், அடுத்த சில வாரங்களில் அடுத்த பயிற்றுனரை தமது நிர்வாகம் அறிவிக்கும் என்றும் சொன்னான்.

இதில், நான் எங்கு சென்று இவரின் எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப பயிலுனர்களை பிடிப்பது, அதுவும் எனக்கு மதிய இடைவேளை நேரம், அவர்களுக்கு அதை தவிர்ந்த நேரத்தில்!!!

மூஞ்சுறு தான் போகக் காணேலையாம், இது விளக்குமறோட போன கதையா போகப் போகுது ......

என்னால் முடியாது என்று சொல்லி அடுத்த சில வாரங்கள் காத்திருக்கவும் சம்மதித்தேன்.
எனக்கு எந்தவித வகுப்புக்களுமே எடுக்காமல் இரண்டு வகுப்புக்கள் எடுத்ததாக எனது அட்டையில் பதிந்துவிட்டு என்னை ஏற்றிக் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் விட்டு விட்டு சென்றுவிட்டான்.

இந்த விடயத்தை என்னுடன் பணி புரிந்த என்னிரு நண்பர்களுக்கும் சொன்னேன். அவர்களில் நக்கலும் கடியும் அன்றி முழுவதுமென்னை தொடர்ந்தது.
உண்மைதான். அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது எனது மனம் பட்ட கவலையையும், பொருளாதார ரீதியில் அடைந்த பாதிப்புக்களையும்.


அன்றிலிருந்து சில தினங்களிலேயே அடுத்த ஒரு பயிற்றினரிடமிருந்து அழைப்பு வந்தது.

இந்த தடவை எனது இடத்தை அவரிற்கு கூறி புரிய வைக்கும் காரியத்தை செய்யத் துணியவில்லை. மாறாக, முந்தைய பயிற்றுனர் வந்து என்னை வரச் சொல்லிய அதே சொப்பிங்மோல் (ரக்கன்மார்ட்) இற்கு வரச்சொல்லி நான் அங்கு வருவதாகவும் சொல்லியிருந்தேன். அத்துடன், நான் இருக்கும் இடத்தில் டக்சி கிடைப்பது கடினமாதலால், சற்று தாமதமாகலாம் என்று முன்கூட்டியே ஓர் எச்சரிக்கையையும் விடுத்திருந்தேன். என்மீது ஏதோ பரிதாபப்பட்டு, எனது அலுவலகம் இருக்குமிடத்தை சொல்லுமாறும், அவ்விடத்திற்கே தான் வந்துவிடுவதாகவும் சொல்ல மீண்டும் எனக்கு தர்மசங்கடமான நிலமை.
எப்படி என்னிடத்தை அவரிற்கு சொல்லி புரியவைப்பது?
விடிய முன்னர் அலுவலகம் வந்து, இருண்ட பின்னரே அலுவலகத்திலிருந்து வெளியேறும் நான் எப்படி ஓர் இடத்தை சொல்ல முடியும்? நான் இருக்கும் இடத்தின் முகவரியை வேண்டுமென்றால் அலுவலக கடிதங்களை பார்த்து சொல்லிட முடியும். மக்கள் பிரசித்தி பெற்ற ஓரிடத்திலிருந்து என்னுடைய இடத்திற்கு வழிகாட்ட.......


அலைபேசியை கொண்டு ஒடினேன் அலுவலக முகப்பிற்கு. அங்கே ரிசெப்சனிஸ்ட் இல்லை.
ஆப்பிட்டான் ஓபிஸ்போய்.
அவனிடம் எனது நிலமையை கூறி எமது அலுவலகத்திற்கு வர வழி கூறுமாறு சொன்னேன். அன்று ஏதோ ஒருவாறு அவன் சொல்லி ஓரளவு எனக்கு பயிற்றுவிக்க வரவிருக்கும் பயிற்றுனரிற்கு தெளிய வைத்துவிட்டான்.
அவனிற்கு நன்றி சொல்லி என்னிருப்பிடத்திற்கு நகரலானேன்.

ஒரு வாறாக அன்று (னது இரண்டாவது) பயிற்றுனர் குறிப்பிட்டிருந்த வியாழக்கிழமை வந்தது. சரியாக 1.00 மணி. அழைப்பு எனது அலைபேசிக்கு. தான் வந்து அலுவலகத்தின் முன்பாக இருப்பதாகவும்,என்னை எங்கிருப்பதாகவும் கேட்டார். உடனே வெளியில் ஓடிச் சென்று சுற்றும்முற்றும் பார்க்கிறேன். இல்லை. ஆனால் எனது கொம்பனி பெயர்ப் பலகை தெரிவதாகவும் செக்குரிட்டி கார்ட் இருப்பதாகவும் சொன்னார். தொடர்ந்து பல டவர் கிறேன் தெரிவதாகவும் சொன்னார். அப்போதுதான் விழித்துக்கொண்டேன் அவர் நிற்பது மற்றைய வாயில்ப் பக்கமாக. அவரிற்கு திரும்ப எனது வாயில்ப் பக்கத்திற்கு நானே வழிகாட்டி என்னை வந்தடையும் வரை தொடர்பிலேயே இருக்கலானேன்.
வந்து நான் நிற்கும் இடத்தை அடைந்தவர், முதலில் காரை விட்டு இறங்கி வந்து கை குழுக்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னைப்பற்றி அறிமுகத்தை பெற்றுக்கொண்டு தொடர்ந்து என்னுடைய கடந்த கால அனுபவத்தைப் பற்றி ( வாகனம் ஓட்டுவதைல்த்தாங்க) கேட்கலானார். பின்னர் காரின் முன் பின் பகுதிகளை திறந்து அங்கு கட்டாயம் அவதானிக்கப்பட வேண்டிய விடயங்களை சொல்லித்தந்தார்.அப்படியே எனது சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் படலம் ஆரம்பமாகியது.

இதில் இன்னொரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். ஒரு வகுப்பு என்பது 40 நிமிடங்களை பூரணமாக கொண்டதாகும். ஆனால் எனக்கோ ஒரே நாளில் இரண்டு வகுப்புக்கள் எடுப்பதாக எனது அட்டையில் பதிந்து விடுவார்கள். ஒன்ற விட்ட தினங்களே பயிற்றுவிப்பார்கள். கிழமைக்கு 6 வகுப்புக்கள். ஆனால் எனக்குரிய பயிற்றுவிக்கும் அவகாசமோ ஒரு நாளில் (இரண்டு வகுப்புக்களிற்குரிய நேரத்தில்) 20 நிமிடங்களே....

சில தினங்கள் கால தாமதமாக வந்து 20 நிமிடங்கள் பயின்று ஐந்து பத்து நிமிடங்கள் தாமதித்து எனது அலுவலகத்தில் வந்து இறக்கி விடுவர். அப்போதெல்லாம் அலுவலகத்தினுள் வந்தடையும்வரை ஓரு பத பதைப்பு, மேலிடம் என்னிடம் தமதத்திற்கு காரணம் கேட்டு, இதே தாமதந்தான் எல்லா தினங்களிளும் நிகழ்வதாக எடுத்துக் கொண்டுவிட்டால்.....
இப்படி பல பயிற்றுனர்கள், பல கோணங்களில், மொத்தமாக நான் 8 பயிற்றுனர்களிடம் பயின்றேன். அவற்றில் இருவர் மட்டுமே முழு மனதுடன் அக்கறையாக பயிற்ருவித்தார். மற்றவர்கள் எல்லோரும் நேரத்தை கடத்துவதிலேயே குறியாக இருந்தனர்.

சுருக்கமாக பயிற்றுனர்களை பற்றி சொல்வதானால்,
இரண்டாவதாக வந்தவர் ஆத்ம சுத்தியுடன் பழக்கிவந்தார். திடீரென்று அவரை நிர்வாகம் பிறிதொரு கிளைக்கு மாற்றிவிட்டதாக எனக்கு அலைபேசியில் சொன்னார். அத்தோடு எனக்கு இன்னொருவரை கட்டாயம் நிர்வாகம்
நியமிக்கும் எனவும், கால தாமதமாகா எனவும் சொல்லிவைத்தார். அவர் சொன்னதுபோல் அடுத்தவரும் குறிப்பிட்ட தினத்தன்று எனக்கு மிஸ்க்கோல் அடித்தார். கோல் எடுத்து கேட்டால், தான் என்னிடம் வர வழி சொல்லுமாறு கேட்டார். அவரிற்கு அன்று வழி சொல்வதிலேயே எனது இரண்டு வகுப்புக்களும் அழிந்து போயின. இவ்வாறு ஒவ்வொருவரும் மாற மாற எனது வகுப்பு வேளையில் அவர்களுக்கு வழி சொல்வதில் கடந்தன. பிறகு வந்தவர்களில் ஒருவன் வெளிகாரனை போல, எல்லாவற்றிற்கும் சினப்பான். பிந்தி வருவான், 1.20 இற்குத்தான் வருவான் வழமையாக, 1.40 இற்கெல்லாம் என்னை விட்டு விட்டு போயிட வேண்டும், இதில் 1 நிமிடம் பிந்தினால் கூட என்மீதுதான் சினந்து விழுவான்.
அடுத்ததாக வந்தவன் ஏதோ கடமைக்கு வந்தவனைப் போல இருந்தான். நன்றாக ஓடுகிறாய் என்று சொல்லிக்கொள்வான். குறை ஒன்றுமே சொல்லமாட்டான்.
அதன் பின்னர் வந்தவன் என்னை ஓட விட்டுவிட்டு அலைபேசியில் தனது உப வியாபாரத்தை பார்ப்பான். என்னிடமும் தன்னுடைய வியாபாரத்திற்கு உதவுமாறு கேற்பான்.
இப்படியாக எனது சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் வாழ்க்கை நகரலானது. சுருக்கமாக சொன்னால், பல சாவ்லளின் மத்தியில் பயில வேண்டிய நிலமை.
தனித்த ஒரு தேசத்தில் ஆறுதல் வார்த்தைக்கேனும் ஒருவர் கிடையாது. அதுவே எனக்கொரு சவாலாக மாறியது.
பரீட்சைகள் எதிர்கொண்டேன்.
முதலாவது ஏதோ என்மீது தவறுதான். ஒத்துக் கொள்கிறேன்.
பின்னர் தரப்பட்ட தகுதியற்ற பெறுபேறுகள் ஜீரணிக்க முடியாதவை,
தரிப்பிடத்திலிருந்து பிரதான வீதிக்கு எடுக்கும்போது சற்று கால தாமதமானதிற்கு, வீதியில் வரையப்பட்ட இரண்டு வெள்ளைக்கோடுகளின் மத்தியில் சரியாக நடிவில் ஓட வேண்டுமாம். சற்றேனும் ஒரு பக்கம் சென்றால் அதற்கு என்று ஒவ்வொரு காரணத்தை காட்டி தகுதியில்லை என்று அனுப்பி வைத்தான் அமீரக காவல்த்துறை.
பரீட்சைகள் ஒன்றா?.... இரண்டா?...... மூன்றா?......
மொத்தம் ஐந்து.
ஐந்தாவது பரீட்சையில் அடைந்தேன் சித்தி.



தொடரும்......

சூரியன்
18-05-2008, 01:12 PM
எப்படியோ அனுமதி வாங்கினீரே.

விகடன்
18-05-2008, 01:16 PM
இன்னும் முடியவில்லையே..... இன்னும் இருக்கிறது விடயம்
நான் சாரதி அனுமதிப்பத்திரம் வாங்கியதை மட்டும் எழுத வேண்டுமாயின் ஆறு ஏழு மாதங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டும். :D

சூரியன்
18-05-2008, 01:20 PM
இது இன்னும் தொடருமா?

விகடன்
19-05-2008, 05:22 AM
எப்படியோ அனுமதி கிடைச்சாகி விட்டதுதானே என்றுதான் பலர் நினைப்பார்கள்.
ஆனால் அதை பெறும் வரையில் சந்தித்த சவால்கள் இருக்கின்றனவே...

ஒரு பரீட்சையில் சித்தி பெறாவிட்டால் பரீட்சித்த அதிகாரி ஒன்றுமே கதைக்க மாட்டான். இறுதியில் வாகனத்தை உரிய இடத்தில் கொண்டுவந்து தரித்தவுடன் ஒரு தாளைத் தருவான். அதில் ஆங்காங்கே சில வட்டங்கள், கோடுகள் என்று போட்டு தந்துவிடுவான்.

இதன் பிறகுதான் தர்மசங்கடமான நிலமை....
என்னை பரீட்சைக்கு வாழ்த்தி வழி அனுப்பிவைத்த நண்பர்களின் அலைபேசி அழைப்புக்கள் சராமரியாக வந்துசேரும். அவர்களிற்கு சோகக்கதையை சொல்லி முடித்தவுடன், அலுவலகத்தில் சிலரிற்கு, வேலை முடிந்து வீடு திரும்புகையில் அங்கே சிலரிற்கு என்று அனைவரிற்கும் சொல்லி முடித்துவிட்டு, அன்று மிகவும் கடினப்பட்டு நித்திரையை வரவழைத்துக் கொள்ளவேண்டும்.
இப்படியாக நான்கு தடவைகள் அனுபவித்தே கிடைக்கப்பெற்றேன் சாரதி அனுமதிப் பத்திரம்.

அனுமதிபபத்திரம் பெற்று ஒரு ஆறு மாதகாலம் இருந்திருப்பேன் அமீரகத்தில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் அமீரகத்திலிருந்து இன்னொரு நாட்டிற்கு தாவவேண்டிய நிர்ப்பந்தம்.
வேறு வழி இன்று கத்தாரிற்கு (அதுதாங்க, அன்புரசிகன் இருந்த இடத்திற்கு :) ) வந்துவிட்டேன். அங்கு சென்றால் அமீரக சாரதி அனுமதிப் பத்திரத்தை காண்பித்து இலகுவாக அங்கத்தைய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்று சொல்லியிருந்தாங்கள். எனக்கு முதலில் வந்த ஒரு சிலர் தாம் பெற்றுக்கொண்டதையும் ஊர்ஜிதப்படுத்தினர்.
நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்துவிட்டால் மறு நாளே என் கையில் கத்தார் அனுமதிப் பத்திரமும் வந்துவிடும் என்று சந்தோஷமாக இருந்தேன். அந்த நிரந்தர அனுமதி வரும் நாளையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. சகல ஏற்பாடுகளுடன் தகுந்த அலுவலகத்திற்கு சென்றேன். அங்கே எனக்கு கண்பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். சரி என்று சொல்லி அந்த அலுவலகத்திலேயே அதற்குரிய பிரிவில் சென்று அடுத்த 10 விநாடிகளில் அதையும் முடித்து மீதமாக இருந்த படிவம் நிரப்பும் படலம் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஒரு கவுண்டரில் சென்று "டோக்கின்" ஒன்றையும் பெற்றுக்கொண்டு வந்து அமர்ந்தேன். அங்கிருந்த ஓர் அரபிய பெண்மணி என்னை அழைத்தாள். உடனே சென்று என்னுடைய அனுமதிப்பத்திரம் பெறுவதற்குரிய ஆவணங்களை கையளித்தேன். பெற்றுக்கொண்ட அவள் சில நிமிடங்களில், “இந்த அனுமதிப் பத்திரத்தை எடுத்துக்கொண்டுதான் கத்தார் சாரதி அனுமதிப்பத்திரம் தருவேன்" என்று அரபி மொழியில் சொன்னாள். அதை என்னுடன் வந்த எனது அலுவலக உத்தியோகத்தர் (பி.ஆர்.ஓ) மொழிபெயர்த்து சொன்னார். உடனே அவரை கேட்டேன், ஒரு வேளை துபாய்க்கு செல்ல வேண்டியிருப்பின், எவ்வாறு மீளப் பெறுவது? அங்கு கத்தார் அனுமதிப் பத்திரத்திற்கு பதிலாக துபாய் சாரது அனுமதிபபத்திரம் தரமாட்டார்களே! என்றேன். அவர் என்னத்தை அவளிடம் கேட்டாரோ தெரியவில்லை!!! ஓரிரு வார்த்தைகள்தான் சொல்லியிருப்பார். ஆனால் அந்த அராபிய பெண்ணோ தான் முதல் சொன்ன அதே வார்த்தைகளையே, மீளப்போட்ட ஒலி நாடாவைப்போல சொல்லிக்கொண்டிருந்தால்...

அப்போது சொல விடயங்களை சிந்தித்தேன்,
இந்த அமீரக அனுமதிப் பத்திரம் என்னுடைய சொத்து, முழுக்க முழுக்க எனக்கே உரியது ஒன்று, இவர்கள் யார் அதனை என்னிடம் இருந்து பறிக்க?

எனக்கு கத்தார் சாரதி அனுமதி பத்திரமே தேவையில்லை என்று முடிவெடுத்தேன். அவளிடம், என்னுடைய அனுமதி அட்டையை தரச்சொல்லி கேட்டேன். என்னை ஓர் புதிராக பார்த்தாள். வில்லங்கமாக எனது அனுமதி அட்டையை பெற்றுக்கொண்டு விரைந்தேன் அலுவலகத்தை நோக்கி...

இது என்னுடைய அனுபவமே. ஏதோ உங்களுடன் பகிர வேண்டுமென்று தோன்றியது. அதுதான் போட்டுவிட்டேன்.

இதில் என்னை கவலைப்படுத்திய விடயம் என்னவென்றால்,
இங்கே வெள்ளைக்காரங்கள் வேலை செய்கிறார்கள். உண்மையில் சொன்னால், எண்ணெய்யினை எடுத்துத்தருவதாக சொல்லி தமது நாட்டு இராணுவம் உட்பட அனைத்தையும் அவனே தன் நாட்டிலிருந்து வருவித்து தொழிலை செய்கிறான். எப்படி மசகு எண்ணெய்யினை எடுப்பது என்னும் தொழில் நுட்பத்தை வெளியே கசிய விடுவதில்லை. அத்துடன் அராபிய நாட்டிலேயே எண்ணெய் எடுக்கும் வலயங்களிற்கு அராபிய நாட்டவன் செல்ல அனுமதி பெற வேண்டும். தன் நாட்டிற்குக் கூட எண்ணெய்யினை ஏற்றுமதி செய்கிறான். அனால் தன்னாட்டில் இருக்கும் எண்ணெய் வளத்தை இன்னும் பெரியளவில் பயன் படுத்த ஆரம்பிக்கவே இல்லை.

அதுமட்டுமின்றி கட்டுமானத் துறையில் தனது ஆங்கில வருமானத்தை பெருக்கிக் கொள்கிறான். ஆனால் முறிந்து முறிந்து வெய்யிலிலும் குளிரிலும் வேலை செய்வதோ நம்மினத்தோர்தான். அதிலும் இந்தியர்கள் பெரும்பான்மை. அடிமாட்டு சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.
ஆனால் அரபியரோ, ஆங்கிலேயெனிற்கு அதீத மரியாதையும் முன்னுரிமையும் வழங்குகின்றனர். நமது தோலை கண்டால் எரிந்து விழுகின்றனர்.

தொடர்புகொள்ள எங்காவது முக்கிய இடங்களிற்கு சென்றால் அராபிய மொழியில்த்தான் கதைக்க வேண்டும் என்று சொல்கின்றனர். இல்லாவிட்டால் “போ” என்று துரத்திவிடுகின்றனர். அதுவே வெள்ளையர்களாக இருந்தால், எந்த மொழியும் சரி. நாங்கள் என்ன தமிழிலா கதைக்க முனைந்தோம்? ஆங்கிலத்தில்த்தானே!!
ஏனிந்த வேறுபாடு?

santhan
19-05-2008, 02:37 PM
விராடன் அண்ணா! கதை சுவாரஷியமாக இருந்தாலும் மனதுக்கு
சுமயானது,கவலை வேண்டாம் எல்லம்
சுபமாக முடியும்.

பாரதி
19-05-2008, 03:09 PM
அன்பு விராடன்,

பாகுபாடு என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறதென்றாலும், உங்கள் எழுத்தில் இருக்கும் உண்மையையும், தார்மீக கோபத்தை உணர்கிறேன்.

சாரதி அட்டை பெற இந்திய நாணய மதிப்பில் கிட்டத்தட்ட ஐந்திலக்க ரூபாய்களை இழந்த நண்பர்களையும், அவர்களது கதை (!?)களையும் கேட்டிருக்கிறேன். அங்கங்கே சில வேறுபாடுகள் இருப்பினும், பெரும்பாலோனோரின் கதை ஒன்றுதான்.

கரையில் பணி செய்யும் வாய்ப்பு கிட்டாததால், சாரதி அட்டை குறித்து நேரடி அனுபவம் எதுவும் எனக்கு கிட்டவில்லை. ஆனால் குடியேற்றத்துறையில் எனக்கும் நல்ல (!) அனுபவம் கிட்டி இருக்கிறது.

அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி விராடன்.

அன்புரசிகன்
19-05-2008, 03:48 PM
பாகுபாடுகள் கொஞ்சநஞ்சமா.... பிரித்தானியாவில் வாகனத்தின் வலதுபக்கமாக இருந்துதான் ஓட்டுவார்கள். மத்திய கிழக்கில் அவ்வாறு இடது பக்கத்திலிருந்து... ஆனால் கத்தார் அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் அவர்களை ஏமாற்றி சுறண்டும் வெள்ளையனுக்கு Over the Counter change.... ஆண்டவன் இருக்கிறானா என்ற எண்ணம் இந்த நேரத்தில் தான் வரும்...

பகிர்வுக்கு நன்றிகள்.. உங்களின் உணர்வுகளை உணர முடிகிறது நண்பா...

விகடன்
19-05-2008, 04:20 PM
உங்களின் உணர்வுகளை உணர முடிகிறது நண்பா...

:D உணர்வுகள் ஒன்றாகிவிட்டால் பிறகென்ன

சுகந்தப்ரீதன்
20-05-2008, 02:30 AM
சுகந்தப்பிரீதன் இதை கண்டால் ஒரு சுத்து சுத்துமே......

ஒரு சுத்துதான் சுத்துது... அண்ணாச்சி.. ஆனா நிக்காம சுத்துது...!! ஆமாம்.. ரெண்டுநாளா இந்த பக்கம் நான் வரவேயில்லை..அதான் இந்ததிரியை பார்க்கம இருந்துட்டேன்... ஆமாம் ஏன் ரெண்டுநாளா வரலின்னு கேட்குறிங்களா.. ஹி..ஹி.. நீங்க திரி ஆரம்பிச்சப்பதான் எனக்கு சாரதி அனுமதி அட்டை வாங்க வகுப்பு ஆரம்பிச்சிருக்காங்க..!!

அதெப்படி அண்ணாச்சி.. நான்கூட உங்ககிட்ட சொல்லவேயில்லை.. சரியா நான் வகுப்புக்கு போறப்ப பார்த்து திரிக்கிறீங்க.. அட திரி ஆரம்பிக்கிறீங்கன்னு சொன்னேன்பா...!!

நீங்க சொல்லியிருக்க அத்தனையையும் பார்த்தா... வேண்டாம் இந்த விளையாட்டுன்னுதான் தோனுது.. ஆனாலும் இந்த RTA பேருந்துக்கும், டாக்ஸிக்கும் ஒருவருசமா காத்திருந்து காத்திருந்து கால்வலி எடுத்துபோய்.. கடுப்பாகிதான் சரி..என்னத்தான் நடக்குதுன்னு பார்த்துறலாமேன்னு நானும் இறங்கிட்டேன்..!!

மக்களே... எங்க ஆபிஸ்ல யாருக்காவது சாரதி அனுமதிபத்திரம் கிடைச்சிடுச்சின்னா அடுத்தநாளே கண்டிப்பா எல்லோருக்கும் அவரோட சொந்த செலவுல மதியஉணவு வாங்கிதரனும்கிறது எழுதப்படாத சட்டமாகிடுச்சி... அப்படின்னா நீங்களே பார்த்துக்குங்க... ஆமீரகத்துல இன்னிக்கு சாரதியாகறது எவ்வளவு பெரியவிசயம்ன்னு... ஆனாலும் அண்ணன் விராடன் ரொம்பவே கஸ்டப்பட்டுறுக்காருன்னு தெரியுது... நான் இப்பத்தான் கஸ்டப்பட தொடங்கியிருக்கேன்... எப்ப முடியுமோ..யார்கண்டார்...??!!

விகடன்
20-05-2008, 04:34 AM
கஸ்ட்டப்பட்டேந்தான். ஆனால் என்னை விட எத்தனையோ பேர் கடுமையாக கஸ்ஸ்ட்டப்பட்டனர், கஸ்ட்டப்பட்டுக்கொண்ண்டிருக்கின்றனர் என்பது அடுத்த விடயம்.

இங்கே சொல்ல வந்தது என்னவென்ற்றால், அமீரகத்து சாரதி அனுமதி பத்திரம் கத்தாரிலும் அங்கீகரிக்கின்றனர். ஆனால் அந்த அமீரக அனுமதியட்டையை இங்கே காண்பித்து இங்கத்தைய அனுமதி அட்டை பெற்ற வேண்ண்டும். ஆனால் அதை தாங்கள்ள் எடுத்துக்கொண்டுதான் கத்தார் அனுமதி அட்டையை வழங்குவோம் எங்கின்றனரே!!!! அதுதான் கொடுமை.

எனக்கு வீதியில் வாகனம் ஓட்டத் தெரியும் என்பதை ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் கத்தாரில் வாகனம் ஓட்டுவதென்ற்றால் அமீரகத்தில் வாகனம் ஓட்டக்கூடாது என்ற்று தடை விதிப்பதை போன்றல்லவா உள்ளது. ஏனெனில் இன்ற்று கத்தார், நாளை ஆமீரகத்தில் இருக்கலாம் அல்லவா??

-------------
அமீரகத்தில் சாரதி அனுமதி அட்டை எடுத்து வைத்திருப்பது மிக ந்நல்லது. அத்துடன் நில்லாது தொடர்ந்து வாகனமும் எடுத்தால்த்தான் அந்த அட்டைக்கும் பெறுமதி!!!

இல்லையேல் பேரூந்திற்கு கால் கடுக்க காவல் நிற்க வேண்ண்டும், அது ஓரளவு நிற்றைந்திருந்தால் பேரூந்து ஓட்டுனர் எம்மை உள்ள்ளே அனுமதிக்க மாட்டான். மீண்ண்டும் அடுத்த பேரூந்திற்காக ந்நிற்ற்க வேண்டிவரும். எமது ஊரைப்போல வாயிலிலோ யன்னலிலோ தொங்கிக்கொண்டெல்லாம் பயணிக்க முடியாது :D

எம்மது ஊரைப்போல அருகரிகிலேயே வியாபார நிலைகள் இருக்காது. அவற்ற்றை ந்நாட டக்சிக்கு பணம் கொடுத்தால் உழைத்ததில் பெரும் பகுதி அவர்களுக்கே கொடுக்க வேண்டி வரும். இப்படி பல பிரதிகூலங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆகவே சுகந்தா,
எடுத்த முடிவு நல்ல முடிவே,
விடைவில் அலுவலகத்தில் சகலருக்கும் மதிய உண்ணவை அளிக்க வாழ்த்துக்கள் ;)

சுகந்தப்ரீதன்
20-05-2008, 06:29 AM
ஆகவே சுகந்தா,
எடுத்த முடிவு நல்ல முடிவே,
விடைவில் அலுவலகத்தில் சகலருக்கும் மதிய உண்ணவை அளிக்க வாழ்த்துக்கள் ;)
மிக்க நன்றி அண்ணாச்சி...!!

ஆமாம்.. சர்வதேச சாரதி அங்கீகாரம் வாங்கிட்டா நீங்க சொன்ன பிரச்சனையை தவிர்க்க முடியுமான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்..!!

அன்புரசிகன்
20-05-2008, 04:44 PM
விராடரே......... கத்தாரில் நேரடியாக நீங்கள் ஒரு தடவை பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். கத்தாரில் அமீரகம் போன்ற குசும்பு கூத்து இல்லை. முயன்று பாருங்கள். 150 கத்தாறி றியால் செலுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.... அக்காவிடம் (தெரியும் தானே...) கேட்டுப்பாருங்கள். அவர் உதவுவார்.

sns
22-05-2008, 07:02 AM
நான் தற்போது அமிரகத்தில் உள்ளேன் எப்படியோ கஷ்டப்பட்டு இப்போதுதான் எனது முதலாவது Road Test க்கான திகதி வந்துள்ளது, அது அடுத்த மாதம் முதல் வாரத்தில் உள்ளது .
உங்களின் RoadTest அனுபவங்களையும் ஏன் எந்தா தவறுகளால் நிங்கள் பரிச்சையில் சித்தியடையவில்லை என்பதை சொன்னால் அது என்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

விகடன்
22-05-2008, 10:01 AM
முதலாவது வீதிச் சோதனையா?
வாழ்த்துக்கள்.

அவர்கள் ஒரு தொகுதி விடயங்கள் வைத்திருக்கின்றனர். அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். கூடிய விரைவிலேயெ அறியத்தருகிறேன்.

sns
22-05-2008, 10:49 AM
முதலாவது வீதிச் சோதனையா?
வாழ்த்துக்கள்.

அவர்கள் ஒரு தொகுதி விடயங்கள் வைத்திருக்கின்றனர். அனைத்திலும் தேர்ச்சி பெறவேண்டும். கூடிய விரைவிலேயெ அறியத்தருகிறேன்.

வாழ்த்துக்கு நன்றி விராடன் உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன்

செல்வா
22-05-2008, 11:11 AM
வெறும் அனுபவங்கள் என்ற நிலையிலிருந்து படிப்படியாக உருமாறி அறியாதவற்றை அறியக்கொடுக்கும் நிலைக்கு வந்திருக்கிறது விராடன் அவர்களே.

இங்கே ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் சென்னையிலிருக்கும் போது என்னோடு பணியிலிருந்த ஒருவர் வண்டிச் சுக்கானைக் கூட பற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரம் வாங்கினார். வழங்கிய அதிகாரியே கூட விரைவில் கற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறி... அட்டையை கொடுத்தாராம்.

என்ன கொடுமை விராடன் இது....

தங்கவேல்
25-05-2008, 02:36 AM
வாழ்க்கை எல்லோருக்கும் இனிதாய் அமைந்து விடுவதில்லை. கார் ஓட்ட அட்டை வாங்க இவ்வளவு பிரச்சினையா ? கொடுமைடா சாமி.

தமிழனைக் கேவலப்படுத்துகிறார்கள் என்று பொத்தாம் பொதுவில் சொல்லி வைத்து விட்டீர்கள். அந்த தமிழர்கள் வெளி நாடுகளில் செய்யும் அனைத்து தவறுகளும் மொத்தமாக தமிழனின் தலையில் வந்து விடிகிறது என்பது தெரியுமா உங்களுக்கு.

aren
25-05-2008, 03:07 AM
இந்தியாவில் பலர் பணம் கொடுத்தே டிரைவிங் லைசென்ஸ் வாங்குகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இது சாத்தியமல்ல. நன்றாக கார் ஓட்டத்தெரிந்தாலே லைசென்ஸ் கிடைக்கும். ஆகையால் நம் மக்கள் கொண்டுவரும் லைசென்ஸை அமீரக அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை டிரைவிங் டெஸ்டிற்கு வரும்படி அழைக்கிறார்கள்.

என்ன செய்வது ஒரு சிலர் இப்படி பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்கிவிடுவதால் அனைவரும் இப்படி மாட்டிக்கொள்கிறோம்.

காலம் மாறும். காத்திருப்போம்!!!!

விகடன்
27-05-2008, 05:31 AM
வணக்கம் sns,
இணைக்கப்பட்ட (http://www.tamilmantram.com/photogal/file.php?n=489&w=o)படத்தில் வீதிச்சோதனையின்போது கவனிக்கப்படவேண்டியனவற்றை தந்துள்ளேன். இது ஆர்.டி,ஏ ஆல் கவனிக்கப்படும் விடயங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmantram.com/photogal/images/2522/medium/1_Driving.jpg

sns
27-05-2008, 06:09 AM
நன்றி விராடன்

விகடன்
16-06-2008, 01:19 PM
இந்த படலம் முடிந்துவிட்டது என்றுதான் இருந்தேன்.... ஆனால் இன்னும் சற்று நீண்டிருப்பது இன்றுதான் எனக்கு தெரியவந்தது.....

அரபியர்கள் ஓர் விநோதப் போக்குடையவர்களாக இருக்கிறார்களே...

இதோ மிகுதியையும் சொல்லிவிடுகிறேன்.

அன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கே செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கத்தார் வீதிக் கண்காணிப்பு காவற்துறையிடம் கையளித்த போது அதற்கு கத்தார் சாரதி அனுமதிப்பத்திரம் தருவதாகில் அளிக்கப்பட்ட சாரதிப்பத்திரம் திருப்பித்தரமாட்டாது என்று சொன்னதாக சொல்லியிருந்தேன் அல்லவா.
அது அவாறிருக்க...

அவர்களுடைய அலுவலகத்தை பற்றி சற்று சொன்னால்த்தான் பின்னால் நிகழ்ந்தவற்றை ஓரளவிற்கேனும் மனத்திரையில் இட்டு பார்க்க முடியும் :D )

இங்கு கண் ப்ரிசோதனை செய்தால்த்தான் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். “இங்கில்லை. எங்கும் அப்படித்தான்” என்று நீங்கள் முணு முணுப்பது விளங்குகிறது. நான் சொல்ல வந்தது, வழமையாக கண் பரிசோதனைப் பெறுபேற்றை உங்களுக்கு தெரிந்த ஏதாவது சிறிய கண்பரிசோதனை நிலையத்தில் பெற்றுக் கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் கத்தாரில் முக்கியமாக சாரதி அனுமதிப்பத்திரம் எடுப்பதென்றால் அவர்களுடைய அலுவலகத்திலேயே இதெற்கென பிரத்தியேகமாக ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் சென்று பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இது முதலாம் மாடியில் இருக்கும். வேலை முடிந்ததும் கீழ்த்தளத்திற்கு வந்தால் அங்கே சுமார் இருபது வாடிக்கையாளர்களைக்கையாளும் அரபியப்பெண்கள் வரிசைக்கிரகமாக இருப்பர். அவர்களில் ஒருவரிடத்தில் எம்மோடு கொண்டுவந்திருந்த ஆவணங்களை சரி பார்த்து . விண்ணப்பப் படிவத்தில் அலுவலக குறிப்புக்கள் இருந்தால் குறித்து கையொப்பத்துடன், அவரிற்கு சிராஷ்ட்ட அதிகாரியிடம் மேலதீக பரிசோதனைக்காக எங்களை அனுப்பி வைப்பர்.
அங்கேதான் கடந்த தடவை இந்த அரபியப் பெண்மனிதான் ஐக்கிய அரபு இராச்சிய சாரதி அனுமதிப்பத்திரத்தை திருப்பி கையளிக்கப்பட மாட்டாது என்றுரைத்தவர்.

அன்று விரக்தியுடன் அலுவலகம் நாடிய நான் அங்கே என்னுடன் பணிபுரியும் ஒரு சிரேஷ்ட்டரிடம் இந்தக் கதையை சொல்ல, அவரும் தனக்கு தெரிந்த ஒருவர் இருப்பதாகவும், அவரிற்கு நங்கு அரபிமொழி தெரியும் எனவும் சொல்லி அவருடன் கதைத்துப் பார்ப்பதாக சொல்லி என்னிடமிருந்த சகல ஆவணங்களையும் பெற்ருக்கொண்டு சென்றார்.
சில வாரங்களுக்கு பின்னர் இன்றுதான் மீண்டும் அதே அலுவலகத்தை நாடினோம். ஆனால் வேறுரு பெண்மணி. எம்முடன் கொண்டுவந்திருந்த ஆவணங்களை அவரிடம் கயளித்தோம். பரிசோத்த அவரிடம் எமது சாரதி அனுமதிப் பத்திரம் மீள தரப்படுமா என்று விசாரித்தோம். அதற்கு "ஆம்: என்றே பதிலளித்தார்.


இருந்தாலும் ஐமிச்சம் விட்டகலவில்லை. சகல பரிசோதனைகளும் முடிந்ததும் என்னிடம் கடவு அனுமதிப்பத்திர அளவிலான நிழற்படம் இருக்கிறதா என்று வினாவ, நானும் எடுத்து கொடுத்தேன்.

சில நிமிடங்கள் பொறுக்கச் சொன்னவர். இரண்டு நிமிடங்களிலேயே மீண்டும் அழைத்தார். சென்று பார்த்தால் எனது கத்தார் சாரதி அனுமதி அட்டையினை என் கையில் தந்தார்.
பெற்றுக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

அப்போதுதான் என்னுடன் வந்த அந்த அண்ணா சில வினாக்கள் கேட்டார்...

சென்ற தடவை என்ன கிழமை வந்திருந்தீர்கள்?

வியாழக்கிழமை.

எத்தனை மணியளவில்?

சுமார் பத்து..... பத்தரை இருக்கும்...

அதுதான் பிரச்சினை. இவங்களுக்கு வியாழன் அரை நாள். அரை நாள் என்றால் ஒரு மணிவரை என்பது மற்றய நாட்டில். அரபியருக்கு அதுவும் அரசாங்கம்/ அரசாங்கம் சார்ந்த துறைகளுக்கு 11.30 மணியோட முடிந்துவிடும். ஆக வார இறுதியிலோ வாரத்தின் ஆரம்ப நாளிலோ வரக்கூடாது. அந்த நேரங்களில்த்தான் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும், அவர்களின் வேலைப் பழுவும் அதிகமாக இருக்கும். இன்று வாரத்தின் இரண்டாம் நாள் ஆகையாலும் காலையில் வேளைக்கே வந்துவிட்டதாலும் சுமூகமாக எல்லாம் முடிந்துவிட்டது. ....

இதிலிருந்து என்ன தெரிகிறது / விளங்குகிறது....

அரபிய நாட்டில் பல முகவர்கள் மூலம் ஓர் விடயம் செய்யக் கூடிய வகையில் இருக்கும்போது ஒருவரை அனுகி அது பிழைத்துவிட்டால் அப்படியே இருந்துவிடக் கூடாது. இன்னுமொருவருடன் அதே வேலையினை செய்விக்க அனுக வேண்டும்.
அத்துடன் வாரத்தின் ஆரம்ப நாளிலோ அல்லது இறுதியிலோ செல்லக்கூடாது. மற்றய நாட்களிலும் நேரம் தாழ்த்திச் செல்லக்கூடாது.


பி.கு; இந்த பதிவை தவறான இடத்தில் பதிந்துவிட்டோமோ……… என்று பல தடவை சிந்தித்ததுண்டு. ஏனென்றால்,
இது எந்த வகையிலும் நீதிக்கதையாகிவிடாது.
வேணுமென்றால் நீதி கேட்கும் கதையாகலாம் :D
அதேபோல,
எனக்கு இது ஓர் சுவையான சம்பவமும் இல்லை.
இன்றுவரை


ஆனால்,
இன்று நடந்ததுடன் இது ஓர் சுவையான சம்பவமாகி பிரசுரித்த இடத்திற்கு பெருமை சேர்த்துவிட்டது. (இல்லையா? )


இவ்வளவுதாங்க .

அன்புரசிகன்
16-06-2008, 01:50 PM
அப்புறமென்ன.. ஒரு கொண்டாட்டம் தான். பிராடோவா அல்லது ஹம்மரா அல்லது பென்ஸா????

அக்னி
16-06-2008, 02:28 PM
வாழ்த்துக்கள் விராடா... சாரதி அனுமதிப்பத்திரம் மிக அத்தியாவசியமானது. மிகுந்த முயற்சியில் பெற்றுவிட்டீர்கள்.
எனக்கும் உங்களின் கடின முயற்சி ஒரு உந்துதலாக இருக்கும் என்றே நம்புகின்றேன்...


பிராடோவா அல்லது ஹம்மரா அல்லது பென்ஸா????
மலரின் ஏ பி சி டி... தெரியுமா... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14780) திரியில் இவை எவையும் இல்லையே....

விகடன்
16-06-2008, 02:31 PM
அப்புறமென்ன.. ஒரு கொண்டாட்டம் தான். பிராடோவா அல்லது ஹம்மரா அல்லது பென்ஸா????

உலங்குவானூர்தி எடுக்கலாம் என்ற்றிருக்கிற்றேன். ஏனெனில் அதுதான் வாகன நெரிசல் இல்லாத ஒன்று. அதற்கும் அனுமதி பெற வேண்ண்டுமாம். அனுமதி இல்லாமல் அனுமதி இல்லையென்றால் ஹமர் 2 பார்க்கலாம். :icon_rollout:

விகடன்
16-06-2008, 02:33 PM
வாழ்த்துக்கள் விராடா... சாரதி அனுமதிப்பத்திரம் மிக அத்தியாவசியமானது. மிகுந்த முயற்சியில் பெற்றுவிட்டீர்கள்.
எனக்கும் உங்களின் கடின முயற்சி ஒரு உந்துதலாக இருக்கும் என்றே நம்புகின்றேன்...
வாழ்த்துக்கள்ளிற்கு நன்றி.

எனது பதிவு உங்களிற்கு ஓர் உந்து சக்தியாக இருக்கும் என்று நினைப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நானே எடுத்தூவிட்டேனாம் நீங்கள் எடுப்பது என்ன கடினமா அக்னி?

மலரின் ஏ பி சி டி... தெரியுமா... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14780) திரியில் இவை எவையும் இல்லையே....

இது வேறையா?
இன்னும் படிக்கவில்லை. வீடு சென்று ஆற அமர இருந்து படிக்க வேண்டும்.

அன்புரசிகன்
16-06-2008, 02:39 PM
உலங்குவானூர்தி எடுக்கலாம் என்ற்றிருக்கிற்றேன். ஏனெனில் அதுதான் வாகன நெரிசல் இல்லாத ஒன்று. அதற்கும் அனுமதி பெற வேண்ண்டுமாம். அனுமதி இல்லாமல் அனுமதி இல்லையென்றால் ஹமர் 2 பார்க்கலாம். :icon_rollout:

ஏதோ கெட்ட கேட்டுக்கு வறுத்த விஸ்கோத்து கேட்டுதாம் என்று நம் ஊரில் 90s கள் சொல்வாங்கள்...

விகடன்
16-06-2008, 03:50 PM
ஏதோ கெட்ட கேட்டுக்கு வறுத்த விஸ்கோத்து கேட்டுதாம் என்று நம் ஊரில் 90s கள் சொல்வாங்கள்...

ஏன் அன்பு?
தப்பா ஏதாச்சும் சொல்லுப்புட்டேனா???:sprachlos020: