PDA

View Full Version : கேள்வியாகும் பதில்கள்



அமரன்
17-05-2008, 04:57 PM
"சாரி"
"எதுக்கு"
"கால் பண்ணியதுக்கு"
"ஓ.."
"மெயிலுகளுக்கு பதிலில்லை.. அதான் கா"
"பராவாயில்லை"
"ஏனிப்படி நடந்துக்கிறே"
"எப்படி"
"கால் பண்ணிப் பேசினேன்.. வேலை கெடுது; தூக்கம் கெடுது; மெயிலனுப்புன்னு சொன்னே. அனுப்பினால் பதிலில்லை"
"நேரமில்லை"
"பொய்................. வேணும்னே நீ என்னை அவாய்ட் பண்றே"
"இல்லை"
"நீ இன்னும் பழச மறக்கல"
"அப்படில்லாம் இல்லை"
மௌனம்... மௌனம்.
"ஏன் என்னை அவாய்ட் பண்றே"

தெரியாத விடை என்னை ஊமையாக்கியது. எதிர்முனை ஒரு நிமிடம் மௌனமானது.. சில நிமிடங்கள் விசும்பல் கேட்டது.. மௌனம் காத்தேன்..

"எப்போ கேட்டாலும் எதுவுஞ் சொல்றதில்ல. உனக்கும் உன் ஃபிரன்சுக்கும் டைம்பாசிங் டாய் ஆகிட்டேன் நான். போரடிச்சா பேசி வெளாடுவீங்க. அப்புறம் தூக்கிப் போட்டுடுவீங்க. நீயும் ஒரே மாதிரின்னு நிரூபிச்சிட்டே.. தாங்க்ஸ் 4 யுவர் ஃபிரன்ஷிப்.. பை"

என்னை பேசவிடாமல் லைனைக் கட்பண்ணியது சகோதர மொழி மயில். இந்தக்கேள்வியை எத்தனை வாட்டி கேட்டாளோ அத்தனை வாட்டியும் பதில்தெரியாமல் அமைதியாகி இருக்கேன்.. எத்தனை வாட்டி கேட்டிருப்பாள் என்பது ஞாபகமில்லை. எப்போ முதன் முதலாகக் கேட்டாள் என்பது மறக்கமுடியாத முதல்களுடன் ஒன்றாக கலந்திருந்திருக்கிறது.

கீர்த்தனா எனக்கு புதுமுகமாக அறிமுகமானபோது நான் அவளுக்கு பழையமுகம் என்றாள். அந்த நேரத்தில் இது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. நானும் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சொல்ல மறந்துட்டேன். கீர்த்தனாவை தன் காதலியாக, எனக்கு அறிமுகஞ்செய்தவன் திவாகர்..

கிராமத்திலிருந்து நகரத்துக்கு வேலை என்னை இடமாற்றியபோது அறிமுகமாகி, இரண்டாண்டு காலம் நட்புபாராட்டியவன் திவாகர். இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். சின்ன வயசில, கிராமத்தில, பூவரமிலையில பீப்பீ செஞ்சு விளையாடியன் போல அன்னியோன்யமாகவும் உரிமையுடன் பழகினால் யார்தான் நம்புவார்கள்.. எல்லாருக்கும் நட்புபற்றி ஆழமான அனுபவம் இருப்பதில்லையே. இந்தக்கதைக்கு அவனைப்பற்றி இந்தளவு விபரம்போதும்..

வீதி விபத்தொன்றில், திவாகர் இறந்து ஓராண்டு இறந்திருக்கும். தோழியாக நானினைத்த கீர்த்தனா, என்னைக் காதலனாகப் பிரகடனப்படுத்தினாள். அதிர்ந்தேன். திவாகரைக் காதலித்தவள்; திவாகர் இறந்து ஓராண்டு ஆகவில்லை; அதற்குள் அவனுடைய நண்பனான என்னை காதலிப்பதாக சொன்னால் அதிர்ச்சி அடையாமல் என்னதான் செய்வது.

""நான் உன்னைக் காதலிப்பது திவாகருந் தெரியும்"
"..............."
"உன்னையும் என்னையும் சேர்த்து வைப்பதாகச் சொல்லித்தான் இன்ரடியூஸ் செய்து வைத்தான்"

நான் என்ன நிலைமையில் இருக்கேனென தெரியாமலே அவள் அடுக்கடுக்காய் வெடிகளை வீசினாள். என் கண்ணோக்கிய அவள் கண்களில் தெறித்த நேர்மையும். சற்றும் பிசிறாத, நிதானம் தவறாத குரலும் எங்கோ தப்பு நடந்திருக்கு என்று சொல்லின. எங்கே என்பதில் உடனடித் தெளிவு இல்லை.

"பிறகு கொஞ்ச நாள்ல அவனே என்னைக் காதலிப்பதாக சொன்னான்.. மறுத்தேன்.. அடம்பிடித்தான். சூசைட் பண்ணிடுவேன்னு மிரட்டினான். அவன் அம்மாவிடம் சொன்னேன். அவுங்களும் அவனுக்கு சப்போர்ட் பண்ணினாங்க.."

என் முகமாறுதல்களை அவதானித்தவள், சற்று நேரம் இடைவெளை விட்டாள். பொது இடங்களில், எதிலிருந்தும் சுலபத்தில் வெளிவந்துவிடும் தன்மை எனக்கு இருந்தது. நிர்ச்சலன மனத்தை முகம் அடையாளங் காட்டியது..

"நெகட்டிவ் முடிவு எடுக்காதிருக்கும்படியாக, திவாகரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற ட்ரை பண்ணினேன்.. அவனுடைய வேறு ஃபிரன்ஸை ஹெல்ப் கேட்டேன். சரின்னாங்க.. ஆனால், அதை வைத்து அன்பான பிளாக் மெயில் செய்தாங்க. அவுங்க அவுங்க பர்சனல் காரியங்களுக்கு என்னை யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. இந்த இழுபறிக்குள்ளதான் அந்த ஆக்சிடன்ட் நடந்துச்சு...."

நிறுத்தியவள் என்னை நிறுப்பது போலப் பார்த்தாள். எனக்குள் பல எண்ணவோட்டங்கள்.. இப்போ என்ன சொல்வது.. என்ன செய்வது. எதுவுமே தெரியவில்லை.. மொழி தெரியாத தேசத்தில் சிக்கியவன் போலானேன்.. பல சமயங்களில் உதவியதைப் போல இப்போதும் உதவினாள்..

"நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. அப்புறமா உனக்கு ஃபோன் பண்றேன்"

எங்கெங்கோ அலைந்தேன்.. என்னென்னமோ செய்தேன்.. எதுவுமே உதவவில்லை.. வழமைக்கு மாறாக தாமதமாக ரூமுக்குப் போனேன்.. கேட்டின் சத்தம் கேட்டு விழித்த நாய் குரைக்க, யன்னல் திறந்து பார்த்த ஓனரம்மா முறைத்தாள். குனிந்த தலையுடன் அவளைக் கடந்தபோது செல்சிணுங்கியது.

"பதிலேதும் சொல்லலையே நீ"
"எதுவுமே தோணலை"
"..................."
"..................."
"என்னைப் பிடிக்கலையா"
"ஆஸ் எ ஃபிரன்ட்.. பிடிச்சிருக்கு"
"........................... ஏன்..???.................. நான் அழகில்லையா?"
"......."
"என் மதம்?"
"..........."
"என் லாங்குவேஜ்"
"........"
"எதுவுமே பேசாமல் இருந்தா.........."
"... தெரியல.."
"மாறவே மாட்டியா"
"இல்லை"
"............................................................... ஓகே லவ்வரா என்னை ஏன் உனக்குப் பிடிக்கலங்கிறதை, எனக்காக யோசிச்சுச் சொல்லு.. அந்த செக்கன்ல இருந்து நான் இதை மறந்துடுறேன்.. நீயும் மறந்துடு.. ஃபிரன்ட்சா இருப்போம்"

யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்... யோசிச்சேன்..

"தெரியல"

அப்போதிருந்து பலமுறை ஏனெனத் தெரியாமலே தெரியலைன்னு அவளுக்கு சொல்லியுள்ளேன்...

செல் அதிர்ந்தது.. கீர்த்தனா எஸ் எம் எஸ்ஸி இருந்தாள்.

"ஐ ஆம் சாரி.. உதாசீனம் என்னை அப்டி பேச வெச்சுட்டுது. இனிமே அப்டிப் பேசமாட்டேன்.. நேரங்கிடைக்கும்போது மெயிலுகளுக்கு ரிப்ளை பண்ணு.. பை ஃபொர் நவ்"

அன்புரசிகன்
17-05-2008, 06:01 PM
அரைகுறையாய் விளங்கியது பதில்கள். கேள்விகளும் கூட....

இதில் நான் என்பவரின் பெயர் என்ன???? அதுக்கு பதில் சொன்னால் 70% புரிந்தவனாயிடுவன்... :D

அமரன்
17-05-2008, 07:44 PM
அரைகுறையாய் விளங்கியது பதில்கள். கேள்விகளும் கூட....
இதில் நான் என்பவரின் பெயர் என்ன???? அதுக்கு பதில் சொன்னால் 70% புரிந்தவனாயிடுவன்... :D
ரசிகா...
உங்களுக்கும் என் பதில் தெரியல..
நெசமாலுமே கதை புரியலையா???

அன்புரசிகன்
18-05-2008, 01:53 AM
ரசிகா...
உங்களுக்கும் என் பதில் தெரியல..
நெசமாலுமே கதை புரியலையா???
முழுமையாகத்தான் புரியவில்லை என்கிறேன். இந்தக்கதையை என்னால் உணரத்தான் முடிந்தது. பதில் எழுத முடியவில்லை.... காரணம் சில சந்தேகங்கள்........ அதற்கு காரணம் தாங்கள் அல்ல. அடியேனின் தரம் அந்தளவே......

SathyaThirunavukkarasu
18-05-2008, 03:27 AM
கதை நன்றாக உள்ளது, ஆனால் முடிவு நட்பா? காதலா?

இளசு
11-06-2008, 09:24 PM
சிலர் இருண்மையும் அநிச்சயமும் சலனமும் அநிம்மதியும்
அளவின்றி நம் வாழ்வுக்குள் அள்ளி இரைக்கும் வன்மை வாய்த்திருப்பர்..

இந்நாயகி அவ்வகை..

பச்சாத்தாபம், ஆர்வம், கோபம், ஆதிக்கம், சரணாகதி, ஆராதனை, உதாசீனம் -
இப்படி வானவில்லாய் உடன் இருப்போர் மனநிலையை
பிரித்தெடுக்கும் சக்தி உள்ள வகை..

இவ்வகை மாந்தரைச் சந்திக்க நேராமல் இருப்பதே -
ஒரு மாபெரும் புண்ணியம்..

இதற்கு மேல் நாயகனுக்கு என்ன சொல்வதெனத் - தெரியல....!!!!!:confused:



வாழ்த்துகள் அமரன்..

சிக்கலான கருவை நேர்க்கோட்டாக்க முயன்று வென்றமைக்கு!

பென்ஸ்
11-06-2008, 10:05 PM
ஹ்ஹஹ்ஹஹ... இளசு, சிக்கலே அதுதானே. பட்ட பின்னரே தெரிகிறது அது "தீ" என்று.... அதற்க்குள் எல்லாம் கட்டுப்பாட்டை தாண்டி....

சுயநலவாத மாணுடம்....
நம்முடைய செயலின் ஒவ்வொன்றிலும் ஓரு "மறைவான திட்டம்"....
நம் செயலின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து....

உறவில் எதோ ஒன்று தவறு என்று தெரிகிறது,
இந்த உறவை வெட்டிவிட எத்தனை நேரம் எடுக்கும்... ஒரு நொடிகூட தேவையில்லை...
இருப்பினும் மெளனம்....
காயப்படுத்தாமல்... காயப்படாமல்.. நல்ல நிலையை நிலை நிறுத்தலாம்...
ஆனால் எதையோ இழக்கும் பயம்.

இதில் அவனும் சளைத்தவனில்லை...
அவளும் சளைத்தவளில்லை....
அவர்கள் நண்பர்களும்....

உதாசீனம் வரும் போது, அதை தாண்டி செல்ல பணியும் மனதையும்...
அதை தாண்டியதும் அதன் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் சொல்லிய அழகு ... அருமை...

நிதர்சனபடவேண்டும் யாராவது ஒருவரேனும்...
இல்லை இதே சம்பவம் இன்னும் தொடரும்.....

இளசு
11-06-2008, 10:09 PM
சரியாய்ச் சொன்னீர்கள் பென்ஸ்..

இந்த நாயகன் போல்
''சட்டென பொது இடத்தில் எதிலிருந்தும் விடுபடும்'' திடம்
நம்மில் எத்தனை பேருக்கு..

இப்படி ஒரு சூழல் வந்தால் அங்கேயே
விழியும் முகமும் குழம்பி வெடித்து
சிதறிச் சிறுமைப்படாமல் தப்பிப்பவர் எத்தனை பேர்?

அதனால்தான் சொன்னேன் -

வந்தபின்னர் தப்பிக்கும் மார்க்கம் வேண்டாம்..
வராமலே இருக்கும் வரம் வேண்டுமென..

அறிஞர்
12-06-2008, 04:26 PM
வித்தியாசமான மனிதர்கள்....
ஒரு சில பெண்களின் நிலை இது தான்.
மற்றவர் நிலைப்பற்றி கவலைப் படாத ஆட்கள்....

இவர்களை சந்திக்காமல் இருப்பதே நல்லது.

சுகந்தப்ரீதன்
14-06-2008, 01:37 PM
வாழ்வியல் ஏமாற்றங்கள் நிதானமாக சிந்திப்பவனையும் நிலைதடுமாற செய்யும்..!!
அந்தகணங்களில் சிக்கிய பிடியை இருக பிடித்துக்கொண்டு கரைசேர துடிக்கும் மனம்..!!
இதில் துடுப்பாய் சிக்கியவன் துவண்டாலும் மிரண்டுவிடுவதில்லை..பற்றியவனின் கரங்கள்..!!
இப்படிதான் சிலமனிதர்கள்... இவர்களை சந்திக்காமலே இருப்பது நலம்தான்.. ஆனால் சந்திக்கும்முன் தெரிவதில்லையே இவரிவர் இப்படிப்பட்டவர் என்று.. பட்டபிறகுதானே தெரிகிறது பாவம் அவ்வகை மனிதர்களென்று..!!

வித்தியாசமான முயற்சிதான் அமரண்ணா..வாழ்த்துக்கள்..!!

பூமகள்
14-06-2008, 05:08 PM
மௌனம் காப்பதை விட..
தெளிவாக்க.. முயற்சித்திருக்கலாம்..

வில(க்)குதல்.. வலியுண்டாக்கும்..
புரிவித்தல்.. வழியுண்டாக்கும்..

தவறு செய்வது மனித இயல்பு..
இல்லையேல் எல்லாரும் கடவுளாகியிருக்கலாம்..

ஐந்து விரலும் ஒன்று போல் இருப்பதில்லையே.. அது போலவே மனிதர்கள்..

துவண்டு கிடக்கும் கொடிக்கு.. ஒரு ஊன்றுகோல் கிடைத்தால்.. தடுமாறாமல் எழுவதை விடுத்து.. அதன் மீதே படறப் பார்க்கும்.. பேதை மனம்...

கதையின் நாயகியைக் குற்றவாளியாக்கவில்லை கதையாசிரியர். ஏனெனில் ஒரு இடத்தில் நாயகி பேசுகையில் அவள் கண்களில் உண்மை இருப்பதை சொல்லியிருக்கிறார். சொல்லியது உண்மையில்லையெனில்.. கண்கள் காட்டிக் கொடுத்திருக்க வேண்டுமே...

நட்புக்கும் காதலுக்குமான இடைவெளி அறிந்திருந்தால் துன்பம் எப்போதும் யாரையும் நெருங்காது.

ஆழமான கதை கரு... சில சம்பவங்களில்.. பல நுட்பமான செய்திகளை கொண்டு வந்திருக்கிறீர்கள்..
எப்போதும் போல் பாராட்டுகள் அமரன் அண்ணா.

சிவா.ஜி
15-06-2008, 04:29 AM
பூ சொன்னதைப் போல உதாசீனம் அதீத வலி உண்டாக்கும். அதினும் நல்லது தெளிவிப்பதே. ஒருவரை நட்பாகப் பிடித்து காதலியாகவோ காதலனாகவோ பிடிக்காமல் அல்லது ஏற்றுக்கொள்ள தயக்கம் உண்டாவதன் காரணங்களைப் புரியவைக்க முடியாது.
பக்குவப்பட்ட மனதே அதைப் புரிந்துகொள்ளும். இங்கே நாயகி புரிந்துகொண்டாள். நட்பு தொடர்கிறது. நல்ல கருவை அழகாக கையாண்டிருக்கிறீர்கள். அமரன் வாழ்த்துகள்

அமரன்
25-07-2008, 12:43 PM
சில நேரங்களில், படைப்பை பின் தொடர்ந்த பதிவுகளைப் பார்க்கும் போது சுவை(மை)யான சம்பவங்கள் பகுதியில் இருக்கவேண்டிய ஆக்கம் இடம்மாறி பதிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும். அப்படியான ஒரு உணர்வு இங்குள்ள பின்னூட்டங்களைப் படிக்கும் போது..

அலங்கரித்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

பயன்மிக்க கருத்துகளை பரிமாறிய அண்ணன்கள் இளசு பென்ஸ் இருவருக்கும் பிரத்யேக நன்றி.

MURALINITHISH
19-08-2008, 08:34 AM
அவளுக்கு புரிய வைத்திருக்கலாம் தடுக்க தடுக்க எதிலும் வேகம் அதிகமாகுமே தவிர குறையாது தெரியலை என்பதை விட வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்காலாம் இருந்தாலும் அவனுக்கே தெரியாததை அவன் எப்படி சொல்வான்

மன்மதன்
19-08-2008, 02:03 PM
சில நேரங்களில், படைப்பை பின் தொடர்ந்த பதிவுகளைப் பார்க்கும் போது சுவை(மை)யான சம்பவங்கள் பகுதியில் இருக்கவேண்டிய ஆக்கம் இடம்மாறி பதிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும்.


இது மாதிரியான நுணுக்கமாக மனித உணர்வுகளை எழுத்துகளில் கையாளப்படும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்.. சில நேரம் கதையில் உள்ள கதாபாத்திரத்தை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூட தோன்றும்..

முடிவே இல்லாமல் சொல்லப்படும் கதைகளில், முடிவு மட்டுமே இருப்பத்தில்லை..பரிமாறிக்கொள்ளும் அன்பை போல...

பின்னூட்டங்கள் அனைத்துமே மிக அருமையாக கதையையொட்டி அமைந்து விட்டது.. சுகந்தனின் பின்னூட்டம் கவர்ந்து விட்டது.

தீபா
19-08-2008, 03:10 PM
கதையும் அதைத்தொடர்ந்த பின்னூட்டங்களும் அருமை.

பாராட்டுக்கள் அமரன்

அன்புடன்
தென்றல்

அமரன்
23-08-2008, 09:21 AM
அவளுக்கு புரிய வைத்திருக்கலாம் தடுக்க தடுக்க எதிலும் வேகம் அதிகமாகுமே தவிர குறையாது தெரியலை என்பதை விட வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்திருக்காலாம் இருந்தாலும் அவனுக்கே தெரியாததை அவன் எப்படி சொல்வான்
ஊட்டத்துக்கு மனப்பூர்வமான நன்றி முரளி!
ஒன்றில் ஈடுபாட்டுடன் இருக்கும் பெண்களை எளிதாக பிரித்தெடுக்க இயலாது. அதுபோல இக்கதை நாயகனுக்கு அவளை நிராகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. காதல் பிடிக்கவில்லை என்று சொன்னால் நம்பிக்கை விழுக்காடு மிகவும் குறைவுதானே..

அமரன்
23-08-2008, 09:26 AM
இது மாதிரியான நுணுக்கமாக மனித உணர்வுகளை எழுத்துகளில் கையாளப்படும்போது இப்படித்தான் நினைக்கத்தோன்றும்.. சில நேரம் கதையில் உள்ள கதாபாத்திரத்தை தன்னுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூட தோன்றும்..

முடிவே இல்லாமல் சொல்லப்படும் கதைகளில், முடிவு மட்டுமே இருப்பத்தில்லை..பரிமாறிக்கொள்ளும் அன்பை போல...

பின்னூட்டங்கள் அனைத்துமே மிக அருமையாக கதையையொட்டி அமைந்து விட்டது.. சுகந்தனின் பின்னூட்டம் கவர்ந்து விட்டது.

உண்மைதான் மன்மி...

இந்தக் கதை மாந்தனாக நான் இருந்தால் என்ன செய்வேன் என்று எண்ணிப்பார்த்தேன். தொடர்ந்த தரமான பின்னூட்டங்கள் அந்த எண்ணத்தில் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தின. அந்தவளவுக்கு நுணுக்கமான மனவியல் கருத்துகள் கிடைத்த படைப்பை தந்தேன் என்கின்ற மனநிறைவு எனக்கு..

சத்தான கருத்தூட்டலுக்கு நன்றி மன்மி.

அமரன்
23-08-2008, 09:28 AM
கதையும் அதைத்தொடர்ந்த பின்னூட்டங்களும் அருமை.

பாராட்டுக்கள் அமரன்

அன்புடன்
தென்றல்

தென்றலிடமிருந்து அருமை என்பதை பெறுவது அசாதாரணமானது. அதைப் பெற்றத்தில் மலைத்தேன். நன்றி தென்றலே..

தீபா
23-08-2008, 09:31 AM
தென்றலிடமிருந்து அருமை என்பதை பெறுவது அசாதாரணமானது. அதைப் பெற்றத்தில் மலைத்தேன். நன்றி தென்றலே..

இதென்ன ரிவிட்டு!! :confused:
-+-+--+
இன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிறீங்க....

:D :D

அமரன்
23-08-2008, 09:34 AM
இன்னுமா என்னை நம்பிட்டு இருக்கீங்க?

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிறீங்க....

:D :D
நம்பிக்கை ரத்து வாழ்க்கை சத்துரு.. :) என் உடம்பை ரணகளமாக்குவதில் எனக்கு கொள்ளைப் பிரியம். வீரனுக்கு அழகு தழும்புகள்தானே..

முதலாவது ரிவிட்டும் அல்ல... இது ரிப்பிட்டும் அல்ல..

Keelai Naadaan
23-08-2008, 12:24 PM
நட்பையும் காதலையும் பிரித்து பார்க்கும் தன்மையும், நட்பை காதலாக நினைக்காத தன்மையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

கதாபாத்திரங்களின் மனவோட்டங்களுக்கு படிப்பவரையும் இழுத்து விடுகிறது எழுத்து நடை. பாராட்டுக்கள்.

முதல்முறை படித்த போது எந்த கதாபாத்திரம் சொல்வது போல் கதை செல்கிறது என புரிய தாமதம் ஆனது.

அமரன்
23-08-2008, 12:34 PM
நிசந்தான் கீழைநாடான் அவர்களே!
நட்பையும் காதலையும் பிரித்தறியும் அன்னப்பறவை குணாதிசயம் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. வாய்த்து விட்டால் ஆண்-பெண் நட்புகள் பூத்துக்குலுங்கும். சில பல தப்புகள் அற்றுப் போகும்.

எழுதும் போது எளிமை குழைத்து எழுதவே நினைப்பேன். ஆனால் கடினம் குழைந்து வந்து தொல்லைப் படுத்துகிறது.

உழுது தந்த கருத்துக்கு நன்றி.