PDA

View Full Version : கிளி த பாஸ்



pathman
17-05-2008, 05:56 AM
கிளி த பாஸ்

ஒரு மனிதன் கிளி ஒன்றை வாங்க செல்ல பிராணிகள் விற்கும் கடைக்கு சென்றான்.
கடைக்காரர் 3 கிளிகளை சுட்டிகாட்டி இடது பக்கத்தில் இருக்கும் கிளி 50,000 ருபாய் என்றான்
கிளி வாங்க வந்த மனிதன் ஏன் இந்த கிளி அவ்வளவு விலை என்று கேட்டான்

அதற்கு கடைகாரன் இந்த கிளிக்கு கணணி பயன்படுத்த தெரியும் என்றான். பிறகு கடைகாரன் வலது பக்கம் இருக்கும் கிளியை காட்டி இது 100,000 ருபாய் என்றான் கிளி வாங்க வந்த மனிதன் அதிசயத்துடன் ஏன் இந்த கிளி அதை விட கூடுதலான விலை என்று கேட்டான்.

அதற்கு கடைகாரன் இந்த கிளிக்கு கணணி பயன்படுத்த தெரியும் அதை தவிர இது யுனிஸ், லினக்ஸ் ஒபரேடிங் சிஸ்டதிலையும் வேலை செய்ய தெரியும் என்றான்.

இப்போது அந்த மனிதன் நடுவில் இருக்கும் கிளியை பற்றி அறிய ஆசைப்பட்டான் அவன் கடைக்காரனிடம் நடுவில் இருக்கும் கிளியை பற்றி சொல்லுங்கள் என்றான்.

கடைக்காரன் இந்த கிளியின் விலை 200,000 என்றான் அதற்கு அந்த மனிதன் ஓ அப்படியா இந்த கிளி என்ன வேலை செய்யும் என்று கேட்டான்.

அதற்கு கடைகாரன் எனக்கு தெரிந்த வரையில் இந்த கிளி எந்த வேலையும் செய்வதில்லை
ஆனால் மற்ற இரண்டும் இதை பாஸ் என்று கூப்பிடுகின்றன அது தான் அந்த விலை
என்றான்.

அனுராகவன்
17-05-2008, 05:58 AM
ஹா..ஹா..
அருமை பத்மன் அவர்களே!!
இன்னும் தாங்க..

ஓவியன்
17-05-2008, 06:17 AM
ஆஹா பத்மன், பாஸாக இருப்பதன் இரகசியத்தை இப்படிப் போட்டு உடைச்சிட்டீங்களே...??!!:D:D:D

அமரன்
17-05-2008, 08:14 AM
பாஸின் கடந்தகாலத்தை மறந்து/அறியாது, சும்மா இருந்தால் பாஸாகலாம் என்று நினைத்து, ஃபெயிலாகுபவர்களுக்கும் குட்டிக் கதை சொல்லுங்கள் பத்மன்.

அதையும் சுவைத்துச் சிரிப்போம்.

மனோஜ்
17-05-2008, 09:36 AM
ச'பாஸ்' நல்ல கதை
பகிந்த மைக்கு நன்றி

நேசம்
17-05-2008, 12:32 PM
நிர்வாகியாக வருவதற்கு தேவையான ரகசியத்தை சொல்லிவிட்டிர்.அருமையாக இருந்தது.பகிர்தலுக்கு நன்றி

lolluvathiyar
18-05-2008, 06:19 AM
ஓ வேலை தெரியாவிட்டாலும் பாஸ் என்றால் மதிப்பு அதிகம் என்று அருமையாக விளக்கி இருக்கிறார்.

சூரியன்
18-05-2008, 08:07 AM
அப்ப நானும் பாஸ்.:lachen001:

poornima
18-05-2008, 11:35 AM
பத்த வச்சிட்டீங்களே பரட்டை என்னும்படியான பதிவு.. நல்ல நகைச்சுவை.. பாராட்டுக்கள் நண்பரே..

ஆதி
28-05-2008, 07:14 AM
என் மேலாளருக்கு படித்துக்காண்பித்தேன்..

அதிரும் சிரிப்பொன்றை உதிர்த்தவாறுச் சொன்னார் மற்றவர்களிடம் இதை வாசித்துக்காட்ட வேண்டாம் என..

ரசிக்கும்படி இருந்தது பத்மன்.. வாழ்த்துக்கள்..