PDA

View Full Version : பெண்களே கவனம் கவனம்



mgandhi
16-05-2008, 07:15 PM
பெண்களே கவனம் கவனம்

ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர்
சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே
அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை
லேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப்
பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது.
சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம்
நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே
ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ
கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப்
பழக வேண்டும்.
பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,
அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே
இருக்கிறது. லட்சத்தில் ஒரு பெண் மட்டுமே தன்னை காம
விகாரத்துடன் ஒரு ஆண் நெருங்கினாலும் அவனுக்கு ஆன்மிகக்
கொள்கைகளைப் போதிக்கக் கூடியவளாய் இருக்கிறாள்.
தொடக்கத்தில் சாதகன் ஒரு பெண்ணின் சமீபத்தில் போகக்
கூடாதுதான். ஆனால், மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு விடும்
பட்சத்தில் எந்த கெடுதலும் நேராது.
பெண்கள் இயல்பாகவே மென்மையானவர்கள், இரக்கமுடையவர்கள்.
அவற்றை மறைக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் முடியாது. ஒரு
ஆண் கொஞ்சமே தங்களிடம் அன்பு காட்டினாலும் அவர்கள்
அப்படியே உருகி விடுவார்கள். ஆடவன் நேசம் கலந்த ஒரு
பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.
அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,
மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள
சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.அமிர்தானந்தமயி

நதி
17-05-2008, 05:37 PM
கத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.

mgandhi
17-05-2008, 06:05 PM
கத்தி மேல் நடப்பது போல விவாதிக்கப்பட்ட கருத்து. இளந்தலைமுறையினர் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதாகவே நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றி காந்தி.

இளம் தலைமுறையினர் தெளிவாக இருந்தால் நன்மையே

namsec
18-05-2008, 05:34 AM
பெண்கள் கண்டிப்பாக படிக்கவேண்டிய திரி பதித்தவருக்கு நன்றி

பூமகள்
18-05-2008, 06:20 AM
பாலுணர்வைக் கடந்த பெண்கள் இருக்கிறார்கள். ஆனால்,அவர்களுடைய எண்ணிக்கை லட்சத்துக்கு ஒன்றிரண்டாக மட்டுமே இருக்கிறது. -அமிர்தானந்தமயி
அம்மா அமிர்தானந்தமயி சொல்வதைப் பார்த்தால்.. பெண்கள் எல்லாருமே கேடு நினைப்பவர்கள் என்பது போல தோற்றம் வருகிறதே.....!! :fragend005::fragend005:

எந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம்?? பள்ளியில்.. கல்லூரியில்.. அலுவலகத்தில் எத்தனையாயிரம் பெண்களோடு தினம் இருக்கிறோம்...
என்னால் ஏற்கவே முடியாத கருத்து..!!

விவாதிக்க விரும்பினால்.. பொதுவிவாதங்களுக்கு மாற்றுங்கள்.. இல்லையெனில் எனது பதிவை.. கருத்தாக மட்டும் கொள்ளுங்கள்.

நன்றிகள்.

பூஜா
18-05-2008, 11:48 PM
இரக்கமும் மென்மையுமே பெண்களின் மிகப்பெரும் பலவீனம். அதை மிக அழுத்தமாய் அளகாய் எடுத்துக் காட்டுகின்றது.

பூஜா

யவனிகா
19-05-2008, 02:35 PM
சிரிப்பும் வெறுப்பும் சேர்ந்து வருது...வாய்விட்டு சிரித்து கொஞ்சம் வெறுப்பைக் குறைச்சிட்டு...அந்தண்டை நகந்து போறதத் தவிர என்ன செய்ய?

சாதனைன்னா என்ன? யாரெல்லாம் சாதகர்கள்?

இதை வேறு யாராவது பதிந்திருந்தாலும் பரவாயில்லை. சகோதரர் காந்தி பதிந்தது மிகவும் வருத்தத்திற்குரியது.

ஆடவன் நேசம் கலந்த ஒரு
பார்வையை தங்கள் மீது வீசினாலே போதும் அவர்களுக்கு.
அவளுடைய ஒப்புவித்துக் கொள்ளும் சுபாவம் மேலெழ,
மற்றெல்லாவற்றையும் அவள் மறந்து விடுகிறாள். தன்னிடமுள்ள
சகலத்தையும் இழக்க அவள் தயாராகி விடுகிறாள்.அமிர்தானந்தமயி
__________________

மேலுள்ள வாதம் உண்மையெனில் பால்காரன், பேப்பர்காரன், கடைக்காரன் தொடங்கி......எத்தனை பேர்கிட்ட எத்தனையை இழக்கறது...
போங்கப்பா நீங்களும் உங்க திரியும்....

அறிஞர்
19-05-2008, 03:02 PM
எந்த ஒரு செயலும் பெண்ணை பொறுத்து தான் மாறுகிறது.

அன்பை காட்டி... அவர்களை ஆட்கொள்ள இயலும் என்பது போல் இருக்கிறது இந்த பதிவு...

பெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...

பூமகள்
20-05-2008, 01:14 PM
பெண்கள் தெளிவாக இருக்கும்பொழுது... தவறுக்கு வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை...
அப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..
பெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா?:icon_ush::icon_rollout::wuerg019:

அறிஞர்
20-05-2008, 01:24 PM
அப்போ ஆண்கள் தெளிவாக இல்லாமல் அப்படித்தான் இருப்பார்கள்..
பெண்கள் தான் தெளிவா இருந்து தப்பிச்சிக்கனும்னு சொல்ல வருகிறீர்களா அறிஞர் அண்ணா?:icon_ush::icon_rollout::wuerg019:
எளிதாக உணர்வால், உடலால் பாதிப்படையக்கூடியவர்கள்... தான் தெளிவாக இருக்கவேண்டும் என்றேன். (சில பெண்களால், பாதிப்படையக்கூடிய ஆண்களும் உண்டு....)

தாமரை
20-05-2008, 02:20 PM
யவனிகா அவர்களிம் பதிவு மிகச் சரியானது. பூமகளால் யவனிகா அளவிற்கு நுணுக்கமான உணர்வுகளைக் காட்ட இயலாவிட்டாலும் மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

இதை இரண்டு கோணங்களிலும் பார்க்கவேண்டும்..

சொன்னவன் சிறுவன், தகுதியில்லாதவன், என்றாலும் சொல்லப்பட்ட பொருள் மட்டுமே காணப்பட வேண்டும்..

அதே சமயம், சொன்னது கடவுளே என்றாலும், சொல்லப்பட்டது சரிதானா என்று பார்க்கவேண்டும்.. வேறு யாருக்கு அந்த உணர்வில்லாட்டாலும் வள்ளுவனும். நக்கீரனும் வாழ்ந்த பூமியில் பிறந்தவர் அல்லவா நாம்.

படித்ததில் பிடித்தது. காந்தி, நிஜமாகவே இந்தக் கருத்து உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா? நம்ப முடியவில்லை.


களை பிடுங்குதல் முதல், கம்பெனிகளை நிர்வகிப்பது வரை, இட்லி சுடுவதிலிருந்து இந்தியாவை ஆள்வது வரை பெண்கள் பலப்பலத் துறைகளில் பணி புரிகிறார்கள்..

அண்ணன் தம்பி அப்பா மகன் உறவு அனைவரிடத்திலும் கொண்டாடப் படுவதில்லை. அதற்காக அன்பும் அக்கறையும் காட்டப்படாமலும் இல்லை. பேருந்தில் ஏற வழிவிடுவதிலிருந்து, சுமை தூக்கி விடுவதிலிருந்து, பாடங்கள் கற்றுத்தருதல், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என எத்தனையோ அன்பான காரியங்களை தினம் தினம் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

பெரும்பான்மை மக்கள் மிகத் தெளிவாக இருக்கின்றனர். பலவீன மனமுடைய மிகச் சிலரே தவறி விடுகின்றனர்.

சும்மா ஜாலியா கேட்கிறேன்..

பெண்களின் பின்னால் கண்ணில் காதல் கருணை பாசம் அன்பு என அனைத்தையும் நிரப்பிக் கொண்டு அலையும் பலருக்குக் காதலிகளே கிடைப்பதில்லை..

அது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட "உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று எனக்குச் சொல்லாதது ஏன்?

விகடன்
20-05-2008, 03:13 PM
நல்லதொரு விளக்கம் தாமரை அண்ணா.
தகுந்த பதில் போடவேண்டும். எப்படி போடுவது என்று பார்த்திருந்தேன். அழகாக சொல்லிவிட்டீர்கள்


அது ஏன், திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட "உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று எனக்குச் சொல்லாதது ஏன்?

நீங்கள் திருமணமானவர் என்று தெரிந்திருக்குமோ என்னமோ :D

தாமரை
20-05-2008, 03:29 PM
நீங்கள் திருமணமானவர் என்று தெரிந்திருக்குமோ என்னமோ :D



திருமணத்திற்கு முன் பல வருடங்களாக தெரிந்தவர் தெரியாதவர் என்ற வேறுபாடே இன்றி அன்பாய் பல உதவிகள் செய்தும் ஒரு பெண் கூட "உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று எனக்குச் சொல்லாதது ஏன்]

அதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D

விகடன்
20-05-2008, 04:49 PM
அதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D

:D :D :D

aren
22-05-2008, 05:06 AM
அதான் திருமணத்திற்கு முன் எனத் தெளிவாச் சொல்லி இருக்கேனில்ல.:D:D:D

நீங்கள் பழகிய விதம் அப்படி இருந்திருக்கலாம். அல்லது பழகிய இடம் அதிகப்படியான கட்டுப்பாடுகள் நிறைந்த ஊராக இருக்கலாம்.

aren
22-05-2008, 05:07 AM
இந்தப் பதிவை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இது அம்மா அவர்களுடைய கருத்தாக இருந்தாலும், இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.