PDA

View Full Version : இது வேதனை.



rshan4
16-05-2008, 07:15 PM
விழிகளால் மட்டும் பேசி
வீணாக்குகின்றாய் காலத்தை
காதலுக்கு இது விந்தையல்ல – ஆனால்
எம் காதலுக்கு இது விபரீதம்

என்னையும் உன்னையும்
இணையவைக்க இனியவளே பேசி விடு…

இனிமேலும் வேண்டாம்
இந்தச் சோதனை
வீணாக்குகின்றாய் காலத்தை
இது வேதனை.


-முகவன்-

ஓவியன்
17-05-2008, 03:13 PM
விழி மங்கைதான் வந்து உங்களிடம் பேச வேண்டுமோ, நீங்களே விழி மொழியாளிடம் தேன் சிந்தும் தமிழ் மொழியால் பேச்சை ஆரம்பிக்கலாமே....

முகவன், உங்கள் காதல் கவிதைகள் தொடர்ந்தும் இங்கே சிந்தட்டும், அதனை அள்ளிப் பருக ஆவலுடன் நாம்.....

அனுராகவன்
19-05-2008, 06:54 AM
அருமை முகவன்..
காதல் கவி என்றும் மின்னுகிறது..
தொடருங்கள்..

இராஜேஷ்
19-05-2008, 08:53 AM
தங்களுடைய வரிகள் நன்றாக உள்ளது, அனுபவம் பேசுதோ