PDA

View Full Version : கொழும்பு கோட்டையில் பாரிய வெடிப்பு சம்பவம் - 9பேர் பலி, 90பேர் படுகாயம்(2008-05-16)shibly591
16-05-2008, 09:02 AM
இன்று காலை கொழும்பின் முக்கிய ஸ்தலமான அரச பத்திரிகை நிறுவனமான லேக் ஹவுஸ் இற்கும் புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டலுக்கும் அருகில் குண்டு ஒன்று வெடித்தள்ளது.இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 100 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் இலங்கை இராணுவ விமானப்படைத்தளம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அரசியல்வாதி ஒருவரை இலக்க வைத்தே தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இங்கு ஏற்கனவே 1997 இல் குண்டொன்று வெடித்து 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்வின் இணையத்தள செய்தி இதோ...

கொழும்பு கோட்டை சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணிக்கு பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 காவல் துறையினர் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேரூந்து உந்துருளி ஒன்றுடன் மோதியே போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி சம்போதி விஹாரைக்கு அருகில் இன்று பகல் 12 மணியளவில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சம்பவம் விஹாரைக்கு முன்னால் உள்ள சோதனை சாவடிக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் என் ஏ 2743 என்ற இலக்கத்தை கொண்ட பேரூந்து ஒன்றும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சேதமடைந்த இந்த பேருந்து பாதுகாப்பு படையினரை ஏற்றிசென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த சுமார் 80 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொல்லப்பட்டவர்களின் 5 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். சம்பவத்தில் காயமடைந்த சுமார் 90 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெருமளவானோர் காவல்துறையினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது கடமைக்காக வந்த கலகத்தடுப்பு காவல்துறையினர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

புகைப்படங்களும் மேலதிக தகவல்களும் காண இங்கே அழுத்தவும்

http://www.tamilwin.com/view.php?2aIWnBe0dvj0U0ecGG7B3b4j9Ei4d3g2h3cc2DpO3d436QV3b02ZLu2e

அன்புரசிகன்
16-05-2008, 09:15 AM
இந்த செய்திகளை கேட்டு கேட்டு புளித்துவிட்டது...

(திரி செய்திச்சோலைக்கு மாற்றப்படுகிறது)

அக்னி
16-05-2008, 11:33 AM
இராணுவ இலக்கை நோக்கிய தாக்குதல்.
மாட்டிக் கொண்ட பொதுமக்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்காகப் பிரார்த்திப்போம்.
இலங்கை முழுவதும் எப்போதும் அபாயம் ஏற்படலாம் என்ற நிலை நிரந்தரமாகிவிட்டது.

aren
16-05-2008, 11:59 AM
பாவம் பொதுமக்கள். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்.

தீபன்
16-05-2008, 12:53 PM
இந்த செய்திகளை கேட்டு கேட்டு புளித்துவிட்டது...


உங்களுக்கு புளித்து விட்டது... எங்களுக்கு புளியை கரைக்கிறது... (கிட்டல்ல இருக்கம்... இருக்காதா பின்ன!)

Keelai Naadaan
16-05-2008, 05:00 PM
இது தவறு என்னும் சொரனையே மனிதர்களுக்கு இல்லாமல் போய் விட்டதா..?
மனிதர்களுக்கு இரக்கமே இல்லையா..?

ஓவியன்
16-05-2008, 05:11 PM
இது தவறு என்னும் சொரனையே மனிதர்களுக்கு இல்லாமல் போய் விட்டதா..?
மனிதர்களுக்கு இரக்கமே இல்லையா..?

கீழை நாடன் இலங்கைப் பிரச்சினையில் சில விடயங்களை ஒற்றை வரியில் தவறென்று கூற யாராலும் முடியாது....

பாதிக்கப்பட்ட இலங்கைச் சகோதரர்களைக் கேட்டுப் பாருங்கள், புரியும்...!

Keelai Naadaan
16-05-2008, 05:45 PM
கீழை நாடன் இலங்கைப் பிரச்சினையில் சில விடயங்களை ஒற்றை வரியில் தவறென்று கூற யாராலும் முடியாது....

பாதிக்கப்பட்ட இலங்கைச் சகோதரர்களைக் கேட்டுப் பாருங்கள், புரியும்...!

நண்பரே,
அரசியல் விஷயங்கள் பற்றி மன்றத்தில் அலச விரும்பவுமில்லை.
நான் மனிதத்ததை பற்றிய என் பார்வையை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.
இதுபோன்ற விஷயங்களில் மெளனியாய் இருப்பது மேல் என புரிகிறது.

ஓவியன்
16-05-2008, 05:54 PM
உண்மைதான் கீழை நாடன் ஆனால் மனிதத்தைப் பற்றி அலசவேண்டுமெனினும் இரண்டு கோணங்களில் அலசியே ஆகவேண்டும் ....

அதனிலும் நீங்கள் கூறியது போல் மெளனியாக இருப்பதே மேல்...!

venkai
16-05-2008, 06:56 PM
கொல்பவன் வெல்வான்..................

அமரன்
16-05-2008, 07:05 PM
வெடிச்சத்தங்கள் அங்கே வாடிக்கையாகிவிட்டன. அரசியல் ஆதாயத்திற்காக அவற்றை வேடிக்கை பார்க்கும் கூட்டங்களும் அதிகரித்து விட்டன. எல்லாரும் மனிதர்கள்தான் என்பதை யாவரும் உணர்ந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்..

Keelai Naadaan
17-05-2008, 03:10 AM
எல்லாரும் மனிதர்கள்தான் என்பதை யாவரும் உணர்ந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்..

நன்றிகள் அமரன் அவர்களே.
நானும் இதைத்தான் விரும்புகிறேன்.

Keelai Naadaan
17-05-2008, 03:39 AM
கொல்பவன் வெல்வான்..................
இன்னொருவன் பழி வாங்க வரும் வரை.

அனுராகவன்
17-05-2008, 06:40 AM
செய்திகள் மனதை நிகிழ செய்கிறது..
வாழ்க்கையில் வாழும் நாள் இப்படி போகுதே..
விரைவில் நல்லதொரு நிலை வருமா?