PDA

View Full Version : ஆசிரியர் தினம்



Mano.G.
16-05-2008, 03:29 AM
இங்கு மலேசியாவில் மே 16ம் நாள்,
ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வகையில்
ஆசிரியர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
அதை முன்னிட்டு பல சமுதாயச் சிந்தனையுடன்
அர்பணிப்புணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக
இந்த குறுங்கவிதை


உங்களை மதிக்கின்றேன்
எனக்கு எழுத வாசிக்க கற்று கொடுத்ததற்கு,

உங்களை மதிக்கின்றேன்
எனக்கு நல்லது எது கெட்டது எது என
அறிந்து கொள்ள செய்ததற்கு,

உங்களை மதிக்கின்றேன்
எனக்கு மூத்தவர்களை மதிக்க கற்று கொடுத்ததற்கு

உங்களை மதிக்கின்றேன் ஆசிரியர்களே
உங்கள் தியாகத்திற்கும் உங்களின்
சமுதாய சிந்தனைக்கும் தலை வணங்குகிறேன்.

மனோ.ஜி

அனுராகவன்
16-05-2008, 05:05 AM
கல்விக்கு வித்துக்கள்
முதல் ஆசான் என்
ஆசிரியர் ;பேச
முடியல அவர்கள்
என்னை பிரிந்தாலும்
அவரின் கல்வி விட்டு
என்னை நீங்காதே!!
முதல் எழுத்து
எழுத என் கையே
பிடித்து சொல்ல
நாழுத்து படித்தனால்
நான்கு பேர் மதிக்க
பெற்றேன்;நீங்காத
நேரங்கள் என்
பள்ளி வாழ்க்கை
என் ஆசிரியர்
என் வாழ்க்கையின்
ஒரு அமுதம்..
என்றும் நீர்
வாழ்க!!

நன்றி மனோ.ஜி அவர்களே!!

kavitha
16-05-2008, 07:11 AM
நன்றி மறப்பது நன்றல்ல. இது நம் கடமை.
குரு வணக்கம் அருமை. எனது குருக்களையும் இந்நேரத்தில் நினைந்து நன்றி நவில்கிறேன்.

மீரா
24-06-2008, 07:43 PM
பிள்ளைகளை பாதி வளர்ப்பது தாய் தந்தையர்
பிள்ளைகளை செதுக்கி அறிவை கூராக்குவது
ஆசிரியர் கடமையாய் எண்ணாமல் செய்வதே

தாயாய் தந்தையாய் கல்விக்கண் கொடுத்த தெய்வமாய்
வழிநடத்தி செல்லும் நல்லதொரு ஆசானாய்
இந்த ஒரு நாளில் மட்டுமல்லாது

எப்போதுமே நன்றியுடன் நினைக்கும்
நல்ல நாளாம் ஆசிரியர் திருநாள்
வணங்கி நினைவுகூறுகிறேன் என்னை

மற்றவர் மதித்து நல்ல நிலையில்
என்னை உயர்த்தி இன்றும் என்னை
எல்லோரும் போற்றும்வகையில் செய்தமைக்கு...
...