PDA

View Full Version : நீ இருந்தென்ன...?செத்துப்போ....!!!!டாக்டர் அண்ணாதுரை
15-05-2008, 08:57 AM
காக்கவேண்டிய கரங்கள்...
வேலியை பிய்த்தெடுத்து
இரும்புக்கடையில் பேரம் பேசும்
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!

திங்கள் தோறும் தவராமல்
ஒழுக்கத்தின் விழுப்பங்களை
வியாக்கியானம் செய்கிறாய்.....
சனியும் ஞாயிரும் சூதாட்ட மையத்தில்
புட்டியோடு குட்டிகளுடன்!!!

பட்டினியோடு பச்சிளம் மாணவர்கள்.....
மாணியத்தில் கிடைக்கும் ஒரு பிடி சோறு...
அதிலுமா சேறு?
சோறு தின்றால் பல் வலிக்குமா?
வலிக்குதடா.... சோறெல்லாம் கல்லடா!!!
தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!

தமிழ்தந்த வாழ்வடா இது...
தமிழ்குழந்தைகளுக்காக உயிரை கொடுக்கவேண்டாம்..
அவர்களின் உயிரை எடுக்காதே!!
சொந்த இனத்தின் இதயத்தையே தின்கிறாயே....
உன் உடலில் என்ன...
மரவட்டைகளின் ரத்தமா?

முட்டால்கள் இருக்கும்வரை
நீ அறிவாளிதான்....
எனக்குமட்டும் நீ அரை வாளிதான்!!!
தூங்கிய சமுதாயச் சமுத்திரத்தில்..
படகுவிட்ட உன் காலம்
இன்றோடு பாரையில் சமாதி!
உண்மையின் அவதாரம்
இன்றுதான் ஆரம்பம்...
இனிதான் உனக்கு
அழிவின் புதைவிழா!!!

தமிழ்ப்பள்ளி காவலனா நீ....
இல்லை இல்லை கலவாடி!!!
நீ இருந்தென்ன.....? செத்துப்போ!!!


ஆத்திரத்தோடு....
அண்ணாதுரை

பூமகள்
15-05-2008, 10:40 AM
தமிழனென்று சொல்லி..
தமிழ்பால் அருந்தி
காசு பார்க்கும்
கயவர்களுக்கு..
நல்ல ஒரு சவுக்கடி கவிதை...!

கல்வி.. காசாகிப்போன உலகில்..
கருணையும் உண்மையும்
ஊருக்கு வெளியே தான் வாழ்கிறது...!

வேதனையிலும் வேதனை..

சமூக நோக்கம் கொண்ட கவி வடித்தமைக்கு பாராட்டுகள் டாக்டர் அண்ணாதுரை அண்ணா..!!

Mano.G.
15-05-2008, 10:55 AM
திட்டி என்ன பயன்,
திருந்தாத ஜென்மங்கள்

உரைக்கவா போகிறது
இந்த ஈன பிறவிக்கு

நிறைகுடம் என கூத்தாடும்
இந்த குறை குடத்திற்கு

பாடம் புகட்டுவோம்
இனி இந்த பள்ளிக்கு வரும்
ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக

மனோ.ஜி

Keelai Naadaan
15-05-2008, 06:07 PM
உங்கள் ஆத்திரத்தை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

டாக்டர் அண்ணாதுரை
16-05-2008, 03:25 AM
நமது சமுதாயத்தில் குறிப்பாக பள்ளி குழந்தைகளின் எதிகாலத்தை என்னாமல், தன் பைக்குள் எவ்வளவு வந்து சேரும் என்ற எண்ணம் கொண்ட சின்ன புத்தி கொண்ட பெரிய வாத்தியார்களுக்கு சேரவேண்டும் இந்த செய்தி......
இன்று ஆசிரியர் தினம்.....அந்த ஆ'சிறியனுக்கு என்ன தினம்?

அனுராகவன்
16-05-2008, 05:52 AM
ஆதங்கம் ஆதரிக்க
வாய்ப்பில்லை ஆத்திரம்
அப்பாவி மக்கள்
என்று மாறும்
அபாயமான சூழ்நிலை
சாத்திர தரும்
கல்வி சாத்தியமே
இல்லை அதன்
இழிவுவான ஒரு
பக்க கயவர்களின்
களவு..

நன்றி டாக்டர் அவர்களே!!
தொடருங்கள்..

kavitha
16-05-2008, 08:03 AM
மலேசியாவில் ஆசிரியர் தினம் - மே 16,
தமிழகத்தில் செப்டம்பர் 5

எழுச்சி கவிதையின் கருத்தாழம், கோபம் தெரிக்கிறது.

டாக்டர் அண்ணாதுரை
16-05-2008, 08:20 AM
நன்றி கவிதா,
ஆசிரியர் தொழில் புனிதமானது என்பதில் ஏதும் ஐயமில்லை...ஆனால் அன்மைய காலமாக அதன் புனிதம் பாவப்பட்ட சிலரால் சிதைந்துகொண்டிருக்கிறது......அதனை நேரில் காணும்பொழுது வேதன இன்னும் தாளவில்லை கவிதா..... அதனால்தான் எழுத்தால் சுட்டெறிக்கிறேன்.....இந்த சூடு பாவப்பட்டவர்களுக்குமட்டுமே!!!.

அமரன்
17-05-2008, 09:31 AM
அப்பப்பா என்ன சூடு..
விலகிச் சென்றாலும்
தமிழ் வார்த்தை மீதேறி
நெருங்கி வருகிறது நெருப்பு..
அண்ணாத்துரையின் குருதியின் கொதிப்பு..

காலைமுதல் மாலைவரை-கடுங்
குளிரிலும் வேர்க்கும் வேலை..
வாரத்தின் ஐந்து நாளும்
ஓய்வெடுப்பது ஓடும் ரயிலில்.

வாரம் விடுப்பெடுக்கும்
கடைசி இரண்டு நாட்களும்
தமிழ்ப்பள்ளியில் சேவை.

ஊதியம் ஏதுமில்லை..ஆனாலும்
ஊழியம் செய்கின்றனர் தமிழுக்கு
இளந்தமிழ் தலைமுறை
இழந்த தமிழ்கல்வி புகட்டி..

என்ன செய்வது...

மண்சுமக்கும் விதைகள் சில
சாவியாகின்றன!
விதைக்காமல் சில
விசச்செடிகள் முளைக்கின்றன!

எதில் பழுது..
விதையிலா மண்ணிலா ???

அண்ணா...
தீ அணைக்க நினைக்கவில்லை..
தீதணைக்க இணந்துழைப்போம்.

வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
16-06-2008, 01:56 PM
மண்சுமக்கும் விதைகள் சில
சாவியாகின்றன!
விதைக்காமல் சில
விசச்செடிகள் முளைக்கின்றன!

எதில் பழுது..
விதையிலா மண்ணிலா ???

அண்ணா...
தீ அணைக்க நினைக்கவில்லை..
தீதணைக்க இணந்துழைப்போம்.
.
அற்புதம் அமரண்ணா..!!

உங்களுக்கும் அண்ணாதுரை அண்ணாவுக்கும் எனது வாழ்த்துகள்..!!

சிவா.ஜி
16-06-2008, 02:12 PM
அகரம் சொல்லிக்கொடுத்த
சிகரங்கள் மறைந்து, இன்று
தகரங்களாகி நிற்கின்றன?

சேறு பூசிய தாமரைகளையும்
அறிவு நீர் ஊற்றி அலசிய
செறிவு நிறை செம்மல்கள், தாங்களே
சேறு பூசிக்கொண்டுள்ளனர்...

டாக்டர் அண்ணாதுரை அவர்களின் சாட்டையில் தீ பறக்கிறது. சூடு பட்டாவது சிலருக்கு அழுக்கு அழியட்டும். அருமையான கவிதை டாக்டர் சார். வாழ்த்துகள்.