PDA

View Full Version : இன்னும்



ஆதி
15-05-2008, 06:42 AM
உன் வார்த்தைகள்
அமிலத்தில் தோய்த்தன
என்னை..

துகள்களாய்
நொறுங்கி சிதறிய அன்பு
எரிகிறது
ஏமாற்றத்தின் நெருப்பில்..

இருப்பினும்
வெடிக்காமல்
துடித்துக் கொண்டிருக்கிறது
இதயம்

அனுராகவன்
16-05-2008, 05:13 AM
வாழ்க்கை வாழ
என்றும் என்
மனநிலை மாறுமா!!
விதியின் விளையாட்டில்
யாரும் தப்பமுடியாது..
நஞ்சை கொடுத்தாலும்
நெஞ்சை நிமிர்த்தும்
உன் வாழ்க்கை
என் கையில்...

நன்றி ஆதியே!!
ம்ம் தொடருங்கள்!!