PDA

View Full Version : பெண்ணும் அலுவலும்



இராஜேஷ்
14-05-2008, 03:51 AM
முன்னிரவே காய் அறிந்து
சந்தியிலேயே கறி சமைத்து
அரைவேக்காட்டு பொறியலையும்
குழைந்த தயிர் சாதத்தையும்
சோத்து மூட்டையாய் கட்டிக் கொண்டு

கண்மலரா தன் மழலை முகம் கிள்ளி
தன் இதழ்பதித்து, தன்னவன் தலை கோதி - கண் கலங்கி
நேரம் தவறும் மாநகர பேருந்தில் - செல்லாமல்
சாகச "share Auto" வில் அலுவலகம் சென்று

அலுவல் புரிந்து உணவு வேளையில் அரைவயிறு
நிரம்பாத சோற்றை முடித்து வீட்டிற்கு போன்செய்ய
அவள் மழலையின் குரலை கேட்க "அம்மா மம்மு சாப்டியா"
முழுவயிறு நிரம்ப அலுவலை தொடர்ந்து

சூரியன் நாள் முடித்த பின்னும் தன் அலுவல் தொடர, பின்
பணி முடித்து விட்டிற்கு வந்து அவசரமாய் சமைத்தாள் - நூடுல்ஸ்
இரவு (BPO) ஷிப்டிற்கு புரப்படும் தன்(க)னவனுக்காக.........

என்று ஒய்வு என் சகோதரிகளுக்கு???


என்னுடைய இச்சிந்தனை இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் என் அன்புச் சகோதரிகளுக்கு சமர்பனம்[/CENTER]

சாலைஜெயராமன்
14-05-2008, 04:16 AM
நகரத்தின் நரக வாழ்க்கையைப் புடம் போட்டுக் காட்டியுள்ளீர் திரு ராஜேஷ். இயந்தரத்தனமாகத்தான் வாழ வேண்டுமா? அமைதிக்கு வழியே இல்லையா? பாவம் நம் அலுவலகப் பணியாற்றும் அன்புச் சகோதரிகள்.

நல்ல சிந்தனைக்கு பாராட்டுக்கள்

இராஜேஷ்
14-05-2008, 04:41 AM
தங்களுடைய பாராட்டுத்லுக்கு என் மனமர்ந்த நன்றிகள்

இராஜேஷ்
15-05-2008, 10:36 AM
இதை எந்த பகுதியில் இட வேண்டும்

ஓவியன்
15-05-2008, 05:06 PM
இதை எந்த பகுதியில் இட வேண்டும்

தொடர்சியாக, பாகம் பாகமாக வளரும் கவிதைகளையே தொடர் கவிதைகள் பகுதியிலிடுவது மன்ற வழக்கம் நண்பரே - அதனால் இந்த கவிதைத் திரியினை புதிய கவிதைகள் பகுதிக்கு நகர்தியுள்ளேன்..!!

Keelai Naadaan
15-05-2008, 05:39 PM
என்று ஒய்வு என் சகோதரிகளுக்கு???


கண்ணதாசனின் "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்ற பாடலை கேட்டிருப்பீர்களே.. அதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்
சிறந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

kavitha
16-05-2008, 07:06 AM
என்னுடைய இச்சிந்தனை இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் என் அன்புச் சகோதரிகளுக்கு சமர்பனம்
நன்றி சகோதரரே.

அனுராகவன்
16-05-2008, 07:11 AM
நன்றி இராஜேஷ் அவர்களே!!
நகரத்தில் நடக்கும் நிகழ்ச்சியே படம் பிடித்து காட்டியுள்ளீர்..
என் நன்றியும்,வாழ்த்தும்..

இராஜேஷ்
19-05-2008, 08:58 AM
தங்கள் அனைவருடைய பாராட்டுதளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள கோடி

ஆதவா
06-06-2008, 06:38 AM
எல்லா நகரத்திலும் எல்லா பெண்களும் இப்படி "பிஸி"யாகவே இருப்பதில்லை. பெரும்பாலான பெண்களுக்குத் தங்களின் நேரம் ஒதுக்கத் தெரிந்திருக்கிறது. உங்கள் கவிதையில் கூட அந்த நேரத்தை மறைமுகமாக சுட்டியிருக்கிறீர்கள். அலுவலகத்திற்குச் செல்லும் பெண்களுக்குக் கூடுதல் சுமை. மற்றபடி ஒவ்வொரு இடத்திலும் சிறு சிறு Hint கொடுக்கிறீர்கள். அங்கே உங்களின் சாடல் தெளிவாகத் தெரிகிறது.


tare jamin par என்ற படத்தில் நீங்கள் சொல்லும்படியான ஒரு காட்சி அல்லது பாடல் வருகிறது. அந்த தாய் தனது மூத்த, இளைய மகன்களை பள்ளிக்கு விரட்டுவதையும், கணவனை அலுவலகத்திற்கு விரட்டுவதையும் மிக அழகாக படம்பிடித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தாயின் ஓய்வின்மை மதியம் வரை இருக்கலாம். மீதி நேரங்களை மற்ற வேலைகளின் மூலம் ஈடுகட்டவோ, அல்லது ஓரங்கட்டவோ, சீக்கிரம் முடித்து ஓய்வெடுக்கவோ தெரிந்துவைத்திருக்கிறார்கள்.


கவிதையைப் பொறுத்தவரையிலும் உங்கள் உழைப்பு மிக அதிகம் தேவை. ஆரம்ப கால உங்களின் சிந்தனையே நல்ல மாற்றமாக இருப்பதால் சிறந்த கவிதைகள் படைக்கும் திறன் முழுவதும் வந்துசேர உங்களுக்கு அதிக காலம் பிடிக்காது.


சிறுசிறு பிழைகள், குறைகள் களைத்தால் இது நல்ல கவிதை....


மேலும் தொடர்க.

kavitha
06-06-2008, 07:00 AM
மீதி நேரங்களை மற்ற வேலைகளின் மூலம் ஈடுகட்டவோ, அல்லது ஓரங்கட்டவோ, சீக்கிரம் முடித்து ஓய்வெடுக்கவோ தெரிந்துவைத்திருக்கிறார்கள்

இதெல்லாம் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு ஓரளவு சாத்தியப்படும். பணியில் இருப்பவர்களுக்கு கொடுத்த நேரத்தில் தன் பணியை செய்து முடிக்கிற அழுத்தம் அதிகமாக இருக்கும் தம்பி ஆதவா.


அங்கே உங்களின் சாடல் தெளிவாகத் தெரிகிறது.
எதைச்சொல்கிறீர்கள் ஆதவா...?

ஆதவா
06-06-2008, 09:32 AM
நானும் வீட்டில் இருப்பவர்களுக்குத்தான் அக்கா சொல்கிறேன். வேலைக்குச் செல்பவர்களுக்கு இது சாத்தியம் இல்லையே!

ஒரு சில சாடல்கள் இருக்கவே செய்கின்றன. உதாரணம் : நேரம் தவறும் மாநகரப் பேருந்துகள், எதையும் பொருட்படுத்தாமல் ஓடும் ஷேர் ஆட்டோக்கள், சாவகாசமில்லாத உணவு இடைவேளை, இப்படி........

shibly591
06-06-2008, 09:37 AM
நன்றாக எழுதியுள்ளீர்கள்...இன்னும் இதுபோல் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
06-06-2008, 09:43 AM
நல்ல சிந்தனை ராஜேஷ். எதற்கு இந்த ஓட்டம்? பொருளாதார மேம்பாட்டிற்கா? என்றால் இழப்பது எத்தனை. ஆற அமர குழந்தையையும் கொஞ்சமுடியாமல், கணவனுக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் இவர்கள் படும் வேதனைக்கு பரிசாகக் கிடைக்கும் அந்த பொருளாதார மேம்பாடு இவர்களுக்கு உதவியாக இருக்கிறதா என்றால்.....................இல்லையே. அப்போதும் இதே கஷ்டத்தைதானே அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஷேர் ஆட்டோவிற்கு பதிலாக ஒரு ட்டூ வீலர் வாங்கவும் அவர்களுக்கு அனுமதி தேவையாய் இருக்கிறதே.

பணிபுரியும் பெண்களின் சிரமத்தை சொல்லும் வரிகள். அருமை ராஜேஷ். வாழ்த்துகள்.

kavitha
06-06-2008, 09:54 AM
உதாரணம் : நேரம் தவறும் மாநகரப் பேருந்துகள், எதையும் பொருட்படுத்தாமல் ஓடும் ஷேர் ஆட்டோக்கள், சாவகாசமில்லாத உணவு இடைவேளை, இப்படி........

புரிந்தது. நன்றி. :)

ஆதவா
06-06-2008, 10:04 AM
நல்ல சிந்தனை ராஜேஷ். எதற்கு இந்த ஓட்டம்? பொருளாதார மேம்பாட்டிற்கா? என்றால் இழப்பது எத்தனை. ஆற அமர குழந்தையையும் கொஞ்சமுடியாமல், கணவனுக்காக நேரத்தை ஒதுக்க முடியாமல் இவர்கள் படும் வேதனைக்கு பரிசாகக் கிடைக்கும் அந்த பொருளாதார மேம்பாடு இவர்களுக்கு உதவியாக இருக்கிறதா என்றால்.....................இல்லையே. அப்போதும் இதே கஷ்டத்தைதானே அனுபவிக்க வேண்டியதாய் இருக்கிறது. ஷேர் ஆட்டோவிற்கு பதிலாக ஒரு ட்டூ வீலர் வாங்கவும் அவர்களுக்கு அனுமதி தேவையாய் இருக்கிறதே.

பணிபுரியும் பெண்களின் சிரமத்தை சொல்லும் வரிகள். அருமை ராஜேஷ். வாழ்த்துகள்.


சில பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டும் ஓடுவதில்லை.. குடும்ப மேம்பாட்டுக்காகவும். இழப்பது என்னவோ இருசாராருக்கும் ஒன்றுதான். இது பலருக்குத் தேவையாகவும் இருக்கிறது... திருப்பூரில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேலைக்குச் செல்லுகிறார்கள். இங்கே சவுகரியத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. அந்தந்த நாளைய ஷிப்ட்களை (ஒருநாளைக்கு 1 1/2 ) முடித்தாகவேண்டும்.. இது சீசன் நேரங்கள் கிட்டத்தட்ட எல்லா கம்பனிகளுக்கும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. என்றாலும் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் இங்கே வேலைக்குப் போவதை நிறுத்திக் கொள்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் கம்பனிகள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இளமையின் வேகத்தை உறிஞ்ச மட்டுமே இங்குள்ளவர்களுத் தெரியும்.. அல்லது உறிஞ்சித்தான் ஆகவேண்டும்........ இதில் தவறான சீண்டல்களும் அதிகம் புழங்குகின்றன,.

எப்படிப்பார்த்தாலும் பெண்கள் பாடு திண்டாட்டம்தான்.........

பூமகள்
06-06-2008, 11:51 AM
தகவல் தொழில்நுட்பத்தில் மற்றொரு கடினமான பணி... 24/7-ல்.. இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யும் சகோதரிகள் படும் அவஸ்தை ஏராளம்...

அதில் மட்டுமல்ல... எந்தத் தொழில் எடுத்தாலும்..சித்தாள் முதல்.. இன்சினியர்..டாக்டர் வரை.. எல்லா இடங்களிலும் பெண்களுக்குத் தொல்லைகள் கூடவே வருகின்றன.. அதற்குப் பயந்து வீட்டில் முடங்கியிருந்தால்... விண்வெளி வரை பெண்கள் சென்றிருக்கவே முடியாது..

பெண்களுக்குத் தேவை.. வல்லூறான மனிதர்களை முடிந்தளவு வெட்டி விடுவது... பெண்கள் ஒன்றாகி ஒற்றுமையாக இருந்தாலே.. பணியிடத்தில்.. பல பிரச்சனைகளைச் சமாளிக்கலாம்...

தவறான கண்ணோட்டங்களும்... அதற்கான சூழலை உருவாக்காமல் இருப்பதும்... தகுந்த எல்லை வகுத்து எச்சரிக்கையாக இருந்தால் பெண்கள் எங்கும் சாதிக்கலாம்..

பெண்களே... விழித்தெழுங்கள்.. ஆண்டாண்டு காலமாக.. வாடி வதைபட்டது போதும்... இனி மேலாவது பெண்களை சக மனித இனமாக பார்க்கும் பழக்கம் வரட்டும்..

எல்லை மீறுவோரிடம்.. செருப்படியோ.. சொல்லால் நெருப்படியோ கொடுக்கத் தவறாதீர்கள்.. எந்த பொறுப்பில் இருந்தாலும் சரி...

மனித மனங்கள் பூக்களாகும் வரை.. இந்த பிரச்சனைகளும் ஓயாது..
----------------------------------------------------------
நல்ல படைப்பு... வார்த்தைச் சுருக்கம் கவிதைக்கு முக்கியம்.. மற்றபடி..எழுத எழுத எல்லாம் வசப்படும்... மன்றத்தில் பலகைகளில் எழுதிப் பழக இங்கு என்னோடு பலர் இருக்கிறோம்.. தயங்காமல் படியுங்கள்... பல படைப்புகள் படையுங்கள்.... வாழ்த்துகள் சகோதரர் இராஜேஷ்.

இளசு
14-06-2008, 11:31 PM
கவிதைக்கு வாழ்த்துகள் இராஜேஷ்..

கருவின் கனமும், சொன்ன பின்புலம்/ சம்பவங்களும் நேர்த்தி..

சொற்கட்டு/ வரிவடிவம் - இன்னும் நிறைய வாசித்து எழுத எழுத
வசீகரமும், வீரியமும் மெல்லக் கூடும்..

தொடர்ந்து படையுங்கள்..

-------------------------------

ஆண்/ பெண் இருவரும் பணி
இனி இங்கு நிரந்தரம்..
இன்னும் இன்னும் பெருகும்..

தேவை
வீட்டுப்பணிகளில் பங்கீடு..
குழந்தைகள் எண்ணிக்கையில் சிக்கனம்..
வாழ்வு -பணி விகித விருப்பத்தை (Work -Life Balance)
மதிக்கும் நிறுவனக் கொள்கைகள்..

பிரசவம், அதையொட்டிய சில-பல மாதங்களில் மட்டும் விடுப்பெடுத்து
ஏனைய காலங்களில் பணி புரிவது - எதிர்கால நிஜம்..

அதற்கேற்ப மாறவேண்டும் நாம் அனைவரும்..

பென்ஸ்
14-06-2008, 11:54 PM
"சகோதரிகளுக்கு" என்று பன்மையில் சொல்லுபோது
கவிதைக்கு பலம் இல்லையே நண்பரே..!!!!
அது ஜெனரலைஸ் செய்வது போல் இருக்கிறது....

இன்று இவ்வாறு வாழும் பெண்கள் இருக்கிறாகள்... ஆனால் அனைவரும் அப்படி இல்லை....

பணி, குடும்பம், சமுதாயம் என்று வாழ்கையை சமநிலையில் நிலை நிறுத்தி வாழமுடியாத நிலையில் இந்த கொடுமைகளும், கஷ்டங்களும் நான் கேட்டு வாங்கி கொள்ளும் சூடு....
இன்று கணவன், மனைவி, குழந்தைகள் என்று அனைவரும் பணியை பங்கு கொண்டு, சுமைகளை பகிர்ந்து வாழ்வதை கண்டு இவர்கள் படித்து தங்களை மாற்றி கொள்ளலாம்....

சுயபச்சாதாபம் தேவையில்லை....
அனுதாபங்களும் அவசியமில்லை....

சிறு கவிதையில் அதிகம் எண்ண ஒட்டங்களுக்கு இடம் கொடுக்க வைத்தீர்கள்... பாராட்டுகள்...

ஆதவா
16-06-2008, 03:56 AM
இப்படி இரண்டுபேரும் விமர்சனம் போட்டு மனசை துள்ள வைக்கிறீங்க...

இராஜேஷ்
17-06-2008, 07:56 AM
அன்பு நண்பர்களே!

உங்கள் விமர்சனங்கள் மற்றும் பாராட்டுக்கள் மிகவும் அருமை. நெகிழ்ந்துவிட்டேன். இவை அனைத்தும் வளரும் படைபாளிகளுக்கு மிகுந்த உக்கத்தையும், தன்னம்பிக்கையும் தருகின்றன. தொடர்ந்து விமர்சனங்களை தாருங்கள்