PDA

View Full Version : ஊழல் அதிகாரிக்கு அமைச்சர் பூங்கோதை சிபாரிசு!..:சுப்பு சாமி அதிரடி..!



ராஜா
13-05-2008, 09:24 AM
ஊழல் அதிகாரிக்கு அமைச்சர் பூங்கோதை சிபாரிசு!: சிடி ஆதாரத்துடன் சு.சாமி அட்டாக்

சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கிய உறவினர் ஒருவரை காப்பாற்ற ஏ.டி.ஜி.பி.யுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டுள்ளார் சுப்ரமணியசாமி.

ஏ.டி.ஜி.பி. உபாத்யாயாவுடன் தமிழகத் தலைமைச் செயலாளர் திரிபாதி பேசியது ஒட்டுக் கேட்பதாக எழுந்த புகார் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிஷன் நாளை விசாரணை மேற்கொள்கிறது.

இந்நிலையில் ஏ.டி.ஜி.பி. உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியதாக சிடி ஆதாரம் ஒன்றை வெளியிட்டு தமிழக அரசின் வயிற்றில் கிலியை ஏற்படுத்தியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி.

நேற்று மாலை நிருபர்களைச் சந்தித்த சுப்ரமணியசாமி,

”தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணை என்ஜினீயராக இருக்கும் தமது உறவினரான ஜவஹர் என்பவரை லஞ்ச ஊழல் வழக்கு ஒன்றில் இருந்து காப்பாற்றச்சொல்லி உபாத்தியாயாயிடம் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்திருக்கிறார். அதற்கான ஆதாரம் இதோ” என்றவர் சிடியில் பதிவான உரையாடலை போட்டு காண்பித்தார். அதில்,

அமைச்சர் பூங்கோதை: ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பிதான் உள்ளது. அவர் என் அப்பாவின் சொந்த அக்கா மகன். இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

ஏ.டி.ஜி.பி. உபாத்யாயா: வழக்கை நீதி விசாரணைக்கு கொண்டு செல்வது பற்றி மின்வாரிய தலைமை இன்ஜினியர்தான் முடிவு செய்வார். அவர் அனுமதிக்காவிட்டால், மின்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கோப்பு மின்துறைக்கு அனுப்பப்படும்.

அந்த உரையாடலைக் கேட்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் சுப்ரமணிய சாமியைப் பார்த்தனர்.

சுப்ரமணிய சாமியோ அவருக்கே உரிய புன்முறுவலுடன் ”இந்த சிடி ஆதாரத்தை ஆளுநர் பர்னாலாவிடம் சமர்ப்பித்து உள்ளேன். நடத்தை விதிமுறைகளை மீறிய பூங்கோதையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியுள்ளேன்” என்றார்.

இதுகுறித்து அமைச்சர் பூங்கோதை கூறுகையில்,

”அது என்னுடைய குரல் அல்ல என்று நான் பொய் சொல்லமாட்டேன். அது என் குரலேதான். ஆனால், தவறாக ஏதும் பேசவில்லை. என் உதவி கேட்டு பொதுமக்கள் பலர் வருகின்றனர். அவர்களுக்காக நான் பலரிடமும் பேசவேண்டிருக்கிறது. ஜவஹரின் வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளதான் போன் செய்து பேசினேன். அதில் தவறாக ஒன்றும் பேசவில்லை. இந்த டேப் ஆதாரம் குறித்து எனக்கு கவலையில்லை” என்றார்.

aren
13-05-2008, 10:32 AM
இந்த பேச்சை எப்படி சுப்ரமணியசாமி டேப் செய்தார் என்று தெரியவில்லை. ஒருவருடைய பேச்சை இப்படி டேப் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதனால் அவர் மேலும் நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

தப்பு செய்த மந்தியை பதவி நீக்கம் செய்யவேண்டும்.

அக்னி
13-05-2008, 10:34 AM
தப்பு செய்த மந்தியை பதவி நீக்கம் செய்யவேண்டும்.
மந்திகள் அரசோச்சினால், இப்படித்தான் இருக்குமோ ஆரென் அண்ணா... :D
ஆரென் அண்ணா சொன்னதுபோல் ஒட்டுப்பதிவு செய்தவருக்கும் தண்டனை வழங்கவேண்டும்தானே...

aren
13-05-2008, 10:38 AM
அக்னி, யார் தப்பு செய்வார்கள் என்று காத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

அக்னி
13-05-2008, 03:30 PM
உண்மையாக மந்தி என்றுதான் சொல்கின்றீர்களோ என்றும் நினைத்தேன்.
இருந்தாலும் கலாய்த்துக் கன நாளாயிற்றே... அதான்... :icon_03: