PDA

View Full Version : உங்க பெயரில் கூகுள் தேடல்அறிஞர்
13-05-2008, 02:03 AM
சிலருக்கு அவர்கள் பெயரை பார்த்துக் கொண்டு இருந்தாலே.. இன்பமாக இருக்கும்

கூகுள் பெயருக்கு பதில் அவரவர் பெயரில் தேடுதளம் இருந்தால் சிறப்பாக இருக்குமே

உங்கள் பெயரை கடைசியில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

http://www.pimpmysearch.com/home.html?gname=

உதாரணத்திற்கு தமிழ் மன்றம்

http://www.pimpmysearch.com/home.html?gname=Tamil%20Mantram
--------
இந்த செய்தியை முன்பே யாரும் கொடுத்துள்ளனரா எனத்தெரியவில்லை.

praveen
13-05-2008, 04:29 AM
அறிஞரே இது கொஞ்சம் சிக்கலான விசயம். அதில் ஓரத்தில் உள்ள இமெயிலில் நம் கணக்கு விவரம் தெரிவித்த உடன் நமது அட்ரஸ் புக்-ல் உள்ளவர்களுக்கு இந்த விவரம் நாம் அனுப்பியது போல இமெயிலாக அனுப்பப்பட்டு கொண்டேயிருக்கும். மேலும் இப்படி ஒவ்வொருவர் கணக்கிலும் இருந்து பெறப்படும் இமெயிலை முகவரிகளை இவர்கள் பின்னர் வெளியில் சில ஏஜென்ஸிகளுக்கு விற்பதால் நமக்கு ஜன்க் மெயில் வருவது அடுத்த மாதத்தில் இருந்து 4 மடங்காகி விடும்.

அங்கே இமெயில் அக்கவுண்ட் + பாஸ்வேர்டு கொடுப்பது (நமது இமெயில் அக்கவுண்டிற்கு) தற்கொலைக்கு சமம்.

எச்சரிக்கை, இம்மாதிரி வேடிக்கை காட்டி நமது அட்ரஸ்புக்கை திருடி நமக்கு மதிப்பு வாய்ந்தவர்களாக இருக்கும் நமது நண்பர்கள் அட்ரஸ்க்கு நாம் அனுப்புவது போல இந்த இமெயில் அனுப்பி இம்சை கொடுப்பார்கள்.

ஜாக்கிரதை, துன்பப்பட்டவன் சொல்கிறேன்.

வெற்றி
13-05-2008, 10:48 AM
அங்கே இமெயில் அக்கவுண்ட் + பாஸ்வேர்டு கொடுப்பது (நமது இமெயில் அக்கவுண்டிற்கு) தற்கொலைக்கு சமம்.

ஜாக்கிரதை, துன்பப்பட்டவன் சொல்கிறேன்.

நன்றி..எனக்கு இது போல் ஒரு அழைப்பு வந்தது ஆனால் அதில் சந்தேகம் வந்ததால் நிராகரித்து விட்டேன்....(ஆனா பார்க்க ரொம்ப்ப அழகாக இருக்கு)

aren
13-05-2008, 10:52 AM
என்னுடைய நண்பர் எனக்கு இதை அனுப்பினார். நான் இன்னும் செய்யவில்லை. என்னுடைய அலுவலகத்தில் இருப்பவர்கள் செய்துவிட்டு பூரித்துப்போகிறார்கள்.

பூமகள்
13-05-2008, 11:17 AM
நாங்களும் பொறிச்சிட்டோம்ல எங்க பெயரை கூகிலில்..

ப்ரவீண் அண்ணா சொன்ன மாதிரி.. வேற எந்த விதத்திலும்.. நம்ம ரகசியத்தைச் சொல்ல மாட்டோம்ல..!! ;) :D:D

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அறிஞர் அண்ணா.. :)

பாரதி
13-05-2008, 01:31 PM
பிரவீண் கூறியதை நான் வழிமொழிகிறேன்.

அன்பு அறிஞரே.. பதிவில் உள்ள சுட்டியை நீக்கி விடலாமா..?

இவ்விதமான தளங்கள் பொதுவாக இணையத்தில் நம் நடவடிக்கைகளைக் கண்காணிக்கக்கூடியவையே.

அறிஞர்
13-05-2008, 01:38 PM
இதில் நம்முடைய விவரங்களை நாம் எங்கே கொடுக்கிறோம்.

தேடும் இடத்தில் நம் பெயர் மட்டும் தானே வருகிறது.

வலது புறத்தில் இருக்கும் இமெயில் கணக்கு, பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.

தேடுவதற்கு மட்டும் உபயோகிப்போம்.

அக்னி
13-05-2008, 01:43 PM
எனக்கும் மின்னஞ்சலில் வந்திருந்தது. எனது பெயரையும் பதிந்து கொண்டேன். ஆனால் பிரவீண் சொன்ன சந்தேகம் வந்தமையால், அங்கே எனது விபரங்களைக் கொடுக்கவில்லை. பொதுவாகவே, இப்படியான அழைப்புக்களில் எங்கள் விபரங்களைக் கொடுப்பதைத் தவிர்ப்பதே நன்று...
பகிர்தலுக்கு நன்றி அறிஞரே...
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பிரவீண்...

praveen
13-05-2008, 01:51 PM
இதில் நம்முடைய விவரங்களை நாம் எங்கே கொடுக்கிறோம்.

தேடும் இடத்தில் நம் பெயர் மட்டும் தானே வருகிறது.

வலது புறத்தில் இருக்கும் இமெயில் கணக்கு, பாஸ்வேர்ட் கொடுக்க தேவையில்லை.

தேடுவதற்கு மட்டும் உபயோகிப்போம்.

மேலே நான் சாம்பிளுக்கு இனைத்த படத்தில்

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/praveennameswebsite-1.jpg

1 என்ற இடத்தில் இமெயில் அக்கவுண்ட் வருகிறது

2 என்ற இடத்தில் நாம் இன்வைட் செய்தால் இமெயில் கொடுக்க வேண்டும்

3.நாம் தேடும் அனைத்தும் அவர்கள் தொழிற்ப்பயிற்சிக்கு செல்லும்.

praveen
13-05-2008, 02:10 PM
http://www.funnylogo.info/create.asp

அறிஞர் அவர்களே, உங்கள் முதல் சுட்டிக்கு பதில் நான் கொடுத்திருக்கும் இந்த சுட்டி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நெகிழ்தன்மையுடையது பாவித்து பதில் பதிக்க வேண்டுகிறேன்.

அக்னி
13-05-2008, 02:13 PM
http://www.funnylogo.info/create.asp

இதுவும் அதேபோல் இருந்தாலும், இதில் இன்னும் அதிகமான தெரிவுகள் உள்ளனவே...
பகிர்தலுக்கு நன்றி...

praveen
13-05-2008, 02:25 PM
ஆனால் இம்மாதிரி நான் சொன்னதும் சேர்த்து தான் செய்வது சட்டவிரோதமாம். யாகூ ஆண்சரில் பார்த்தது,


http://answers.yahoo.com/question/index?qid=20080410085035AAczuDs

இப்போ பார்த்தால் அந்த பக்கத்தையே தூக்கி விட்டார்கள்.

http://i207.photobucket.com/albums/bb170/ashoohsa/yahooanswerresult.jpg

அன்புரசிகன்
14-05-2008, 06:29 PM
இந்த தேடலின் ஆரம்பப்பக்கம் இணைய தொடர்பு இல்லாமலே தோன்றும்.

http://www.pimpmysearch.com/home.htm...amil%20Mantram (http://www.pimpmysearch.com/home.html?gname=Tamil%20Mantram)
தவிர இது கூகிளுக்கு லிங்க் பண்ணியிருக்கிறார்களே தவிர இது கூகிளினுடையதல்ல.. உங்களை ஏமாற்றி உங்களை தகவலை திரட்டும் ஒரு உத்தியாகவே படுகிறது....

அறிஞர்
14-05-2008, 07:16 PM
பிரவீன் தாங்கள் கொடுத்த தளம் அருமை....

சும்மா விளையாட்டிற்காக இதை உபயோகிக்கிறேன்.

உண்மையான தேடல்களுக்கு இதை உபயோகிப்பது இல்லை.