PDA

View Full Version : குளத்தில் கல்லெறிந்தேன்



நாகரா
12-05-2008, 04:55 PM
குளத்தில் கல்லெறிந்தேன்
என் கைகளுக்கு விலங்குகளா
நீர் வளையங்கள்

குளத்தில் கல்லெறிந்தேன்
நீர்ப்பரப்பில் தெரிகிறது
கலங்கிய என் மனம்

குளத்தில் கல்லெறிந்தேன்
வரவிருக்கும் என் காதலிக்கு
இத்தனை வளையல்களா!

கல்லெறிந்த கணத்தில்
உயிர்தெழுந்தது
குளம்

கல்லெறிந்தேன்
கன்னமெங்கும் குழியக் குழியச் சிரித்தது
குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
அணி வகுத்து நின்றன
சக்கரப் படைகள்

குளத்தில் கல்லெறிந்தேன்
அடுத்த கணமே
சக்கர வியூகம்

குளத்தில் கல்லெறிந்தேன்
இன்னா செய்தாரை ஒறுக்க
இத்தனைப் பெரிய பூவா!

கல்லெறிந்தேன்
சுரணையோடிருக்கிறேன் என்று
நரம்புகள் புடைத்து நின்றது குளம்

கல்லெறிந்தேன்
ஆறாத வடுக்களல்ல நீயேற்ற காயங்கள்
ஆறுதல் சொன்னது குளம்

குளத்தில் கல்லெறிந்தேன்
என் தலைக்குள் அலைபாயக்
கலங்கினேன் நான்

ஓவியன்
13-05-2008, 01:55 AM
குளத்திலெறிந்த கல்
அலை, அலையாய் அழகாக
சலனங்களை ஏற்படுத்தி விட்டு
குளத்தின் இரகசியத்துடன்
காணாமல் போய்விடுகிறது....

வடுக்களை உள்வாங்கி
அழகாக சலங்களை ஏற்படுத்தி
வாழ்வில் ஜெயிக்கும் புத்திசாலி
மனிதர்களைப் போலவே......

அருமை அண்ணா..!! :icon_b:

நாகரா
13-05-2008, 02:45 AM
குளத்திலெறிந்த கல்
அலை, அலையாய் அழகாக
சலனங்களை ஏற்படுத்தி விட்டு
குளத்தின் இரகசியத்துடன்
காணாமல் போய்விடுகிறது....

வடுக்களை உள்வாங்கி
அழகாக சலனங்களை ஏற்படுத்தி
வாழ்வில் ஜெயிக்கும் புத்திசாலி
மனிதர்களைப் போலவே......

அருமை அண்ணா..!! :icon_b:

உம் பின்னூட்டக் கவிதை அருமை, ஓவியன். நன்றி.

அனுராகவன்
19-05-2008, 06:50 AM
அருமை நாகரா!!
என் நன்றி..
அருமையான கவி..

இராஜேஷ்
19-05-2008, 09:06 AM
நன்றி அண்ணா! மிகவும் அருமை. குளத்தி கல்லெறிந்தால் இனி நகர மாட்டேன், ரசிப்பேன்

Keelai Naadaan
19-05-2008, 05:03 PM
குளத்தில் கல் விழுந்ததை பார்ப்பது போல் மனதில் ஒரு பிரமை ஏற்பட்டது. நன்றிகள்

இளசு
11-06-2008, 10:14 PM
ஒரு காட்சி..
எத்தனை பார்வை..

கவிதையின் உன்னதப் பயன்பாடு இது..

காதலர் கண்ணுள் இருக்க
கண்வாசலில் மையிடேன் -

இந்த குறள் காட்சிக்கு
கவிக்கோ அப்துல் ரகுமான்
எத்தனைப் பார்வைகளை விளக்குவார்..
எல்லாமே அத்தனைப் பொருத்தம்.. அழகு!

இங்கே நாகரா அவர்கள்
தற்குறிப்பேற்றி உலவவிட்ட
அத்தனைக் காட்சிகளையும்
கரைக்குப் போகாமல்
கணினித்திரையிலேயே காணவைத்தார்..

அருமை.. அழகு..
பாராட்டுகள் திரு.நாகரா!

பூமகள்
13-06-2008, 05:26 PM
குளமும் அதில் கல்பட்ட
சிலிர்ப்புகளும்..
நம் கண்முன் வந்து
காட்சிப் படிமமாகிறது..

அழகிய பல்கோணப் பார்வைகள்.. வியந்து பார்க்கிறேன்..
ஓவியண்ணா, பெரியண்ணாவின் பின்னூட்டங்கள்..
குளத்தை மெருகூட்டுகின்றன..

பாராட்டுக்கள் நாகரா அண்ணா.. !!

நாகரா
19-06-2008, 03:35 PM
அனு, இராஜேஷ், கீழை நாடான், இளசு, பூமகள், உம் பாராட்டுகளுக்கு நன்றி.