PDA

View Full Version : தமிழ்மன்றத்தின் பேட்டி (பிரஸ் கான்பிரன்ஸ்)



lolluvathiyar
12-05-2008, 01:32 PM
தமிழ்மன்றத்தின் பேட்டி (பிரஸ் கான்பிரன்ஸ்)

அன்புள்ள தமிழ் மன்ற நேயர்களே, நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு ஒரு புதிய போட்டி மன்னிக்கவும் பேட்டி நிகழ்ச்சிய தொடங்குகிறேன். இது நமது மன்றத்தின் பேட்டி, இதில் பேட்டி எடுப்பவர்களும் பேட்டி கொடுப்பவர்களும் நமது மன்றத்து சொந்தங்களே பங்கு பெறுவார்கள்.

சுடர் என்ற திரியில் ஒரே ஒருவர் இன்னொருவருக்கு பல கேள்விகளை தொடுப்பார், ஆ பத்து என்ற திரியில் ஒரே ஒருவர் பலருக்கு ஒரு கேள்வியை தொடுப்பார். அது போல தான் இதுவும் ஆனால் ஒரு சிறு வித்தியாசம்
ஒரே ஒருவரிடம் பலர் கேள்விகனைகளை தொடுப்பார்கள்.
பேட்டி கொடுப்பவர் முடிந்தவரை அனைத்து கேள்விகளுக்கும் பதில் தர வேண்டும். இதன் மூலம் நாம் பல மன்றத்து சொந்தங்களை பற்றியும் நிரைய விசயங்களையும் அறிந்து கொள்ளலாம்.

விதிமுரைகள்

முதலில் பேட்டி கொடுக்க ஒருவரை அழைக்கிறேன். அவரை தனி மடல் மூலம் இந்த திரிக்கு வர வைத்து தனது சம்மதத்தை பதிக்க வேண்டும். அவர் சம்மதம் தந்தவுடன் அதற்க்கு அடுத்த நாள் தான் பேட்டி துவங்க பட்ட நாளாக கருத வேண்டும். பேட்டி துவங்கிய 3 நாட்கள் அவகாசத்திற்குள் பங்கு கொள்ள விரும்புவர்கள் கேள்விகள் தொடுக்கலாம். ஒருவர் ஒரு கேள்வியை மட்டுமே கேட்க வேண்டும். கேட்க பட்ட கேள்விக்கு பேட்டி கொடுப்பவர் பதிலளித்திருந்தால் அந்த பதிலை வைத்து யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் (அதற்க்கும் கால அவகாசம் இருக்கு, அதாவது பேட்டி துவங்க பட்ட நாளிலிருந்து 5 நாள் வரை மட்டுமே கேள்விகள் கேட்க பட வேண்டும். அதன் பின் கேள்வி கேட்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்) பேட்டி துவங்க பட்ட நாளிலிருந்து 6 நாட்களுக்குள் பேட்டி கொடுப்பவர் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தந்து விட்டு தன் பேட்டியை முடித்து கொள்ள வேண்டும். பேட்டி கொடுத்தவர் அடுத்த பேட்டி கொடுப்பவரை பரிந்துரைக்க வேண்டும். நிர்வாக உறுப்பினர்கள் யாரவது ஒருவர் இதற்க்கு இன்னொரு தனி திரி உருவாக்கி அங்கு கேள்வி பதிகளை மட்டுமே வைத்து பூட்டி விடலாம். மற்றவர்களின் பின்னூட்டங்கள் அங்கு வேண்டாம்.

கேள்வி ரிபீட் ஆகாமல் பார்த்து கொள்ளுங்கள்.
கேள்வி சபை நாகரீகத்துக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.
அரசியல் சாதி மதம் சம்மந்த பட்ட கேள்விகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
பேட்டி கொடுப்பவர் தகுதிக்கு மீறிய கேள்வியை தவிர்த்து விடுங்கள்.
தொழில் நுட்பம் சம்மந்த பட்ட கேள்விகள் இங்கு சுவாரசியம் இருக்காது.
கேள்வியும் சரி பதிலும் சரி யாரையும் புன்படுத்தும் விதத்தில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
இதில் பின்னூட்டம் இடுபவர்கள் சும்மா ஒருவரி பாராட்டோ அல்லது ஓவராக கலாய்பதையோ தவிர்த்து விடுங்கள், காரனம் இந்த திரி பக்கத்தை நிரப்பவதை காட்டிலும் விசயங்கள் நிரைந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

கேள்விகளுக்கு பதில் தருவது முற்றிலும் பேட்டி கொடுப்பவரின் உரிமை, அவர் எந்த கேள்விகளையும் நிராகரிக்க உரிமை உள்ளவர்.

வேலை பலு காரனமாக நான் மன்றத்துக்கு வந்தாலும் வரவிட்டாலும் இந்த திரி திட்டமிட்ட விதிமுரைகளுக்கு உட்பட்டு அதிக நாட்கள் நகர உதவுங்கள். இந்த திரியை பற்றியும் விதிமுரைகளை பற்றியும் இரண்டு நாட்கள் விவாதித்து விதிமுரைகளை பைன் ட்யூன் செய்து 2008 மே 15 ஆம் தேதி அன்று முதல் பேட்டி கொடுப்பவரை நானே அழைக்கிறேன்.

ராஜா
12-05-2008, 01:56 PM
நல்ல முயற்சி..! பாராட்டுகள் வாத்தியாரே..!!

கமான் மக்கா.. கலக்குங்க மக்கா..!

வாத்தியாரா கொக்கா.. வந்துட்டாரு பக்கா(வா)..!

அன்புரசிகன்
12-05-2008, 02:04 PM
வாத்தியாரே............. கலக்குங்க... அப்படியே உங்க வாத்தி 007 ஐயும்.... :D

ஓவியன்
12-05-2008, 02:10 PM
இது, இது இதனைத் தான் எதிர்பார்த்தேன்...!!

கலக்குங்க வாத்தியாரே, எல்லோருமாக சேர்ந்து பின்னிடலாம்..!! :icon_b:

praveen
12-05-2008, 02:20 PM
வந்தது லேட்டு, ஆனா லேட்டஸ்ட்டா ஒரு புது யுக்தியுடன், வாங்க வாத்தியாரே வந்து லொள்ளுங்க, மண்ணிக்கவும் கலக்குங்க.

கண்மணி
12-05-2008, 02:39 PM
கேள்விகள் / பதில்கள் ரொம்ப பர்சனலா இல்லாத மாதிரி பார்த்துக்கணும்,,,

ஓவியன்
12-05-2008, 02:57 PM
கேள்விகள் / பதில்கள் ரொம்ப பர்சனலா இல்லாத மாதிரி பார்த்துக்கணும்,,,

உண்மையே, கேள்விகள் அந்தரங்கங்களைப் பாதிக்காத வகையில் இருப்பதே சிறப்பு...!! :)

பூமகள்
12-05-2008, 03:04 PM
அருமையான அறிவாட்டம் ஆரம்பம்..
வாத்தியார் அண்ணா... வந்து அசத்திட்டீங்க..!! பாராட்டுகள் மற்றும் புது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..!! (எங்கிருந்து தான்.. இப்படி யோசிச்சி கண்டுபிடிக்கிறீங்களோ??!! நானும் தான் இருக்கேனே.. க்கூம்..!! :D:D)

எத்தனை பேர் கேட்கலாம் என்ற வரைமுறை வைக்கலாம்.. ஏனெனில்... பல்வேறு வேலைகளுக்கிடையில்.. மன்றம் வரும் சில மணித்துளிகளில்...
நிறைய கேள்விகளுக்கு பதிலிட அதிக நேரம் இப்பதிவிலேயே செலவிடும்படி செய்தால்.. மன்றத்தின் மற்ற படைப்புகள் பார்க்கும் நேரம் குறைவாக நேரிடலாம்..

என் கருத்தின் பலன் ஆராய்ந்து பார்த்து.. வரைமுறையில் சேர்ப்பது பற்றி ஆலோசியுங்கள்..!!

அறிவு ஜீவிகளுக்கு வாழ்த்துகளுடன்...

Keelai Naadaan
12-05-2008, 03:06 PM
சுவாரஸ்யமான இந்த பேட்டி திரியை வரவேற்கிறேன். நன்றிகள் வாத்யாரே.

எந்த விதமன கேள்விகளை கேட்கலாம் என்பது மாதிரி சிறு விளக்கம் தந்தால் நன்று.




கேள்விகளுக்கு பதில் தருவது முற்றிலும் பேட்டி கொடுப்பவரின் உரிமை, அவர் எந்த கேள்விகளையும் நிராகரிக்க உரிமை உள்ளவர்.



இது தேவையான விதிமுறை

அறிஞர்
12-05-2008, 04:02 PM
புது புது ஐடியா...

வாழ்த்துக்கள்... வாத்தியாரே..

மனோஜ்
12-05-2008, 05:07 PM
புது விளையாட்டு
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வாத்தியாரே

lolluvathiyar
13-05-2008, 08:10 AM
எத்தனை பேர் கேட்கலாம் என்ற வரைமுறை வைக்கலாம்..

இது கடினமான விசயம், ஒருவர் ஒரு கேள்வியைதான் கேட்க வேன்டும் என்று விதிமுரை இருக்கிறது. இத்தனை கேள்விதான் என்று விதிமுரை வகுத்தால், அனைவரும் கேள்வி கேட்க முடியாமல் போய் விடும். மேலும் முதல் மூன்று நாட்கள் தான் கேள்வி கேட்க வேன்டும் என்று விதிமுரையும் இருக்கு.


எநிறைய கேள்விகளுக்கு பதிலிட அதிக நேரம் இப்பதிவிலேயே செலவிடும்படி செய்தால்.. மன்றத்தின் மற்ற படைப்புகள் பார்க்கும் நேரம் குறைவாக நேரிடலாம்..

ஒருவர் பேட்டி தந்து முடிக்க ஒருவாரம் அவகாசம் இருப்பதால் இந்த திரியிலேயே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.


எந்த விதமன கேள்விகளை கேட்கலாம் என்பது மாதிரி சிறு விளக்கம் தந்தால் நன்று.

ம் நல்ல கேள்வி, எந்த மாதிரியான கேள்வியும் கேட்கலாம் ஆனால் எந்த மாதிரியான கேள்வியை கேட்க கூடாது என்பதுதான் முக்கியம்.
ஆன்மீகம் மதம் சம்மந்தபட்ட பாசிட்டிவ் கேள்வி இருக்கலாம் ஆனா அதுவே சர்சையான கேள்வியாக இருக்க கூடாது.
சமூகவியல், மனோதத்துவம் இப்படி இருக்கலாம் ஆனால் உயர் தொழில் நுட்பம் சம்மந்தபட்ட கேள்விகள் வேன்டாம் என்று நினைகிறேன். காரனம் அது இங்கு போரடிக்கும் விசயம். அதாவது வெறும் கருத்துகள் மட்டுமல்ல கொஞ்சம் சுவாரசியமாகவும் இருக்க வேன்டும், அதே சமயம் கேள்விகள் ஓவர் நக்கலாகவும் இருக்க கூடாது.
(ஏ.கா நீங்கள் ஏன் புகை பழக்கத்தை நிறுத்த வில்லை என்று கேட்கலாம் ஆனால் நீங்கள் தினமும் பல் துழக்குவீர்களா இப்படி எல்லாம் கேள்விகள் இருக்க கூடாது)

கேள்வி வெட்டி நக்கலாக இருக்க கூடாது ஆனால் பதில் நக்கலாக இருக்கலாம். ஒரு வாரம் டிரைல் ரன் நடத்தி பார்த்தால் தான் தெரியும் என்று நினைகிறேன்.

aren
13-05-2008, 10:18 AM
நல்ல செய்தி. புதிது புதிதாக நிறைய விஷயங்கள் மன்றத்திற்கு வருகிறது. நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

தொடங்குங்கள் வாத்தியாரே. முதலில் ராஜா அவர்களை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்தான் பலரை இந்த மாதிரியான பிரச்சனைகளில் மாட்டிவிட்டவர். அவரே தொடங்கவேண்டும் என்று நாம் முன்மொழிகிறேன்.

கண்மணி
13-05-2008, 10:39 AM
அப்ப ராஜாவுக்கு கேள்வி தயார் செய்துடலாமா?

மாட்டி விட்ட ஆரென் வாழ்க வாழ்க!

aren
13-05-2008, 10:41 AM
அப்ப ராஜாவுக்கு கேள்வி தயார் செய்துடலாமா?

மாட்டி விட்ட ஆரென் வாழ்க வாழ்க!

இந்த நல்ல வேலையைக் கூட நான் சரியாகச் செய்யவில்லையென்றால் எப்படி.

எத்தனை பேரை அவர் மாட்டிவிட்டிருக்கிறார். ஏதோ என்னால் முடிந்தது.

அக்னி
13-05-2008, 10:43 AM
புதியதொரு புரிந்துணர்வுத் திரியைத் தொடங்கியமைக்கு நன்றி வாத்தியாரே...

ஆரென் அண்ணா, கண்மணி அக்கா இருவரையும் நானும் வழிமொழிகின்றேன்.
ராஜா அண்ணாவின்மேல் கேள்விக் கணைதொடுக்க, வில்லைத் தயார் செய்யட்டுமா வாத்தியாரே...

வெற்றி
13-05-2008, 10:44 AM
நல்லா தான் இருக்கும் போல இருக்கு!!! ஆனா......சரி விடுங்க...என் மடல் பெட்டிக்கு வந்தா பார்த்துக்கலாம்....

விகடன்
13-05-2008, 11:02 AM
அட்டகாசமான ஆரம்பந்தான் வாத்தியாரே.
உங்களுடைய இந்த முயற்சி சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

lolluvathiyar
13-05-2008, 02:18 PM
தொடங்குங்கள் வாத்தியாரே. முதலில் ராஜா அவர்களை அழைக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்தான் பலரை இந்த மாதிரியான பிரச்சனைகளில் மாட்டிவிட்டவர். அவரே தொடங்கவேண்டும் என்று நாம் முன்மொழிகிறேன்.

ம் நல்ல யோசனை, முதலில் ராஜா அவர்களை தனி மடல் தந்து இங்கு அழைத்து விடுகிறேன்.


அப்ப ராஜாவுக்கு கேள்வி தயார் செய்துடலாமா?!


ராஜா அண்ணாவின்மேல் கேள்விக் கணைதொடுக்க, வில்லைத் தயார் செய்யட்டுமா வாத்தியாரே...

பொருங்கள், ராஜா அன்னாவின் சம்மதம் வரட்டும். சம்மதம் வந்தவுடன் அதற்க்கு அடுத்த நாள் தான் கேள்விகளை தொடுக்க ஆரம்பிக்க வேண்டும் அன்றிலிருந்து மூன்று நாட்கள் மட்டுமே கேள்வி கேட்க வேன்டிய காலம்.

திரு ராஜா அவர்கள் எங்கிருந்தாலும் திரிக்கு வரவும் (அல்லது இழுத்து வரவும்)

ஓவியன்
13-05-2008, 02:22 PM
திரு ராஜா அவர்கள் எங்கிருந்தாலும் திரிக்கு வரவும் (அல்லது இழுத்து வரவும்)

திரு ராஜா, திரு திருவென விழிப்பதைக் காண ஆவல்..!! :D

ராஜா
13-05-2008, 03:30 PM
வந்துவிட்டேன் தம்பிகளா..!

மாட்டிரிக்ஸ் வாழ்க... (பூனைக்கு ஒரு காலம் வந்தா ஆனைக்கு ஒரு காலம் வராமலா போயிடும்..? அப்போது மாட்டிரிக்ஸ் வசமாகக் கவனிக்கப்படுவார்..! :) )

அன்பு வாத்தியாரே.. தனிமடல் பார்க்கவும்.. நன்றி..!

க.கமலக்கண்ணன்
14-05-2008, 02:01 AM
வந்துட்டாருய்யா

வந்துட்டாருய்யா வாத்தியார்

வழக்கமான லொள்ளு இல்லாமல் வித்தியாசமாக

வர்த்தக அமைப்பில்

வந்து கலக்கப் போகிறார் போல... வாழ்த்துக்கள்...

lolluvathiyar
14-05-2008, 04:45 AM
மன்ற சகோதரர்களே, நமது ராஜா அன்னன் கொஞ்சம் பிசியாக இருப்பதால் அவர் 17 தேதி மன்ற வந்து பதிலளிப்பார்.
அதனால் ராஜாவுக்கு மன்ற நன்பர்கள் மே 16 ஆம் தேதி காலையிலிருந்து 9 மனியிலிருந்து யிலிருந்து மே 18 தேதி இரவு 9 மனிவரை தங்கள் கேள்விகளை தொடுக்கலாம்.

aren
14-05-2008, 05:59 AM
என்னை மாதிரி எப்பொழுதாவது மன்றம் வரும் நண்பர்கள் என்ன செய்வார்கள்.

என்னுடைய கேள்வியை கேட்டுவிடவா? ராஜா அவர்கள் நேரம் கிடைக்கும்பொழுது பதில் சொல்லட்டும். சரியா?

க.கமலக்கண்ணன்
14-05-2008, 06:24 AM
ஆரம்பிங்க

ஆரென்

ஆரம்பிங்க நீங்க தொடங்க

ஆவலுடன் இருப்பதை

ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்...

யவனிகா
14-05-2008, 08:38 AM
அண்ணா...வாத்தியாரண்ணா...அப்பவே நினைச்சேன்...

தோட்டத்தில கயித்துக் கட்டில்ல மல்லாக்கப் படுத்திட்டு...ஸ்ட்ரா போட்டு இளனி குடிச்சிட்டு இருக்காரே...என்ன யோசிக்கறாரோன்னு...

அப்பப்ப இளனில கலந்தீங்களே அது என்ன...விட்டமின் ட்ராப்ஸா?

சரிகண்ணா...அப்படி இப்படி இல்லாத மூளைய கசக்கி...சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரா திரி பத்த வெச்சிட்டீங்க...

என்ன...ராஜா அண்ணா...மாட்டிகிட்டீங்களா...ஒண்ணு பண்ணுங்க..கோயமுத்தூர் இளனி பார்சல் அனுப்பறோம்...குடிச்சீங்கன்னா...யோசிக்காமயே பதில் வரும்....

அண்ணனுக கலக்க தங்கச்சிக ஆரத்தி ரெடி பண்ணியாச்சு....

ராஜா
27-05-2008, 05:52 AM
வந்துட்டேன் உறவுகளே..!

கேட்டு (போட்டுத்) தாக்குங்க..!

முடிஞ்சவரை பதிலளிக்க முயற்சிக்கிறேன்..!

லேட்டாயிடுச்சு வாத்தியாரே..! கோவிச்சுக்காதீங்க..!

aren
27-05-2008, 06:29 AM
என்னுடைய கேள்வி ராஜா அவர்களுக்கு:

எப்பொழுதும் மன்றத்தது உறவுகளை சிரிக்க வைக்கும் நீங்கள் நேரில் எப்படி, நகைச்சுவை உணர்வுடன் இருப்பவரா அல்லது கொஞ்சம் கோபக்காரரா?

கண்மணி
27-05-2008, 06:43 AM
சொல்லுக்கும் லொள்ளுக்கும் மத்தியில் ஓடும் ஒரு சின்ன ஓடை ஜொள்ளு என்கிறார்களே.. லொள்ளுராஜா இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

ஓவியன்
27-05-2008, 06:44 AM
ஆஹா, ஆரம்பித்தாகி விட்டதா...??

நானும் வருகிறேன் என்னுடைய வினாவுடன்...

ஓவியன்
27-05-2008, 06:50 AM
அண்ணா, சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வீட்டினை மாற்றிக் கொண்டிருக்கின்றீர்கள், அதனால் உங்களுக்கு இந்த வினா...


பிறந்து வளர்ந்த பூர்வீகப் பிரதேசத்திலிருந்து வேறு இடத்திற்கு சந்தர்ப சூழ்நிலைகளால் இடம் மாறுகையில் உங்களது உள்ளத்து உணர்வுகள் எப்படியிருக்கின்றன...??

ராஜா
27-05-2008, 07:11 AM
ஆகா... இப்பவே கண்ணக் கட்டுதே..!

இன்னும் என்னென்ன கேக்கப் போறாய்ங்களோ தெரியலியே ராமா..!

aren
27-05-2008, 07:35 AM
R என்ற எழுத்திலிருந்து ஐஸ் உருகுவது போலிருக்கிறதே. இப்போதே சூடாகிவிட்டீர்களா?

ராஜா
27-05-2008, 07:41 AM
R என்ற எழுத்திலிருந்து ஐஸ் உருகுவது போலிருக்கிறதே. இப்போதே சூடாகிவிட்டீர்களா?

கேள்விகள் மழையா கொட்டுதுன்னு சிம்பாலிக்கா காட்டுறோமுல்ல..!

ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் வாழ்க..( நற..நற..)

[ நல்லா கேக்குறாருய்யா டீட்டெய்லு..!]

பூமகள்
27-05-2008, 07:50 AM
ராஜா அண்ணாக்கிட்ட பூ தங்கச்சியும் ஒரு கேள்வி வைச்சிருக்கேன்னா..:p:cool::rolleyes:
மறக்காம.. மறுக்காம பதில் சொல்லனும் சரிங்களா??!!:icon_rollout:

நான் மன்றம் வந்தப்ப.... ஆபத்து வெகு சிறப்பாக வழி நடத்தியவர்களில் நீங்களும் ஒருவரா இருந்தீங்க..(இருக்கீங்க... இருப்பீங்க..)!!:icon_rollout: அப்போவெல்லாம் உங்களைப் பார்த்து நான் அதிகம் பயந்த காலம்.. ஏன்னு கேக்கறீங்களா?? மன்றம் வந்த புதிதில்... உங்களை எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.. ஆபத்து திரியில் அரட்டை அடிச்சா ஓடி வந்து திட்டுவீங்களோன்னு ஒரு பயம் தான்..!! :D:D

ஆனால்..அதன் பின் உங்களது பதிவுகளில்.. உங்களின் சிறந்த அன்பும்.. பண்பும்.. நகைச்சுவை உணர்வும் அறியப்பெற்றேன்..:icon_b::icon_b:

என் கேள்வி இது தான்..

எந்தெந்த சமயங்களில் நம் கோபத்தை நாம் வெளிக்காட்டலாம்?? அப்படி கோபத்தை காட்டி.. ஒரு பிரச்சனையை எளிதில் தீர்த்த நிஜ சம்பவம் ஏதேனும் பகிர முடிந்தால் இன்னும் மகிழ்வேன்.

ஷீ-நிசி
27-05-2008, 12:59 PM
வாழ்த்துக்கள் ராஜா சார்.. இப்பவே ஏகப்பட்ட கேள்விகள் உங்க கண்ணை கட்டியிருக்கும்...

கொஞ்சம் பொறுமையா நானும் என் கேள்வியோடே வருகிறேன்.

அமரன்
27-05-2008, 01:15 PM
அட... இப்படி ஒரு திரியா.. இப்பத்தான் பாக்குறேன்.. எப்படி மிஸ்ஸாச்சு?????????? அனைவரும் அசத்துங்க..

அண்ணே... நான் பதிலை மட்டுந்தான் கேக்குறேன்.. கேள்வியெல்லாம் கேக்கலை.. நான் ரொம்ப நல்லவன்ல.

சூரியன்
27-05-2008, 04:03 PM
[COLOR=Red]எந்தெந்த சமயங்களில் நம் கோபத்தை நாம் வெளிக்காட்டலாம்?? அப்படி கோபத்தை காட்டி.. ஒரு பிரச்சனையை எளிதில் தீர்த்த நிஜ சம்பவம் ஏதேனும் பகிர முடிந்தால் இன்னும் மகிழ்வேன்.



அருமையான கேள்வி அக்கா.

சூரியன்
27-05-2008, 04:05 PM
அட... இப்படி ஒரு திரியா.. இப்பத்தான் பாக்குறேன்.. எப்படி மிஸ்ஸாச்சு?????????? அனைவரும் அசத்துங்க..

அண்ணே... நான் பதிலை மட்டுந்தான் கேக்குறேன்.. கேள்வியெல்லாம் கேக்கலை.. நான் ரொம்ப நல்லவன்ல.

அமரன் அண்ணா நான் உங்ககிட்ட கேள்வி கேட்கட்டா.:)

மலர்
27-05-2008, 04:11 PM
நான் ரொம்ப நல்லவன்ல.

நல்லவன்ல = நல்லவன் + இல்லை....

அப்பிடியா அமரு..... :rolleyes: :rolleyes:

lolluvathiyar
27-05-2008, 04:12 PM
ராஜா மீன்டும் வந்து விட்டார் இனி கலை கட்ட போகுது. மக்களே ராஜா ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப உன்மையில் நல்லவரு, என்ன கேள்வி கேட்டாலும் டக்குனு பதில் சொல்லுவாரு. சோ தயங்காம கேள்விகளை கேட்டு தாக்குங்கள்.
இன்றிலிருன்து 3 நாட்களுக்குள் கேள்விகளை கேட்டு விடுங்கள் 31.05.2008 வரை தான் கேள்வி.

அமரன்
27-05-2008, 04:14 PM
நல்லவன்ல = நல்லவன் + இல்லை....

அப்பிடியா அமரு..... :rolleyes: :rolleyes:

உனக்குக் கூட்டத் தெரியாதுங்கிறது சரியாத்தான் இருக்கு.. நல்ல அவன்ல என்றேன்.. (எனக்கு மலேஷிய தமிழர்களும் பிரன்டுதான்). எப்'பிடி மலரு?

சூரியன்
27-05-2008, 04:16 PM
நல்லவன்ல = நல்லவன் + இல்லை....

அப்பிடியா அமரு..... :rolleyes: :rolleyes:

நீங்க எப்படி அக்கா.
ரொம்போ நல்லவங்கதானே?:mini023:

sns
28-05-2008, 11:08 AM
ராஜா அண்ணா நீங்கள் சொந்தமாக தொழில் செய்து வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் தொழில் எப்படி ஆரம்பமானது மற்றும் அதன் தற்போதைய நிலைமை, எப்படி அதை வளர்த்தீர்கள் என்று கொஞ்சம் விரிவாக சொல்லவும்

SathyaThirunavukkarasu
28-05-2008, 12:32 PM
ஆகா மிக நன்றாக உள்ளதே. வந்தவுடன் கேள்விகனைகள் எல்லாம் தொடுக்கவில்லை.முதலில் வேடிக்கை பார்க்கிறேன். அப்புறம் பங்கெடுக்கிறேன்

Narathar
28-05-2008, 04:12 PM
வாத்தியாரே அவர் பதில் சொல்லும் போது அதிலிருந்து கிளைக்கேள்வி கேட்கலாமல்லவா?
ஏன்னா நம்மகு சொந்தமா கேக்க வராது............ நாராயணா!!!!! :D;):D

aren
29-05-2008, 01:52 AM
ஏன்னா நம்மகு சொந்தமா கேக்க வராது............ நாராயணா!!!!! :D;):D

அப்படின்னா வாடகைக்கு கேளுங்களேன்!!!

Narathar
29-05-2008, 06:19 AM
அப்படின்னா வாடகைக்கு கேளுங்களேன்!!!

அதைத்தான் கேட்கிறேன் அரேன்...
மற்றவர்கள் கேட்கட்டும் அதிலிருந்து நான் கேட்கிறேனென்று

ராஜா
29-05-2008, 06:36 AM
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..!

எல்லாரும் ஒரு முடிவுல இருக்கீங்க போல..!

( ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா.....)

lolluvathiyar
29-05-2008, 07:21 AM
ராஜா அவர்களே மன்றத்தில் நீங்கள் பாப்புலர் ஆனதற்க்கு காரனமே நீங்கள் ஆரம்பித்து நடத்திய சில போட்டி திரிகள் தான். (கிறுக்கு கேள்வி, ஆபத்து, சுடர்)
இப்படி போட்டிகள் நடத்துத*ல் என்பது உங்களுக்கு எப்படி தோன்றியது, பொதுவாக நீங்கள் இந்த மாதிரி போட்டிகள் நடத்தும் குணம் உடையவரா அல்லது தமிழ்மன்றத்து சொந்தங்களில் திறனை கண்டு இப்படி தோன்றியதா?

ராஜா
01-06-2008, 01:29 PM
எப்பொழுதும் மன்றத்தது உறவுகளை சிரிக்க வைக்கும் நீங்கள் நேரில் எப்படி, நகைச்சுவை உணர்வுடன் இருப்பவரா அல்லது கொஞ்சம் கோபக்காரரா?..?

நன்றி மாட்டிரிக்ஸ்..ஃப்ளாஷ்பேக் போவோமா..?

25 வருஷத்துக்கு முந்தி....

நமக்கு முறைப்பொண்ணுங்க கொஞ்சம் ஜாஸ்தி.. ஒரு பத்து, பன்னிரண்டு பேர் இருப்பாங்க.. அதே போல பங்காளிப் பயலுகளும் அதிகம்தான்.. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றவனாக இருந்தான். ஒருத்தன் படிப்புல அசத்துவான்.. ஒருத்தன் அழகிலே அசத்துவான்.. ஒருத்தன் அடக்கமான பிள்ளையா இருந்து பேர் எடுப்பான். வேறொருத்தன் எல்லோருக்கும் உபகாரம் செஞ்சு நெஞ்சை நக்குவான்.

நான் ஒருத்தந்தான் இதிலே பூட்ட கேஸ்.. பேரு எப்பவோ ரிப்பேரு.. பர்சனாலிட்டியப் பத்தி கேட்டீங்கன்னா... ரொம்ப புள்ளைங்க அழுது புடிவாதம் பிடிக்காம இருக்க தாய்க்குலம் என்னைத்தான் உபயோகிச்சுக்கும்.

இந்த முறைப்பெண்ணை எல்லாம் ஃப்ரெண்ட் பிடிக்க நான் கண்டுபிடிச்ச ஐடியாதான் நகைச்சுவை. கலகலப்பா.. கலாட்டாவா பேசற ஆசாமியை எல்லோருக்கும் பிடிக்கும் இல்லீங்களா..?
அதனாலே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தேன். பலனளிக்கத் தொடங்குச்சு. என்னச் சுத்தி முறைப்பெண் கூட்டம் கூடுறதைப் பார்த்து பங்காளிப் பசங்களுக்கு எரிச்சல் அதிகமாகி டென்ஷன் ஆவானுங்க. அதைப் பார்த்ததும் என் க்ரைம் ரேட் இன்னும் அதிகரிக்கும்..

இப்படி ஆரம்பமானதுதான் என் நகைச்சுவை உணர்வு. அப்புறம் என் தொழில் அபிவிருத்திக்கும் அது ரொம்ப உதவுச்சு. இப்போ உங்களைப் போன்ற சிறந்த நண்பர்களைத் தேடித் தந்ததும் அதுவேதான்.

உங்க கேள்விக்கு வரேன்...

நான் எந்தப் பிரச்சினையையும்.. அல்லது எந்த விஷயத்தையும் நகைச்சுவை உணர்வுடன் அணுகக்கூடிய அளவுக்கு இப்போது மாறிவிட்டேன்.. அது சில சமயத்தில் அடுத்தவரை எரிச்சலூட்டினாலும் கூட..!

( உதாரணமாக.. கதவிடுக்கில் விரலை நசுக்கிக்கொண்ட என் பையனைப் பார்த்துக் கேட்பேன்...

"அப்பனுக்கு எதிரேயே மூக்குப்பொடி போடுகிறாயா..?" )

ராஜா
01-06-2008, 01:52 PM
சொல்லுக்கும் லொள்ளுக்கும் மத்தியில் ஓடும் ஒரு சின்ன ஓடை ஜொள்ளு என்கிறார்களே.. லொள்ளுராஜா இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?

அப்படி யாரும் சொன்னதா என் காதுக்கு இன்னும் வரலை..!

இனிமே யாராவது அப்படி என்கிட்டே சொன்னால் அவங்ககிட்டவே என்னா ஏதுன்னு வெவரம் கேட்டுக்குவேன்.. அப்புறம் உங்களுக்குச் சொல்றேன் [கலகக்] கண்மணி..!

ராஜா
01-06-2008, 02:02 PM
பிறந்து வளர்ந்த பூர்வீகப் பிரதேசத்திலிருந்து வேறு இடத்திற்கு சந்தர்ப சூழ்நிலைகளால் இடம் மாறுகையில் உங்களது உள்ளத்து உணர்வுகள் எப்படியிருக்கின்றன...??


புகுந்த வீட்டுக்குப் போகும் புதுப்பெண்ணின் மனநிலைதான் தம்பி..!

போற இடத்தில மனுஷங்க எப்படி இருக்காங்களோ..?

எவ்வித அசம்பாவிதமும் இல்லாம சந்தோஷமா வாழ்க்கை அமையணுமே..?

சொந்த ஊரில் எவ்வளவு மதிப்பு மரியாதை இருந்தாலும் புலம்பெயரும் இடத்தில் அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம இருந்து நல்ல பெயர் வாங்கணுமே..?

எந்த வடிவத்திலும் இடைஞ்சல் வராமல் இறைவன் அருள் புரியணுமே..?

புலிவேட்டைக்குப் போகும்போது குறுக்கே ஓடும் முயல்களின் பேரில் கவனம் சிதறாமல் இருக்கணுமே..?

இதுதான் எனது இப்போதைய சிந்தனை.. உள்ளத்து உணர்வுகளைக் கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய தம்பிக்கு ஒரு சபாஷ்..!

ராஜா
01-06-2008, 02:09 PM
எந்தெந்த சமயங்களில் நம் கோபத்தை நாம் வெளிக்காட்டலாம்?? அப்படி கோபத்தை காட்டி.. ஒரு பிரச்சனையை எளிதில் தீர்த்த நிஜ சம்பவம் ஏதேனும் பகிர முடிந்தால் இன்னும் மகிழ்வேன்.


அடுத்தவர் நம்மை கிள்ளுக்கீரையாக நினைத்து இழிவுபடுத்தினால் நம் ரவுத்திரத்தைக் காட்டவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

இதற்கு உதாரணமாக ஒரு பயண அனுபவத்தை, "எமக்குத் தொழில் லொள்ளு" என்ற திரியில் பதிவு செய்திருக்கிறேன்.. படித்துப் பாருங்கள்..!

ராஜா
01-06-2008, 02:47 PM
ராஜா அண்ணா நீங்கள் சொந்தமாக தொழில் செய்து வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் தொழில் எப்படி ஆரம்பமானது மற்றும் அதன் தற்போதைய நிலைமை, எப்படி அதை வளர்த்தீர்கள் என்று கொஞ்சம் விரிவாக சொல்லவும்

1. சொல்லாலும், செயலாலும், உள்ளத்தாலும் மேன்மையான தரத்தையும் நேர்மையையும் கடைபிடிக்கிறேன்.

2, ஊழியர்களை அடிமை போல வேலை வாங்குகிறேன்.. அரசனைப் போல சம்பளம் கொடுக்கிறேன்.

3. ஊழியர் குடும்பங்களை உறவாக எண்ணுகிறேன். வாடிக்கையாளர்களை தெய்வமாக மதிக்கிறேன்.

4. நேரந்தவறாமை, விடாமுயற்சி, தொழிலில் உள்ள சவால்கள், அவ்வப்போதைய மாறுதல்கள் [ட்ரெண்ட்] ஆகியவற்றில் கடுமையான கவனம் செலுத்துகிறேன்.

5. இடிப்பாரை ஏற்கிறேன்.. எதிர்வலி கணிக்கிறேன்.

6. இவை எல்லாவற்றையும்விட இறை அருளைத் தினமும் யாசிக்கிறேன்.

என்னுடைய தொழிலும் இப்படித்தான் வளர்கிறது.

ராஜா
01-06-2008, 03:02 PM
ராஜா அவர்களே மன்றத்தில் நீங்கள் பாப்புலர் ஆனதற்கு காரனமே நீங்கள் ஆரம்பித்து நடத்திய சில போட்டி திரிகள் தான். (கிறுக்கு கேள்வி, ஆபத்து, சுடர்)
இப்படி போட்டிகள் நடத்துதல் என்பது உங்களுக்கு எப்படி தோன்றியது, ??

தமிழ் தட்டச்சு கற்பதற்குமுன் ஆங்கிலக் கருத்துக் களங்களில் பங்கெடுத்து வந்ததுண்டு. அப்போது எனக்கு நிறைய நண்பர்கள் அறிமுகம் ஆயினர். அவற்றில் ஒருவர் க்ரிஸ் பி. [ டென்மார்க்] என்பார் ஆவார். ஒரு பெரும் களத்தின் வழிநடத்துனர். ( சராசரியாக 500 உறுப்பினர்கள் ஆன்லைனில் இருக்கும் பரபரப்பான களம் அது.).

ஒருநாள் அவரிடம் அரட்டையில் இருந்தபோது கேட்டேன்..

நான் : க்ரிஸ்.. வெற்றிகரமான பதிவாளனாவது எப்படி..?

க்ரிஸ் பி. : திரி துவக்கும்போது மற்றவர்கள் திறமையை வெளிக்கொண்டு வா.. பின்னுட்டம் இடும்போது உன் திறமையை வெளிப்படுத்து.. நீயும் வெற்றிகரமான பதிவாளனாக ஆகலாம்..!

அந்த டிப்ஸை தமிழுக்கு ஏற்றவாறு வடிவமைத்து செயல்படுத்தினேன்.. அடுத்து நடந்தவை எல்லாம் நீங்கள் அறிந்ததே..!

பூமகள்
01-06-2008, 05:28 PM
ஒவ்வொரு பதிலும்.... கூடுதல்.. குறைவு இன்றி அசத்தல் ரகம் ராஜா அண்ணா...!!

ரசித்தேன்.. திளைத்தேன்... மாபெரும் மாணிக்கம் உங்களின் உள்ளிருப்பது கண்டு வெகுவாக மகிழ்ந்தேன்...!!

உங்களின் பதில்களைச் சுவைத்ததில்.. ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது..

ராஜா அண்ணா....... ராஜாவே தான்..!!

"இந்த ராஜா கையை வைத்தால் எதுவுமே
ராங்காகவும் போகாது...!!"

ராஜா அண்ணாவின் மனம்...
பிறந்த வீடு தாண்டி புகுந்த வீடு போகும் மாப்பிள்ளை..??!!
தொழிலில் முன்னேறிய காரணிகள்...
மேட்ரிக்ஸ் ஃப்ளேஸ்பேக்..
நகைச்சுவை கிங்கானதன் ரகசியம்...
இறுதியாக.. மக்கள் மனமறியச்.. சூத்திரம்..

எல்லாம் அறிந்தோம்... மேலும் தெளிந்தோம்..!!

முதல் நபரே சரியான நபராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளப்பெரிய மகிழ்ச்சி..!!

பாராட்டுகள் ராஜா அண்ணா...!!

ராஜா
01-06-2008, 05:37 PM
தங்கைக்கு நன்றி சொல்லி அன்னியமாக்க விரும்பவில்லை..

உன் பாராட்டு இந்த அண்ணனை மகிழ்விக்கிறது பூ..

பூமகள்
01-06-2008, 05:54 PM
:icon_03::icon_03:

மதி
02-06-2008, 02:53 AM
அசத்தலான பதில்கள் ராஜாண்ணா...
உங்க அறிவும் அனுபவமும் பதில்களில் பளிச்சிடுகிறது.

கண்மணி
02-06-2008, 05:26 AM
சொல்லுக்கும் லொள்ளுக்கும் மத்தியில் ஓடும் ஒரு சின்ன ஓடை ஜொள்ளு என்கிறார்களே.. லொள்ளுராஜா இதைப்பற்றி என்ன நினைக்கிறீங்க?




அப்படி யாரும் சொன்னதா என் காதுக்கு இன்னும் வரலை..!

இனிமே யாராவது அப்படி என்கிட்டே சொன்னால் அவங்ககிட்டவே என்னா ஏதுன்னு வெவரம் கேட்டுக்குவேன்.. அப்புறம் உங்களுக்குச் சொல்றேன் [கலகக்] கண்மணி..!


மாட்டிரிக்ஸ்..ஃப்ளாஷ்பேக் போவோமா..?

25 வருஷத்துக்கு முந்தி....

நமக்கு முறைப்பொண்ணுங்க கொஞ்சம் ஜாஸ்தி.. ஒரு பத்து, பன்னிரண்டு பேர் இருப்பாங்க.. .

இந்த முறைப்பெண்ணை எல்லாம் ஃப்ரெண்ட் பிடிக்க நான் கண்டுபிடிச்ச ஐடியாதான் நகைச்சுவை. கலகலப்பா.. கலாட்டாவா பேசற ஆசாமியை எல்லோருக்கும் பிடிக்கும் இல்லீங்களா..?
அதனாலே அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தேன். பலனளிக்கத் தொடங்குச்சு. என்னச் சுத்தி முறைப்பெண் கூட்டம் கூடுறதைப் பார்த்து பங்காளிப் பசங்களுக்கு எரிச்சல் அதிகமாகி டென்ஷன் ஆவானுங்க. அதைப் பார்த்ததும் என் க்ரைம் ரேட் இன்னும் அதிகரிக்கும்..



முதல் கேள்விக்கான பதிலிலேயே என் கேள்விக்கு பதில் கிடைச்சிருச்சி ராஜா அண்ணா. :lachen001::lachen001::lachen001: நன்றி. :D:D:D

ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் ரொம்ப ஜாஸ்தி (கலக) (கலக்க) (கலகலக்க) ராஜா அண்ணா!!!

நேசம்
02-06-2008, 09:26 AM
அசத்தலான பதிலகள் தந்ததுக்கு ராஜாண்ணாவுக்கு வாழ்த்துகளும்,அருமையான திரி ஆரம்பித்தற்கு நன்றியும்

lolluvathiyar
02-06-2008, 02:15 PM
அத்தனை கேள்விகளுக்கும் அசத்தலாக பதில் அடித்து விட்டார் நம்ம ராஜா சார், அதிலிருந்து கிளை கேள்வி கேட்கலாம் என்பதை மன்ற நேயர்களுக்கு நினைவு படுத்தி விடுகிறேன் (ஏதோ என்னால முடிந்தது)
கிளை கேள்வி கேட்க இன்றே கடைசி நாள். நாளைக்குள் ராஜா அவர்கள் பதிலளித்து அடுத்த பேட்டி கொடுப்பவரை நியமிக்க வேன்டும்.
அதுகுள்ள ஒரு கேள்வி கேட்டுபுட்டு ஓடி போயிடறேன்.


இந்த முறைப்பெண்ணை எல்லாம் ஃப்ரெண்ட் பிடிக்க நான் கண்டுபிடிச்ச ஐடியாதான் நகைச்சுவை.

ராஜா அன்னா
முரை பென்களை வெறும் பிரன்டு மட்டும்தான் பிடிச்சீங்களா?
அன்னியை இந்த பட்டிய*லிருந்து தான் தேர்ந்தெடுத்தீர்களா?
இன்னும் உங்கள் முரைபென்களை பிரன்டு பிடித்து கொண்டு தான் இருக்கிறீர்களா?

(அன்னீ நல்லா காதை தீட்டி வையுக்கோ ராஜா அன்னா பதில் சொல்ல போறாரு)
(போதுங்களா ராஜா அன்னா)

ராஜா
02-06-2008, 04:46 PM
வாத்தியார் என்பதைவிட "வத்தி"யார் என்று பேர் வச்சிருக்கலாம்.. :) நல்லா வத்தி வக்கிறீங்கப்பு..!

அண்ணியாரும் என் முறைப்பெண்தான்.. ஆனால் நான் விரும்பியது வேறொருவரை.. என் அப்பாவின் பிடிவாதத்தால் அண்ணியாரை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் இந்த 25 ஆண்டு கால மணவாழ்க்கையில் என் தந்தையார் எவ்வளவு பெரிய நன்மையை எனக்கு செய்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

காலமும், களமும் அனுமதிக்குமானால் அந்த நெடிய சம்பவக் கோவையை என்னால் இயன்றவரை தர முயற்சிக்கிறேன்.. சுய தம்பட்டத்துக்காக அல்ல.. பெற்றோர் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்று எண்ணும் எவரேனும் இங்கிருந்தால் அவர்கள் கருத்தை எள்ளளவேனும் மாற்றிக் கொள்ளமாட்டார்களா என்ற நப்பாசையில்...

lolluvathiyar
04-06-2008, 08:46 AM
என் அப்பாவின் பிடிவாதத்தால் அண்ணியாரை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்துகொண்டேன். பின்னர் இந்த 25 ஆண்டு கால மணவாழ்க்கையில் என் தந்தையார் எவ்வளவு பெரிய நன்மையை எனக்கு செய்திருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

உலகில் எந்த ஆனும் எந்த பென்னுடனும் வாழ முடியும். கனவன் மனைவியாக வாழ்வதற்க்கு அடிபடை தேவை ஆண் பென் என்ற ஒரு வித்தியாசம் மட்டும் இருந்தால் போதும். மிச்ச எதிர்பார்புகள் எல்லாம் கிடைத்தால் சொர்கம் கிடைக்காவிட்டால் நரகம். எதிர்பார்புகளை குரைத்து கொன்டால் அனைத்துமே சொர்கம். இதை நன்கு உனர்ந்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்.
உனர்த்தியது உங்கள் பதில்.


ராஜா அன்னா அடுத்த பேட்டி கொடுப்பவரை அழைத்து விடலாமா? முதல் பேட்டியாளரான நீங்களே பரிந்துரை செய்யுங்கள்.

ராஜா
04-06-2008, 11:08 AM
அன்பிற்குரிய ஆரென் அவர்களை அழைக்கலாம் என்று விரும்புகிறேன்

தாமரை
04-06-2008, 11:43 AM
ஆரென் - பணிப் பளுவில் இப்போ திக்கு முக்காடிக்கொண்டு இருப்பதாய் அல்லவா சொல்லி இருக்கிறார்.. ஒரு பதிவில் இறைவா எனக்கு நேரம் கொடு எனப் பிரார்த்தனைக் கூடச் செய்திருக்கிறாரே!!

நானும் இப்போது சேர்ந்து பிரார்த்திக்கிறேன்,

ஷீ-நிசி
04-06-2008, 02:33 PM
ராஜா சாரின் பதில்களுக்கு என்றைக்குமே நான் ரசிகன் தான்...

சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும், படிப்பவரை ரசிக்க வைக்கும்படியாகவும் எழுதுவதில் திறமையானவர்..

கான்ஃபரன்ஸ் முடிந்தது என்று நினைக்கிறேன்.. பரவாயில்லை ராஜா சார். என் தனிமடலுக்காகிலும் பதிலிடுங்கள், விதிமுறைப்படி இங்கு பதிலளிக்க இயலாது என்றால்.....

இதோ என் கேள்வி...


எல்லோருக்கேமே பிடிக்கும் அளவிற்கு ஒருவனால்/ஒருத்தியால் நடந்துக்கொள்ள முடியுமா? அப்படி யாரையேனும் உங்கள் வாழ்வில் கண்டதுண்டா?! அப்படி எல்லாருக்குமே அவனை/அவளை பிடிக்கிறது என்றால், அவன்/அவள் மற்றவர்களுக்காக தன்னை மாற்றிகொள்கிறானா/ளா?! அப்படி மாற்றிகொள்வது நல்லதா?! அல்லது தன் இயல்பை மாற்றிக்கொள்ளாதிருப்பது நல்லதா?!

Narathar
04-06-2008, 06:09 PM
உங்கள் ஆரம்ப பதிலிலிருந்து ஒரு துணைக்கேள்வியை கேட்கலாமென்றால் நம்ம வாத்தியார் முந்தியடித்திருக்கின்ரார்....

உண்மையில் அருமையான பதில்கள். திரியை ஆரம்பிக்க பொறுத்தமானவரைத்தான் தேர்வு செய்திருக்கின்றார்கள்.

வாழ்த்துக்கள்

aren
05-06-2008, 01:48 AM
அன்பிற்குரிய ஆரென் அவர்களை அழைக்கலாம் என்று விரும்புகிறேன்

இப்பொழுது மட்டும் என்னை மன்னித்து இதை அடுத்தவருக்கு கொடுக்கவும். கூடிய விரைவில் வந்து அடுத்தமுறை நானே எடுத்துக்கொள்கிறேன்.

நாரதரை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்.

lolluvathiyar
05-06-2008, 05:19 AM
கான்ஃபரன்ஸ் முடிந்தது என்று நினைக்கிறேன்.. பரவாயில்லை ராஜா சார். என் தனிமடலுக்காகிலும் பதிலிடுங்கள், விதிமுறைப்படி இங்கு பதிலளிக்க இயலாது என்றால்.....

தாமதமாக கேட்க பட்டாலும் முதல் முரை என்பதால் ராஜா அன்னா இவர் கேள்விக்கு நேரம் இருந்தால் பதில் தந்து விடுங்கள்


இப்பொழுது மட்டும் என்னை மன்னித்து இதை அடுத்தவருக்கு கொடுக்கவும்.

ஆரேன் பிசியாக இருப்பதால் வேறு ஒருவரை நியமியுங்கள் ராஜா அன்னா இல்லாவிட்டால் திரியின் சூட இறங்கி விடும்

ராஜா
05-06-2008, 07:11 AM
எல்லோருக்கேமே பிடிக்கும் அளவிற்கு ஒருவனால்/ஒருத்தியால் நடந்துக்கொள்ள முடியுமா? அப்படி யாரையேனும் உங்கள் வாழ்வில் கண்டதுண்டா?! அப்படி எல்லாருக்குமே அவனை/அவளை பிடிக்கிறது என்றால், அவன்/அவள் மற்றவர்களுக்காக தன்னை மாற்றிகொள்கிறானா/ளா?! அப்படி மாற்றிகொள்வது நல்லதா?! அல்லது தன் இயல்பை மாற்றிக்கொள்ளாதிருப்பது நல்லதா?!

எல்லோருக்குமே பிடிக்கும் அளவுக்கு யாராலுமே நடந்துகொள்ள இயலாது.. உதாரணம் காந்தியார்.

எவருக்குமே பிடிக்காத அளவுக்கும்கூட யாரும் இருக்கமாட்டார்கள்.. உதாரணம் துரியோதனன்.

ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும்படியாக வெகு சிலரால் நடந்துகொள்ளமுடிகிறது.. யோசித்து பார்த்தால் பல காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வளர்ப்பு முறை, ,
அன்பும் இளக்கமும் கொண்ட உள்ளம், ,
எதிர்கால இலட்சியம் ஒன்றை அடைவதற்கான நடிப்பு, ,
திரைமறைவில் செய்யப்படும் சட்டவிரோதமான செயல்களை மறைக்கும் முகமூடித்தன்மை, ,
தான் இவ்வாறு இருந்தாலன்றி பிழைப்பு நடத்த இயலாது என்ற முடிவுக்கு வருதல் என்று நிறையச் சொல்லலாம்.

ஒருவருக்காகவோ, அல்லது பலருக்காகவோ தன் இயல்பை மாற்றிக்கொள்வதற்கு நான் என்றுமே எதிரிதான்.. அது ஒருவகையான பாசாங்குத்தனம் என்பது என் எண்ணம்.

ராஜா
05-06-2008, 07:15 AM
தாமதமாக கேட்க பட்டாலும் முதல் முரை என்பதால் ராஜா அன்னா இவர் கேள்விக்கு நேரம் இருந்தால் பதில் தந்து விடுங்கள்

அவ்வாறே செய்துவிட்டேன்..


ஆரேன் பிசியாக இருப்பதால் வேறு ஒருவரை நியமியுங்கள் ராஜா அன்னா இல்லாவிட்டால் திரியின் சூட இறங்கி விடும்

இளைய கவிஞர் ஷீ-நிசியாரை அழைப்போமா தம்பி..??

lolluvathiyar
09-06-2008, 11:01 AM
சரியான யோசனை ஷீ நிசியை அழைக்கலாமே,
ஷீ நிசி எங்கிருந்தாலும் வரவும்
(சீக்க்ரம் இங்க தள்ளீட்டு வாங்க நன்பர்களே)

சூரியன்
09-06-2008, 01:14 PM
ராஜா அண்ணாவின் ஒவ்வொரு பதிலும் அனைவரும் படிக்க வேண்டியவை அவ்வளவு அர்த்தங்கள் அதில் உள்ளது.

ஷீ-நிசி
09-06-2008, 03:39 PM
வணக்கம் நண்பர்களே!

என்னை அழைத்தமைக்கு நன்றி ராஜா சார் அவர்களே.... மற்றும் அன்பு லொல்லுவாத்தி அவர்களே! மற்றும் இன்னபிற கேள்வி கேட்க விரும்பும் என் உடன் பிறவா சகோதரர்களே/சகோதரிகளே, தோழர்களே. தோழிகளே உங்கள் அனைவருக்கும் என் மாலை வணக்கங்களை தெரிவித்துகொள்கிறேன்... அடேங்கப்பா... இப்பவே மூச்சு வாங்குதே...

தம்பி சோடா ரெடியா?!

கேள்விகளை ரெடி பன்னுங்க.... நானும் ரெடியாகிக்கறேன்..

அனல் பறக்கும் கேள்விகளோ! காதல் ததும்பும் கேள்விகளோ, எடக்கு மடக்கான கேள்விகளோ! சும்மா அம்புல விட்டா வில்லா வரட்டும் உங்க கேள்விகள்.... :)

ராஜா
09-06-2008, 04:24 PM
எங்கள் அழைப்பை தன்னம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ஷீ -க்கு நன்றி..!

இதோ எனது கேள்வி..

உங்கள் கவித்திறத்தையும், உங்களுக்குள் ஊடாடும் நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தவே இக்கேள்வி..

ஒரு அரசியல் தலைவர் மரணமடைந்துவிட்டார்.. அவருக்கான இரங்கல் கூட்டம். அந்நாள்வரை அவரை வசைபாடிய எதிர்க்கட்சித் தலைவர்களும், உள்ளுக்குள்ளே இருந்து குடைச்சல் கொடுத்த எதிர் கோஷ்டியினரும் இப்போது வானளாவ வாழ்த்தி வளைத்து புளுகுகிறார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் (மரணமடைந்த) தலைவரின் ஆன்மா பாடுவதாக ஒரு கவிதை தாருங்கள் ஷீ..!

ராஜா
09-06-2008, 04:27 PM
வணக்கம் நண்பர்களே!!

கேள்விகளை ரெடி பன்னுங்க.... நானும் ரெடியாகிக்கறேன்..

அனல் பறக்கும் கேள்விகளோ! காதல் ததும்பும் கேள்விகளோ, எடக்கு மடக்கான கேள்விகளோ! சும்மா அம்புல விட்டா வில்லா வரட்டும் உங்க கேள்விகள்.... :)

ரிலாக்ஸ் ஷீ..!

ஷீ-நிசி
09-06-2008, 04:27 PM
ஆகா! ஆரம்பமே கவிதையோடா?!...

யோசிக்க வைச்சிட்டீங்களே ராஜா சார்... சரி எடுத்து விடறேன்..... :)

ஷீ-நிசி
09-06-2008, 04:30 PM
ரிலாக்ஸ் ஷீ..!

:) அம்புல விட்ட வில்லா?! ஹா.. ஹா.....

பரவாயில்ல... நீங்க எல்லாம் கவனமாத்தான் இருக்கீங்க.. உங்கள எல்லாம் டெஸ்ட் பன்னேன்.... :icon_ush:

ஷீ-நிசி
09-06-2008, 05:37 PM
எங்கள் அழைப்பை தன்னம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ஷீ -க்கு நன்றி..!

இதோ எனது கேள்வி..

உங்கள் கவித்திறத்தையும், உங்களுக்குள் ஊடாடும் நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்தவே இக்கேள்வி..

ஒரு அரசியல் தலைவர் மரணமடைந்துவிட்டார்.. அவருக்கான இரங்கல் கூட்டம். அந்நாள்வரை அவரை வசைபாடிய எதிர்க்கட்சித் தலைவர்களும், உள்ளுக்குள்ளே இருந்து குடைச்சல் கொடுத்த எதிர் கோஷ்டியினரும் இப்போது வானளாவ வாழ்த்தி வளைத்து புளுகுகிறார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் (மரணமடைந்த) தலைவரின் ஆன்மா பாடுவதாக ஒரு கவிதை தாருங்கள் ஷீ..!


தலைவர்:

மேடையிலே இகழ்ந்தவனும் - நான்
வாடையிலே மகிழ்ந்தவனும்
இன்று பாடையிலே ஏறினதும்,

புகழுறானுங்க -நல்லா
புழுகுறானுங்க....

தொண்டர்கள்:
உத்தம.. புத்திரரு,
ஒழுக்கதிலே இரத்தினரு...
சித்தம் கலங்கவைக்கும்
பேச்சிலதான் சிறந்தவரு

தலைவர்:
புகழுறானுங்க -நல்லா
புழுகுறானுங்க....

தொண்டர்கள்:
கழக மூத்தவரு..
கட்சியத்தான் வளர்த்தவரு
ரெண்டு கண்ண மூடிபுட்டா....
இருண்டுபோகும் இந்தநாடு...

தலைவர்:
புகழுறானுங்க -நல்லா
புழுகுறானுங்க....


தொண்டர்கள்:
காந்திக்கு பக்கத்துல
கண்ணகிக்கு கிட்டத்துல
அண்ணனுக்கும் சிலை வைப்போம்...
எதிர்க்க வந்தா தலை எடுப்போம்...

தலைவர்:
புகழுறானுங்க -நல்லா
புழுகுறானுங்க....

ராஜா
09-06-2008, 06:06 PM
நல்ல துவக்கம்..ஷீ..!!

கவிதை அருமைங்கோ - நம்ம
கவிஞர் திறமைங்கோ

இன்று குடத்திலிட்ட விளக்காய் மிளிரும் உங்கள் கவித்திறன் எதிர்காலத்தில்
குன்றிலிட்ட விளக்காய் ஒளிர அளவற்ற பேரருளாளன் தயை புரிவானாக..!

மனோஜ்
09-06-2008, 07:27 PM
ராஜா அண்ணா தங்கலின் பதில்களால் என் மனதில் நீங்கள் உயர்வான இடத்தை பிடித்துவிட்டிர்கள் முத்துகள் கொட்டிய பதிவுகளுக்கு நன்றி அண்ணா

ஷீ தங்கல் கவிதையில் தங்களுக்கு மிகபிடித்த கவிதை தாருங்கள்

lolluvathiyar
10-06-2008, 07:05 AM
ஆகா அசத்தலான ஆரம்பம் அதுவும் ராஜாவின் கேள்வியில் கவிதியாலே ஆரம்பம்.
ஷி நிசி யிடம் மன்ற உருப்பினர்கள் வரும் வியாழன் (12.06.2008) இரவு வரை புதிய கேள்விகள் கேட்கலாம்? அத்தனை தன் கவிதையாலே பதில் சொல்லுவாரு நம்ம ஷி நிசி

என்னுடைய கேள்வி :
சுதந்திர போராட்ட காலத்தில் கவிதையாக எழுதபட்ட வந்தேமாதிரம் மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பாரதியார் கவிதைகள் தமிழர்களிடையே ஒரு போராட்ட உனர்வை ஏற்படுத்தியது.

இன்றைய மெட்டீரியல், போட்டி மற்றும் இன்பர்மேசன் யுகத்தில் கவிதையால் மக்களிடம் விழிபுனர்வை ஏற்படுத்த முடியுமா? அந்த நம்பிக்கை உங்களிடம் உள்ளதா?

kavitha
10-06-2008, 09:06 AM
எல்லோரும் பங்கேற்க இயலும் இப்பதிவைத்திறந்த லொள்ளுவாத்தியார் அவர்களுக்கு நன்றி.
அருமையான கேள்விக்கும் வாழ்த்துகள்.

ஷீ-நிசி அவர்களுக்கு என்னுடைய கேள்வி:-

உங்களுடைய சமீபத்திய பதிவில் தாங்கள் சினிமாவில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தீர்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள். இது வரை வந்த படங்களில் எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பொருத்தமானது என்று நினைக்கிறீர்கள்? யாரைப்போல் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்
(விருப்பமிருந்தால் இந்தக்கேள்விக்கொரு மரபுக்கவிதை எழுத அழைக்கிறேன்)

ஷீ-நிசி
10-06-2008, 02:49 PM
ராஜா அண்ணா தங்கலின் பதில்களால் என் மனதில் நீங்கள் உயர்வான இடத்தை பிடித்துவிட்டிர்கள் முத்துகள் கொட்டிய பதிவுகளுக்கு நன்றி அண்ணா

ஷீ தங்கல் கவிதையில் தங்களுக்கு மிகபிடித்த கவிதை தாருங்கள்

நன்றி மனோஜ்!

என் கவிதையில் எனக்கு எல்லாமே பிடித்தமானதுதான். மிகவும் பிடித்தது என்றால் அது இந்தக் "காதல் காலம்" என்ற கவிதைதான்.

காதல் காலம்....

மெல்லிய தூறல்
விழுந்துக்கொண்டிருக்கும்
மழைக் காலம்!
மாலை காலம்!!

வானம் வடிகட்டி
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது
சுத்தமான மழைத்துளிகளை!

அலைபேசி அலறியது...

'இதோ வந்துவிட்டேன்'..
என் நிலா செய்தியனுப்பினாள்!

எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!

வழக்கமாக சந்திக்கும் பூங்காதான்!

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து
தலைதுவட்டாமலிருந்தன!

சுற்றிக் கொண்டே
வந்தவனின் கண்கள்
ஓரிடத்தில் நின்றன.

தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!

கைப்பை குடையாய்
மாறியிருந்தது..

அவள் கூந்தலை தொடமுடியாத
மழைத்துளிகளெல்லாம்,
கைப்பையோடு யுத்தமிட்டு
அவள் கைவழியே வழிந்தன!

கைகள் கூட அழுகின்றதே!
அவள் நனைவதைக் கண்டு!

பூமியில் தேங்கியிருந்த
வான் துளிகளை
அவள் பாதங்கள் தொட்டன,

அக்கணத்தில், அக்கர்வத்தில்
இருபக்கமும் தெறித்துநினறு
அவைகள் அவளை
வரவேற்றன...

ஒவ்வொரு அடியிலும்
தண்ணீர் பூக்கள் தெறித்தன...

அருகே வந்தவள்
ஸாரிடா என்றாள்!

மரத்தினிலையால்,
மழைத்துளிகள் தொடாத
இடத்தில் அமர்ந்தோம்!

மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

பேசிக்கொண்டிருந்ததில்
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!

நேரமாகியது என்றாள்...
ஈரமான தலையை
துவட்டிக்கொண்டே!

பூங்காவை விட்டு
வெளியேறினோம்!

சற்றுமுன் தலைதுவட்டிக்
கொண்டிருந்த பூக்களில் பல,
காம்பின் வழியே
அழுதுகொண்டிருந்தது!

காவல்காரன்
வினோதமாய் பார்த்தான்...

பூங்காவின் பூவை
ஏன் எடுத்துச்செல்கிறாய்
என்று பார்ப்பதுபோல்!

என் இருசக்கர வாகனத்தின்
பின்னிருக்கை, என்னிருக்கையை
ஏளனமாய் பார்த்தது..

தோளை தொட்டபடி
ஏறியமர்ந்தாள் வாகனத்தில்...

பூங்காவிற்கு கையசைத்து
விடைபெற்றோம்!

ஒரு மெல்லிய காற்று
உண்டானது!

பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...
------------

ஷீ-நிசி
10-06-2008, 02:53 PM
நல்ல துவக்கம்..ஷீ..!!

கவிதை அருமைங்கோ - நம்ம
கவிஞர் திறமைங்கோ

இன்று குடத்திலிட்ட விளக்காய் மிளிரும் உங்கள் கவித்திறன் எதிர்காலத்தில்
குன்றிலிட்ட விளக்காய் ஒளிர அளவற்ற பேரருளாளன் தயை புரிவானாக..!

உங்கள் ஆசீர்வாதங்கள் என்னையும் நிச்சயம் ஒரு நாள் உயர்த்தும்!
நன்றி ராஜா சார்!

ஷீ-நிசி
10-06-2008, 03:12 PM
ஆகா அசத்தலான ஆரம்பம் அதுவும் ராஜாவின் கேள்வியில் கவிதியாலே ஆரம்பம்.
ஷி நிசி யிடம் மன்ற உருப்பினர்கள் வரும் வியாழன் (12.06.2008) இரவு வரை புதிய கேள்விகள் கேட்கலாம்? அத்தனை தன் கவிதையாலே பதில் சொல்லுவாரு நம்ம ஷி நிசி

என்னுடைய கேள்வி :
சுதந்திர போராட்ட காலத்தில் கவிதையாக எழுதபட்ட வந்தேமாதிரம் மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, பாரதியார் கவிதைகள் தமிழர்களிடையே ஒரு போராட்ட உனர்வை ஏற்படுத்தியது.

இன்றைய மெட்டீரியல், போட்டி மற்றும் இன்பர்மேசன் யுகத்தில் கவிதையால் மக்களிடம் விழிபுனர்வை ஏற்படுத்த முடியுமா? அந்த நம்பிக்கை உங்களிடம் உள்ளதா?

கவிதையால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமா?!

அந்த நம்பிக்கை என்னிடம் நிறைய.... உள்ளது. வாத்தியாரே!

கவிதைகள் படிப்பவரின் மனதை ஊடுறுவும் வல்லமை பெற்றவை.

ஆனால் என்ன ஒரு பலவீனம் என்றால், கவிதை படித்து அதின்பால் ஈர்க்கப்பட்டு தன்னை மாற்றிக்கொள்ள துடிக்கும் ஒருவனின் மனதிற்குள் ஏற்படும் உத்வேகத்தின் ஆயுள் மிக குறைவாகவே அமைந்து விடுகிறது. படிக்கின்ற அந்த சொற்ப நேரத்திற்கு பிறகு அந்த உத்வேகம் செயலிழந்து விடுவதாகவே உணர்கிறேன்.

எங்கள் வீட்டின் தெருமுனையில் குப்பையாய் கிடந்த ஒரு இடத்தை அப்பகுதி கிறிஸ்தவர்கள் சேர்ந்து சுத்தம் செய்து மாதாவிற்கு ஒரு சிலை வைத்து சுற்றி சின்னதாய் ஒரு கோவில் கட்டினார்கள். அடுத்த இரண்டு தினங்களில் அங்கிருந்த இந்து சகோதரர்கள் சேர்ந்து அவர்களின் தெய்வத்திற்கு ஒரு கோவில் வைத்தார்கள். பல பிரச்சினைகள் ஏற்பட்டு, காவல்நிலையம் போய் இரு மத சகோதரர்களுக்கும் விரோதம் ஏற்பட்டுவிட்டது.

இதில் நான் மனவேதனையடைந்து ஒரு கவிதை எழுதினேன். எழுதும்போதே இதை படிக்கின்றவர்கள் மனதினை நிச்சயம் அசைத்து பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடனே எழுதினேன்.

சண்டை போட்டு கட்டிட்டாங்க..
அந்த சாமிக்கு ஒரு கோவில்,
இந்த சாமிக்கு பக்கத்துலயே!

இப்போ
சாமிங்க ரெண்டும்
ஒன்னா நிக்குது!

கோவில் கட்டின
ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!

சகோதரத்துவத்தை தாண்டி மதத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒருவரின் மனதையாகிலும் இக்கவிதை மாற்றுமானால் அதுவே இக்கவிதைக்கு கிடைத்த வெற்றியாய் கருதுவேன்.

(வெளிப்படையாக எழுத விரும்பாமலே அந்த சாமி, இந்த சாமி என்று எழுதியுள்ளேன்)

கவிஞர்களுக்கு இச்சமூகத்தினை திருத்தவேண்டிய கடமை இருக்கிறது. அவர்களால் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய கவிதைகளை இயற்றமுடியும், காரணம்,

கவிதைகள் படிப்பவரின் மனதை ஊடுருவும் வல்லமை பெற்றவை..

நன்றி வாத்தியாரே!

மனோஜ்
10-06-2008, 03:16 PM
பூங்காவிற்கு கையசைத்து
விடைபெற்றோம்!

ஒரு மெல்லிய காற்று
உண்டானது!

பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...[/B][/COLOR]
------------
சிறப்பான கவிதை வரிகள் நன்றி ஷீ

ஷீ-நிசி
10-06-2008, 03:18 PM
எல்லோரும் பங்கேற்க இயலும் இப்பதிவைத்திறந்த லொள்ளுவாத்தியார் அவர்களுக்கு நன்றி.
அருமையான கேள்விக்கும் வாழ்த்துகள்.

ஷீ-நிசி அவர்களுக்கு என்னுடைய கேள்வி:-

உங்களுடைய சமீபத்திய பதிவில் தாங்கள் சினிமாவில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தீர்கள். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள். இது வரை வந்த படங்களில் எந்த கதாபாத்திரம் உங்களுக்கு பொருத்தமானது என்று நினைக்கிறீர்கள்? யாரைப்போல் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்
(விருப்பமிருந்தால் இந்தக்கேள்விக்கொரு மரபுக்கவிதை எழுத அழைக்கிறேன்)

வணக்கம் நல்லா இருக்கீங்களா?! :)

மரபுக்கவிதையா?! :rolleyes: என்னைப்பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லே...

நான் மரபுக்கவிதையெல்லாம் எழுதி மன்றத்து உறவுகளை சோதிக்க விரும்பவில்லை..

எனக்கு சொர்ணமுகி என்ற படத்தில் பார்த்திபனின் கேரக்டர் போல செய்யவேண்டும் என்று ஆசையுள்ளது. (அது ரொம்ப கடினமானது என்பதை அறிவேன்) காதல் பற்றி பேசும் கேரக்டர்கள் என்றால் சும்மா வெளுத்து வாங்குவேன் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை.

வில்லன் ரோல்கள் செய்வதில் ஆர்வமுள்ளது. இப்ப இருக்கற வில்லன்கள் வெறும் ஏய்! ஊய்! என்று சத்தமிடுவதிலேயே பொழுதை ஓட்டுகிறார்கள். அஞ்சாதே படத்தில் ஆர்பாட்டமில்லாமல் வில்லத்தனம் செய்த பிரசன்னா மாதிரி கேரக்டர்கள்தான் என் சாய்ஸ்.

நன்றி கவிதா அவர்களே! :icon_b:

lolluvathiyar
14-06-2008, 11:08 AM
ஆகா ஷீ நிசியின் அத்தனை பதில்களும் அசத்தலாக இருந்தது கவிஞருக்கே உண்டான தோனியில் பதில் தந்து விட்டார்.

ஏம்ப்பா என்ன ஆச்சு கேள்விகள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப குரைவா இருக்கு, ஏன் ஏன் ஏன்?
இன்னும் நாளைக்கு (15.06.2008) வரை கேள்வி கேட்க டைம் இருக்கே கொஞ்சமா அளவா கேட்டு தள்ளுங்கப்பா

ராஜா
14-06-2008, 12:15 PM
அதானே...?

ஷீ*யிடம் கேட்க கேள்விகளா இல்லை..?

"வாருங்கள்" :) உறவுகளே..!

kavitha
16-06-2008, 07:26 AM
எனக்கு சொர்ணமுகி என்ற படத்தில் பார்த்திபனின் கேரக்டர் போல செய்யவேண்டும் என்று ஆசையுள்ளது. (அது ரொம்ப கடினமானது என்பதை அறிவேன்) காதல் பற்றி பேசும் கேரக்டர்கள் என்றால் சும்மா வெளுத்து வாங்குவேன் என்று எனக்குள் ஒரு நம்பிக்கை.

வில்லன் ரோல்கள் செய்வதில் ஆர்வமுள்ளது. இப்ப இருக்கற வில்லன்கள் வெறும் ஏய்! ஊய்! என்று சத்தமிடுவதிலேயே பொழுதை ஓட்டுகிறார்கள். அஞ்சாதே படத்தில் ஆர்பாட்டமில்லாமல் வில்லத்தனம் செய்த பிரசன்னா மாதிரி கேரக்டர்கள்தான் என் சாய்ஸ்.
ஷீ- மரபுக்கவிதை எழுதாமல் ஏமாற்றி விட்டீர்கள் என்றாலும் பதிலில் கலக்கிவிட்டீர்கள்.

சொர்ணமுகி - பார்த்திபன் , பேசியே இதயத்தில் இடம் பிடித்தவர்.
அஞ்சாதே - பிரசன்னா, அதிகம் பேசாமல் நடிப்பில் இடம் பிடித்தவர்.
இரண்டுமே நடிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கும் பாத்திரங்கள். நல்ல தேர்வு உங்களது.... அது சரி.. ஏன் வில்ல பாத்திரங்கள் மட்டும்? ஹீரோவாவும் நடிக்கலாமே. வாழ்த்துகள்.

lolluvathiyar
16-06-2008, 12:11 PM
ஷீ** நிசி அவர்கள் அடுத்த பேட்டி கொடுப்பவரை அழைக்க நேரம் வந்து விட்டது.

lolluvathiyar
22-06-2008, 11:54 AM
என்ன ஷீ நிசி அடுத்தது இதயத்தை பேட்டி கொடுக்க அழைக்கலாமா யார் அந்த நிழல் உருவம் என்று ஆரம்பிச்சு ஓவரா புலம்பீட்டு இருக்காடு அவர இங்க இழுத்துட்டு வந்து டைப் அடிக்க வச்சா என்ன?

சூரியன்
22-06-2008, 01:45 PM
ஷீ-நிசி அண்ணா நீங்கள் முதலில் எழுதிய கவிதை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இருந்தால் அதை பகிர்ந்துகொள்ளாலாமே !