PDA

View Full Version : பொதுவழி



நம்பிகோபாலன்
12-05-2008, 08:54 AM
படிக்காதவனோடு
படித்தவனும் கூட்டு
சேர்ந்தான்
பொறியியல் கல்லூரியில்
பணத்தை பொதுவழியாக்கி....

பூமகள்
12-05-2008, 11:02 AM
பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்ல.. "பொதுவழி" என்ற குறுக்குவழி..
இப்போது எங்கெங்கு காணினும்...!!

வேதனையான செயல்...

மதிப்பெண்கள் முன்னிலையில்லை.... பொருளில்லாருக்கும் முன்னிலையில்லை...

பொறுத்தார் பொறும... பொருள் தரார் நோக.. பொருளுடையார்க்கு இடம் போவதே இக்கால இயல்பாகிவிட்டது..!

பொருளாதார அடிப்படை சேர்க்கை தொடங்கினால் ஒழிய.. இவ்வகை அவலம் நீடிக்கவே செய்யும்..!!

ஊசி போன்ற ஒரு கருத்துள்ள கவிதை.. நிச்சயம்.. பலரைத் தைக்குமென நம்புகிறேன்..
வாழ்த்துகள் நம்பிகோபாலன் அண்ணா..!!

நம்பிகோபாலன்
12-05-2008, 11:13 AM
நன்றி பூமகள்.
எனக்குள் நீண்டநாட்களாக எரிந்து கொண்டிருக்கும்
நெருப்பு துகள் இது...
சமுதாயத்தில் இதற்கான மாற்றங்கள் வரவேண்டும் என எண்ணுகிறேன்...

rocky
12-05-2008, 11:48 AM
படிக்காதவனோடு
படித்தவனும் கூட்டு
சேர்ந்தான்
பொறியியல் கல்லூரியில்
பணத்தை பொதுவழியாக்கி....

அன்புள்ள மன்றத்தோழர் நம்பிகோபாலன் அவர்களுக்கு,

உங்களின் கவிதையின் கருவும் எண்ணமும் மிகவும் சரியே, ஆனால் வார்த்தைகளின் பிரயோகத்தில் எனக்கு ஒரு சிறு சந்தேகம். நீங்கள் சொல்வது போல் படிக்காதவனோடு படித்தவன் பனத்தைக் கொடுத்து கல்லூரியில் சேர வேண்டியதில்லையே? படித்தவனோடுதான் படிக்காதவன் காசு கொடுத்து சேருவான், ஆகவே படிக்காதவனோடு படித்தவன் என்று இடுவதற்கு பதிலாக

படித்தவனோடு
படிக்காதவனும்
கூட்டு சேர்ந்தான்
பொரியியல் கல்லூரியில்
பணத்தை பொதுவழியாக்கி.....

என்று இடலாமே. இது என் தாழ்மையான கருத்து, நன்றி. :icon_b:

நம்பிகோபாலன்
12-05-2008, 11:58 AM
அன்புள்ள நண்பருக்கு.
இன்று பொறியியல் நடத்துபவர்கள் அனைவரும் படித்தவர்களாக தெரியவில்லை...
என் கண்ணோட்டத்தில் படித்தவர்களே பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற கருத்தில் எழுதினேன்.
பிழை இருப்பின் மன்னிக்க....

அக்னி
12-05-2008, 12:02 PM
கல்வி பெறுமதியானது...
பெறுமதி கொடுத்தவர்களும்,
கொடுக்க இயலாதவரும்
சொல்கையில்தான் புரிந்தது அர்த்தம்...

கல்விக்கு விலை தவிர்க்கமுடியாதது.
ஆனால், கல்வியே விலையானால்...

திறன்களைப் பின் தள்ளி நிற்கத்தான் வேண்டும் பணம்.
ஆனால், பின்னே தள்ளியல்ல... பின்னிருந்து தள்ளி...

இன்று விழிக்கத் தவறினால், தகுதியில்லாதோரால், நாளை விழிமூடப் போவது சமுதாயம்...

பாராட்டுக்கள் நம்பிகோபாலன் அவர்களே...

உபரித் தகவலாக...
ஈழத்துத் தமிழ் மாணவர்கள் கல்வியில் சிறந்து, பெரும்பான்மை இன மாணவர்களை விடவும் பெருவாரியான வீதத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தோற்றுவதைப் பொறுக்க முடியாத, பெரும்பான்மை சமூகம், 1972 இல் தோற்றுவித்த கல்வித்தரப்படுத்தல் என்கின்ற சட்டமும் ஈழத்தில் நீடிக்கும் இன்றுவரையான யுத்தத்திற்கான ஓர் முக்கிய காரணியாகும்.
இந்தச் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட பல்கலைக்கழக அனுமதிகள் வரையறுக்கப்பட்டன. இதனால், தமிழர் பிரதேசங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி உயர்வடைந்ததனால், அதிகூடிய புள்ளிகள் எடுத்த மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லமுடியாத நிலை ஏற்பட, குறைவான புள்ளிகள் எடுத்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்நிலையே இன்றுவரை தொடர்கின்றது.

ஆதி
12-05-2008, 01:14 PM
நம்பி உங்கள் கவிதையும் அது தாங்கும் கருவும் அருமை..

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நீயா, நானா நிகழ்ச்சியில் படித்தவர்கள் படிக்காதவர்கள் இருவரும் வாதிட்டார்கள்.. அந்த மேடைக்கு வந்த படிக்காதவர்கள் அனைவரும் படித்தவர்களை விட அதிகப் பணம் சம்பாதித்தவர்களாகவே இருந்தார்கள்.. படித்தவர் தரப்பில் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒருக் கருத்து "படிக்காதவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கிற பயம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை, படித்தவர்களை விட படிக்காதவர்களே எப்படியும் வாழ்க்கையை வெல்ல வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார்கள், அதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறார்கள், வெல்கிறார்கள், படித்தவர்களுக்கு அது இல்லை, படித்தப் படிப்புக்கு ஏற்ற வேலை, உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்கிற மெத்தனப் போக்கு இருக்கிறது, அதனால்தான் பலர் அப்படியே இருக்கிறார்கள்"

உண்மைதானே, கலைகல்வி பட்டமோ, தொழிற்கல்வி பட்டமோ பெற்று அதற்கு ஏற்ற வேலையைத் தேடுகிறோம், ஏன் வேலைக்கு போகல, வேலைக் கிடைக்கல, கிடைத்த வேலையில் போய் என்னக் கற்றுக் கொள்கிறோம், பெரியதாக ஒன்னுமில்லை, என்ன முன்னேறி இருக்கோம், அதிக பட்சமா, டீம் லீட், இல்லை மேனேஜர், இப்படி ஓட்டியிருப்போம், நாம் வேலைப் பார்க்கும் துறையைப் பற்றி அதிகம் அறிந்து, மற்ற நிறுவணங்களுக்கு கன்சல்டண்டாக அகவோ, அல்லது நாமே ஒரு நிறுவணம் துவங்கவோ எத்தனைப் பேர் நினைக்கிறோம்.. கற்றதன் பயன் கைநிறைய ஊதியம் கிடைக்கிற வேலை என்றே கருதி கிடைத்ததில் திருப்தி அடைந்து கொள்கிறோம்..

உங்கள் கவிதையின் கரு தாங்கும் கருத்தை இன்றைய சூழலில் ஏற்க முடியாது, ஏகப்பட்ட எஞ்னியரிங் சீட்டுகள் சேர ஆளில்லாமல் காலியாகதான் கிடக்கிறது, சென்ற அதிமுக அரசு, 60% இருந்து 55% மதிப்பெண் எடுத்தால் போதும் என்று மாற்றியதே இதற்கு தெளிவான சாட்சி..

கண்மணி
12-05-2008, 03:30 PM
படிக்காதவனும்
கல்வியால் சம்பாதித்தான்..
நர்சரி பள்ளி தொடங்கி!!

பூமகள்
12-05-2008, 03:53 PM
படிக்காதவனும்
கல்வியால் சம்பாதித்தான்..
நர்சரி பள்ளி தொடங்கி!!
கண்மணி அக்கா..
சின்ன திருத்தம்..!!

படிக்காதவனும்
கல்வி விற்கிறான்..
பொறியியல் கல்லூரி துவங்கி...!!

(அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கிறேன்..!! :icon_rollout:)

நம்பிகோபாலன்
13-05-2008, 05:30 AM
உங்கள் அனைவரும் பின்னூட்டத்திற்கு நன்றி.
அக்னி உபரி தகவல் என்னை வியப்படைய செய்கிரது.
ஆதி நீங்கள் கூறியதுபோல படித்தவர்கள் தாமே ஒரு தொழில் துவங்க தயக்கம் காட்டதான் செய்கிறர்கள்...சிந்திக்க வேண்டிய விஷயம்.

கண்மனி,பூமகள் கலக்கிடீங்க...

இராஜேஷ்
13-05-2008, 06:12 AM
படித்தவரோ படிக்காதவரோ, பணம் சம்பதிக்க வேண்டுமென்றல் அவர்களுடைய சிந்தனையில் மாற்றம் வரவேண்டும். நம்முரில் உள்ள மார்வடிகளை மற்றும் சில சமுகத்தினரை எடுத்து கொள்ளுங்கள், அவர்கள் சிந்தனைய்யே வேறு. நாம் அணைவரும் MBA - Master of business Administration கேள்விப்பட்டிருப்போம் ஆனால் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது, MBB - Marwadi By Birth, நாம் படித்தது MBA வாக இருந்தாலும் நம்முடைய சிந்தனையில் MBB தேவை.

பென்ஸ்
14-05-2008, 01:41 AM
ஆதங்கத்தை நாலு வரியில் கொட்டி மன்றத்து மக்களை ஆவேசமாக பின்னுட்டம் இட வைத்த நம்பிகோபலனுக்கு வாழ்த்துகள்....

படித்தவன் <=> படிக்காதவன்

படிப்பது எதற்க்கு???
பணம் எதற்க்கு ???

சின்ன குழப்பம் .. யாராவது உதவுங்களேன்...

அமரன்
17-05-2008, 08:15 PM
விற்பனையாளன், வாடிக்கையாளன் கூட்டுத்தான் சந்தை..

மன நிறைவுக்காக மட்டும் படித்த காலம் மலையேறிப்போச்சு. நானுட்பட யாவரினதும் நிலை, உழைப்புக்குப் படிப்பு என்பதே. எதில் அதிக ஊதியம் கிடைக்கும்.. எதற்கு வேலை வாய்ப்பு அதிகம். என்றெல்லாம் பார்த்து படிப்புத்துறையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம்... இங்கு, விருப்பு வெறுப்புக்கு இடமில்லை..

நான் படிக்க யாரோ கொடுத்த டொனேஷன் உதவியிருக்கலாம்.. யாரோ ஒருவன் படிக்க நான் கொடுத்த டொனேஷன் உதவட்டுமே.. உபரியாக கல்வியாலய உரிமையாளருக்கும்.

அமரன்
17-05-2008, 09:04 PM
கண்மணி அக்கா..
சின்ன திருத்தம்..!!

படிக்காதவனும்
கல்வி விற்கிறான்..
பொறியியல் கல்லூரி துவங்கி...!!

(அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கிறேன்..!! :icon_rollout:)
நர்சரியில் வைத்த "பொறி", பொறியியல் கல்லூரியில் அறியப்பட்டுள்ளது.:confused::confused::confused:

கண்மணி
19-06-2008, 10:13 AM
நர்சரிப் பள்ளிக்கு அதிக வருமானமா? இல்லைப் பொறியியல் கல்லூரிக்கு அதிக வருமானமா? பதில் சொல்லுங்க பூவக்கா!

ஆதவா
19-06-2008, 10:46 AM
அன்புள்ள நண்பருக்கு.
இன்று பொறியியல் நடத்துபவர்கள் அனைவரும் படித்தவர்களாக தெரியவில்லை...
என் கண்ணோட்டத்தில் படித்தவர்களே பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்கிறார்கள் என்ற கருத்தில் எழுதினேன்.
பிழை இருப்பின் மன்னிக்க....

அப்படியா? :eek:

ஆதவா
19-06-2008, 10:49 AM
நர்சரிப் பள்ளிக்கு அதிக வருமானமா? இல்லைப் பொறியியல் கல்லூரிக்கு அதிக வருமானமா? பதில் சொல்லுங்க பூவக்கா!

கண்ணு, மாச சம்பளத்துக்கும் வருச சம்பளத்துக்கும் வித்தியாசம்ம்ம் இருக்கா? மொத்த வருமானம்தானே முக்கியம்!!

எனக்கென்னவோ நர்சரி முதல் இடத்திலெ இருந்தாலும் பொறியியல் கல்லூரிங்கலும் நல்லா பிடுங்கறாங்கன்னு தோணுது....

என்ன நினைக்கிறீங்க?