PDA

View Full Version : வித்தியாசம்



மனோஜ்
12-05-2008, 08:13 AM
ஒரு ஆய்வாளர் ஒரு ஆய்வுக்காக ஒரு ஆட்டு மந்தை வைத்திருப்பவரை சந்திக்க சென்றார் அப்பொழுது அங்குள்ள ஆட்டு மேய்ப்பர் ஒரு வரை சந்தித்து

ஆய்வர்: உங்களுக்கு எத்தனை ஆடுகள் உள்ளது

மேய்ப்பர்: வெள்ளாடு ஒரு 50 கருப்பாடு ஒரு 50

ஆய்வர்: சரி வெள்ளாடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது
கருப்பு ஆடு ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடுகிறது

மேய்ப்பர்: வெள்ளாடு ஒரு நாளைக்கு 10 கிலோ இலைதளைகள் சாப்பிடும்
கருப்பு ஆடு ஒரு நாளைக்கு 10 கிலோ இலைதளைகள் சாப்பிடும்

ஆய்வர்: வெள்ளாடு எவ்வளவு குட்டி ஈனும்
கருப்பாடு எவ்வளவு குட்டி ஈனும்

மேய்ப்பர்: வெள்ளாடு வருடம் எல்லாம் சேர்த்து 10 குட்டி
கருப்பாடு வருடம் எல்லாம் சேர்த்து 10 குட்டி

ஆய்வர்: (சற்று கடுப்புடன்) வெள்ளாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்
கருப்பாட்டுக்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்

மேய்ப்பர்: வெள்ளாட்டுக்கு வருடம் முழுவதும் 10000ரூபாய்
கருப்பாட்டுக்கு வருடம் முழுவதும் 10000 ரூபாய்

ஆய்வர்: (சற்று கோபத்துடன்) வெள்ளாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள்
கருப்பாட்டிலிருந்து எத்தனை கம்பளிகள்

மேய்ப்பர்: (பெருமையுடன்) வெள்ளாட்டிலிருந்து வருடம் 15 கம்பளிகள்
கருப்பாட்டிலிருந்து வருடம் 15 கம்பளிகள்

ஆய்வர்: (உச்சகட்ட கோபத்தில்)
என்ன*தான் வித்தியாசம் வெள்ளாட்டுக்கும் கருப்பாட்டுக்கும்
மேய்ப்பர்: வெள்ளாடும் என்னுடையது
கருப்பாடும் என்னுடையது
ஆய்வர்::fragend005::eek::traurig001:

கருத்து: உலகத்தில் அனைத்து மக்களும் இறைவன் முன் ஒருவரே வித்தியாசம் இல்லை

4000 மாவது பதிவு

அறிஞர்
13-05-2008, 07:05 PM
ஏற்ற தாழ்வற்ற பார்வை தான் இறைவனின் பார்வை....

பிறப்பால் அனைவரும் மனிதர்.....

நிறம், இனம், மொழி, பணத்தால்... மனிதனை ஏற்ற தாழ்வாக பார்ப்பது தவறு....

அக்னி
13-05-2008, 07:26 PM
ஜாதி மத நிற பேதம் மனிதர்களிடமிருந்து, மிருகங்களை நோக்கியும் திருப்பப்படுகின்றது.
மிருகங்களிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியதை விடுத்து, வேறுபாட்டை அவற்றிடையேயும் திணித்துவிட முனைகின்றான் மனிதன்.
இந்த விடயத்தில் மனிதனின் ஆறாம் அறிவு, சிற்றறிவாகத்தான் இன்னமும் இருக்கின்றது.

4000 ஆவது பதிவாக ஒரு கருத்துப் பகிர்வு...
பாராட்டுக்கள் மனோஜ் அவர்களே...

ஷீ-நிசி
14-05-2008, 12:20 AM
இறைவன் பாரபட்சமில்லாதவர் என்பதை வெகு அழகாய் விளங்கவைக்கிறது இக்கதை..

முத்தான பதிவு வாழ்த்துக்கள் மனோஜ்!

பாரதி
14-05-2008, 01:53 AM
எல்லாம் அவர் அவர் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது!

எப்படியும் பிரிக்க வேண்டும்; வித்தியாசம் காண வேண்டும் என்று ஆய்வாளன் நினைத்தாலும், பிரிக்க முடியாத நிலையில் மேய்ப்பனின் மனம்!!

நிறத்தை தேடும் மனிதர்களுக்கு குணத்தை அறிவுறுத்தும் நல்ல பாடம்.

இது போன்ற குட்டிக்கதைகள் முன்பு நகைச்சுவைக்காக வந்திருந்தாலும், மனிதர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் நல்ல பதிவு.

என் மனம்கனிந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மனோஜ்.

என்றும் மன்றத்தில் இணைந்திருக்க அன்புடன் வேண்டுகிறேன்.

ஓவியன்
14-05-2008, 02:09 AM
அன்பு மனோஜ் அழகான, அர்த்தம் பொதிந்த குட்டிக் கதை முத்தனைய நாலாயிரமாவது பதிவாக மனதார பாராட்டுகிறேன் மனோஜ் தொடர்ந்தும் இணைந்திருங்கள்..!!

சுகந்தப்ரீதன்
14-05-2008, 02:22 AM
மானிட மந்தைகளாய் ஏற்றதாழ்வுடம் நாம்..!!

அனைவரையும் சமமாய் கட்டி மேய்ப்பவராய் இறைவன் ஒருவன்..!!

நாலாயிரமாவது பதிப்பில் நல்ல கருத்து தந்த அண்ணனுக்கு நன்றியும் பாராட்டும்..!!

aren
14-05-2008, 04:27 AM
சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது உங்கள் பதிவு. பாராட்டுக்கள்.

மனோஜ்
14-05-2008, 08:03 AM
நிறம், இனம், மொழி, பணத்தால்... மனிதனை ஏற்ற தாழ்வாக பார்ப்பது தவறு....சரியாக சொன்னீங்க அறிஞர் அண்ணா நன்றி


இந்த விடயத்தில் மனிதனின் ஆறாம் அறிவு, சிற்றறிவாகத்தான் இன்னமும் இருக்கின்றதுநன்றி அக்னி மாற்ற முயல வேண்டும்

படித்து கருத்து தந்தமைக்கு நன்றி ஷீ


நிறத்தை தேடும் மனிதர்களுக்கு குணத்தை அறிவுறுத்தும் நல்ல பாடம் நன்றி பாரதி அண்ணா

நன்றி ஓவியன் தங்கலின் அன்பான பாராட்டு மற்றும் உதவிக்கு


மானிட மந்தைகளாய் ஏற்றதாழ்வுடம் நாம்..!!சிறப்பாக சொன்னீங்க சுகு

நன்றி அரன் அண்ணா

யவனிகா
14-05-2008, 08:28 AM
அன்பு சகோதரா...பராபட்சமற்றவர் இறைவன்...கொஞ்சம் சிரமம் தான் ஏற்றுக் கொள்ள....

அவர் எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்...மனிதனான அந்த மேய்ப்பன் பாராபட்சமின்றி இருந்தானே...அது பெரிய விசயம்...
ஏன்னா எங்கூரில எல்லாம் அதிகம் கறக்கிற மாடுகளைத்தான் தீனி போட்டு வீட்டில் வெச்சுக்குவாங்க....கறவை நின்னு போனா அடிமாட்டுக்குத் தள்ளி விட்டுடுவாங்க...வீட்டுக்கு விருந்தாளி வந்தா இருக்கிற ஆட்டில இள ஆடாப் பாத்து பிரியாணி தான்...விடைக்கோழியாப் பாத்து சிக்கன் 65 தான்...மோசமான மேய்பர்கள் நமக்கு எதற்கு...

நல்ல மேய்ப்பர்கள் வாழ்க பல்லாண்டு மந்தையுடன்!!!

தோழர் மனோஜின் பங்கு மன்றத்தில் அளப்பரியது...வந்த நாளிலிருந்து நானும் பார்க்கிறேன்...ஏதேனும் ஒரு விதத்தில் இடையறாது தன் பங்கை, படைப்பாய் மன்றத்திற்கு அளித்து வருபவர்...

அன்பு சகோதரர் அவர்கள் 4000 படைப்புகள் அளித்தமைக்கு அக்காவின் வாழ்த்துகள்...என்றும் இணைந்திருங்கள்...!!!

மனோஜ்
14-05-2008, 09:12 AM
உங்களிடமிருந்து நான் பதிவுகள் எதிபார்ததுன்டு இன்று நிறைவாய் தந்தமைக்கு நன்றி யவனி(அ)க்கா

விகடன்
14-05-2008, 11:00 AM
4,000 ஆவது பதிப்பாக அசத்திவிட்டீர்கள்.
அதிலும் கருத்து சொல்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மிகவும் இரசித்து படித்தேன்.
பாராட்டுக்கள்.

அனுராகவன்
15-05-2008, 12:16 AM
அருமை மனோஜ் அவர்களே!!
வித்தியாசம் மனிதன் காண்பது..
இறைவனின் கீழ் அனைத்தும் ஒன்றே!!

svenkat
15-05-2008, 07:47 AM
ஆழ்ந்த கருத்து
மிகவும் சிந்திக்க வைத்தது

மனோஜ்
21-05-2008, 09:32 AM
நன்றி விராடன்
நன்றி அனு அக்கா
நன்றி வெங்கட்

சூரியன்
21-05-2008, 09:55 AM
நல்ல ஒரு கருத்து..
இறைவனின் முன் அனைவரும் சமம்.

ராஜா
27-05-2008, 06:06 AM
அருமையான பதிவு..! வித்தியாசமான சிந்தனை..!

தனது 4000 ஆவது பதிவை ஒரு அரிய கருத்துடன் அளித்த பாங்கு பாராட்டுதலுக்குரியது..!

தம்பி மனோஜின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.. தமிழை சரிவர தட்டச்ச இயலாத நிலையில் தன் தமிழ் இணையப் பயணத்தை அவர் துவக்கியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இன்று தன் ஆர்வத்தாலும், முயற்சியாலும் எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கிறார்..

அதுமட்டுமல்ல.. தமிழில் தவறாகப் பதிந்து பிறர் கேலி செய்வார்களோ என்று தயங்கி நின்ற சிலரின் பயத்தையும் போக்கியிருக்கிறார்..! வாழ்க தம்பி..!!

என் தொடர்பான வாழ்த்து திரிகளில் மனோஜ் இடும் பதிவுகள் ஆனாலும் சரி.. எனக்கு அவர் இடும் தனிமடல்கள் ஆனாலும் சரி.. அவற்றில் மிகுந்த பாசத்தையும் அன்பையும் நான் துய்த்து வருகிறேன்..!

இணையம் எனக்களித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று தம்பி மனோஜ்..!

மனோஜ்
29-05-2008, 05:36 PM
நன்றி சூரியன்

மன்றத்தில் மிக நெருங்கிய உறவில் என் ராஜா அண்ணாவின் பாராட்டை பெற்றதில் மிக மகிழ்ச்சி அடைகிறோன்

Narathar
30-05-2008, 07:24 AM
அப்படியானால் அந்தக்கடவுள் ஏன் சில ஆடுகளை கறுப்பாடவும் சில ஆடுகளை வெள்ளையாகவும் படைத்தார்?

நாராயணா!!!! இதற்கு யார் என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ?

இளசு
13-07-2008, 06:58 AM
எப்படியும் பிரிக்க வேண்டும்; வித்தியாசம் காண வேண்டும் என்று ஆய்வாளன் நினைத்தாலும், பிரிக்க முடியாத நிலையில் மேய்ப்பனின் மனம்!!

இது போன்ற குட்டிக்கதைகள் நகைச்சுவைக்காக வந்திருந்தாலும், மனிதர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் நல்ல பதிவு.

.

பாரதியின் அழகிய வரிகளை அப்படியே வழிமொழிகிறேன்..


அவர் எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்...மனிதனான அந்த மேய்ப்பன் பாராபட்சமின்றி இருந்தானே...அது பெரிய விசயம்...
...

நல்ல மேய்ப்பர்கள் வாழ்க பல்லாண்டு மந்தையுடன்!!!

......!!!

எதை எழுதினாலும் ' அட' என திரும்ப வைக்கும் எழுத்து யவனிகாவுடையது.. இங்கும் அதே 'அட'!




தம்பி மனோஜின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும்.. தமிழை சரிவர தட்டச்ச இயலாத நிலையில் தன் தமிழ் இணையப் பயணத்தை அவர் துவக்கியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இன்று தன் ஆர்வத்தாலும், முயற்சியாலும் எவ்வளவோ முன்னேற்றம் கண்டிருக்கிறார்..

அதுமட்டுமல்ல.. தமிழில் தவறாகப் பதிந்து பிறர் கேலி செய்வார்களோ என்று தயங்கி நின்ற சிலரின் பயத்தையும் போக்கியிருக்கிறார்..! வாழ்க தம்பி..!!

என் தொடர்பான வாழ்த்து திரிகளில் மனோஜ் இடும் பதிவுகள் ஆனாலும் சரி.. எனக்கு அவர் இடும் தனிமடல்கள் ஆனாலும் சரி.. அவற்றில் மிகுந்த பாசத்தையும் அன்பையும் நான் துய்த்து வருகிறேன்..!

இணையம் எனக்களித்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று தம்பி மனோஜ்..![/


ராஜா அவர்களின் கருத்து அப்படியே என் கருத்தாகவும்..

அன்புத்தம்பிக்கு அண்ணனின் வாழ்த்தும் ஆசிகளும்..