PDA

View Full Version : காற்று



நாகரா
12-05-2008, 03:07 AM
இலைகளை உடுத்தி
இன்னும் நிர்வாணமாகும்
காற்று

பட்டாம்பூச்சியை
உடுத்திப் பறக்கிறது
காற்று

இலைகளை அசைத்தசைத்துக்
கண் சிமிட்டும்
காற்று

விகடகவி
12-05-2008, 03:25 AM
உந்தன் கவிக்கு நன்றி கவிஞரே

நாகரா
12-05-2008, 03:26 AM
நன்றி விகடகவி

ஓவியன்
12-05-2008, 03:39 AM
இலைகளை உதிர வைத்து
அந்த இலைகளை உடுத்து
தன்னையும் மரங்களையுமல்லவா
நிர்வாணமாக்குகிறது காற்று..!!

நாகரா
12-05-2008, 03:48 AM
உம் பின்னூட்டக் குறுங்கவிக்கு நன்றி ஓவியன்.

காற்றின் நிர்வாணத்தைக்
கவிதையாய் உடுக்கிறதோ
கணினிக் காகிதம்!

ஓவியன்
12-05-2008, 03:54 AM
நிர்வாணத்தைத் தொலைக்கிறது
கணினிக் காகிதம்,
நிர்வாணம் தொலைந்த
சேதி சொல்லும் கவிதைகளால்...!!

நாகரா
12-05-2008, 04:15 AM
ஆ! அருமையான குறுங்கவிக்கு நன்றி ஓவியன்.

காற்றை உடுத்தியும்
ஆகாயம் என்னவோ
இன்னும் அம்மணமாகவே இருக்கிறது!