PDA

View Full Version : நன்னம்பிக்கை முனை



நாகரா
12-05-2008, 02:53 AM
எல்லாக் கீற்றுகளும்
உலர்ந்து போய்த்
தாழ்ந்து கிடக்கின்றன
எழுந்து நிற்கும் சக்தி
மொத்தாமாய்ச் செத்து
எக்கணமும்
கழன்று விழக்
காத்திருக்கின்றன

தென்னை மரம் என்னவோ
இன்னும்
நம்பிக்கையோடு தான்
உயர்ந்து நிற்கிறது

தினமும்
பல முறை
பார்த்து வருகிறேன்
தென்னையில்
என்னை

உயிர் போகும்
கேள்வியோடு
இன்னும்
உயிரோடு

கருங்காக்கையொன்று
அமர்கிறது
தென்னையில்

நன்னம்பிக்கை முனையொன்று
முளைக்கிறது
என்னில்

விகடகவி
12-05-2008, 03:25 AM
உந்தன் கவிக்கு நன்றி கவிஞரே

ஓவியன்
12-05-2008, 03:42 AM
ஒரு காக்கை ஒரு தென்னையில் அமர்ந்து விட்டுச் செல்கிறது,
இது ஒரு சாதாரண சம்பவம் தான்
ஆனால் ஓர் நம்பிக்கையூட்டும் கவிதையைச்
சம்பவித்திருக்கிறதே.....!! :)

பாராட்டுக்கள் அண்ணா...!!

நாகரா
12-05-2008, 03:44 AM
உம் பாராட்டுகளுக்கு நன்றி ஓவியன்.

praveen
12-05-2008, 06:45 AM
காக்கை உட்கார்வதற்கு கூட வாடிய தென்னை உதவுகிறதே என்பது தான் கருத்து சரியா நண்பரே, நான் கவிதையின் பொருள் உணர்ந்தது.

உங்கள் சொந்த தளத்திலும் இந்த கவிதை பார்த்தேன். இங்கேயும் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே, நமது தளத்தை அங்கே அனைத்து பக்கங்களிலும் வருவது போல லிங்க் இடலாமே நண்பரே.

உங்கள் நற்கவிதைகளை கானும் நண்பர்கள் அப்படியே நமது தளமும் வந்து செல்வார்களே. ஆவன செய்வீர்களா?. உரிமையுடன் கேட்கிறேன்.

நாகரா
12-05-2008, 07:43 AM
தென்னையைப் போல்
வாடியிருக்கும் என்னில்
தென்னையில் காக்கை
அமர்ந்தது போல்
நன்னம்பிக்கை முனை
முளைப்பதையே
கவிதையில் கூறுகிறேன்
ப்ரவீண்.

நீவிர் உரிமையுடன் கேட்டதற்கு மகிழ்ச்சி. அவ்வாறே தமிழ் மன்றத்தின் சுட்டியை எல்லாப் பக்கங்களிலும் வருமாறு ஆவன செய்திருக்கிறேன்.