PDA

View Full Version : கோவை குற்றாலம்



mgandhi
11-05-2008, 06:39 PM
http://i134.photobucket.com/albums/q104/mgandhi05/tbltnsplnews_41280329228.jpg

கோவை குற்றாலம்



பேரூர்: மனதை மயக்கும் மூலிகைக் காற்று, உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை குளியல், குழந்தைகளைக் கவரும் சிறுவர் பூங்கா, இளைஞர்கள் விரும்பும் சறுக்குப்பாறை, மலைவாழ் மக்களின் மூலிகை கண்காட்சி அனைத்தும் கொண்ட இடம், கோவை குற்றாலம். நகர பரபரப்புக்கு சிறிதே விடைகொடுத்து இயற்கையை ரசிப்பதற்காக, இறைவன் கோவை அருகில் படைத்த அருவி தான், இந்த கோவை குற்றாலம்.கோவையிலிருந்து 30 கி.மீ., தொலைவில் மேகங்கள் தவழும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில், வெள்ளியை உருக்கி ஊற்றியதுபோல, கோவை குற்றாலத்தில் எப்போதும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக் கும். சாடிவயல் செல்லும் செக்போஸ்டிலி ருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத் விட்டு ஒரு கி.மீ., தூரம் நடந்து சென்றால் அழகான நீர்வீழ்ச்சியை அடையலாம்.மூலிகை காற்று: கோவை குற்றாலம் செல்லும் வழியில், வனங்களைச் சுற்றியுள்ள தடுசு, ஈட்டி, மலைவேம்பு, மா ராணி கீரை, கிவலை ஆகிய பல ஜாதி மரங்களிருந்து வரும் ஜில்லென்ற மூலிகைக் காற்று மனதை மயக்குவதுடன், உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.1,860 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல்பகுதியிலுள்ள குஞ்சராடி, சண்டாமு டி, மந்துபாறை, புங்கிமரச் சோலை, தேன்வெரை ஆகிய மலைப்பகுதிகளில் இருந்து பாய்ந்துவரும் அருவி நீரில், ஏராளமான மூலிகைச் சத்துகள் கலந்துள்ளன; கீழாநெல்லி, ஆனைவணங்கி, அலுவா ணி, முன்தொடரி, ராஜவட்டம், ராஜவணங்கி, கடுக்காய், ஜாதிக்காய் ஆகிய மூலிகைப் பொருட்களின் கலவையாக தண்ணீர் அருவியாக கொட்டுகிறது.இதில் குளிப்பவர்களுக்கு மண்டைவலி, கை,கால் குடைச்சல், பித்தம் ஆகிய நோய்களை குணமாவதாகக் கூறுகின்றனர். எப்போதும் வற்றாமல் கொட்டும் இந்தத் தண்ணீர் மிக சுவையாக இருக்கும்.சறுக்குப்பாறை: அருவியில் இருபாலரும் தனித்தனியே குளிக்க, வனத்துறை சார்பில் சிறு நீர்வீழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, அருவியிலுள்ள சறுக்குபாறை வழியே அழகாக தவழ்ந்து சென்று, கீழே குழந்தைகள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் சீறி விழுகிறது.
இந்த சறுக்குப்பாறையில் ஏறி அமர்ந்தால் கண் இமைக்கும் நேரத்தில் சறுக்கி வரலாம். இந்த விளையாட்டில், குழந்தைகளும் இளைஞர்களும் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். இருபாலர் உடைமாற்றும் அறைகளும், கழிப்பிட வசதிகளும் வனத் துறை சார்பில் அமைக்க ப்பட்டுள்ளன. வனத்துறை சார்பில் கோவை குற்றாலம் செல்லும் வழியில், குழந்தைகளுக்கான இலவச சிறுவர் பூங்காவும் அமைக்கப் பட்டுள்ளது.மூலிகை கண்காட்சி: கோ வை குற்றாலத்திற்கு வரும் பயணிகளுக்காக சாடிவயல் செக்போஸ்ட் அருகில் மலைவாழ் மக்களின் மூலிகை கண் காட்சி அமைக்கப் பட்டு ள்ளது. இங்கு வனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களால் சேகரிக்கப்பட்ட பட்டை, கிரா ம்பு, ஏலக்காய், தேன், சீவக் காய், மலைநெல்லி உள்ளிட்ட வனப்பொருட்கள் கிடைக் கும்; ஆரோக்கியம் தரும் மூலிகை பொருட்களை குறை ந்த விலையில் வாங்கலாம். வனத்துறை தடை: கோவை குற்றாலத்திற்கு செல்ல வனத் துறையினரால் அனுமதிக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 15ம், சிறியவர்களுக்கு ரூ. 10ம், வீடியோ காமிராவுக்கு ரூ. 150ம், காமிராவுக்கு ரூ. 25ம் வசூலிக்கப்படுகிறது. தவிர டூவீலருக்கு ரூ. 5ம், கார், டாக்ஸிகளுக்கு ரூ. 15ம், பஸ், லாரிகளுக்கு ரூ. 50ம் வசூலிக்கப்படுகிறது. கோவை குற்றாலத்துக்கு பீடி, தீப்பெட்டி, மதுபானம், பிளாஸ்டிக் பொருட்கள், மொபைல்போன் கேமரா ஆகிய பொருட்கள் கொண்டுசெல்லவும், காதல்ஜோடிகள் செல்லவும் வனத்துறை தடை விதித்துள்ளது.