PDA

View Full Version : ஒருங்குக்குறியாக்கத்தினால் எற்படும் பதிவாளர் எண்ணிக்கை மாற்றம்.



அன்புரசிகன்
11-05-2008, 06:26 PM
நண்பர்களே....

தற்சமயம் நம் மன்ற உதவியாளர்களால் நம் மன்ற முந்தைய திஸ்கி பதிவுகள் ஒருங்குக்குறிக்கு மாற்றப்படுவது அனைவரும் அறிந்ததே...

சில பாரிய திரிகளும் அவ்வாறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படுகிறது... அப்படிப்பட்ட திரிகளில் சில தற்போதும் நம் மன்ற உறுப்பினர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில திரிகளும் அடங்கும். ஆகையால் அப்படிப்பட்ட திரிகள் சிலவற்றை copy செய்து உதவியாளர் மாற்றக்கூடிய வாறான இடத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் நம் மன்ற உறுப்பினர்களின் பதிவெண்ணிக்கை (அநேகமாக 2006ம் ஆண்டிக்கு முன் வந்தவர்களாக இருக்கும்) தற்போது அதிகரித்துக் காணப்படலாம். பின்னர் ஒருங்குக்குறிக்கு மாற்றியபின்னர் தகுந்தவாறு மாற்றப்படும் போது அந்த எண்ணிக்கை மீண்டும் சாதாரண எண்ணிக்கைக்கு வரும்....

இதனால் மன்ற நண்பர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகிறோம். உங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

நன்றி.

சூரியன்
18-05-2008, 02:59 PM
இந்த சிக்கலை மன்றத்து மக்கள் பொருத்தருள வேண்டுகிறோம்.