PDA

View Full Version : நீ இல்லை என்னோடு



shanthija
11-05-2008, 02:47 PM
நீ இல்லை என்னோடு

என்னை விரும்பிய நீயும் இல்லை இன்று..
என் விழியில் கண்ணீரும் இல்லை...

என் மனதின் காயங்கள் ஆறவும் இல்லை...
உன் நினைவுகள் இன்னும் அழியவும் இல்லை...

என் உள்ளத்தை வாட்டுதடா உன் நினைவு..
என்னை மகிழ்விக்க தான் நீயும் இல்லை...

உன்னோட பேசிட வர்த்தைகள் உண்டு..
என் பேச்சைக் கேட்பதற்கு நீ தான் இல்லை...

என்னோடு நீ இருந்திருந்தால் நாம்
நினைத்ததை சாதித்திருப்போம்..

நீ இன்று என்னோடு இல்லை இறைவன் தான்
நினைத்ததை சாதிக்க விரைந்து விட்டான்..


ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்!


அன்புடன்
லதுஜா

சுகந்தப்ரீதன்
14-05-2008, 02:26 PM
நினைவுகள் நெஞ்சை வாட்டுவதாய் வருத்தம் கொண்டுவிட்டு...
பின் மறவாத இனிதான வரம் வேண்டுவதுமேனோ லதுஜா..?!

வலிசொல்லும் உங்கள் வரிகளில் மலிந்துகிடக்கிறதே எழுத்து பிழைகள்...
எச்சரிக்கையாய் இருங்கள் இல்லையென்றால் சொல்பிழையாகவும் வாய்ப்புண்டு..!!

கவிதைக்கு வாழ்த்துக்கள்..தொடர்ந்து முயலுங்கள்..!!

shanthija
14-05-2008, 11:07 PM
காதலின் நினைவுகள் சோகமாக இருந்தாலும் அவை சுமக்க சுகமாகதான் இருக்கும் தோழரே...உங்கல் கருத்துக்கு என் நன்றிகள்..மன்னிக்க வேண்டும் என் எழுத்துப்பிளைகளுக்கு.. நான் நீங்கள் சொன்னதை என் கவனத்துக்கு எடுத்துகொள்கிறேன்

அன்புடன்
லதுஜா

சுகந்தப்ரீதன்
15-05-2008, 02:12 AM
காதலின் நினைவுகல் சோகமாக இருந்தாலும் சுமக்க சுகமாகதான் இருக்கும் தோழியே...உங்கல் கருத்துக்கு என் நன்ரிகல்..மன்னிக்க வேண்டும் என் எலுத்துபிலைகலுக்கு.. நான் நீங்கல் சொன்னதை என் கவனத்துக்கு எடுத்துகொல்கிரேன்
ஹைய்யோ..ஹைய்யோ..ஆளைவிடுங்கம்மா நான் ஓடிடுறேன்...!!
ஒருதிரியில சத்யா அக்காவை நண்பர் என்றழைத்தீர்...பரவாயில்லை..பெயரில் உங்களுக்கு குழப்பம் என ஒப்புக்கொண்டோம்... பின் இங்கேவந்து என்னை ஏன் தோழி என்கிறீர்கள்...?? அம்மா லதுஜா..நீங்கள் எழுத்துபிழையோடு மட்டுமல்ல பொருள்பிழையோடும்தான் எழுதுறீங்க..??!

shanthija
15-05-2008, 08:23 PM
மீண்டும் மன்னிக்கவும் நான் உங்கல் பெயரை தவறாக புரிந்து கொண்டதால் உங்களை தோழி என்று அழைத்து விட்டேன்....தமிழ் மன்றம் என்பதே எங்களை போல திறமை இல்லாதவர்களை வளர்ப்பதர்க்கு தானே எழுத எழுத எனது எழுத்து வளமும் நன்றாக வரும் என்று நம்புகிறேன் தோழரே...


அன்புடன்
லதுஜா

தமிழ் மகன்
30-05-2008, 10:03 PM
தோழி லதுஜா உங்கள் கவிதை அருமையாக இருக்கின்றது. எனக்கு என் பழைய நினைவுகளை கிளரிவிட்டுவிட்டது. சுகந்தப்ரீதன் சொன்னது போல் எழுத்து பிழைகளை சரி செய்து கொள்ளுங்கள். பதிக்கும் முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை படித்து பார்த்துகொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன் உங்கள் அவதார் அருமை. இந்த திரியில் இரண்டாவது பதிப்பு படிக்கும் போது அந்த குழந்தையே சொல்வதுபோல் உள்ளது.