PDA

View Full Version : புரிந்து கொள் பிரிந்து செல்லாதே



shanthija
10-05-2008, 02:27 AM
புரிந்து கொள் பிரிந்து செல்லாதே

என் உயிரில் கலந்த உறவே உனக்கா
என் மனது புரியாமல் போனது...
உன் பிரிவால் நான் படும் வேதனை
யாவும் நீ புரிவாய் எனை அறிவாய்
என்று எண்ணினேன்...
என்னை புரியாது உன்னால் எவ்வாறு
உயிர் வாழ முடிகிறது கண்ணே....


உனக்காக பிறந்தவன் நான் ...எனக்காக
பிறந்தவள் நீ என்று சொன்னவனும் நீ..
இன்று உனக்கானவள் உன்னை காணாமல்
சாக துடிக்கிறேன் அறிவாயா நீ....
கடசிவரை ஒன்றாய் வாழ்வோம் என்றாய்
அன்பே ஏன் என்னை பிரிந்து வாழ்கிறாய்.....

அலுவதர்க்கு கண்ணில் நீரும் இல்லை அதை
துடைத்துவிட்டு ஆறுதல் சொல்ல நீயும் இல்லை...
நான் பூமியில் பிறந்தது குற்றமா அல்லது
உன்னை என் உயிராய் நினைத்தது குற்றமா சொல்...
பிரியாமல் வாழ்வோம் என்ற நீயா இன்று என்னை
புரியாது பிரிந்து சென்றாய்....

நான் மடிந்த பின் என் முகம் பார்க்காவிட்டாலும்
உன் மனதில் என்னை மறக்காமல் வைத்துக்கொள்...



உன்னை பார்ப்பதர்க்கே உயிரே உருகுது என் மனமே:traurig001:


அன்புடன்
லதுஜா

SathyaThirunavukkarasu
10-05-2008, 03:29 AM
யாரை நினைத்து உருகுகிறீர்கள்

shanthija
10-05-2008, 04:06 PM
யாரை நினைத்தும் இல்லை நன்பரே கவிதை என்பதே கட்பனையில் உருவாகிரதொன்ரு தான் ஆகவே இந்தக்கவிதையும் ஒரு கட்பனையே...

அன்புடன்
லதுஜா

சுகந்தப்ரீதன்
14-05-2008, 02:37 PM
யாரை நினைத்தும் இல்லை நன்பரே கவிதை என்பதே கட்பனையில் உருவாகிரதொன்ரு தான் ஆகவே இந்தக்கவிதையும் ஒரு கட்பனையே...
ஆனாலும் ரொம்பத்தான் உருகிறீங்க போங்க..!!

எனக்கு கவிதை கற்பனை கவிதைப்போல் தோன்றவில்லையே..??

அதுசரி... பெண் பெண்ணிடம் சொல்லும்போது தோழி என்றல்லவா சொல்லவேண்டும்..!!
நீங்கள் சத்யா அக்காவின் பெயரை பார்த்து ஆணென்று நினைத்தீரோ..? இல்லை பெண் பெயரில் உலவும் ஆண்மகனோ நீவிர்..??

shanthija
14-05-2008, 11:03 PM
ஓ நான் தான் தவராக நினைத்து விட்டேன் நன்பர் என்ரு மன்னிக்க வேண்டும் ...உங்கல் கருத்திர்க்கு எனது நன்ரிகல்



அன்புடன்
லதுஜா