PDA

View Full Version : நீ இல்லை என்னோடு



shanthija
10-05-2008, 02:02 AM
நீ இல்லை என்னோடு

என்னை விரும்பிய நீயும் இல்லை
என் விழியில் கண்ணீரும் இல்லை

என் மனசின் காயங்கள் இன்னும்
ஆறவும் இல்லை....

உன் நினைவுகள் இன்னும் அழியவும்
இல்லை....

என் உள்ளத்தை வாட்டுதடா உன்
நினைவு....

என்னை மகிழ்விக்க தான் நீயும் இல்லை...

உன்னோடு பேசிட வார்த்தைகள் உண்டு
அதை கேட்பதற்க்கு நீ தான் இல்லை...

என்னோடு நீ இருந்திருந்தால் நாம்
நினைத்ததை சாதித்திருப்போம்...

நீ இன்று என்னோடு இல்லை இறைவன்
தான் நினைத்ததை சாதிக்க விரைந்து
விட்டான்...

கண்கள் கலங்கிட கண்கள் கலங்கிட வாழ்க்கை சக்கரம் சுழள்கிறதே..:traurig001:

அன்புடன்
லதுஜா

பென்ஸ்
11-05-2008, 07:34 PM
பிரிவின் காலங்களில் வரும் வேதனையை அழகாக தந்து இருக்கிறீர்கள்...

ஆனால் வார்த்தைகளில் வலிமை இல்லை.
சித்திரமும் கைப்பழக்கம் தானே...
மன்றம் ஒரு எழுத்து பலகை ... நிறைய எழுதுங்கள்...

எழுத்து பிழைகளை கவனிக்கவும்

வாழ்த்துகளுடன்...

shanthija
11-05-2008, 08:16 PM
உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் நண்பரே..

அன்புடன்
லதுஜா

பூமகள்
11-05-2008, 08:57 PM
நினைவானாய்... நிறைவானாய் - ஏன்
கனவானாய்.. கானலானாய்..??

காலத்தின் கேள்விகளுக்கு
விடைதேடி ஓடோடி
முட்டி வீழ்கிறது
வாழ்க்கை..

என் பெயரின் அழகு
நீ அழைத்ததில் தான்
புரிவித்ததெனக்கு..!!

வெறும் காற்று
நிசப்த ஒலியலையில்
நீ அழைக்கும்
என் பெயர்..
வண்டின் ரீங்காரமாக
இன்னும் என்னில்...!!

கிட்டாத உயரத்தில்
நீ...
திட்டுதிட்டான உன்
அதரச் சிதறல்களை
சுத்தமாக்கி
வாழ எத்தனிக்கிறேன்..
கழிவுண்டு வாழும்
சுகாதார மீன் குட்டியாக...!


என்னை விரும்பிய நீயும் இல்லை
என் விழியில் கண்ணீரும் இல்லை

இருவரிகளில் பிரிவின் துயர் உணர்த்தி அசர வைத்துவிட்டீர்கள் லதுஜா..!!

வார்த்தைகளில் உணர்வு தெரிகிறது... வார்த்தையாடலில் கவனம் செலுத்தியிருக்கலாம்...

மன்றம் நல்முறையில் செப்பனிடும்.. கவலையின்றி.. இங்கு நிறைய படியுங்கள்.. படையுங்கள்..!!

பாராட்டுகள் சகோதரி..!!

அறிஞர்
12-05-2008, 11:24 PM
என்னோடு நீ இருந்திருந்தால் நாம்
நினைத்ததை சாதித்திருப்போம்...

நீ இன்று என்னோடு இல்லை இறைவன்
தான் நினைத்ததை சாதிக்க விரைந்து
விட்டான்...
நினைத்ததை சாதிக்க துணை இல்லை.
இல்லையென்ற வெற்றிடம்
ஏற்படுத்தும் பாதிப்புகள் தான் எத்தனை...

அருமை தோழி..