PDA

View Full Version : மேற்கைச் செதுக்கடா மானுடா



நாகரா
09-05-2008, 05:50 AM
வீரியம் போனது எங்கே - நல்ல
காரியம் தூங்குது இங்கே
சூரியன் செத்ததா மேற்கே - வந்த
காரிருள் திசைகளைத் தின்றதா

கனவுகள் கண்களைத் தின்றதா - தோளில்
தினவுகள் தீர்ந்தும் போனதா
முடக்கம் உடம்பைக் கொன்றதா - அதில்
அடங்கும் உயிரும் சென்றதா

மேற்கைச் செதுக்கடா மானுடா - அதை
மாற்றிக் கிழக்காய்ச் செய்யடா
சிதறும் மேற்கின் சில்லுகள் - புது
உதயம் சேர்க்கும் பூமியில்

வீரியம் இருக்குது இங்கே - நல்ல
காரியம் சிறக்குது இங்கே
சூரியன் செத்தால் என்ன - புதுச்
சூரியன் செய்யடா மானுடா

காரிருளை உருக்கடா மானுடா - எழுதும்
வீரிய மை உருவாக்கிப் போடடா
காரிருளை நிரப்பிய பேனாக்கள் - கவிதைச்
சீரெழுத விடியும் கனாக்கள்

விகடகவி
12-05-2008, 03:25 AM
உந்தன் கவிக்கு நன்றி கவிஞரே

நாகரா
12-05-2008, 03:43 AM
நன்றி விகடகவி

kavitha
16-05-2008, 07:17 AM
மேற்கைச் செதுக்கடா மானுடா - அதை
மாற்றிக் கிழக்காய்ச் செய்யடா
நமது இளைஞர்கள் இப்பொழுது இராப்பகலாக உழைக்கிறார்கள்.... மேற்கத்திய நிறுவனங்களுக்கு.

அனுராகவன்
16-05-2008, 07:39 AM
நன்றி நாகரா அவர்களே!!
நல்லதொரு கவி..
என் வாழ்த்துக்கள்!!

சுகந்தப்ரீதன்
16-06-2008, 01:09 PM
"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா"

என்ற வரிகளின் தோரணையில் உங்கள் கவிதையை வாசிக்கையில் ஒவ்வொரு சொல்லும் உள்ளுக்குள் விதையாய் விழுந்து வீரியமாய் விருச்சமாய் எழுகின்றன..!!

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!!

நாகரா
19-06-2008, 03:11 PM
கவிதா, அனு, சுகந்தப்ரீதன், உம் பின்னூட்டங்களுக்கு நன்றி.