PDA

View Full Version : செதுக்கல்



நாகரா
09-05-2008, 04:35 AM
கல்லுக்கும் சிலைக்கும் இடையே
உளியின் கூப்பிடு தூரத்தில்
சிற்பியின் கனவு

கல் மட்டுமல்ல
செதுக்கப்படுவது
சிற்பியுந்தான்

உடம்பெங்கும் இரணங்களோடு
உயிர்த்தது கல்
சிலையாக

சிற்பியின் பிரசவ வேதனை
உளி வழியே கல்லில் பரவப்
பிறந்தது சிலை

அனுராகவன்
11-05-2008, 12:56 AM
நன்றி நாகரா அவர்களே!!
சிற்பியின் வேலைகள் சுலபமல்ல..
எத்தனை வலிகள்..
மிக அருமையான கவி..

நாகரா
11-05-2008, 04:16 AM
நன்றி அனு

சுகந்தப்ரீதன்
13-05-2008, 09:35 AM
சிற்பம் உயிர்பெற
செந்நீரை சிந்தினான்
சிற்பி..!!

இருக்கம் தளர்ந்து
செதில் உதிர்த்து
சிலையானது கல்..!!

meera
13-05-2008, 10:02 AM
கலைஞனின் கையில் கிடைத்தால் கல்லும் மண்ணும் கூட கலைநயம் பெரும் என்பது எத்தனை உண்மை. அழகிய வரிகள் அண்ணா.

சுகந்தன், பதில் கவி அருமை.

நாகரா
13-05-2008, 02:55 PM
சுகந்தப்ரீதன், உம் பின்னூட்டக் கவிகளுக்கு நன்றி.
மீரா, உம் ஊக்குவிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.