PDA

View Full Version : காலன் தீண்டிய கயலரசிபூமகள்
09-05-2008, 05:27 AM
http://img28.picoodle.com/img/img28/4/5/8/poomagal/f_candlem_a0c0703.jpg

காலன் தீண்டிய கயலரசி..

முத்து பல் சிரிப்பாலே
மனம் மயக்கிய இளந்தளிரே..!
முனைப்பின்றி போனதேனோ - உந்தன்
மலர்விழி மூடி உறங்கத்தானோ??!

எடுத்து வைத்த சிற்பமே.. நீ
செய்யும் வேலை சித்திரமே..!
எழுச்சியின்றி போனதேனோ - எங்களை
அழ வைத்துப் போகத்தானோ??

அமைதியின் இருப்பிடம்.. நீ
பாசத்தின் பதிப்பிடம்..!
உன் பாசம் படிந்த நாட்களெண்ணி
உடைந்து அழுது போகத்தானோ??

கலைமகளின் கடைக் கண்
கிட்டாதென்று மரணமேன்??!
கலையரசி நீ நினைத்தால்
எட்டாததும் உண்டோ??!!

ஓராயிரம் கதை பேசி
ஒன்றாய் விளையாடிய
ஓயாத நினைவலைகள்
ஓடி வந்து தளும்புதே..!!

சிந்திய சிரிப்பொலியும்..
சீரிய உன் பண்பும்..
சிந்தை விட்டகலவில்லை..
சிந்திய கண்ணீரும் அடங்கவில்லை..!

அத்தை மகள் அட்சயமே..
அன்பு வீற்றிருக்கும் நாட்டியமே..!
கண்ணீரோடு ஏன் துமைந்தாய்..? உன்
முடிவெழுதி ஏன் போனாய்??

கோலம் போடும் கோதரசி..
கண்கள் பாடும் கவியமுதே..
கோதை மன பலமெங்கே??
கோமதி உன் மதி எங்கே??!!

ஆறடி கூந்தலழகி.. உன்
ஆறறிவு.. போனதெங்கே??!!
அரைநிமிட அழுத்தத்தில்
அழிவெழுதி போனதேனோ??!!

அமைதியாய் கண்ணுறங்கு தளிர்பூவே - உன்
ஆன்மா துயரின்றி துயிலுறங்க
ஆண்டவனைப் பிராத்தித்து இந்நிலை
அடுத்திங்கு வராத வரம் கேட்பேன்..!

பாரதி
09-05-2008, 08:57 AM
கலைமகள் கைவிட்டாள் என நினைத்து, இயற்கையில் தஞ்சமடைந்த அந்த தூய ஆத்மாவுக்கு கண்ணீர் அஞ்சலி.

எத்தனை முறை சொன்னாலும், படித்தாலும், கேட்டாலும் கண நேர முடிவெடுத்து நிறைவேற்றிக்கொள்ளும் இந்தப்பழக்கம் தமிழ்நாட்டிலும் பரவுவது வேதனை அளிக்கிறது.

கல்விப்பயிற்சியை எவ்விதம் அளிக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் சற்றே சிந்தித்து, தேவையான வகையில் மாற்றியமைக்க அரசை நிர்பந்திக்க வேண்டும். இனிமேல் ஒரு கலையரசி இவ்விதம் முடிவு எடுக்காமல் இருக்க வேண்டும். செய்வார்களா..??

பூமகள்
09-05-2008, 11:06 AM
விரக்தியின் உச்சத்தில் இருந்தாலும், விரல்கள் பத்தும் மூலதனம் என்பதை ஏன் மறந்துவிடுகின்றனர்??!!

உயிர் போக துணியும் இவர்கள், உயிர் வாழ துணிவதில்லையே ஏன்??!!

எனது கல்லூரி காலத்தில் நடந்த ஒன்றை எதிர்நீச்சல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14668) பதிவில் ஏற்கனவே, இங்கு பகிர்ந்திருக்கிறேன்.

மனம் வேதனையடைந்த சம்பவம்..!! உங்களின் கண்ணீர் அஞ்சலி பின்னூட்டத்திற்கு நன்றிகள் பாரதி அண்ணா.

காவிரியில் கரைந்த கோமதியின் அஸ்தியே இவ்வகை இறப்புகளுக்கு இறுதியாகட்டும்..!!

தாமரை
09-05-2008, 01:52 PM
காலச் சுருக்கில்
தன்
காலத்தைச் சுருக்கிக் கொண்ட
மொட்டுக்கு மலரஞ்சலி

உன் நீண்ட தூக்கம்
சிலருக்கு விழிப்பைத் தரட்டும்..

நீ படமாக இருக்கிறாய்
பாடமாகவும்
யார் சொன்னது
உன்னால் படிக்க முடியவில்லை என்று

விழிகள் வியந்து
விரிந்த கனவுகள் தொலைத்து
விழிகள் வியர்த்து அழுகிறதே

விழி தொலைத்த இமைகளாய்
இருண்ட பெற்றோர்
உன் நினைவுகளை ஊன்றிக் கொண்டு
மெல்ல நடக்கப் பழகட்டும்,
அமைதி தேடிய உன் மனம்
அடையட்டும் ஆத்ம சாந்தி
கல்வி என்னும் சாலையை மட்டுமேக் காணுமாறு கண்மறைத்துக் கட்டிய வண்டிக் குதிரைகள்..

பெற்றோர்கள் பெரியோர்கள் மீதும் அதிகமானத் தவறு இருக்கத்தான் செய்கிறது.. இதைத் தவிர வாழ வேறு வழியே இல்லை என மூளைச் சலவை செய்பவர்கள் அவர்கள்தானே.

நல்ல நண்பர் குழாம், உலகத்தின் மீதான தெளிவான பார்வை இவை இரண்டும் தான் இந்த மாதிரியான கொடுமைகளை மாற்ற உதவும்.

வாழ்க்கைப் பயணத்தில் பேருந்தில் அமர்ந்து போய்க்கொண்டிருக்கும் பொழுது சன்னல் வழியே செல்லும் வழியைக் கவனிக்காது, இருண்ட தார்ச் சாலையை மட்டும் பார்த்துக் கொண்டு செல்கிறோம்...

ஒரு பள்ளமோ, மரம் சாய்ந்திருந்தாலோ, மாற்றுப் பாதையில் போகிறோமே தவிர பயணத்தை நிறுத்தி விடுகிறோமா என்ன?

தற்கொலை செய்து கொள்ள மூன்று முக்கியக் காரணங்கள்

1. தன்னம்பிக்கை இன்மை.. கல்வி, காதல், தொழில் போன்றவற்றில் தோல்வி கிட்டும் பொழுது, இருட்டில் தொலைந்ததே வாழ்க்கை, இனி எப்படி வாழ்வது என வாழ்க்கையைச் சட்டென முடித்துக் கொள்வது. சிலர் பழி பாவங்களுக்கு அஞ்சியும் வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

2. பழிவாங்குதல் : தன்னை கஷ்டப்படுத்தியவர்களை ஏமாற்றியவர்களை, மறுத்தவர்களை கஷ்டப் படுத்தப் போவதாக, குற்ற உணர்ச்சிக்குத் தள்ள, அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்த வெறியுடன் எடுக்கும் முடிவு

3. வெறுமை : இனி என்ன இருக்கிறது வாழ்க்கையில்.. என்ற வெறுமை. ஒதுக்கி வைக்கப் பட்ட முதியவர்கள், காதலைத் தொலைத்த காதலர்கள், கண்காணா இடம் சென்று அனாதையாய் இறப்பவர்கள்...

செத்துப் போவது என்பது ஒரு மயக்கம் மட்டுமே.. அதனால் அதற்குப் பிறகு என்ன நடந்தாலும் அது நமக்குத் தெரியப் போவதில்லை என்ற ஒரு குருட்டுத் தைரியம் தான் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தூண்டுகிறது..

செத்தவுடன் வாழ்க்கை முடிவதாய் எண்ணிக் கொண்டு விடாதீர்கள்.. வாழ்க்கை ஒரு ரிலே ஓட்டம் மாதிரி தொடரும்.. நல்ல வாழ்க்கைகள் அடுத்தடுத்த தலைமுறைகளால் தொடரப்படுகின்றன.

வெந்ததைத் தின்று விதி வந்தால் மாள்வதாய் வாழும் மக்கள் ஒருபக்கம்..
சின்னச் சின்னத் தோல்விகளை மிகப் பெரிதாய் கற்பனை செய்து கொண்டு துவண்டு போகும் மக்கள் ஒருபக்கம்..

வாழ்க்கையைச் சற்றுத் தள்ளி நின்று பார்த்தால் பயணங்கள் புரியும்..

கல்வி என்பது மதிப்பெண்களால் மதிப்பிடப்படுவதில்லை.. அறிவுக்கும் மதிப்பெண்ணுக்கும் அதிகச் சம்பந்தமில்லை..

அறிவு, சாமர்த்தியம், புத்திசாலித்தனம் என ஒவ்வொன்றும் தனித்தனி..

ஒரு வகையில் சொல்லப்போனால் சமூகம் மெதுவாய் உடைந்து கொண்டிருக்கிறது.. தனி மனித எண்ணம் மேலோங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் தனிமனிதனுக்கு தனக்கான அடையாளம் தேடச் சொல்லி ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருக்கிறது..

சின்ன உதாரணம், ஒரு தமிழன் தோற்றால் மற்ற தமிழர்கள் அவனை உற்சாகப் படுத்துகின்றன்ர். அவன் வெல்ல, இல்லையென்றால் அதே காரியத்தை இன்னொரு தமிழன் வெல்ல...

தனிமனிதனாக இருப்பவனுக்குத் தான் தோல்வி என்பது பேரிடியாக அமைகிறது.. வாழ்க்கையின் மீது அவனுக்கு இருக்கும் பிடியை நழுவச் செய்கிறது..

ஒரு குடும்பத்தில் இருப்பவர்க்கு ஒருவருக்கொருவர் தோள்கொடுத்து சுமைபகிர்வதால் வெறுமை, தன்னம்பிக்கை இன்மை போன்றவை குறைகின்றன.. நம்மை மனதளவில் நாம் தனியாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே இம்மாதிரிச் சோகங்களைத் தடுக்கும் வழியாகும்..

சிலருக்குச் செவிகொடுப்போம்.. சிலருக்கு மொழிகொடுப்போம்.. சிலருக்குத் தோள்கொடுப்போம்.. சிலருக்கு அன்புப் பார்வையும் புன்னகையும்..

நாம் இருக்கும் ஏரியா பக்கமே இந்தத் துயரம் தலை வைத்துப் படுக்காது..

பூமகள்
09-05-2008, 02:05 PM
சிலருக்குச் செவிகொடுப்போம்.. சிலருக்கு மொழிகொடுப்போம்.. சிலருக்குத் தோள்கொடுப்போம்.. சிலருக்கு அன்புப் பார்வையும் புன்னகையும்..

நாம் இருக்கும் ஏரியா பக்கமே இந்தத் துயரம் தலை வைத்துப் படுக்காது..
வெகு ஆழமாக,ஆராய்ந்து பகிர்ந்த சொல்வேந்தருக்கு எனது கண்ணீரில் நனைந்த நன்றிகள்..!!

இந்த பாடத்தை எல்லாரும் ஏற்று நடப்போம்..!!

நம் போலவே பாடம் கற்றுத் தரும்... சிறந்த குடிமக்களை உருவாக்குவோம்..!!

புதியதோர் உலகம் செய்வோம்..!!

ஷீ-நிசி
09-05-2008, 02:26 PM
மீண்டும் இதுபோன்ற ஒரு துயர் நடைபெறாமல் இருக்கவேண்டுமானால், பள்ளியில் ஏட்டுக்கல்வியோடு வாழ்க்கைகல்வியை கற்றுத்தரவேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் பெற்றோர்களும்.

என் அனுதாபங்கள்!

பூமகள்
09-05-2008, 03:18 PM
உண்மை தான் ஷீ..!! அஞ்சலி செலுத்திய நல்லுள்ளங்களுக்கு எனது நன்றிகள்.
மதிப்பெண்கள் எடுக்கும் வழி முறையோடு மனப் பலத்தையும் கற்றுத் தந்தால் இவ்வகை துயர் ஒருவருக்கும் நடக்காமல் இருக்குமே..!!


வருத்தங்களுடன்,

அறிஞர்
09-05-2008, 03:21 PM
தன்னம்பிக்கையற்று... வாழ்க்கையை முடித்துக்கொள்ளும்
ஒவ்வொருத்தரும் உருவாக்கும் துக்கம் தான் எத்தனை...
வளர்த்த குடும்பத்திற்கு எத்தனை இழப்பு..

இழப்பால் வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

பூமகள்
09-05-2008, 03:40 PM
ஒரு நிமிட முடிவுக்கு முன்னால்
அன்னை முகம் நினைவிருந்தால்...
இத்தனை துயர் தர மனம் வருமா???!!

துக்கத்தில் பங்கெடுத்தமைக்கு நன்றிகள் அறிஞர் அண்ணா.

பென்ஸ்
11-05-2008, 08:51 PM
வருத்தங்களை "ஒப்பாரி" கவிதையாய் இருக்கிறிர்கள் பூமகள்...
இறப்பால் வாடும் உறவுகளுக்கு என் அனுதாபங்கள்....

ஸ்மைலிஸ் கவிதைக்கு அழகு சேர்க்கவில்லை....

பூமகள்
11-05-2008, 09:13 PM
துயரைப் பரிமாற இப்படித்தான்("ஒப்பாரியாக") எனக்குத் தெரிந்திருக்கிறது பென்ஸ் அண்ணா..!

மாற்றி எழுத இன்னும் மெருகேற்ற மன்றத்தில் படித்துக் கற்றுக் கொள்கிறேன்..

நான் நினைத்தேன்.. நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.. ஸ்மைலீஸ் நீக்கப்பட்டுவிட்டது..

நன்றிகள்..!

அக்னி
12-05-2008, 02:03 PM
நினைவுக் கல்லில் நீ...
நினைவே கல்லாய் நாம்...

இதய அஞ்சலிகள்...

aren
13-05-2008, 07:56 AM
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்பார்கள். அதை அவர்கள் தெரிந்திருந்தால் இந்த முடிவு வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

படிப்பு என்பது வேறு அறிவு என்பது வேறு. அவர்களுக்கு படிப்பு வராவிட்டாலும் அறிவை சமயோசிதமாக உபயோகித்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று நினைக்கிறேன்.

என் அஞ்சலிகள்.

பென்ஸ்
14-05-2008, 02:33 AM
துயரைப் பரிமாற இப்படித்தான்("ஒப்பாரியாக") எனக்குத் தெரிந்திருக்கிறது பென்ஸ் அண்ணா..!

மாற்றி எழுத இன்னும் மெருகேற்ற மன்றத்தில் படித்துக் கற்றுக் கொள்கிறேன்..
.!
மாற்றி எழுத என்ன தேவை பூ..????
கவிதை சொல்ல வேண்டியதை உணர்ச்சிபூர்வமாக சொல்லிவிட்டதே,,,!!!

சுகந்தப்ரீதன்
14-05-2008, 04:09 PM
நானும் கண்டிருக்கிறேன் இப்படியொரு காலன் தீண்டிய கயலரசியை என்வாழ்வில்... இன்றைக்கும் நம்ப முடியவில்லை...என்னால் எப்படி அத்தனை துணிச்சலான பெண் அரைநொடியில் அறிவிழந்து அழிவெழ்தினாளென்று..?!

இதற்க்கெல்லாம்.. காரணம் மாதா, பிதா, குருவன்றி வேறுயாரைக் குற்றம்சொல்ல முடியும்..?!