PDA

View Full Version : சொல்லுவேனா என் காதலை



நம்பிகோபாலன்
08-05-2008, 11:58 AM
என் சோகம்
சொல்லும் பொழுதெல்லாம்
ஆதரவாய்
தலை கோதுகிறாய்
சந்தோஷமென்றால்
முதலில் வாழ்த்துவதும்
நீதான்
என் உடல் நிலை
சரில்லையென்றால்
உன்னுள் அத்தனை
பதட்டம்
ஏனென்று நான் கேட்டால்
ஒரு பார்வை மட்டுமே
பதிலாகி போகிறது
முடிவாய்
என் எண்ணங்களை
வெளிப்படுத்த
முயற்சித்து வழக்கம்போல்
தோற்றும் போனேன்
உன் கபடமில்லா சிரிப்பை
பார்த்து
என்று சொல்லுவேன்
உன்னிடத்தில் என் காதலை...

shanthija
10-05-2008, 04:09 PM
அருமையான கவிதை நன்பரே வாழ்த்துக்கல் ...காதலை சொல்லுவதர்க்கு காலம் தாழ்த்த கூடாது அது ஆபத்தாகி விடும்


அன்புடன்
லதுஜா

சுகந்தப்ரீதன்
14-05-2008, 02:31 PM
அய்யா.. நம்பி கோபாலரே..!!

கோபாலனே ஒருபோதும் கோதையர்களிடம் காதல் சொல்ல மருகியதில்லை...உருகியதில்லை..!! நீரேன் இப்படி உருகி மருகிறீர்கள்..??!

காதலென்ன களவுபொருளா.. கல்லங்கபடமில்லாத கன்னியின் சிரிப்பை பார்த்து உங்களுக்குள் மறைத்து வைக்க..?! கூறுமய்யா..கூறும்..!! தலைகோதும் பதுமைக்கு தெரியாதா இல்லை புரியாத நம்பியின் நாடகமெல்லாம்..??

வாழ்த்துக்கள்.. நம்பியாரே...தொடருங்கள்..!!