PDA

View Full Version : விலைமகள்



இராஜேஷ்
08-05-2008, 10:08 AM
இருட்டில் ஆடைகளை களைந்தாள்
பகலில் ஆகாரம் உண்பதற்கு - விலைமகள் -

பாலகன்
08-05-2008, 10:35 AM
இப்போது எல்லாம்,,,, பகலிலேயே ஆடைகளை அவுத்துவிடுகிறார்கள்,,,,
இருட்டில் கணவனுடன் நிம்மதியா துாங்குவதற்கு........

அன்புடன்
பில்லா

ஆதி
08-05-2008, 10:48 AM
அவிழ்பதற்காகவே நாங்கள்
ஆடை அணிகிறோம்..

- நா.காமராசன் - விலைமகளிர் - கருப்பு மலர்கள்

இந்த வரிகளை அசைப்போட வைத்தன உங்கள் கவிதை வரிகள்..

கவிதையின் தலைப்பு "விலைமகள்" என்றிருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து..

வாழ்த்துக்கள் ராஜேஷ்..

இராஜேஷ்
08-05-2008, 10:58 AM
தங்களுடைய கருத்துக்கு நன்றி.

அமரன்
08-05-2008, 06:28 PM
இலைமறையாக கவிதை வடிப்பது எப்படி என்று ராஜேசும் ஆதியும் (நன்றி-காமராசன்) பாடம் நடத்தியுள்ளார்கள். இருவருக்கும் நன்றி.

தொடருங்கள்

Keelai Naadaan
08-05-2008, 06:37 PM
வெறும் ஆகாரத்திற்காக அப்படி ஆக வேண்டியதில்லையே.

அமரன்
08-05-2008, 06:38 PM
வெறும் ஆகாரத்திற்காக அப்படி ஆக வேண்டியதில்லையே.
வெறுமையாக இருப்பதால்த்தானே இப்படி..

ஷீ-நிசி
09-05-2008, 01:20 AM
நல்ல அழகிய குறுங்கவிதை..

இவர்களின் தேவைகள்தான் எத்தனை.. உடையவன் ஊதாரியாய் இருந்தால், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் போராட முடியாமல் உடலையே விற்கும் நிலைக்கு ஆளாகிறார்கள். எனக்கு தோன்றியது ஒரு இரண்டு வரிகள்.


பிள்ளைக்கு மருந்து வாங்க,
சந்தைக்கு விருந்து ஆனாள்.

வாழ்த்துக்கள் நண்பரே!

இராஜேஷ்
09-05-2008, 02:26 AM
அருமையான கவிதை, கலக்கிடிங்க போங்க

இராஜேஷ்
09-05-2008, 02:45 AM
எனக்கு தோன்றிய மேலும் சில வரிகள்

காமுகர்களின் காமப் பசியை போக்கினாள்
தன் குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்க - விலைமகள்

Keelai Naadaan
09-05-2008, 03:03 AM
வெறுமையாக இருப்பதால்த்தானே இப்படி..

இப்படி நாம் சமாதானப்படுத்தி கொண்டால் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்தலாமே.
தவறு செய்து விட்டு வருந்தும் ஒருவரை ஆறுதல் படுத்தலாம். ஆனால் அதற்காக அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டாமே.

இராஜேஷ்
09-05-2008, 04:11 AM
நீங்கள் சொல்வது உண்மைதான் சிலரின் வாழ்கையில், ஆனால் பலர் அதில் தள்ளப்படுகிறார்கள். அவர்களுடைய ஏழ்மையை சிலர் பயன்படுத்திக் கொள்கின்றன்ர். அதை வெளிப்படுத்துவதே நோக்கம்.