PDA

View Full Version : நிழலா..?நிஜமா..?



shibly591
08-05-2008, 04:23 AM
முன்புபோலவே
இப்போதும்
தூங்க முடிவதில்லை எம்மால்.........

இடையில் யாரோ
அடையாள அட்டை கேட்டு
மிரட்டுவதான பிரமை
இன்னும் தொடர்கிறது..

பின்னிரவில்
விமானக்குண்டு வீச்சும்
கன்னிவெடிச்சத்தமும்
காதுகளைப்பிளந்து
உணர்வுகளை உலுக்குகின்றன

சிதறிக்கிடக்கும்
இரத்த்துளிகளுக்கும்
எலும்புக்கூடுகளுக்கும் நடுவில்
சாவின் வாசற்படியில்
கால்கள் வேர்பிடித்து நிற்பது
நிழலா..?நிஜமா..?

இழந்து போன உறவுகளின்
கதறும் குரல்கள்
நினைவுகளின்
வெற்றிடங்களை தின்றபடி...

முகவரியில்லாத ஏதோ ஒரு
தேசத்தின்
மூலையொன்றில்
புலம்பெயர்ந்து வந்து
ஆண்டுகள் பல கரைந்து போயின..

இருந்தும்
ஈழமண்ணில்
தூக்கமின்றி தத்தளித்தது போலவே
இப்போதும்
தூங்க முடியவில்லை எம்மால்....

ஓவியன்
08-05-2008, 06:10 AM
தூக்கமின்றித் தவித்தாலும் புலம் பெயர்ந்த உறவுகளின் ஒருமித்த குரலாய் இருக்கும் இரு கவிதைகள் இதோ ஷிபிலி...!!

மீண்டும் போவோமா...?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10422)
மீண்டும் போவதெப்போ..?? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10497)

shibly591
08-05-2008, 06:15 AM
நல்ல இரு கவிதைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளீர்..புதியவர்களுக்க இலகுவில் படிக்க உதவும்...நன்றி

அனுராகவன்
08-05-2008, 07:19 AM
நன்றி சிப்லி...
ஆகா ..அருமை..
தொடருங்கள்..

shibly591
08-05-2008, 07:22 AM
நன்றி நண்பி...(உங்களை நண்பி என்று அழைக்கலாம்தானே..?)

சுகந்தப்ரீதன்
13-05-2008, 10:20 AM
இருந்தும்
ஈழமண்ணில்
தூக்கமின்றி தத்தளித்தது போலவே
இப்போதும்
தூங்க முடியவில்லை எம்மால்....
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா..?!

சொந்தஊரும் சொர்க்கமாய் மாறும்நிலை விரைவில் வருமா..?!

எக்கங்களோடும் எதிர்ப்பார்ர்புகளோடும் உங்களுடன் நானும் ஷிப்லி..!!

அறிஞர்
13-05-2008, 02:03 PM
காலம் ஏற்படுத்திய காயம் தான் எத்தனை...
நிழல் படுத்தும் பாடும் தான் எத்தனை...

விரைவில் அனைத்தும் நிழல்களும் மறைய
இறைவன் துணை செய்யட்டும்.