PDA

View Full Version : இதே படங்கள் இரண்டு வருடமாக கண்டு கண்கள் பூத்து விட்டன :)ஓவியா
07-05-2008, 02:28 PM
வணக்கம் அவை நடத்துனர்களே,
மற்றும் என் அன்பின் இனிய சான்றோர்களே,
இரு கரங்கூப்பி என் வணக்கத்தை சொல்லிகொள்கிறேன்.
அனைவரும் நலமே காண்க.


ஆலோசனையாக ஒரு வேண்டுகோள்.
இது என்னுடைய ரொம்ப நாள் ஆசை ஏக்கமும் கூட.

தயவு செய்து மன்றத்தின் புகைப்பட கெலரியில் இருக்கும் படங்களை மாற்றி புதுப்புதுபடங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.

இதே படங்கள் இரண்டு வருடமாக கண்டு கண்கள் பூத்து விட்டன. :redface:

புதுப்படமிட்டால் மன்றம் இன்னும் அழகாக மிளிரும்.

இது தமிழன்னை தவிழுமிடம். பல மதத்தினர் வந்து போகுமிடம். முடிந்தால் மதசாற்பற்ற் படங்களை தவிறுங்கள்.

மிக்க நனறி

பணிவான வணக்கத்துடன்
ஓவியா

அறிஞர்
07-05-2008, 02:32 PM
நல்ல எண்ணம்....

மற்றவர்கள் விருப்பத்தையும் தெரிவியுங்கள்.

மாற்ற ஆவன செய்கிறோம்.

அக்னி
07-05-2008, 06:04 PM
பல மதத்தினர் வந்து போகுமிடம். முடிந்தால் மதசாற்பற்ற் படங்களை தவிறுங்கள்.

முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றதே... :smilie_abcfra:

பூமகள்
07-05-2008, 06:04 PM
நல்லதொரு கருத்து.
மதச்சார்பற்ற படங்களை பகிர்ந்து,
மதச்சாயம் பூசிய படங்களை நீக்கி புதிய படங்களை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மன்ற குடும்பத்தில், இனம், மதம், கடவுள் எல்லைகளைக் கடந்து, தமிழன்னையின் ஒர் தாய் குழந்தைகளாக பழகுவோமே..!! :)

ஓவியா
07-05-2008, 06:17 PM
முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றதே... :smilie_abcfra:

ஓ அப்படியா

நான் என்ன சொல்ல வாறேனா!!! நான் அனைத்து மத்ததினையும் ஏற்றுக்கொள்பவள். இருப்பினும் மத சார்பற்ற படங்களை தவிற்ப்பது மன்ற உறுபினர்களின் நெருக்கத்தை அதிகரிக்கும். பல மத்ததினர் வந்து மொழி பற்றை பகிர்ந்துக்கொள்கின்றனர் ஆதலால் முதலில் மொழிக்கு முகியத்துவம் கொடுப்போம்...

தமிழ்மன்ற குடும்பத்தில், இனம், மதம், கடவுள் எல்லைகளைக் கடந்து, தமிழன்னையின் ஒர் தாய் குழந்தைகளாக பழகுவோமே..!! (நன்றி :பூமகள்)

அக்னி
07-05-2008, 06:57 PM
நான் என்ன சொல்ல வாறேனா!!!
அது புரியுது.
ஆனா நீங்க மதச்சார்பற்ற படங்களைத் தவிருங்கள் என்று கூறியுள்ளீர்கள். அப்படீன்னா, மதச்சார்புள்ள படங்களைப் போடச் சொல்லுறீங்களோ என்று நினைத்துவிட்டேன். :mini023:
லேசில மாட்டமாட்டீங்க... மாட்டினா விடமாட்டோமில்ல...

சுகந்தப்ரீதன்
08-05-2008, 02:22 AM
லேசில மாட்டமாட்டீங்க... மாட்டினா விடமாட்டோமில்ல...
பிரிச்சி மேயுற பிதாமகனுங்க..(மன்னிச்சுக்குங்க மாக்கா)..இருக்குற இடத்துல எழுதறதுக்கு முன்னாடி ஏழுவிதத்துல யோசிக்காம எழுதிட்டீங்களே அக்கா...!!!:icon_rollout: (இதுல விளக்கம் வேற..???!!)

ஓவியன்
08-05-2008, 04:06 AM
முன்னுக்குப் பின் முரணாக இருக்கின்றதே... :smilie_abcfra:

ஹீ, நான் மேற்கோள் செய்து பதிவிடத் தொடங்கிய பின்னரே, உம் பதிவைப் பார்த்தேன் அதே விடயத்துக்கு நீர் கலாய்த்து விட்டீரே......!! :icon_b:

MURALINITHISH
08-05-2008, 06:47 AM
படங்களை மாற்றி புதுப்புதுபடங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.


அக்கா நானெல்லாம் இப்பதான் வந்திருக்கேன்
நாங்க பார்க்க வேண்டாமா புது படத்தை வேண்டுமென்றால் போட சொல்லுங்கள் பழைய படம் இருக்கட்டுமேமுடிந்தால் மதசாற்பற்ற் படங்களை தவிறுங்கள்.


மதசாற்பற்ற்
என்றால் மத சார்புள்ள படங்களை போட சொல்கீறிர்களா

படத்தில் என்ன இருக்கிறது
நாம் பார்க்கும் கண்ணில் தான் இருக்கிறது
அழகான முஸ்லிம் குழந்தை படத்தை பார்த்தால் நாம் கண்களையா மூடி கொள்வோம்
சாதாரணமாகவே எனக்கு கடவுளை பிடிப்பதில்லை (எல்லா கடவுளையும்)

ஆனால் சில படங்களில் கடவுள்களை அவர்களுக்கு பிடித்த மாதிரி வரைந்திருப்பார் பாருங்கள் அவர்களின் கற்பனையும் படங்களின் அழகும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும் அதனால் எல்லா படங்களும் இருக்கட்டுமே நாம் பிடித்தவர்கள் கடவுளாக பாருங்கள் பிடிக்காதவர்கள் (என்னை மாதிரி) வரைந்தவரின் கற்பனையை பாருங்கள்

shibly591
08-05-2008, 06:52 AM
மதம் தொடர்பான வாதத்தை விட்டு விட்டு...புதிய படங்களை பதிவேற்றம் செய்வது மன்றத்தை சிறப்பாக்கும் என்பது உண்மைதானே...?

அக்னி
08-05-2008, 10:24 AM
மதம் தொடர்பான வாதத்தை விட்டு விட்டு...புதிய படங்களை பதிவேற்றம் செய்வது மன்றத்தை சிறப்பாக்கும் என்பது உண்மைதானே...?
:icon_b:
ஆமாம் நண்பர்களே...
விட்டுவிட்டு... :icon_ush:
தொடருவோம்...

நான் ஓவியா அக்காவைக் கலாய்க்கலாம் என்று பார்த்தால், திரியின் போக்கே மாறிவிடும் போலிருக்கே...

praveen
08-05-2008, 01:51 PM
சரி இன்றிலிருந்து 7 தினங்களுக்குள் அறிஞர் என்னை நிறுத்தச்சொல்லும் வரை புதிய படங்களாக பதிந்து விடுகிறேன் சரியா. நமது தள பேண்ட்வித் பாதிக்கப்படும் என்பதால் இப்படி செய்யாவிருந்தேன். ஏற்கெனவே மின்புத்தகம் மூலமாகவும் நம் தள பதிவிறக்க அனுமதி அளவு அவ்வப்போது அதன் உச்ச அளவை எட்டிப்பிடிக்கிறது, இதில் இந்த மாதிரி படங்களும் சேர்ந்தால் என்ன ஆகும்.

சோதனைக்கு முயன்று பார்ப்போம்.

அறிஞர்
08-05-2008, 01:59 PM
பிரவீன் நல்லது....

பாண்ட் வித் பிரச்சனையை சோதித்து விட்டு சொல்கிறேன்.

ஓவியா
08-05-2008, 05:24 PM
சரி இன்றிலிருந்து 7 தினங்களுக்குள் அறிஞர் என்னை நிறுத்தச்சொல்லும் வரை புதிய படங்களாக பதிந்து விடுகிறேன் சரியா. நமது தள பேண்ட்வித் பாதிக்கப்படும் என்பதால் இப்படி செய்யாவிருந்தேன்.


அது 'பன்ட்வித் கேபசிட்டி செக்' செய்முறைக்காக என்று மட்டுமே நீங்கள் சொன்னால், நான் எற்றுக்கொள்கிறேன். ஆனால் அனைத்து படங்களும் ஒருவரே பதிவேற்றம் செய்வது என்றால் மன்னிக்கவும் பிரவீன். இதில் எனக்கு உடன் பாடில்லை. :redface: மாற்று கருத்துண்டு.


நீங்கள் ஒருவரே அனைத்து படங்களையும் பதிவேற்றுவது சரியா?

அப்படி ஏற்றினால் உங்களுடைய ரசனையில் மட்டுமே அல்லவா அனைத்து படங்களும் இருக்கும்?

இங்கே உங்கள் ஒருவருடைய ரசனையை எல்லோரும் எற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லையே!!!

மற்றவர்களும் அவர்களுக்கு பிடித்த படங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு கொடுங்களாமே!!!!

ஒருவர் 20 படங்களை பவேற்றுங்கள் என்று ஆலோசனை செய்யலாமே!!!

அனைவரின் ரசனையையும் ரசிப்போமே!! :)

தாழ்மையான வேண்டுகோள்
முதலில் பழைய படங்களை அப்புறப்படுத்துங்கள். பின் புதிய படங்களை பதிவேற்றலாம்.

அமரன்
08-05-2008, 06:41 PM
பழைய படங்களை அப்புறப்படுத்துவதில் சில அசௌகரியங்களுமுள்ளன. பதிவுகள் சிலவற்றை மன்றப்புகைப்படச்சேமிப்பகப் படங்களும் அலங்கரிக்கின்றனவே.

praveen
09-05-2008, 05:22 AM
மன்னிக்கவும் பிரவீன். இதில் எனக்கு உடன் பாடில்லை. :redface: மாற்று கருத்துண்டு.

நீங்கள் ஒருவரே அனைத்து படங்களையும் பதிவேற்றுவது சரியா?

அப்படி ஏற்றினால் உங்களுடைய ரசனையில் மட்டுமே அல்லவா அனைத்து படங்களும் இருக்கும்?

இங்கே உங்கள் ஒருவருடைய ரசனையை எல்லோரும் எற்றுக்கொள்ளவேண்டும் என்று இல்லையே!!!

வாங்க, உங்கள் பதிவில் நிறைய முரன்பாடு உள்ளது. நான் எனக்காகவா பதிகிறேன் என்றேன் நீங்கள் கேட்டதால் தான் பதிகிறேன் என்றேன். ஒரு படம் ஒருவருக்கு மட்டும் பிடித்து மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமா என்ன?.

உங்களுக்கு என்ன மாதிரி பிடிக்கும் என்று சொன்னால் அந்த படங்களையும் ஏற்றி விடுகிறேன்.மற்றவர்களும் அவர்களுக்கு பிடித்த படங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு கொடுங்களாமே!!!!

மற்றவர் யாருக்கும் படம் ஏற்றுவதில் தடை இல்லையே, பின் எப்படி மற்றவருக்கு வாய்ப்பு என்று சொல்கிறீர்கள்.

சரி இவ்வளவு சொல்லும் நீங்கள் ஏதாவது படம் ஏற்றுனீர்களா?தாழ்மையான வேண்டுகோள்
முதலில் பழைய படங்களை அப்புறப்படுத்துங்கள். பின் புதிய படங்களை பதிவேற்றலாம்.
இது உண்மையிலே தாழ்மையான வேண்டுகோள் இல்லை கருத்து. மற்றவர் படத்தை ஏன் நீக்க வேண்டும். மற்றவருக்கு அது சங்கடமாக இருக்காதா?. மற்றவர் படைப்பு மற்றவருக்கு பெரிதாக தானே இருக்கும், அது உங்கள் பார்வையில் சலிப்ப்பூட்டுவதாக குறைபட்டதாக இருந்தாலும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவோ.

வெற்றி
10-05-2008, 03:42 AM
தமிழ் அறிஞர்கள்....இயற்க்கை காட்சிகள்..தமிழ் பாரம்பரித்தை காட்டும் படங்கள்...தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்கள்...இது போல்......ஏதேனும் இருந்தால் நல்லது ...