PDA

View Full Version : பிரிகிறேன் தோழியாய்...



நம்பிகோபாலன்
06-05-2008, 07:45 PM
என் இனிய தோழா
உயிராய் நான் மதிக்க
நீயோ
காதலிப்பதாய் கிழித்துவிட்டாய்
இன்றுவரை
உன்னுடன் பழகிய பொழுதில்
வரையரத்து பழகினேன்
வரம்புமீறாமல் பழகினேன்
எந்த ஒரு நிலையிலும்
சலன படுத்தியதில்லை
சஞ்சலமும் எனக்கில்லை
பின்பு ஏன் காயம்
தோழமையுடன் பழகியது தவறா
உன் கவலைகளில்
தோள் கொடுக்க
தோழியாகவே விரும்பினேன்
காதலியாய் அல்ல
செல்பேசியில் பேசியிருப்போம்
விளையாட்டை வார்த்தைகளை
வாழ்க்கையை அல்ல
பேசி பழகினாலே
தவறாக பார்க்கும்
சமூகத்தில் நீ எப்படி....
புரிதல் உறவுகளின்
அடையாளம்
அதனை தொலைத்தமைக்கு
நன்றி
விலகுகிறேன் தோழியாகவே....

shanthija
07-05-2008, 12:30 AM
நன்பரே உங்கல் கவி அருமை பாராட்டுக்கல் ....நட்பை நட்பாக புரிந்துகொல்லாமல் நட்பை கொச்சப்படுதுவோர்க்கு ஏற்ற கவி நன்பரே வாழ்த்துக்கல்

அன்புடன்
லதுஜா

விகடகவி
07-05-2008, 02:23 AM
..உந்தன் கவிக்கு நன்றி...

நம்பிகோபாலன்
07-05-2008, 05:35 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி..

மனோஜ்
07-05-2008, 09:18 AM
தோழமையை அறியாது தோன்றியதை பேசும் மாந்தருக்கு
ஏற்ற கவி நன்றி