PDA

View Full Version : மியான்மாரில் பேரழிவு



அன்புரசிகன்
06-05-2008, 01:59 PM
பர்மா என முன்பு அழைக்கப்பட்டு வந்த மியான்மார் அண்மையில் நிகழ்ந்த சூறாவளி அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்திருக்கிறது... ஏறத்தாள 45,000 பேர் வரை இறந்து அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது...

இந்த அனர்த்தத்தினால் பொகாலே (Bogalay) என்ற நகரம் 95% அழிவு கண்டுள்ளது... அநேகமானோர் 12 அடி உயர இராட்சத அலையினால் இறந்துள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 ற்கும் அதிகமானோரின் இறப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இந்துசமுத்திரத்தையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் இதுவே பாரிய அனர்த்தமாக கருதப்படுகிறது. பல நாடுகளும் முன்வந்து உதவுவதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது... உங்கள் பார்வைக்காக சில படங்கள்:

http://img26.picoodle.com/img/img26/4/5/6/t_0605burma1lm_8235d23.jpg
---
http://img26.picoodle.com/img/img26/4/5/6/t_0605burma2lm_4e96cbb.jpg
---
http://img28.picoodle.com/img/img28/4/5/6/t_0605burma3lm_cdffc53.jpg
----
http://img32.picoodle.com/img/img32/4/5/6/t_0605burma4lm_caafde4.jpg

மேலதிக தகவலுக்கு இங்கே (http://news.ninemsn.com.au/article.aspx?id=458219) செல்லுங்கள்.

ஷீ-நிசி
06-05-2008, 02:04 PM
மறுபடியும் ஒரு சுனாமியா?!

அறிஞர்
06-05-2008, 02:09 PM
நேற்று செய்தியை கண்டேன்...
மிகப்பெரிய அழிவுதான்....
சிறிய நாட்டிற்கு, பெரிய நாடுகளின் உதவி அவசியம் தேவை..

அக்னி
06-05-2008, 02:09 PM
பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.
அனர்த்தங்கள் இனியும் தொடராதிருக்க, இயற்கை மனம் இரங்கட்டும்.

பாலகன்
06-05-2008, 06:52 PM
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி இது

அன்புடன்
பில்லா

அனுராகவன்
07-05-2008, 12:31 AM
நானும் தொலைக்காட்சியில் கண்டேன்..
அந்தோ! இயற்கையின் கோர தாண்டவம்..!
என் ஆழ்ந்த அனுதாபம்...

ஓவியன்
07-05-2008, 02:13 AM
இயற்கையை மனிதன் தான் வென்றதாக நினைத்துக் கொண்டிருக்க, இயற்கை மனிதன் தன்னை வெல்ல முடியாதென அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறது... :frown:

இறந்தவர்களுக்காக பிரார்த்திப்போம், அங்கே உதவி நாடித் தவிப்பவர்களுக்கு அனைத்துலகமும் கைகொடுக்கட்டும்...