PDA

View Full Version : காதலை புரிந்துகொள்



நம்பிகோபாலன்
06-05-2008, 09:27 AM
படித்து முடித்துவிட்டேன்
என்று நினைத்த பொழுதெல்லாம்
ஏதேனும்
முக்கிய கேள்விகள்
தேர்வில் மறந்துபோவதைபோல
எவ்வளவோ முயற்சித்தும்
சொல்ல வந்த காதல்
உன்னை பார்த்ததும்
மெளனமாய் செல்கிறது
என்றேனும் புரிந்து கொள்வாயா
என் காதலை.....

kavitha
06-05-2008, 10:38 AM
எழுதாத பதில்கள் தேர்வாளருக்கு எப்படிங்க தெரியும்?
குறிப்பாலாவது அவர்களுக்கு உணர்த்திவிடுங்கள்.

சுகந்தப்ரீதன்
14-05-2008, 02:43 PM
அட..அட.. என்ன நம்பி இது..??

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த நம்பியாரா நீங்கள்..?!

ம்ம்ம்.. காத்திருத்தலும் சுகம்தான் காதல் கிடைக்குமென தெரிந்துகொண்டால்...!!

lolluvathiyar
14-05-2008, 03:08 PM
சொல்ல வந்த காதல்
உன்னை பார்த்ததும்
மெளனமாய் செல்கிறது
என்றேனும் புரிந்து கொள்வாயா
என் காதலை.....

சொல்ல தயக்கம் என்றால் பார்க்க கூடவா தயக்கம், நேராக காதலியின் கன்னை நோக்குங்கள் உங்கள் கன்கள் சொல்லிவிடும் உங்கள் அத்தனை உனர்ச்சிகளையும்.