PDA

View Full Version : மரங்களின்றி...



நாகரா
06-05-2008, 03:45 AM
முண்டமாய் மண் நின்றதால்
தலை துவட்ட வரவில்லை
மழை

விகடகவி
06-05-2008, 05:20 AM
உந்தன் கவிக்கு நன்றி நாகரா..
இறையருள் பெருவாயாக..

நாகரா
06-05-2008, 05:58 AM
உம் வாழ்த்துக்கு நன்றி பல விகடகவி

நாகரா
06-05-2008, 09:59 AM
பச்சைக் கொடி ஒன்று கூடப் பறக்கவில்லையே
எப்படிக் கடக்கும்
மழை இரயில்!

kavitha
06-05-2008, 10:41 AM
சமீபத்திய உங்களது கவிதைகள் மாறுபட்டு பசுமை காண்கிறது.
அழகிய மரவளர்ச்சி கவிதை.

பூமகள்
06-05-2008, 10:46 AM
இயற்கையைப் பாட
இனிப்புச் சுவை கூடத்தானே செய்யும்??!! ;)

நைச்சியமாக நல்ல சிந்தனையை மூன்றே வரிகளில் புகுத்திவிட்டீர்கள்...!!

ஆச்சர்யம்.. மனமார்ந்த பாராட்டுகள் நாகராஜன் அண்ணா.
தொடருங்கள்..!! :)

நாகரா
06-05-2008, 12:44 PM
கவிதா, பூமகள், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி