PDA

View Full Version : இயலாமை



ஆதி
05-05-2008, 06:42 PM
பூங்கா நகரின்
சுரங்க நடைப் பாதையருகே
நாற்றமும் மூக்கை மூடும்
குப்பைத் தொட்டியில்
இருக்கும் புரோட்டாத் துண்டுகளை
ரசித்து நாசியே இல்லாதவன் போல்
ருசித்துண்டிருந்த கிழவனுக்கு
ஒரு குவளை தேனீர்
வாங்கித் தர வக்கில்லாததின்
வடுதான் இன்றும்
வறுத்துகிறது ரணமாய்..

விகடகவி
06-05-2008, 05:21 AM
உந்தன் கவிக்கு நன்றி ஆதி,...
அன்புடன் விகடகவி...

kavitha
06-05-2008, 10:48 AM
ஒரு குவளை தேனீர்
வாங்கித் தர வக்கில்லாததின்
வடுதான் இன்றும்
வறுமையை இயலாமை என்கிறீர்களா ஆதி?
70, 80 களிலும் உழைத்து உண்ணும் முதியவர்களைப்பார்த்திருக்கிறேன்.
உடல் ஊனமுற்றவர்கள் கூட தங்களால் முடிந்த வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள்.
சோம்பேறித்தனம் - மூக்கை அடைத்து விட்டது.
”மூச்சை அடைக்கும் காலம் வரை....
ஆடிய காலும், பாடிய வாயும் ஓயாது.”

ஆதி
08-05-2008, 11:05 AM
ஆமாங்க அக்கா வறுமையைத்தான் இயலாமை என்றேன்..

பின்னூட்டத்திற்கு நன்றிகள் அக்கா..

அனுராகவன்
11-05-2008, 12:50 AM
முதியவர்கள் இன்றும்
பிள்ளைகளால்
காப்பத்தில்
பெற்றும் என்ன
பயன் மனம்
குமழும் நெஞ்சமே!!

இப்படிதான் ஆதி!! இன்று எத்தனை பெற்றோர்கள் ..
உங்கள் கவியில் ஒரு தாக்கம் தெரிகிறது..
என் வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
13-05-2008, 09:55 AM
வாங்கித் தர வக்கில்லாததின்
வடுதான் இன்றும்
வறுத்துகிறது ரணமாய்..

இதே கருத்தை பூ அண்ணா..ஒரு கவிதையில் சொல்லியிருப்பார்..!!

பிச்சக்காரனுக்கும் வக்கத்தவனுக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை..வரட்டு கவுரவம் என்ற ஒன்றைத் தவிர என்று தன்னையே உருவகமாக்கி கூறியிருப்பார்..!!

வாழ்த்துக்கள் ஆதி...!!!

சாலைஜெயராமன்
13-05-2008, 10:24 AM
நாற்றத்தையே உகந்து உயிர்க்காயும் கிழவனின் நிலை ஒன்றும் அத்தனை பரிதாபகரமானது அல்ல திரு ஆதி. ஏனெனில் பிச்சைத் தொழிலின் பலத்தை நன்கு உணர்ந்தவர்களே நம் நாட்டில் அதிகம். ஒரு குவளைத் தேநீர் வாங்கித்தர முடியாததற்காக வருத்தப்படும் உங்கள் உணர்வுகளை ஒரு போதும் உயர்வாக மதிக்கப் போவதில்லை இந்தக் கூட்டம். ஏனெனில் நிச்சியம் அவர்களுக்குத் தெரியும் இந்த மடம் இல்லையென்றால் வேறொரு சந்தை மடம். சோம்பேறிகளி்ன் அலுப்பில்லாத தொழிலல்லவா பிச்சையெடுப்பது.

இங்கே உயர்ந்து நிற்பது இயலாமை வசப்பட்ட ஜீவன் தான்.

நல்ல கவிதைக் கரு. பாராட்டுக்கள்

aren
13-05-2008, 10:28 AM
பல தடவைகள் நாம் உதவவேண்டும் என்று நினைப்போம் ஆனால் நம்மால் அது முடியாமல் போய்விடும்.

சந்தர்பம் கிடைக்கும்பொழுது உங்கள் உதவியை மற்றவர்களுக்கு செய்திடுங்கள். அந்த சந்தோஷத்தில் இந்த மன உளைச்சல் தானாகவே போய்விடும்.

ஷீ-நிசி
13-05-2008, 01:40 PM
வறுமையை இயலாமை என்கிறீர்களா ஆதி?
70, 80 களிலும் உழைத்து உண்ணும் முதியவர்களைப்பார்த்திருக்கிறேன்.
உடல் ஊனமுற்றவர்கள் கூட தங்களால் முடிந்த வியாபாரம் செய்து பிழைக்கிறார்கள்.
சோம்பேறித்தனம் - மூக்கை அடைத்து விட்டது.
”மூச்சை அடைக்கும் காலம் வரை....
ஆடிய காலும், பாடிய வாயும் ஓயாது.”

உண்மை!

அறிஞர்
13-05-2008, 01:59 PM
இப்பொழுதுதாவது நினைத்து பார்க்கிறீர்களே
அதுவே பெரிய விசயம் தான்.
---
பல நேரங்களில் அனைவரும் எண்ணும் விசயம் இது...

அருமை ஆதி..

இயன்ற பொழுது உதவி செய்ய தயங்க கூடாது...