PDA

View Full Version : குருவி திரை விமர்சனம்

sns
05-05-2008, 09:55 AM
வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.

விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.

விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.

கோச்சா கதாபாத்திரத்தில் சுமனும், அவருடைய கூட்டாளியான கொண்டரெட்டி பாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர்.

மலேசியாவில் உள்ள கோச்சாவை ஒழிக்க, இந்தியாவில் இருந்து வெற்றிவேல், ஓப்ஸ் (விவேக்) இருவரும் மலேசியாவிற்கு பறக்கின்றனர்.

கோச்சாவைப் பற்றி தகவல் சேகரிக்க முயலும் வெற்றிவேல், ஒரு கட்டத்தில் சிங்கத்தின் குகைக்கு உள்ளேயே செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கோச்சாவின் வீட்டில் நுழைகிறார்.

கோச்சாவின் தங்கையாக த்ரிஷா. பணக்கார ரவுடிக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான தேவி கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷா இப்படத்திலும் தனது முத்திரையை (கவர்ச்சி... காதல்... நடிப்பு) பதித்துள்ளார்.

கோச்சா குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தேவி மறுக்கிறார். இதையடுத்து வழக்கம் போல் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் காதல் வளர்கிறது (தமிழ் சினிமா கதையை வேறு எப்படியும் நகர்த்த முடியாது போல...)

புத்தாண்டு நெருங்குகிறது... உலகமே புத்தாண்டைக் கொண்டாட கோலகலமாக தயாராகிறது. ஆனால் விஜய்... கோச்சாவை போலீசிடம் வசமாக சிக்க வைக்க ஏதாவது ஒரு முக்கிய ஆதாரம் சிக்காதா எனக் தேடுகிறார்.

புத்தாண்டுக்கு முன்பாகவே கிடைக்கிறது அந்த முக்கிய ஆதாரம். புத்தாண்டு தினத்தன்று வெற்றிவேல், தேவி, ஓப்ஸ் மூவரும் மலேசியாவில் இருந்து புறப்படுகின்றனர்.

விஜய் கையில் சிக்கியது என்ன ஆதாரம்... கோச்சா, கொண்டரெட்டி கும்பல் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்பட்டதா... விஜய் வென்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை. இடையிடையே குருவி - தேவி டூயட் பாடல்களும் செருகப்பட்டுள்ளன.

ஏற்கனவே விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் உருவான `கில்லி' சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதைப் போலவே குருவியிலும் மூவர் முத்திரை தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படத்திலும் கதம்பமான விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் தரணி.

விஜய் கையில் சிக்கிய ஆதாரத்தை கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று கதையை முடித்திருப்பதில் இயக்குனர் தரணி மீண்டும் 'கில்லி'யடித்திருக்கிறார் என்றே கூறலாம்.

காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்*ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது.

கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்*ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.

நன்றி viparam.com

இன்னும் குருவி திரைப்படம் பார்க்க முடியவில்லை,ஆனால் குரு திரைப்படம் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தால் அனைவரும் ரொம்ப மோசம் என்றுதான் சொல்கின்றார்கள்.
நான் தேடியதில் குருவி பற்றி கொஞ்சம் நல்லபடியாக சொல்லப்பட்ட இந்த விமர்சனத்தை தந்து நம் மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பர்கின்றேன்.
இளைய தளபதியின் ரசிகர்களே வாருங்கள் .......

ஆதி
05-05-2008, 10:08 AM
தரணி இப்படி ஒரு மொக்கப் படம் தருவார் னு எதிர்ப்பார்க்கலை..

மொதல் நாள் மொதல் ஷோ போன..

வெளில அடிக்கிற வெயில விடக் கொடுமையா படமிருக்க..

ஞாபகம் வந்தது வைரமுத்துவின் வரிகள்..

நம்மூர் ஜனங்கள்
மற்ற எவைக்கும் விட
சினிமா டிக்கட்டுக்காக
செலவளித்த வியர்வை அதிகம்..

நம்மூர் ஜனங்கள்
வெளிச்சத்தில் வாழ்க்கையை
தொலைத்துவிட்டு
சினிமாவின் செயற்கை இருட்டில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

இந்த வரிகளுடன் நானும் ஒரு சில வரிகள் சேர்த்தேன்..

நம்மூர் ஜனனங்கள்
வேறெங்கும் விட
இது போன்ற
படங்களைப் பார்த்து
பணம் தொலைத்துதான் அதிகம்..

அனுராகவன்
05-05-2008, 10:11 AM
நான் இன்னும் படம் பார்க்கல..
இந்த விமர்சனம் அருமை..
நல்ல விரிவான விமர்சனம்..
படம் பார்க்க போகலாமா என்று மக்கள் சொல்லட்டும்..
இப்ப நான் வருகிறேன்..

ஓவியா
05-05-2008, 10:12 AM
விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

எனக்கு சுண்டெலி :redface::redface: முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!! :icon_p::icon_p:

ஆனாலும் மற்ற திறைமயான கூட்டணி சேர்ந்து உருவாக்கிய படமென்பதால்.... பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது.... :D:D

லண்டனில் திறையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதாம்

sns
05-05-2008, 10:41 AM
விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

எனக்கு சுண்டெலி :redface::redface: முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!! :icon_p::icon_p:

என்ன அக்கா இப்படி சொல்லிபுட்டிங்க நம்ம அணுவும் திரிஷா அவதாரில் தான் இருக்காரு , எவ்வளவு அழாக இருக்காங்க

மதி
05-05-2008, 12:30 PM
யார் இந்த விமர்சனம் எழுதினாங்கன்னு தெரியலியே..
கில்லியிலும் சரி... தூள்லேயும் சரி.. கதாநாயகிக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.. தனித்துவம் இருக்கும்.. இதுலேயும் இருக்கு. திரிஷாவ.. லூசாவும் அசடாவும் காட்டறதுல. படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டல..

படம் முழுக்க இரைச்சல்.. படம் முடிஞ்சு வெளியே வந்து கொஞ்ச நேரத்துக்கு கொய்ங்னு ஒரே சத்தம். வித்யாசாகர் வீணடிக்கப்பட்டிருக்கார். உப்பு சப்பில்லாத கதை, பலமில்லாத திரைக்கதை, ஆங்காங்கே வெட்டிட்டாங்களோன்னு நினைக்கக்கூடிய எடிட்டிங்..ஆந்திரா வாசனை தூக்குது. சரமாறியா சுட்டாலும் ஒரு புல்லட் கூட இளைய தளபதி உடம்புல படாதது ஆச்சர்யம்..!

நல்ல விஷயம்... நடனத்தில் அநியாயத்துக்கும் விஜய் மெனக்கெட்டிருக்கார். சில மூவ்மெண்ட்ஸ் பார்க்க ஈஸியா இருக்கும். ஆனால் முட்டி பேந்துடும். அத்தகைய ஸ்டெப்களை மிக சுலபமாக செய்திருக்கிறார். இருக்கறதிலேயே எனக்கு கொஞ்சம் பிடித்தமான...
"தனனே தந்தானானே.. தந்தானே... யூ..நோ.." பாடலுக்கு அரைகுறை உடையுடன் திரிஷா ஆடுவது சகிக்கல. சற்று நல்லா எடுத்திருக்கலாம்.

ஆக மொத்தம்.. நிறைய இரைச்சலுடன் கூடிய அதிக பட்ஜெட் பேரரசு படம் பார்த்த எபக்ட்.. ஒரு முறை பார்க்கலாம்.. வேற வேலையே இல்லீன்னா..

தாமரை
05-05-2008, 12:36 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=294630&postcount=24

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!!!

தங்கவேல்
05-05-2008, 01:05 PM
அப்போ பிளாப்பா ??? அடக் கொடுமையே....

ஓவியன்
05-05-2008, 03:14 PM
எஸ்.என்.எஸ்...!!

நம் மன்றத்தின் திரைப்பட விமர்சனங்கள் வித்தியாசமானவை,
அவை, மற்றைய தளங்களிலிருந்து வேறுபட்டவை என்ற பெருமை கூட எனக்குண்டு...

அத்தகைய விமர்சனங்கள் வரும் பகுதியில் உங்களது சொந்த விமர்சனத்தைத் தந்திருந்தால், உங்களுக்கும் மன்றத்துக்கும் சிறப்பாக இருந்திருக்குமே....

தொடரும் காலங்களில் சொந்த விமர்சனங்களை மட்டும் தருவீர்களென்ற எதிர்பார்பில்.......

ஓவியன்.

பூமகள்
05-05-2008, 05:36 PM
எங்க 'தல'க்கு இப்ப தான் பில்லா முதல் நேரம் ஒர்க்கவுட் ஆகியிருக்கு... 'தல' ரசிகர்களே ஓடியாங்கோ....!!
ஆனா பாருங்க.. இளைய தளபதிக்கு நேரமே சரியில்லை...!!

அழகிய தமிழ் மகனும்.... போச்சு.. குருவியும் பறந்தே போயிடும் போல இருக்கே...!!!
அழகிய தமிழ் மகனில் அழ வைத்தவர்.. இப்போ சினிமா தியேட்டர் சீட்டை விட்டு பறக்க வைப்பார் போல இருக்கே??!!

ஓவியா
05-05-2008, 05:44 PM

இதெல்லாம் நடக்காத விசயம்,
எங்க தளபதி கில்லிகிட்ட உங்க தலயின் தல சும்மா பந்தாடப்படும்....

உங்க தல கூடதான் சும்மா பறந்து பறந்து பரதமாடினார் என்னா ஆச்சு ஊஊ......... கடைசியில் ஊனமாதான் ஆனார் :D:D:D

அழகிய தமிழ் மகன் எங்க விஜய், பெங்காளி நாட்டு தலை அல்ல :cool::cool: க்கூம்.

விஜய்யின் ஆஸ்த்தான ''i love you da chellam' ரசிகை
- ஓவிசெல்லம்

arun
05-05-2008, 06:23 PM
கில்லி கொடுத்த தரணியா குருவியை தந்தது என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு விமர்சனமா?:confused:

பரவயில்லை விஜய் ரசிகர்கள் இதை பார்த்தாவது மகிழட்டும்... :D:D:D:D

sns
06-05-2008, 05:37 AM
எஸ்.என்.எஸ்...!!

நம் மன்றத்தின் திரைப்பட விமர்சனங்கள் வித்தியாசமானவை,
அவை, மற்றைய தளங்களிலிருந்து வேறுபட்டவை என்ற பெருமை கூட எனக்குண்டு...

அத்தகைய விமர்சனங்கள் வரும் பகுதியில் உங்களது சொந்த விமர்சனத்தைத் தந்திருந்தால், உங்களுக்கும் மன்றத்துக்கும் சிறப்பாக இருந்திருக்குமே....

தொடரும் காலங்களில் சொந்த விமர்சனங்களை மட்டும் தருவீர்களென்ற எதிர்பார்பில்.......

ஓவியன்.

குருவி படத்த பாத்துட்டு என்னால ஒரு நல்ல விமர்சனத்தை தரமுடியாது என்று நினைத்துதான் யாரோ ஒரு புண்ணியவான் குருவி பற்றி நல்லபடியான விமர்சனத்த இணையத்துல தந்திருந்தார் அத அப்படியே இங்கு தந்தேன்
இனிவரும் கலங்களின் எனது சொந்த கருத்துக்களை தர முயல்கின்றேன்
நன்றி ஓவியன்

sns
06-05-2008, 05:40 AM
பரவயில்லை விஜய் ரசிகர்கள் இதை பார்த்தாவது மகிழட்டும்... :D:D:D:D

இததான் நானும் எதிர்பார்த்தேன் :p

ஓவியன்
06-05-2008, 08:06 AM
விஜய்யின் ஆஸ்த்தான ''i love you da chellam' ரசிகை
- ஓவிசெல்லம்

அது விஜயின் வார்த்தையில்லை, நம்ம பிரகாஸ்ராஜோடதாச்சே...!! :D:lachen001::D

உதயசூரியன்
06-05-2008, 09:30 AM
குருவி படத்த பாத்துட்டு என்னால ஒரு நல்ல விமர்சனத்தை தரமுடியாது என்று நினைத்துதான் யாரோ ஒரு புண்ணியவான் குருவி பற்றி நல்லபடியான விமர்சனத்த இணையத்துல தந்திருந்தார் அத அப்படியே இங்கு தந்தேன்
இனிவரும் கலங்களின் எனது சொந்த கருத்துக்களை தர முயல்கின்றேன்
நன்றி ஓவியன்

அட கஷ்ட காலமே..
இப்படி ஒரு பில்டப் தேவையா.. ரசிகர்களே..
விஜயின் நல்லா இருக்குன்னு சொல்ற படமே... பொதுவா சகிக்காது..
இதில இது வேறயா..

இவ்வளவு வருடங்கள் ஆகியும் சொந்தமாக சுய பரிசோதனை..
சுய நடிப்பு திறமையை இன்னும் விஜய் தர காணோம்..

ஆதியின் கடைசி வரிகள்.. தமிழ்னை செருப்பால் அடித்தது..

ஆதியின் வைர வரிகள் இதோ
"இந்த வரிகளுடன் நானும் ஒரு வரிகள் சேர்த்தேன்..

நம்மூர் ஜனனங்கள்
வேறெங்கும் விட
இது போன்ற
படங்களைப் பார்த்து
பணம் தொலைத்துதான் அதிகம்.."

வாழ்த்துக்கள் ஆதி

வாழ்க தமிழ்

ஷீ-நிசி
06-05-2008, 02:24 PM
குருவி படத்த பத்தி யாரும் தப்பா பேசாதீங்க..

ஏங்க குருவினு பேர் வச்சா, பின்ன பறந்து பறந்து போகாம நொண்டி நொண்டியா போவாங்க...

எங்க தலய குறை சொல்றதே உங்க பொழப்பா போச்சு..

அடுத்து வரும் பாருங்க.. தலைப்பு 'மைனா' :)

சூரியன்
06-05-2008, 03:31 PM
படம் பார்க்கும் அளவுக்கு உள்ளதா?

arun
07-05-2008, 06:28 PM
படம் பார்க்கும் அளவுக்கு உள்ளதா?

விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் :D:D:D

அமரன்
07-05-2008, 07:24 PM
என்னமோ போங்கப்பா..
வழக்கமாக விஜயின் படங்களை தூக்கிப் பிடிக்கும் "சினிசவுத்" கூட குருவியை சுட்டுப் பொசுக்கி உள்ளது..
படம் பார்க்கப் போகலாமா? வேண்டாமா என்று ஒரே குழப்பமாக இருக்கு.

அனுராகவன்
08-05-2008, 12:41 AM
படம் ஒருதடவை பார்க்கலாம்..குருவி என்று ஏன் பெயர் வைத்தாற்கள் என்று தெரியவில்லை..கதை எங்கோ போகுது..
விஜய் ரசிகர்கள் பார்க்க சிறந்த படம்..
மற்றபடி பழைய காதல்கதை,கடப்பா காப்பாற்றுதல்..

கண்மணி
08-05-2008, 02:15 AM
விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

எனக்கு சுண்டெலி :redface::redface: முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!! :icon_p::icon_p:

ஆனாலும் மற்ற திறைமயான கூட்டணி சேர்ந்து உருவாக்கிய படமென்பதால்.... பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது.... :D:D

லண்டனில் திறையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதாம்

திறமையான கூட்டணி இருந்தால் மட்டுமே படத்தைப் பார்க்கலாம்னு தோணுது.. போலாம்.. வர்ரீங்களாக்கா?

:lachen001::lachen001::lachen001:

shibly591
08-05-2008, 05:36 AM
நான்தான் பாடல்களைக்கேட்டு விட்டு படம் சரியாக அமையாது என்று ஆருடம் கூறழனேனே...?நினைவு இல்லையா?எல்லோரும் படம் வரட்டும் இன்னும் இரண்டு மூன்ற தடவை கேட்டால் சரியாகிவிடும் என்றெல்லாம் குழப்பி விட்டு....இப்போது பாருங்கள் பலர் நேரத்தை வீணடித்து படம் பாரக்க போய்விட்டீர்கள்...அய்யோ..அய்யோ...?????????இனி தசாவதாரம் படம் வரும் வரை பொறமை காப்போம்..சரியா??????????

ஓவியன்
08-05-2008, 05:54 AM
விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம் :D:D:D

ஏன் விஜய் ரசிகர்கள் கண்டிப்புடன் தான் பார்ப்பாங்களா, கல கலப்புடன் பார்க்க மாட்டாங்களா.......??? :D:D:icon_rollout:

parimaala
08-05-2008, 06:04 AM
விஜய் ரசிகளுக்கு மட்டுமல்லாமல் எல்லோரும் பார்க்கும் படமாக இருக்க வேன்டும் என்பதே என் ஆசை

இராஜேஷ்
08-05-2008, 06:35 AM
எல்லாம் சரி, படம் ஒரு தடவை பார்க முடியுமா?

shibly591
08-05-2008, 06:38 AM
ம்ம்ம்...உங்க தலையெழுத்தை யாரால மாற்ற முடியும்...ஒரு தடவை பார்த்து விட்ட நீங்களே இந்த வினாவுக்கு விடை தாருங்க....

arun
08-05-2008, 08:36 PM
ஏன் விஜய் ரசிகர்கள் கண்டிப்புடன் தான் பார்ப்பாங்களா, கல கலப்புடன் பார்க்க மாட்டாங்களா.......??? :D:D:icon_rollout:

ஆகா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்கய்யா :sprachlos020::rolleyes::mini023:

தமிழ்
09-05-2008, 04:59 AM
ஸ்படர்மேன் படத்தை யாரும் பார்க்கவில்லையென்றல் உடனே குருவி பத்தை பார்க்கவும்.
நம்பர் ஒன் ரியாலிடி ஷோ..

MURALINITHISH
09-05-2008, 07:25 AM
பார்க்க்ற்வன் ஆன்னு பார்த்தா படத்தை காட்டுறவன் என்ன வேண்டுமானாலும் காட்டுவான்
கேட்கறவன் கேனையா இருந்தா சொல்லுவாங்களே அதே மாதிரி
ரொம்பவே ஒவரா பறக்கிறார்
ஒரு சீன்ல கீழே இருந்து வெடிக்கிறார் (அதாங்க முத சீன்ல)
இதுக்கு குருவின்னு வைக்கறதுக்கு பதிலா ராக்கெட் அப்படின்னு வைச்சிருக்க்லாம் (ஒருவேளை தமிழ் பெயரா வைக்கனும்முன்னு இப்படி வச்சிட்டிங்களா)
விஜய் ரசிகனவே இருந்தாலும் வள்ளுவர் சொல்படி நடப்பாங்க
(துன்பம் வரும் வேலையிலே சிரியுங்க )

யவனிகா
09-05-2008, 08:52 AM
விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

எனக்கு சுண்டெலி :redface::redface: முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!! :icon_p::icon_p:

அட...அட...அட...அப்படிப்போடுங்க ஓவியா...எனக்கும் திரிஷான்னா அலர்ஜி...என்ன செய்ய ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு,வீட்டில...எல்லாப்பசங்களுக்கும் பிடிச்சிப் போற அளவுக்கு அந்தப் பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னுதான் தெரியல...பசங்க யாராவது வந்து சொல்லுங்கப்பா...திரிஷாவ எனக்குப் பிடிக்காதுன்னு காது குளிரக் கேட்டுக்கிறேன்..

மதி
09-05-2008, 10:02 AM

இதோ நான் இருக்கேன்...:D:D:D:D

virumaandi
09-05-2008, 10:11 AM
இந்த படமும் பிடிக்கலை..
திரிஷாவை பிடிக்கவே பிடிக்காது..

ஆதி
09-05-2008, 10:42 AM
பருதிவீரன் கதையை இயக்குனர் அமீர் முதலில் விஜய் இடம்தான் சொன்னாராம், மூன்று இடத்தில் விஜய் மாற்றச் சொன்னாராம், பிறகு விஜயின் அப்பா இன்னும் இரண்டு இடத்தில் மாற்றச் சொன்னாராம், அவர்கள் சொன்ன மாற்றத்தோடு கதையை யோசித்துப் பார்த்தாராம் அமீர், அவர் சொன்னக் கதையே இல்லையாம், அப்போதே முடிவு செய்தாராம் இனி பெரிய ஹீரோக்களிடம் கதையை சொல்வதில்லையென..

சமீபத்தில் கௌதம் மேனன் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்தார், விஜயிடம் கால்ஷீட் கேட்டு போயிருந்தேன், கதையை முழுமையாய் கேட்ட விஜய் இரண்டு சீ.டிக்கள் கொடுத்து இதுப் போல் எதவாது மசாலா கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார், வீட்டுக்கு வந்து சீ.டியைப் போட்டுப் பார்த்தால் அதில் சிவாகாசி படமும், திருப்பாச்சிப் படமும் இருந்தது என்றார்...

நம்ம மதி கூட ஹைப்பட்ஜட் பேரரசுப் படம் மாதிரி குருவி இருந்துச்சு னு சொல்லிருந்ததை படித்த உடன் எனக்கு கௌதம் மேனன் பேட்டிதான் ஞாபகம் வந்துச்சு....

யவனியக்கா எனக்கு நடிகையர் திலகத்தை தான் நடிகைகளில் அதிகமா பிடிக்கும், அவங்களுக்கு சமமா இதுவரைக்கும் யாரும் நடிச்சதில்லை, சரி இதலெல்லாம் ஏன் சொல்ற திரிஷா எந்தப் படதிலையாவது நடிச்சிருஙக்காங்கலா ? அப்படி னு கேட்டா, அந்த கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை..

உதயசூரியன்
09-05-2008, 10:51 AM
நல்ல வேளை பருத்தி வீரன் தப்பிச்சுது..
பருந்து வீரன் ஆகியிருக்கும்..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

saguni
09-05-2008, 10:57 AM
விமர்சனம் - அருமை! அருமை! அருமை!
படம் - அறுவை! அறுவை! அறுவை!

நதி
10-05-2008, 07:50 AM
என்னத்தைச் சொல்ல. எங்க வீட்டு வாண்டுகளுக்கு நல்லாப் பிடிச்சிருக்குப்படம். காட்டூன் கணக்கா சோக்கா இருக்குதுன்னு ஷாக்கடிக்குதுங்க.

s_mohanraju
10-05-2008, 08:13 AM
வழக்கமான விஜய்யொட பார்முலவுல ஒரு சூப்பர் பிலாப்
வாண்டுகலுக்கு வேனா ஒரு கார்டூன் பார்த்த மாதிரி இருக்கலாம்

அக்னி
10-05-2008, 09:17 AM
எல்லாருமாகச் சேர்ந்து காப்பாற்றிவிட்டமைக்கு மிக்க நன்றி...

வெற்றி
10-05-2008, 12:33 PM
நான் போன வாரம் பாக்கலாமுன்னு போனேனா!!! கூட்டமாக இருந்துச்சா!!! சரின்னு வரிசையிலே நின்னேனா!!! அப்போ ஒருத்தர் லுங்கையை தூக்கிகிட்டு எல்லாம் வித்து போச்சு 100 ரூபாய் ஒரு டிக்கெட்டு வேணுமான்னு கேட்டாரா!!!!
போங்கடா நீங்களும் உங்க படமும் வியாபாரமுன்னு மனசுக்குள் சலித்துக்கொண்டு படம் பார்க்காமல் திரும்பிவிட்டேன்....
(திருட்டி வி.சி.டிக்கு யார் காரணம்!!??)

உதயசூரியன்
11-05-2008, 09:59 AM
தமிழ் படத்தை உலக தரத்திற்கு எடுத்துட்டு போய் கொண்டிருக்கும் வேளையில்..
ஆந்திராவையும்... லாஜிக்கையும் மிஞ்சி..
னம்மை முகம் சுழிக்க வைத்த படம் இது..
இதை விஜய் திரும்ப திரும்ப போட்டு பார்க்கட்டும்..

சுள்ளான் தனுஸுக்கு அண்ணன் படம் பார்த்தது போல இருந்தது..

விஜய் சட்டையை கழட்டி சுள்ளானை பயமுருத்தாதீங்க.. (எங்களையும் தான்)
இதுவரை தாங்கள் இதே போல் படங்களில் நடித்திருக்கிறீர்கள்.. அதற்காக ஒரு நாளாவது..பயிற்சி எடுத்து இருக்கீர்களா..

இப்ப எல்லாம் சின்ன பசங்க கூட யோசிக்கறாங்க.. அடி வாங்குபவன் உடம்பையும்.. அடி கொடுத்து பறக்க விடுறவன் உடம்பு எப்படி இருக்க வேண்டும்.. என்று...

எந்த ஒரு விஷயத்திலும் ஒட்டாமல்.. எங்கேயும் தொடர்பில்லாமல்.. ஒரு கதை..

இயக்குனருக்கு
ரொம்ப நன்றி.. நான் படத்தை விரைவாக பார்க்க உதவியதற்கு..

இப்படியொரு படம் எடுக்க தேடி போய் நண்பர் என்ற முறையில் எடுக்க வேண்டுமா... உதய நிதி

விவேக் என்ன ஆச்சு.. சில சிரிப்புகள் உங்களால் நல்லா இருந்தது.. ஆனால் இரட்டை வசனங்கள்.. தேவையில்லாதது..

நேரத்தை எப்படியாவது செலவழிக்கலாம்.. ஆனால் இதை விட கொஞ்சம் பெட்டரான மொக்கை படத்தை பார்த்து உங்கள் நேரத்தை வீணடிங்க நண்பர்களே....

வாழ்க தமிழ்

"பொத்தனூர்"பிரபு
29-06-2008, 08:26 PM
ஏம்பா இதுக்கெல்லாம் விமர்சனம் எழுதி நெரத்த வீணடுசுடீங்களே???????????!!!!!!!!!!!!!!!!!!!

மயூ
30-06-2008, 04:03 AM
இப்படியான ஒரு மொக்கைப்படத்தை பொறுமையாகப் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதியிருக்காங்களே.!!!

நண்பர்கள் எச்சரித்ததால் திரையரங்கப் பக்கமே போகவில்லை!!! விஜய் அடி தடி குத்து பாட்டு என்று குறுகிய வட்டத்துக்குள் சுழன்று சினிமா உலகில் இருந்து நீங்கிவிடுவாரோ தெரியாது!

ஆதவா
30-06-2008, 04:11 AM
இதெல்லாம் நடக்காத விசயம்,
எங்க தளபதி கில்லிகிட்ட உங்க தலயின் தல சும்மா பந்தாடப்படும்....

உங்க தல கூடதான் சும்மா பறந்து பறந்து பரதமாடினார் என்னா ஆச்சு ஊஊ......... கடைசியில் ஊனமாதான் ஆனார் :D:D:D

அழகிய தமிழ் மகன் எங்க விஜய், பெங்காளி நாட்டு தலை அல்ல :cool::cool: க்கூம்.

விஜய்யின் ஆஸ்த்தான ''i love you da chellam' ரசிகை
- ஓவிசெல்லம்

அடடா!! என்ன ஒரு அலைவரிசை..... நமக்கும் இத்தே கருத்துத்தேன்..

தீபன்
30-06-2008, 04:55 AM
நாங்க வீராச்சாமியே பார்த்த வீரப்பரம்பரைங்க... குருவி எம்மாத்திரம்...!

மயூ
30-06-2008, 09:42 AM
அட...அட...அட...அப்படிப்போடுங்க ஓவியா...எனக்கும் திரிஷான்னா அலர்ஜி...என்ன செய்ய ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு,வீட்டில...எல்லாப்பசங்களுக்கும் பிடிச்சிப் போற அளவுக்கு அந்தப் பொண்ணுகிட்ட என்ன இருக்குன்னுதான் தெரியல...பசங்க யாராவது வந்து சொல்லுங்கப்பா...திரிஷாவ எனக்குப் பிடிக்காதுன்னு காது குளிரக் கேட்டுக்கிறேன்..
என்ன என்ன??? திரிசா பிடிக்காதா???
எனக்கு திரிசா புடிக்கும் என்று சொல்ல மாட்டேன் திரிசாவும் புடிக்கும்... ஏனெனில் மொத்த பட்டியல் கொஞ்சம் நீளம்

மீரா
ஜெனீலியா
அசின்
பாவனா!!!எதிர்கால தேவைகளைப் பொறுத்த நிலமை மாறலாம்.. என்றும் முதல் இடம் மீரா-:ஜாஸ்மினுக்குத்தான்.

ஆதவா
30-06-2008, 09:52 AM

யோவ் மீரால்லாம் பழைய நடிகைப்பா..

நம்ம லிஸ்ட கேக்கறியா?

1 தமனா
2. அசின்
3. பாவனா
4. ஜெனிலியா
5. ?:icon_rollout:

(நம்ம ரெண்டு பேரும் ஒருத்திக்காக சண்டை போட்டமே ஞாபகம் இருக்காப்பா?)

மயூ
30-06-2008, 09:55 AM
பைதவே தமானா அவளவு நல்ல தெரிவல்ல!!!
கல்லூரி திரைப்படத்தில் இருக்கும் அழகு அவரின் மற்ற திரைப்படங்களில் இல்லை!!! ஏனோ தெரியாது சம்திங் மிஸ்சிங்கு...

அது என்ன ஐந்தாவதா ஏதோ சின்ன புள்ள புரளுது??? சின்ன புள்ளதனமா யாரையும் நினைச்சு வைச்சிருக்கிறியாப்பா?

ஒருத்திக்காக சண்டை...
ஓ.. மரியா.. மை மரியா!!!

ஆதவா
30-06-2008, 09:59 AM
யார் இந்த விமர்சனம் எழுதினாங்கன்னு தெரியலியே..
கில்லியிலும் சரி... தூள்லேயும் சரி.. கதாநாயகிக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.. தனித்துவம் இருக்கும்.. இதுலேயும் இருக்கு. திரிஷாவ.. லூசாவும் அசடாவும் காட்டறதுல. படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டல..

படம் முழுக்க இரைச்சல்.. படம் முடிஞ்சு வெளியே வந்து கொஞ்ச நேரத்துக்கு கொய்ங்னு ஒரே சத்தம். வித்யாசாகர் வீணடிக்கப்பட்டிருக்கார். உப்பு சப்பில்லாத கதை, பலமில்லாத திரைக்கதை, ஆங்காங்கே வெட்டிட்டாங்களோன்னு நினைக்கக்கூடிய எடிட்டிங்..ஆந்திரா வாசனை தூக்குது. சரமாறியா சுட்டாலும் ஒரு புல்லட் கூட இளைய தளபதி உடம்புல படாதது ஆச்சர்யம்..!

நல்ல விஷயம்... நடனத்தில் அநியாயத்துக்கும் விஜய் மெனக்கெட்டிருக்கார். சில மூவ்மெண்ட்ஸ் பார்க்க ஈஸியா இருக்கும். ஆனால் முட்டி பேந்துடும். அத்தகைய ஸ்டெப்களை மிக சுலபமாக செய்திருக்கிறார். இருக்கறதிலேயே எனக்கு கொஞ்சம் பிடித்தமான...
"தனனே தந்தானானே.. தந்தானே... யூ..நோ.." பாடலுக்கு அரைகுறை உடையுடன் திரிஷா ஆடுவது சகிக்கல. சற்று நல்லா எடுத்திருக்கலாம்.

ஆக மொத்தம்.. நிறைய இரைச்சலுடன் கூடிய அதிக பட்ஜெட் பேரரசு படம் பார்த்த எபக்ட்.. ஒரு முறை பார்க்கலாம்.. வேற வேலையே இல்லீன்னா..

அடடா!! என்ன விமர்சனம் போங்க.... நான் நென்சேன், நீ(ங்க) சொல்டே~!!

ஆதவா
30-06-2008, 10:02 AM
பைதவே தமானா அவளவு நல்ல தெரிவல்ல!!!
கல்லூரி திரைப்படத்தில் இருக்கும் அழகு அவரின் மற்ற திரைப்படங்களில் இல்லை!!! ஏனோ தெரியாது சம்திங் மிஸ்சிங்கு...

அது என்ன ஐந்தாவதா ஏதோ சின்ன புள்ள புரளுது??? சின்ன புள்ளதனமா யாரையும் நினைச்சு வைச்சிருக்கிறியாப்பா?

ஒருத்திக்காக சண்டை...
ஓ.. மரியா.. மை மரியா!!!

:sport-smiley-002: :violent-smiley-010: :violent-smiley-004:
யாரைப் பார்த்து தமனா சரியில்லைன்னு சொன்னே? ஒட்டுமொத்த இலங்கையே பந்த் ஆகிடும் சொல்லிப்புட்டேன். நமக்குள்ள ஏற்கனவே மரியா வந்து நம்மளை பிரிச்சுட்டா, இப்ப தமனாவை அதுவும், தமனாவின் ஆஸ்தான தலைமை தொண்டனாகிய என்னைப் பார்த்து தமனாவைக் கிண்டல் பண்ணி//??? :sport-smiley-005:

கோபம் அடங்காதுடி....:teufel021:

Narathar
30-06-2008, 10:07 AM
யாருப்பா அது தமன்னா?
ஒரு படத்தை போட்டு காம்பீங்கப்பா...

ஆதவா
30-06-2008, 10:14 AM
யாருப்பா அது தமன்னா?
ஒரு படத்தை போட்டு காம்பீங்கப்பா...

தமிழ்நாட்டில் தமனாவைத் தெரியாதவர்கள் உண்டோ? (நீங்க லண்டனாயிருந்தாலும் சரி, இலங்கையாயிருந்தாலும் சரி... அதைப் பற்றி அடியேனுக்குக் கவலை இல்லை) ;)

இதோ, தமனாவின் அழகிய புகைப்படம்

http://www.gujilis.com/tamil_actress/r/thumbs/lrg-2902-tamanna-12.jpg

rocky
30-06-2008, 10:23 AM
என்னங்க பன்றது இங்க இப்படி எழுதுனதால நம்ம மன்றத்துல எத்தனை பேர் தப்பிச்சாங்களோ, அது வரைக்கும் சந்தோஷம்தான்.

பரவாயில்லை உங்க நண்பர்கள் நல்லவர்கள், உங்களைக் காப்பாத்திட்டாங்க, எனக்கும் இருக்கனுங்களே, நான் பட்ட கொடுமையை நீயும் படுன்னு சொல்லி என்னை தியேட்டர் வரைக்கும் கொண்டுபோய் டிராப் பண்ணிட்டு ஓடிட்டானுங்க. பாவிங்க. :traurig001::traurig001::traurig001:

இந்த மாதிரி படம் நடிச்சா நிச்சயம் சினிமா உலகில் இருந்து நீங்கிவிடத்தான் போகிறார், ஆனால் அடுத்து நுலையும் இடம் வேற எது அரசியல் தான். அதுக்கான வேளைகள் தானே நடந்துட்டு இருக்கு.:D:D

ஆதவா
30-06-2008, 10:33 AM

அடுத்து இருக்குப்பா. வில்லு!!!

வில்லெடுத்த விஜயனா நம்ம தளபதி வருவார்....... குருவி பறந்தாலும் வில்லு நல்லா எய்யும்.... :icon_b:

rocky
30-06-2008, 11:49 AM
அடுத்து இருக்குப்பா. வில்லு!!!

வில்லெடுத்த விஜயனா நம்ம தளபதி வருவார்....... குருவி பறந்தாலும் வில்லு நல்லா எய்யும்.... :icon_b:

ஆதவா குருவியா வந்து கொத்துனதே தாங்கமுடியலயே இனி வில்ல எடுத்து அம்பு தொடுத்தா நம்ம கதி என்னவோ ஆண்டவா காப்பாத்துடா சாமி, நான் திருட்டு விசிடி ல கூட ஒளுச்சு நின்னுதான் பாப்பேன்.

சிவா.ஜி
30-06-2008, 12:07 PM
ஏம்ப்பா ஆளாளுக்கு தளபதியை வறுக்கிறீங்க.....அவர் இப்போ அரசாங்க சொத்து.....பாத்து பதமா....இதமா நடந்துக்கங்கப்பு......

rocky
01-07-2008, 04:11 AM
ஏம்ப்பா ஆளாளுக்கு தளபதியை வறுக்கிறீங்க.....அவர் இப்போ அரசாங்க சொத்து.....பாத்து பதமா....இதமா நடந்துக்கங்கப்பு......

என்னங்ணா அரசாங்க சொத்தா? யு மீன் .................... , நான் அவர போக்கிரின்னு மட்டும் தானே நினைச்சேன், நீங்க என்ன அண்ணா இப்படி சொல்றீங்க. பாத்துன்ணா நம்ம மன்றத்துக்குள்ள ஒரு விஜய் ரசிகர் மன்றமே இருக்கு. அப்புறம் நம்மளுக்கு கண்டனம் தெரிவிச்சுருவாங்க

மன்மதன்
01-07-2008, 01:21 PM
யோவ் மீரால்லாம் பழைய நடிகைப்பா..

நம்ம லிஸ்ட கேக்கறியா?

1 தமனா
2. அசின்
3. பாவனா
4. ஜெனிலியா
5. ?:icon_rollout:

(நம்ம ரெண்டு பேரும் ஒருத்திக்காக சண்டை போட்டமே ஞாபகம் இருக்காப்பா?)

அந்த குட்டிகரணம் அடிக்கிறது யாருப்பா..:D

ஆதவா
01-07-2008, 01:24 PM
அந்த குட்டிகரணம் அடிக்கிறது யாருப்பா..:D

:D
அது ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கு.. :D அடுத்த நடிகை வந்தப்பறம் நம்ம மனசுக்கு ஏத்தமாதிரி லிஸ்ட் மாறும்...

மன்மதன்
01-07-2008, 01:58 PM
:D
அது ரிசர்வ் பண்ணி வெச்சிருக்கு.. :D அடுத்த நடிகை வந்தப்பறம் நம்ம மனசுக்கு ஏத்தமாதிரி லிஸ்ட் மாறும்...

வரும் வரும் ...கேரளாவிலிருந்து இறக்குமதி யாகும்...!!:D

Narathar
02-07-2008, 11:45 AM
தமிழ்நாட்டில் தமனாவைத் தெரியாதவர்கள் உண்டோ? (நீங்க லண்டனாயிருந்தாலும் சரி, இலங்கையாயிருந்தாலும் சரி... அதைப் பற்றி அடியேனுக்குக் கவலை இல்லை) ;)

இதோ, தமனாவின் அழகிய புகைப்படம்

http://www.gujilis.com/tamil_actress/r/thumbs/lrg-2902-tamanna-12.jpg

இதென்னா இந்தபொண்ணு இம்புட்டு ஒல்லியாகீது?
தமிழ் நாட்டு நடிகைன்னா ஒரு குஷ்பு மாதிரி,ஜோதிகா மாதிரி... இல்லைன்ன லேட்டஸ்ட்டு சந்தியா மாதிரி கொஞ்சம் கொழு கொழுன்னு இருன்ன வேணாமா?

படம் போட்டு காட்டியதற்கு நன்றீப்பூ...

ஆதவா
02-07-2008, 01:03 PM

:sport-smiley-005::violent-smiley-027::violent-smiley-004::violent-smiley-010::violent-smiley-034::waffen093::teufel021:

ஆதவா
02-07-2008, 01:05 PM
வரும் வரும் ...கேரளாவிலிருந்து இறக்குமதி யாகும்...!!:D

:eek::eek::eek:

SivaS
10-07-2008, 04:00 AM
அட போங்கப்பா கில்லி படத்த எத்தன தடவ தான் ரீமேக் பண்ணுவீங்க?

aren
10-07-2008, 04:33 AM
அந்த குட்டிகரணம் அடிக்கிறது யாருப்பா..:D

நயந்தாராவை லிஸ்டில் காணலியே. அவ்வளவுதானா. அதுவும் பழசா?

ராஜா
10-07-2008, 04:38 AM
குருவி...

அரங்கு நிறைந்த (?????????????????????) அறுபத்து ஐந்தாவது நாளாமே..!!!!!!!!!

விளம்பரம் பார்த்தேன்..!

ஓவியா
10-07-2008, 09:24 AM
நான்தான் பாடல்களைக்கேட்டு விட்டு படம் சரியாக அமையாது என்று ஆருடம் கூறழனேனே...?நினைவு இல்லையா?எல்லோரும் படம் வரட்டும் இன்னும் இரண்டு மூன்ற தடவை கேட்டால் சரியாகிவிடும் என்றெல்லாம் குழப்பி விட்டு....இப்போது பாருங்கள் பலர் நேரத்தை வீணடித்து படம் பாரக்க போய்விட்டீர்கள்...அய்யோ..அய்யோ...?????????இனி தசாவதாரம் படம் வரும் வரை பொறமை காப்போம்..சரியா??????????

மொழமொழனு யெம்மா யெம்மா, குருக்குருவி அடிச்சா... குருவிப்பாடல் நல்லாதானே இருக்கு!!

தசவதாரம்தான் தெலுங்கில் காப்பியடித்த இசை என்று செய்து வெளியாகியுள்ளதே!!

தீபா
10-07-2008, 11:15 AM
மொழமொழனு யெம்மா யெம்மா, குருக்குருவி அடிச்சா... குருவிப்பாடல் நல்லாதானே இருக்கு!!

தசவதாரம்தான் தெலுங்கில் காப்பியடித்த இசை என்று செய்து வெளியாகியுள்ளதே!!

டண்டான்னா டர்னா -

பலானது (?)

மொழமொழன்னு யெம்மா யெம்மா

ஏங்க ஓவியா மேடம்? இந்தமாதிரி பாடல்கள்தான் விரும்பிவியலோ? நல்லா பாடறாங்கய்யா தமிழு..

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 07:45 PM
நான்தான் பாடல்களைக்கேட்டு விட்டு படம் சரியாக அமையாது என்று ஆருடம் கூறழனேனே...?நினைவு இல்லையா?எல்லோரும் படம் வரட்டும் இன்னும் இரண்டு மூன்ற தடவை கேட்டால் சரியாகிவிடும் என்றெல்லாம் குழப்பி விட்டு....இப்போது பாருங்கள் பலர் நேரத்தை வீணடித்து படம் பாரக்க போய்விட்டீர்கள்...அய்யோ..அய்யோ...?????????இனி தசாவதாரம் படம் வரும் வரை பொறமை காப்போம்..சரியா??????????

சில நாட்கள் முன்பு அஞ்சலில் ஒரு பி pdf இணைப்பு பார்த்தேன். அதில் “தசாவதாரம் - குருவி பகுதி 2 “ என்று இரு படங்களையும் ஒப்பிட்டு இருந்தார்கள்.

இளந்தமிழ்ச்செல்வன்
07-08-2008, 07:49 PM
நயந்தாராவை லிஸ்டில் காணலியே. அவ்வளவுதானா. அதுவும் பழசா?

உங்க ஆதங்கம் புரியுது.

மன்மதன் கொஞ்சம் கவனிங்கோ.

தீபன்
10-08-2008, 04:29 PM
ஒருத்தன் வாழ்க்கையே வெறுத்து தற்கொலை செய்யும் முடிவில் இருக்கான். அவன் நண்பன் அவனை குருவி படத்துக்கு கூட்டிட்டி போறான்.
படத்தை பார்த்திட்டு, அவன் நேரா விஜய் வீட்டுக்கு போய் சொல்றான்.

"கொய்யால!!! நீயெல்லாம் உயிரோட இருக்கும் போது நான் ஏண்டா சாகணும்?"

==================================================

முதல் நபர் : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,
இரண்டாம் நபர் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, குருவி ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே !!!

===================================================

பையன் அம்மாவிடம்....

பையன் : அம்மா ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கு. எந்த செய்தி முதல சொல்ல?
அம்மா : கெட்ட செய்திய சொல்லு
பையன் : குருவி படம் ரிலீஸ் ஆகி இருக்கு
அம்மா : அப்ப நல்ல செய்தி?
பையன் :நம்ப ஊர்ல ரிலீஸ் ஆகல

===================================================

மைதானத்தில் விஜய் தோனியிடம்...

விஜய் :- சாரி தோனி.... எனக்கு இங்கிலீஷ் தெரியாது
தோனி :- சாரி... எனக்கு நீ யாருனே தெரியாது

===================================================

விஜய் பிரபுதேவாவிடம் :இந்த பாட்டு சூப்பரா இருக்கே... இத நம்ப படத்துல ரீமேக் பண்ணலாமா?
பிரபுதேவா : டேய்... நாசமா போனவனே அது தேசிய கீதம்டா!!!

யவனிகா
10-08-2008, 04:41 PM
அடடா தீபன் என்ன இது...இப்படி கலாய்ச்சிட்டீங்களே...
இதை விஜய் படிச்சா அழுவறதுக்கு முன்னால அரைநொடியாவது சிரிப்பார்...

மன்மதன்
11-08-2008, 03:00 PM
உங்க ஆதங்கம் புரியுது.

மன்மதன் கொஞ்சம் கவனிங்கோ.

நயந்தாரா பேச்சு அடிபட்டது நீங்க ஆஜராயிட்டீங்க.. சேர்த்துடலாம்..லிஸ்ட்ல.. :D

arun
11-08-2008, 07:24 PM
தீபன் கலக்குறீங்க விஜய் படம் வந்தாலே குஷி தான்

உதயசூரியன்
14-08-2008, 04:41 AM
தீபன் கலக்கல் பதிவு,..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்