PDA

View Full Version : நேர்மைக்கு கிடைத்த பரிசு (பில்லா)

பாலகன்
04-05-2008, 08:28 PM
சில வருடங்களுக்கு முன்பு நான் உணவு பொருள் வழங்கல் (சிவில் சப்ளைஸ்) கீழ் ஒரு 3 நியாய விலை கடைக்கு மேலாளராக இருந்தேன்.... அது ஒரு கோஆப்பரேட்டீவ் உறுப்பினர்கள் பணத்தில் இயங்கும் நியாயவிலை கடைகள்...........

இரண்டான்டுகள் சிறப்பாக நேர்மையாக எந்த ஒரு பித்தலாட்டமின்றி மக்களுக்கு குறித்த நேரத்தில் மண்ணென்னை சக்கரை எல்லாம் வினியோகித்துக்கொன்டிருந்தேன்,,,, அதனால் மற்ற உழியர்களின் வெறுப்பை சம்பாதித்து கொன்டேன்,,,,,, ஏனெனில் நான் வந்த புதிதில் ஒரு நாளைக்க 300 ருபாய் வீதம் 10 ஊழியர்கள் அன்றன்று மக்களிடம் திருடுவதை பகிர்ந்துகொள்வார்கள்..........

நான் அதிலும் மண்னை போட்டுவிட்டேன்........... போலியாக உள்ள 60 ரேசன் அட்டைகளை (எனக்கு முன் இருந்த மேலாளருடையது) அந்த ஏரியா கண்காணிப்பாளரிடம் முதல் ஆளாக முன்மாதிரியாக ஒப்படைத்தேன்,,,,, ஆனால் என் பதவியின் காரணமாக அவர்கள் என்னை எதுவும் செய்ய இயலாமல் என்னை விரட்ட காரணம் தேடிக்கொன்டிருந்தார்கள்........... ஒரு முறை சர்க்கரை எடை போடுகையில் குறைந்ததற்காக எடைபோடும் பணியாளரை மக்கள் முன்னிலையில் கடிந்து கொன்டேன்........... அன்று மாலை வீடு திரும்புகையில் அந்த பணியாளருடன் மற்ற வயிற்றெரிச்சல் புடிச்ச மற்றவர்களும் சில ரவுடிகளும் சேர்ந்து என்னை அடித்து துன்புறுத்தி என் முகத்தை எனக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு குற்றுயிரும் குலையுயிறுமாக தாக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டனர்,,

மயங்கிய நிலையில் இருந்த நான் அப்படியே சாலை ஓரம் படுத்துவிட்டேன்,,,,,, அது நடமாட்டம் குறைந்த சாலை என்பதால்... யாரும் கவனிக்கவில்லை,,,,,இரவு ஒரு மணி இருக்கும் எனக்கு நினைவு வந்தது............ விழித்து பார்த்தால் நான் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளே இருந்தேன்............. முகத்தில் சோடா தெளித்து என்னை நினைவு படுத்தி பிறகு விடியும் வரை என்னை துன்புறுத்தினார்கள்,,,

வேலையை விட்டுவிட்டு ஓடும்படி மிரட்டினார்கள் நான் பணிய மறுக்கவே நிலைய எஸ்ஐ பொய் வழக்கு போட்டுவிடுவதாக (இரவில் கஞ்சா விற்றதாக) மிரட்டினார்,,,,,, ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்கவேன்டிய லஞ்சம் இந்த இரண்டான்டில் என்னால் தடைபட்டிருந்ததாலும் நான் கடிந்துகொன்ட தொழிலாளி,,,,, நான் அவரை தாக்கிவிட்டதாக பொய் புகார் அளித்ததாலும் நான் நேர்மையாக இருந்தும் அரசாங்க வேலையை இழக்க நேரிட்டது,,,,,,,,,, சில நாட்கள் காயங்கள் ஆறும் வரை வீட்டில் இருந்தேன்,

நான் யாருக்காக உழைத்தேனோ அந்த மக்கள் பின் ஒரு நாள் நான் அந்த அலுவலகத்திற்கு என்னுடைய உடமைகளை எடுக்கவும் அக்கவுன்ட் செட்டில் செய்யவும் சென்றபோது எனக்கு திருடன் பட்டம் கட்டியிருப்பது கண்டு மிகவும் வருத்தப்பட்டேன், (நான் பணத்தை கையாடல் செய்ததால் தான் என் வேலை பறிபோனதாக வதந்தி பரப்பிவிடப்பட்டிருந்தது)

என் அப்பா சிறுவயதிலேயே இறந்துவிட்டதால் தாயின் அன்பிலும் தெய்வபக்தியிலும் தன்நம்பிக்கையிலுமே வளர்ந்து பெரியவனானேன்......... மாலையில் வேலைசெய்துக்கொன்டே எனது கல்லுாரி படிப்பை முடித்தேன், (M.COM) என் தாய் சிறுவயது முதல் சொல்லிக்கொடுத்த பாடம் நேர்மை நியாயம் அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமை,,,,,,இவற்றையே என் வாழ்வின் லட்சியமாக கொன்டே இது நாள் வரை வாழ்ந்து வருகின்றேன்,,,,,,,,,,

பிறகு கணினி சான்றிதழ் (PGDCA) படித்து முடித்து ஒரு தனியார் பள்ளியில் கிளார்க்காக வேலையை தொடர்ந்தேன்.....

அந்த நேரத்தில் கணிணி முதுகலை (MCA) முடித்து அதே பள்ளியில் கணினி ஆசிரியரானேன்........... அதே பள்ளியின் முலமே வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது,,,,,,,,,,,,,,,, இன்று துபாயில் கணினி ஆசிரியராகவும் அட்மின்னாககூம் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்............நல்ல மனைவி ஒரு மகனுடன் இன்று சுகமாக வாழ்கிறேன்...........

என் வாழ்வில் சோதனை காலத்திலும் நான் நேர்மையாக இருந்த காரணத்திற்காக கடவுளால் அருளப்பட்ட வாய்ப்பே இந்த வெளிநாட்டு வாழ்வு என கருதுகிறேன்,,,

நம் நாட்டில் பலரும் நேர்மை நியதி பற்றி திரைப்படங்களில் அருமையாக கருத்து சொல்லிவிட்டு போய்விடுகின்றார்கள்,,,,,,,, ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,

அன்புடன்
பில்லா

அனுராகவன்
04-05-2008, 11:45 PM
நன்றி பில்லா அவர்களே!! உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..உங்கள் வாழ்க்கையிலும் கஸ்டங்கள் தந்தாலும் அதை எதிர்க்கொண்ட பாணி அருமை..உங்கள் தாயிக்கும் என் நன்றி..நீங்கள் இன்னும் உயர வாழ்த்திகிறேன்.இதைப்போல் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் ..அது எங்களுக்கு ஒரு பாடமாகவும்.வழியாகவும் அமையட்டும்..

ilango
05-05-2008, 01:16 AM
சத்தியமே எப்போதும் வெல்லும்.

ஓவியன்
05-05-2008, 01:51 AM
நம் நாட்டில் பலரும் நேர்மை நியதி பற்றி திரைப்படங்களில் அருமையாக கருத்து சொல்லிவிட்டு போய்விடுகின்றார்கள்,,,,,,,, ஆனால் நடைமுறையில் அது எவ்வளவு துன்பமான கடினமான பாதை என்பதை வாழ்ந்து பார்த்த எனக்கு தான் தெரியும்,,,,

உண்மைதான் பில்லா, நல்லவர்களைத்தான் கடவுள் அதிகமாக சோதிப்பாராம்...
அது உங்கள் விடயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது....

உங்களைப் போன்ற நல்ல ஒரு உறவுடன் ஒன்றாக மன்றில் இணைந்திருப்பதை நினைத்துப் பெருமைப் படுகிறேன்.....

இன்னும் நீங்கள் வாழ்வில் முன்னேறி, இன்னமும் பல சிறப்புக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன். :)

பாலகன்
05-05-2008, 02:18 AM
நன்றி பில்லா அவர்களே!! உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு..உங்கள் வாழ்க்கையிலும் கஸ்டங்கள் தந்தாலும் அதை எதிர்க்கொண்ட பாணி அருமை..உங்கள் தாயிக்கும் என் நன்றி..நீங்கள் இன்னும் உயர வாழ்த்திகிறேன்.இதைப்போல் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் ..அது எங்களுக்கு ஒரு பாடமாகவும்.வழியாகவும் அமையட்டும்..

மிக்க நன்றி அனு,,,,,,,,, தங்களின் இந்த பதிலால் நான் எல்லையிலா மகிழ்ச்சி அடைந்தேன்,,,,,,,

சிறுவயதில் என் தாய், நானும் என் அண்ணனும் சின்ன சின்ன தப்பு செய்யும் போது ஈர்க்கு தொடப்பக்குச்சியில் பின்னங்கால்களில் அடிக்கும்போது நாங்கள் வலியின் கொடுமையால் அழும்போது எங்களை ஒரு குறளை அழுகைக்கு பதில் பத்துமுறை சொல்ல சொல்லுவார்............ தகப்பன் இல்லாததால் மற்றவர்கள் எங்களை ச்ற்று மரியாதை குறைவாக நடத்துவார்கள்........... ஆனால் என் தாய் எங்களுக்கு ஆறுதலாய் இருப்பார்,,,,, நல்ல நீதிகதைகள் சொல்லி எங்களை வழிநடத்துவார்..........

இதோ அந்த குறள்..................

ஒழுக்கம் விழுப்பந்தரலான் ஓழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

இதை நான் அடிவாங்கும்போதெல்லாம் இதை பல்லாயிரம் முறை சொல்லி சொல்லி மனப்பாடம் ஆகிவிட்டது

அன்புடன்
பில்லா

பாலகன்
05-05-2008, 02:18 AM
சத்தியமே எப்போதும் வெல்லும்.

ரொம்ப நன்றி இளங்கோ,,,,,,,,,,

அன்புடன்
பில்லா

பாலகன்
05-05-2008, 02:20 AM
உண்மைதான் பில்லா, நல்லவர்களைத்தான் கடவுள் அதிகமாக சோதிப்பாராம்...
அது உங்கள் விடயத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது....

உங்களைப் போன்ற நல்ல ஒரு உறவுடன் ஒன்றாக மன்றில் இணைந்திருப்பதை நினைத்துப் பெருமைப் படுகிறேன்.....

இன்னும் நீங்கள் வாழ்வில் முன்னேறி, இன்னமும் பல சிறப்புக்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகின்றேன். :)

நல்லவர்களை சோதிக்கும் கடவுள் அவர்களை கைவிடுவதில்லை ஓவியன் சார்,,,,,

உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே,,,,,,,,,,,

அன்புடன்
பில்லா

விகடகவி
05-05-2008, 03:55 AM
உந்தன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

சூரியன்
05-05-2008, 05:33 AM
தங்களுடைய இந்த பதிப்பை படிக்கும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது,
எந்த துன்பம் வந்தாலும் "நேர்மையாக" இருக்க வேண்டும்.

ஷீ-நிசி
05-05-2008, 06:11 AM
பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தாய்.
ஒழுக்காமாய் வளர்ந்திருக்கும் பிள்ளை.
சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டு நீங்கள்.
நேர்மைக்கு நம் திருநாட்டில் இதுதான் பரிசு என்னும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால் நேர்மை மட்டுமே இறுதியில் வெல்லும்.

வாழ்த்துக்களும்! வணக்கங்களும் தோழரே, உங்களுக்கும், உங்களின் நேர்மைக்கும்!

பாலகன்
05-05-2008, 07:32 AM
உந்தன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி விகடகவியே,,,,,,,,,

தங்களுடைய இந்த பதிப்பை படிக்கும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது,
எந்த துன்பம் வந்தாலும் "நேர்மையாக" இருக்க வேண்டும் ..

உண்மைதான் நண்பரே,,,,,,,,,,, யாரும் நம்மை பார்க்கவில்லை என்றாலும் நாம் நேர்மையாக இருப்போமானால் இறைவனின் ஆசி நமக்கு உண்டு

அன்புடன்
பில்லா

பாலகன்
05-05-2008, 09:30 AM
பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்த தாய்.
ஒழுக்காமாய் வளர்ந்திருக்கும் பிள்ளை.
சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டு நீங்கள்.
நேர்மைக்கு நம் திருநாட்டில் இதுதான் பரிசு என்னும்போது வேதனையாக இருக்கிறது. ஆனால் நேர்மை மட்டுமே இறுதியில் வெல்லும்.

வாழ்த்துக்களும்! வணக்கங்களும் தோழரே, உங்களுக்கும், உங்களின் நேர்மைக்கும்!

பின்னுட்டத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே

அன்புடன்
பில்லா

அதிரடி அரசன்
05-05-2008, 11:20 AM
மிகவும் அருமையான கதை பில்லா, நான் நீண்ட இடைவெளிக்குப்பிறகு இது போல் ஒரு உண்மை சம்பவத்தை படிக்க முடிந்தது.. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

நம்பினார் கைவிடப்படுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு..அதுதான் உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது பில்லா

உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.உங்களுக்கு 250 காசுகள் அன்பளிப்பாக வழங்குகிறேன்.

அதிரடி அரசன்.

பாரதி
05-05-2008, 11:39 AM
உண்மையாய் இருந்ததற்கு கிடைத்த பரிசு..?!

அதைக் கண்டு சோர்ந்து விடாமல் ஊக்கத்துடன் உழைத்து, நல்ல நிலையில் இருக்கும் உங்களை மனமாரப்பாராட்டுகிறேன்.

அன்புரசிகன்
05-05-2008, 02:41 PM
காலம் தாழ்ந்தும் வெல்லும் உண்மை. அசந்து நிற்கிறேன் உங்களை பார்த்து....

விகடன்
05-05-2008, 03:07 PM
நேர்மைக்கு கிடைத்திட்ட பரிசு.....
அசத்திவிட்டீர்கள் பில்லா
பாராட்டுக்கள்.

Keelai Naadaan
05-05-2008, 05:30 PM
நண்பரே, இந்த விஷயத்தை சில வருடங்களுக்கு முன்பு படித்திருந்தால் இன்றும் என் மனதை உறுத்தும் ஓரிரு தவறுகளில் இருந்து தப்பித்திருந்திருப்பேன்.
மதுபானக் கடையில் இருந்து கொண்டு மது அருந்தாமல் இருக்க முடியுமா..அதை விடக் கடினம் இன்றைய உலகில் நேர்மையாக வாழ்வது.
நீங்கள் சாதித்திருக்கிறீர்கள்.
நன்றிகள்.

பாலகன்
05-05-2008, 08:41 PM
பின்னுட்டமிட்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி,,,,,,,,,,,,,

நண்பரே கீழை,,,,,,,,கவலைபடாதீர்கள்..... இன்னும் நிறைய காலம் இருக்கிறது,,,,,,,,,,,,,,, அதனால் நீங்கள் மனந்தளரவேன்டாம்,,,

அன்புடன்
பில்லா

எண்ணம்
05-05-2008, 10:54 PM
தங்களின் நேர்மை குணத்தால் துன்பம் பல அடைந்தாலும் அதிலிருந்து விலகாத தங்களின் மன வலிமை எத்தகைய துன்பத்தையும் வெல்லக்கூடியது. நடந்ததை நினைத்து வருந்தாமல் வரும் நாட்களை சந்தோசமாக எதிர் கொள்ளுங்கள்.

தங்கவேல்
08-05-2008, 03:38 AM
பில்லா... சமூகம் கெட்டு கிடக்கிறது உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். சுற்றி இருப்பவர்கள் திருடர்களாய் இருக்கும் போது உண்மையானவர்களுக்கும் அந்தப் பட்டம் தான் கிடைக்கும். காலம் மாறி விட்டது பில்லா... ஆனால் உம்மைப் போன்றவர்களால் தான் இன்றும் உலகம் இயங்கி வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

பாலகன்
08-05-2008, 10:26 AM
மிக்க நன்றி எண்ணம் மற்றும்,, தங்கவேலு,,,, உண்மைதான்,,,,,, நேர்மையாய் இருந்தால் பைத்தியக்காரன் பிழைக்க தெரியாதவன் என்று என்னவெல்லாம் பட்டப்பெயர்கள்,,,அப்பப்பா

அன்புடன்
பில்லா

அமரன்
08-05-2008, 06:54 PM
நேர்மையானவர்களுக்கு இப்படியான கசப்பான அனுபவங்கள் நேராமல் இல்லை.
நேர்மையானவர்கள் எல்லாருக்கும் இப்படியான கசப்பான அனுபவங்கள் நேருவதும் இல்லை.
சத்யமே ஜெயம். கண்முன் உதாரணம் நீங்கள். வணங்குகின்றேன் தங்கள் தாயை..

lolluvathiyar
11-05-2008, 08:26 AM
நேர்மைக்கு கிடைத்த பரிசை கன்டு அதிர்ந்து விட்டேன் பில்லா, இதுதான் நடைமுரையில் நடந்து கொன்டு இருக்கிறது. அரசாங்க உத்யோகத்தில் நேர்மையை முற்றிலும் எதிர்பார்க்க முடியாது. காரனம் அரசாங்கம் என்பதே ஒரு நேர்மையற்ற செயல் தான். ஆதிகாலத்தில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கம் அமைக்க பட்டது. ஆனால் இன்று மக்களுக்கு பிரச்சனையே அரசாங்கம் தான்.
ஆனாலும் மற்ற துரைகளில் நாம் நேர்மையை விட்டு கொடுக்காமல் பின்பற்றி வந்தால் அதன் பரிசு புன்னியங்கள் பிற்காலத்தில் கிடைக்கும் நம் வாரிசுகளுக்கு செல்லும்.

பூமகள்
11-05-2008, 12:22 PM
பில்லா அண்ணா...
உண்மையில் மனம் வருந்துகிறேன்...!!

இத்தகைய சத்திய சோதனைகள் நமக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்ற கேள்வி எத்தனை முறை எழுந்தாலும்....

நேர்மையாக வாழ்ந்தோம் என்று நெஞ்சம் நிம்மதியில் மகிழும் போது, எல்லா துன்பங்களும் தவிடுபொடி ஆகிவிடும்..

அத்தகைய ஒரு உணர்வில் தான், தாங்கள் எல்லா துன்பங்களையும் தாண்டி வாழ்ந்து வென்றிருக்கிறீர்கள்..!!

உங்களின் அன்னைக்கும் தங்களின் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்..!!

வந்து வெகு சில நாட்களிலேயே நல்ல பதிவு கொடுத்தமைக்கு பாராட்டுகள் பில்லா அண்ணா..!! :)

பாலகன்
11-05-2008, 08:11 PM

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பூமகளே,,,,,,,,,,, உங்களை பார்த்து தான் இந்த நல்ல திரியே ஆரம்பித்தேன்,,, எப்படின்னு கேட்கறிங்களா?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு ஒரு திரியில நிங்கள் எழுதின அறை வாங்கின பதிப்பை படித்தபின் அதன் பின்னாலே இதை படைக்கலாமென்று நினைத்தேன்,, ஆனால் அந்த திரி ஆரம்பித்தவர் திரியை சீரியசாக ஆக்கவேன்டாம் என ஆரம்பத்தில் கேட்டுக்கொன்டுள்ளதால் வேறு இடத்தில் பதித்தேன்,,,,,

எனவே முதற்கண் தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

அன்புடன்
பில்லா

Roja
25-05-2008, 07:43 PM
நம் நாட்டில் நேர்மைக்கு இது தான் பரிசாகக் கிடைக்கின்றது... ஆனாலும் பில்லா, அப்படி ஒரு துன்பம் நேர்ந்த்த பூத்தும் நிஇங்கள் உங்களது தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்காததால் தான் இன்று இந்த நிலைக்கு முன்னேறி இருக்கின்ரிஇர்கள்...

நடந்த்ததி எண்ணிக் கவலைப்படாதிஇர்கள்... அம்மாவின் அன்பும், கடவுளின் ஆசியும் எப்பூதும் உங்களுக்கு துணை இருக்கும்...

பாலகன்
25-05-2008, 07:53 PM

மிக்க நன்றி ரோசாவே,,,,,, தங்களுடைய இந்த வார்த்தை எனக்கு நிறைய புத்துணர்வு அளிக்கிறது,

நேர்மைக்கு கிடைத்த பரிசை கன்டு அதிர்ந்து விட்டேன் பில்லா, இதுதான் நடைமுரையில் நடந்து கொன்டு இருக்கிறது. அரசாங்க உத்யோகத்தில் நேர்மையை முற்றிலும் எதிர்பார்க்க முடியாது. காரனம் அரசாங்கம் என்பதே ஒரு நேர்மையற்ற செயல் தான். ஆதிகாலத்தில் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கம் அமைக்க பட்டது. ஆனால் இன்று மக்களுக்கு பிரச்சனையே அரசாங்கம் தான்.
ஆனாலும் மற்ற துரைகளில் நாம் நேர்மையை விட்டு கொடுக்காமல் பின்பற்றி வந்தால் அதன் பரிசு புன்னியங்கள் பிற்காலத்தில் கிடைக்கும் நம் வாரிசுகளுக்கு செல்லும்.

உண்மை தான் வாத்தியாரைய்யா, தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி,,, (ஒரு சந்தேகம் உங்க இனிசியல் எல், வாத்தியா)

அன்புடன்
பில்லா

Mathu
02-02-2009, 07:34 PM
பில்லாவின் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் உணர்த்துகிறது

நல்லவர்களைத்தான் கடவுள் அதிகமாக சோதிப்பார் ஆனால் கைவிட மாட்டார்

என்ற உணமை.
உங்களின் இந்த குணம் என்றும் மாறாமல் இறுதிவரை உங்களை தொடரட்டும்.

MURALINITHISH
03-02-2009, 10:26 AM
படித்ததும் ஒரே ஒரு நொடி அப்படி கஷ்டப்பட்டு கிடைத்தற்கு கிடைத்த பலன் நல்ல வேலையை இழந்தது என்று நினைத்தேன் ஆனால் அதன் பிறகு கிடைத்த வெளிநாட்டு வேலையும் அது கிடைக்கத்திருக்க விட்டாலும் உங்கள் மனதுக்கு கிடைக்கும் நிம்மதியும் சந்தோஷமும் பணத்தை விட மேலானாது நண்பரே நீங்கள் இருந்த இடத்தில் நான் இருந்து இருந்தால் எனக்கு தேவை இல்லை என்றாலும் நான் நேர்மையாகதான் இருந்திருப்பேன் என்றாலும் அடுத்தவர்களை பாதிக்காத வகையில் அதாவது நீ எப்படியாவது வாங்கி கொள் என்றுதான் ஏன் எனில் என்னால் உங்களை போல் வீழ்ந்து எழ தையரியம் கிடையாது உங்கள் இந்த வலுவிற்க்கு காரணம் நிச்சயம் உங்கள் தாய் அந்த தாயிற்க்கு என் வணக்கங்கள்
ஈன்ற பொழுது ஏற்பட்ட வலியை மறக்க வைப்பது தன் மகனை சான்றோன் என கேட்கும் போதுதான் உங்கள் தாய்க்கு அந்த பேரின்பம் கிடைக்கும் வாழ்த்துக்கள் நண்பரே

xavier_raja
26-03-2009, 11:27 AM
புரட்சி தலைவர் அவர்கள் ஒரு படத்தில் பாடியது..

வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு..

இந்த வார்த்தைகள் என்றும் பொய்யாகாது.

உங்களின் நேர்மைக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.

tkpraj
26-03-2009, 01:42 PM
நன்றி பில்லா அனைவரிடமும் பகிர்ந்துகொண்டமைக்கு
நேர்மை ஒரு நாளும் நம்மை கைவிடாது என்பதற்கு தாங்கள் உதாரணம்