PDA

View Full Version : எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..??

ஓவியன்
04-05-2008, 02:33 PM
இலங்கையின் வானொலி ஒன்றில் கிட்டத் தட்ட இதேவிடயத்தில் ஒரு நிகழ்சி ஒலிபரப்பாகும் அதன் பாதிப்பிலேயே இந்த திரி....

அதாவது நம் வாழ்வில் சில வினோதமான, யாருக்கும் எளிதில் நடைபெறதவையான சில நிகழ்வுகள் நடந்தேறி சிரிக்கவும், ஐயோ எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நம் மூளையை (அது இருப்பவர்களுக்கு மட்டும்..!! :D) காயவும் வைத்து விடும்....!! :)

அது போன்ற சிரிப்பூட்டும் விந்தை நிகழ்வுகளை (சீரியசான விடயங்கள் வேண்டாமே) இங்கே பகிர்வோமா நண்பர்களே...? :icon_b:

இந்த திரியினை உடனடியாக ஆரம்பிக்க காரணமாயிருந்ததும் இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=349188#post349188) நான் பதிந்த என்னை 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..??' என்று என்னை அழ வைத்த அந்த அரிசிச் சம்பவமே....!! ;)

தொடர்ந்து உங்களது ஆர்வமான பங்களிப்பை எதிர்பார்க்கும்....
உங்களன்பின் ஓவியன் :)

பூமகள்
04-05-2008, 02:47 PM
எனக்கு அப்படி எதுவும் நடந்ததா சட்டுன்னு நினைவுக்கு வரலை அண்ணா..!!

நல்ல ஒரு திரி..!!
பலரின் சிரிப்பான சந்தர்ப்பங்களைத் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு..!!

மலரு ஓடியாம்மா.. நமக்கு ஜாலி தான்..!! :D:D

எப்படி ஓவியன் அண்ணா, இப்படி உங்களுக்கு மூளை வேலை செய்யுது??!!

நல்ல துவக்கம்.. பாராட்டுகள்..!!

சூரியன்
04-05-2008, 02:57 PM
யோசிச்சு சொல்றேன் அண்ணா.:rolleyes:

செல்வா
04-05-2008, 03:57 PM
எப்படி ஓவியன் அண்ணா, இப்படி உங்களுக்கு மூளை வேலை செய்யுது??!!

கொஞ்சநாள் வேலை நிறுத்தம் முடிஞ்சு இப்பதான் வேலை பாக்க ஆரம்பிச்சுருக்குணு நெனக்கிறேன்... அதுக்குள்ள இப்படி கேள்வி கேட்டா?

அன்புரசிகன்
04-05-2008, 04:09 PM
சிறுவயதிலிருந்து ஏறத்தாள 2001ம் ஆண்டு புரட்டாதி மாதம் வரை நான் நித்திரை கொள்ளும் போது என்னை யாரும் தொந்தரவு செய்ததில்லை. காலையில் அம்மா - அம்மம்மா - சித்தி இவர்களின் ஒருவரின் தேனீருடன் எனது விடிகாலை ஆரம்பமாகும்....

2002 லிருந்து எனது நண்பர்களுடன் சேர்ந்து தங்க ஆரம்பித்தேன்... ஆனால் 2003ம் ஆண்டு தை மாதம் வரை எந்த பிரச்சனையும் வருவதில்லை. எனக்கு ஒரு பழக்கம் முன்பு :icon_rollout: இருந்தது. நித்திரையில் யாராவது சிறிய சத்தம் ஏற்படுத்தினாலும் விழித்துவிடுவேன்.

2003லிருந்து எனக்கு ஒரு நண்பனுடன் அறையில் சேர்ந்து தங்கினேன். இரவில் படுக்கும் போது அன்று அவனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை கூற ஆரம்பிப்பான். எனக்கோ கண்ணைக்கட்டும். பதில் ஏதும் கூறாது “ம்“ என்ற சத்தம் மட்டும் என்னிடம் இருந்து அவனுக்கு போகும். சிறிது நேரத்தால் அவன் நித்திரையாகிவிடுவான்... எனக்கு நித்திரை குழம்பிவிடும். புரண்டு புரண்டு படுப்பேன்....

பின் கத்தார் செல்லமுன் சில காலம் எனது குடும்பத்தாருடன் தங்கியதால் மீண்டும் பழைய பழக்கம் தொற்றியது. ஆனால் அது நீடிக்கவில்லை. கத்தார் சென்ற முதல் நாள் எனது இன்னொரு நண்பனுடன் சேர்ந்து தங்கும் சந்தர்ப்பம். அந்த நண்பனோ பார்வையில் மிக மிக சாது. ஆனால் அவனுக்கு “சாது மிரண்டா“ என்ற தலைப்பு மிக மிக பொருந்தும். காரணம் இரவில் அவனது உறுமலுக்கு சிங்கம் தோற்றுப்போய்விடும். முதல் ஓரிரு வாரங்கள் மீண்டும் புரண்டு புரண்டு படுக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அப்புறமாக அதுவே பழகிவிட்டது. இருந்தாலும் இடை இடை ஊறுமல் அதிகமாகினால் விழித்துவிடுவேன்.

இப்போதெல்லாம் பக்கத்தில் ஒருவன் அழுது புலம்பினாலும் என்னை அது பெரிதாக பாதிப்பதில்லை. காரணம் என் கண்கள் இப்போது பெரும்பாலும் பழகிவிட்டன......... :)

ஓவியன்
04-05-2008, 05:08 PM
2003லிருந்து எனக்கு ஒரு நண்பனுடன் அறையில் சேர்ந்து தங்கினேன். இரவில் படுக்கும் போது அன்று அவனுக்கு நிகழ்ந்த அனுபவங்களை கூற ஆரம்பிப்பான். எனக்கோ கண்ணைக்கட்டும். பதில் ஏதும் கூறாது “ம்“ என்ற சத்தம் மட்டும் என்னிடம் இருந்து அவனுக்கு போகும். சிறிது நேரத்தால் அவன் நித்திரையாகிவிடுவான்... எனக்கு நித்திரை குழம்பிவிடும். புரண்டு புரண்டு படுப்பேன்....

:D:D:D

அன்புரசிகன்
04-05-2008, 05:28 PM
:D:D:D

இதுக்கு மட்டும் குறைச்சலில்ல....

Keelai Naadaan
04-05-2008, 05:53 PM
சுவாரஸ்யமான திரிக்கு நன்றிகள் ஓவியன். நம்முடைய அனுபவம் மட்டும் தான் பதிக்கனுமா அல்லது சொல்ல கேட்டதும் பதிக்கலாமா..?

ஓவியா
04-05-2008, 06:15 PM
நல்ல திரி, நன்றி ஓவியன்.

நான் ஒரு முறை ஒரு அபலை பெண்ணை போதைக்கு அடிமையாவதிலிருந்து தடுத்து காபாற்ற முயற்ச்சி செய்து 'பளார்' என்று ஒரு அறை வாங்கினேன்..... நல்லா வேகமாக கண்ணத்தில் விழுந்தது........ பெண்ணாகி அதுவரை யாரும் என்னை அடித்ததில்லை, :traurig001::traurig001::traurig001: ஆனால் அடித்ததோ ஒரு 'தண்ணி' போட்ட போதைப் பெண். 'பளார்'னு ஒரு அறை பாருங்கோ... யெம்மாடி அப்படி ஒரு பளார்.

ஆனாலும் ஒரு நல்ல விசயத்திற்க்காக என்று மனதை தேற்றிக்கொண்டேன். கண்ணீர் நிற்க்கவே இல்லை காலையில் நடந்ததால் அழுதுக்கொண்டே இருந்தேன்....:traurig001::traurig001: ஒருவழியா அன்று படிப்பு முடிந்து விடு வரும்முன் கடையில் கண்ட ஒரு காட்சி பெண்ணை ஒரு ஆண் 'பளார்' என்று அறைய மனது மீண்டும் வலித்தது....:traurig001::traurig001::traurig001: வீட்டிற்க்கு சென்று குளித்து ஒரு வகையா சாமி கும்பிட்டு டீவி முன் அமர...டீவில் ஒரு பழைய ஆங்கில படம் அதிலும் ஒரு சீன் பளார்!!!

மீண்டும் கண்ணீர் கறை புரண்ட்டோடா விம்மி விம்மி படுக்கையில் விழுந்தேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!!! :traurig001::traurig001::traurig001:

அன்புரசிகன்
04-05-2008, 06:26 PM
ஒரே பளாராக இருக்கிறதே................. :D

ஓவியன்
05-05-2008, 01:58 AM
சுவாரஸ்யமான திரிக்கு நன்றிகள் ஓவியன். நம்முடைய அனுபவம் மட்டும் தான் பதிக்கனுமா அல்லது சொல்ல கேட்டதும் பதிக்கலாமா..?

கேட்டதையும் பகிர்ந்து கொள்ளுங்களேன், சுவராசியமாக இருந்தால்...!! :)

ஓவியன்
05-05-2008, 02:04 AM
மீண்டும் கண்ணீர் கறை புரண்ட்டோடா விம்மி விம்மி படுக்கையில் விழுந்தேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!!! :traurig001::traurig001::traurig001:

என்ன செய்ய சில வேளைகளில் சில சம்பவங்கள் நம்மை ஐயோ ஏன் இப்படி நடக்குதுனு ஏங்க வைத்துதான் விடுகின்றன...

இருந்தாலும் நீங்கள் ஒரு நல்ல விடயத்துக்காக அறை வாங்கியமையால் அதனை நினைத்து உண்மையிலேயே பெருமைப் படலாம் அக்கா....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றிகள் பல..!! :)

பாலகன்
05-05-2008, 02:25 AM
மீண்டும் கண்ணீர் கறை புரண்ட்டோடா விம்மி விம்மி படுக்கையில் விழுந்தேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!!! :traurig001::traurig001::traurig001:

ஒரு உண்மை தெரியுமா ஓவியா- இரக்கம் உள்ளவர்களாளேயே கண்ணீர் சொறிய முடியும்,,,,,,,,,, அதை நிறுத்துவதும் கடினம்,,,

போலியாக கண்ணீர் விடுபவர்கள் அதை உடனே நிறுத்தி விடுவார்கள்............

நல்ல ஒரு திரி ஆரம்பித்த ஓவியன் அவர்களுக்கு மிக்க நன்றி

அன்புடன்
பில்லா

பூமகள்
05-05-2008, 04:56 AM
மீண்டும் கண்ணீர் கறை புரண்ட்டோடா விம்மி விம்மி படுக்கையில் விழுந்தேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!!! :traurig001::traurig001::traurig001:
அக்கா... நல்ல விசயத்துக்காகத் தானே என்று மனத்தில் திருப்தியல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும்??!!:icon_ush:

இந்த காலத்தில் யார் எப்படிப் போனா என்ன என்று இருக்கும் சூழலில் யாரோ ஒரு பெண்ணின் நலனுக்காக, போராடி, ஒரு அறையும் வாங்கியிருக்கிறீர்களே.. அக்கா, நிஜமாவே உங்களை நினைத்தால் எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது.:icon_rollout:

அடி வாங்கியதிலிருந்து நாம் கற்றுக் கொண்டதென்ன,

நமது நோக்கம் மிக மிக அற்புதமானது, சரியானதும் கூட.

ஆனால்,

அதனை சொல்ல நாம் பயன்படுத்திய உத்தி தவறாகிவிட்டது. எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிட்டது.. அதனால் கிடைத்த படிப்பினை.. வேறு ஒரு நல்ல அடிவாங்காமல் தப்பிக்கும் உத்தியைப் பயன்படுத்தனும் என்பது தானே??!!:icon_b::icon_b:

கவலை விடுத்து, வேற வழியில் முயன்று பாருங்கள் அக்கா..!!
உங்க பரந்த மனத்தினை மீண்டும் பறைசாற்றும் மற்றொரு பகிர்வு.
நன்றி ஓவி அக்கா. :)

சூரியன்
05-05-2008, 05:14 AM
இப்போதெல்லாம் பக்கத்தில் ஒருவன் அழுது புலம்பினாலும் என்னை அது பெரிதாக பாதிப்பதில்லை. காரணம் என் கண்கள் இப்போது பெரும்பாலும் பழகிவிட்டன......... :)

அப்ப ஒரு ஆடியோ பிளேயர் வாங்கி அனுப்பட்டுமா.:aetsch013:

சூரியன்
05-05-2008, 05:17 AM
மீண்டும் கண்ணீர் கறை புரண்ட்டோடா விம்மி விம்மி படுக்கையில் விழுந்தேன்... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது!!! :traurig001::traurig001::traurig001:

:traurig001:என்ன கொடுமை.ஏன் அக்காவுக்கு மட்டும் இப்படி நடக்குது.:traurig001:

ஷீ-நிசி
05-05-2008, 06:47 AM
இரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்க நின்னா, நான் நிக்கற வரிசை மட்டும் நகராது. பக்கத்துல இருக்கற வரிசை வேகமா நகரும். வயித்தெரிச்சலா இருக்கும். ஒருவழியே டிக்கெட் கவுண்டர அடைஞ்சா எனக்கு முன்னாடி இருக்கற ஒருத்தர் 100 ரூபாய் கொடுத்திட்டு 7 ரூபா டிக்கெட் போக மீதிச் சில்லறைய வாங்கிகிட்டே இருப்பாரு.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

ஒருவழியா டிக்கெட் வாங்கிட்டு போனா செங்கல்பட்டு போற ரயில் அப்பதான் போயிட்டு இருக்கும். நம்ம ரயில்வே நிர்வாகம், நாம் தாமதமா வந்தாதான் மிக சரியான நேரத்திற்கு ரயில் எடுத்திடுவாங்க.. அடுத்த ரயில் எப்பங்கனு கேட்டா, அதுக்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கும்னு ரொம்ப கூலா சொல்லுவாங்க....

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

சரின்னு ஒருநாள் சீக்கிரமா டிக்கெட் வாங்கி சீக்கிரமா ரயில்ல ஏறி உட்கார்ந்தா, 10 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் 10.20க்கு தான் புறப்படும்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

எப்பவாச்சும் வர பேருந்து அது. நான் சும்மா ரோட்ல நடந்துட்டு போயிட்டுருகும்போதெல்லாம் அடிக்கடி 8A ன்ற ஒரு பேருந்து கண்முன்னாடி போகும். ஆனா ஸ்பெஷலா அதுக்காக பலமுறை காத்திட்டுருக்கும்போதும் அந்த பேருந்து வரவே வராது.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

கல்யாணத்துக்குப் போனா பந்தியில உட்கார்ந்துட்டிருப்பேன். என் பக்கத்துல இருக்கறவருக்கு வரைக்கு அப்பளம் வரும். என்கிட்ட வரும்போது காலியாகிடும். ஒருவழியா மனசை தேத்திட்டு காத்திட்டிருந்தா, என்னை விட்டுட்டு அடுத்த இலையிலருந்து அப்பளம் போட்டுட்டு போயிட்டிருப்பான். சரின்னு கூப்பிடலாம்னு பார்த்தா, அப்பளத்துக்குப்போய் அல்பமா கூப்பிடனுமானு என் அப்பளத்த தியாகம் பன்னிட்டு உட்கார்ந்திடுவேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

சூரியன்
05-05-2008, 06:49 AM
இரயில்வே ஸ்டேஷன்ல டிக்கெட் எடுக்க நின்னா, நான் நிக்கற வரிசை மட்டும் நகராது. பக்கத்துல இருக்கற வரிசை வேகமா நகரும். வயித்தெரிச்சலா இருக்கும். ஒருவழியே டிக்கெட் கவுண்டர அடைஞ்சா எனக்கு முன்னாடி இருக்கற ஒருத்தர் 100 ரூபாய் கொடுத்திட்டு 7 ரூபா டிக்கெட் போக மீதிச் சில்லறைய வாங்கிகிட்டே இருப்பாரு.

நிறைய இருக்கும் போல.
மேல சொல்லுங்க அண்ணா.

ஓவியன்
05-05-2008, 08:05 AM
:mad:
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

இது, இது - இதனைத்தான் நான் எதிர்பார்த்தேன் ஷீ...!! :)

நீங்க என் இனம் ஷீ - ஆமா, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ஷீ..??

logini
05-05-2008, 09:03 AM
நான் எனது உயர்தர பரீட்சை சான்றிதழ் பெற்றுக்கொள்வதற்க்காக பரீட்சை தினைகளத்திற்க்கு சென்றிருந்தேன் அங்கு விண்னப்பம் நிரப்பி கொடுத்து அவர்கள் சரி பார்த்து எல்லாம் சரி
என்றால் ஒரு ரசீது தருவார்கள் அதைக் கொண்டு தான் பணம் செழுத்த வேண்டும் நான் சென்றது 11.00 மணி இருக்கும் விண்னப்பம் நிரப்பி கொடுத்து காத்திருக்கும் போது
மதிய இடைவேளை என்று கவுண்டரை மூடிவிட்டார்கள். 2 மணித்தியாலத்தின் பின் திறந்தார்கள். அதன் பின்னும் ஒரு மணித்தியால காத்திருப்பிற்கு பிறகு என்னை அழைத்தார்
அவரிடம் இருந்து ரசீது வாங்கிக்கொண்டு பணம் செழுத்துவதற்கான அலுவலகம் சென்றால்
நீண்ட வரிசை சரி அதிலையும் காத்திருந்தால் எனக்கு முன் ஒருவர் மட்டும் இருக்கும் நிலையில் அலுவலக நேரம் முடிவடைந்தது என்று சொல்லி கவுண்டரை மூடிவிட்டார்கள். எனக்கு அந்த இடத்தில் வைத்தே அழுகை வந்திட்டு.

பூமகள்
05-05-2008, 09:11 AM
ஆஹா.. ஷீ.. இப்படி சொல்லனும்னா நிறைய சொல்லலாமே..!!:icon_ush:
இருங்க நானும் எனக்கு நடந்தவைகளை நினைவூட்டிட்டு வருகிறேன்..:icon_rollout:

ஷீ, ஓவியண்ணா.. நாமெல்லாம் ஒரே "நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...??":rolleyes::rolleyes: பேமிலி:p:cool: ஆயிட்டோமே...!!:icon_b::icon_b:

ஆமாம்.. தெரியாம தான் கேக்குறேன்... ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது??!!:icon_ush::)

பூமகள்
05-05-2008, 09:19 AM
எனக்கு அந்த இடத்தில் வைத்தே அழுகை வந்திட்டு.
ஐயோ... தோழி லோகினி... எனக்கும் இப்படி நிறைய நிறைய நடந்திருக்குமா..!! :traurig001::traurig001:

அழுவாச்சி அழுவாச்சியா வரும்... :traurig001::traurig001:

பகிர்ந்தமைக்கு நன்றிகள் லோகினி. :icon_b:

ஓவியா
05-05-2008, 11:35 AM
ஒரே பளாராக இருக்கிறதே................. :D

அக்கா அடிவாங்கியதை நீர் பல்லிழிச்சி சிரிக்கிறாயா!!!! :icon_p::icon_p:

என்ன செய்ய சில வேளைகளில் சில சம்பவங்கள் நம்மை ஐயோ ஏன் இப்படி நடக்குதுனு ஏங்க வைத்துதான் விடுகின்றன...

இருந்தாலும் நீங்கள் ஒரு நல்ல விடயத்துக்காக அறை வாங்கியமையால் அதனை நினைத்து உண்மையிலேயே பெருமைப் படலாம் அக்கா....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றிகள் பல..!! :)

கடைசியில் அந்த பெண்ணை காபாற்றி விட்டேன், எப்படி தெரியுமா..... அவுங்க மாமாகிட்ட :spezial::spezial: வச்சுட்டேன்.

ஒரு உண்மை தெரியுமா ஓவியா- இரக்கம் உள்ளவர்களாளேயே கண்ணீர் சொறிய முடியும்,,,,,,,,,, அதை நிறுத்துவதும் கடினம்,,,

போலியாக கண்ணீர் விடுபவர்கள் அதை உடனே நிறுத்தி விடுவார்கள்............

நல்ல ஒரு திரி ஆரம்பித்த ஓவியன் அவர்களுக்கு மிக்க நன்றி

அன்புடன்
பில்லா

இரக்கம் என் பிறவி குணம். (அடாதடியும் :Christo_pancho:பிறவிகுணம்தான்) நன்றி.

இதைவிட இன்னொரு உதவி இங்கு என் பல்கலைகலக மாணவிக்கு செய்துள்ளேன்.... அதை சொல்லவே பயமா இருக்கும். அதனால் வேண்டாம்.

ஓவியா
05-05-2008, 05:32 PM
அக்கா... நல்ல விசயத்துக்காகத் தானே என்று மனத்தில் திருப்தியல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும்??!!:icon_ush:

அடி வாங்கியதிலிருந்து நாம் கற்றுக் கொண்டதென்ன,

கவலை விடுத்து, வேற வழியில் முயன்று பாருங்கள் அக்கா..!!
உங்க பரந்த மனத்தினை மீண்டும் பறைசாற்றும் மற்றொரு பகிர்வு.
நன்றி ஓவி அக்கா. :)

நன்றி பூ, ஆனாலும் பல நேரத்தில் உன் கருணை உள்ளத்தை கண்டு நான் அதிசயத்துள்ளேன்.

ஆனாலும் அந்த (கருப்பு வர்ணம்) வரியை கண்டு :D:D:D

:traurig001:என்ன கொடுமை.ஏன் அக்காவுக்கு மட்டும் இப்படி நடக்குது.:traurig001:

:traurig001::traurig001::traurig001: எனக்காக சூரியனே கண்ணீர் சிந்துதே!!!

பூமகள்
05-05-2008, 05:55 PM
ஆனாலும் அந்த (கருப்பு வர்ணம்) வரியை கண்டு :D:D:D
நான் "நாம்" என்று என்னையும் சேர்த்துக்கிட்டதைத் தானே சொல்ல வர்றீங்க??!!!:confused::confused: :icon_ush:
என்ன செய்ய..அக்காவுக்கு அடி விழுந்தா
அது தங்கைக்கும் தானே??!!:icon_rollout::icon_rollout:

அழுவாதீங்க அக்கா..:traurig001::traurig001: இப்படி எல்லாம் எழுதினா.. "ஓவர் செண்டிமெண்ட் உடம்புக்கு ஆகாது"ன்னு டயலாக் விட பின்னாடியே சொற்சிலம்பர் வருவார்...!! ஆனாலும் நான் என் மனசில் பட்டதைத்தான் சொல்லுவேன்..!! :rolleyes::p:icon_b:

விகடன்
05-05-2008, 07:14 PM
கொஞ்சநாள் வேலை நிறுத்தம் முடிஞ்சு இப்பதான் வேலை பாக்க ஆரம்பிச்சுருக்குணு நெனக்கிறேன்... அதுக்குள்ள இப்படி கேள்வி கேட்டா?

உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?????:D

இதையே விவரமாக எழுதலாமே...

ஓவியன்
06-05-2008, 02:00 AM
எனக்கு அந்த இடத்தில் வைத்தே அழுகை வந்திட்டு.

இதில் நம் சோகம் ஒரு புறமிருக்க, அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்ற தனம் கண்டிக்கப் பட வேண்டியதே....

சம்பவப் பகிர்வுக்கு நன்றி லோஜினி..!! :)

அன்புரசிகன்
06-05-2008, 02:07 AM
இதில் நம் சோகம் ஒரு புறமிருக்க, அரசாங்க அதிகாரிகளின் பொறுப்பற்றதனம் கண்டிக்கப் பட வேண்டியதே....

அரசாங்கமே கண்டிக்கப்படவேண்டியது. இதுலே அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்றதனத்தை ஏது கடிந்து கொள்வான்????

விகடன்
06-05-2008, 05:42 AM
எனக்கு மட்டும் ஏன் இப்படி......?
எதை என்று சொல்வது,
அமீரகத்தில் இருக்கும்போது ஒரு தடவை தாய் நாடு திரும்ப ஆகாய விமான பயணச் சீட்டு எடுத்திருந்தேன். நாட்டின் நிலமை கருதி பகல் வேளையில் தரையிறங்கும் வகையில் மாற்றியமைக்கவேண்டியதாக
ஒரு சூழ் நிலை. அதற்காக முன் பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுடன் தலமைக் காரியாலயம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதற்கு முன் சின்னதாக ஒரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். அப்படியானால்த்தான் என்னிலமையை சரியாக உணர முடியும்.
சிறிது காலத்திற்கு முன்னர் எனது இருப்பிடத்திற்கு செல்ல வேண்டுமாயின் அந்தப் பாதை வழியாகத்தான் செல்வேன். அப்போதெல்லாம் எனது அலுவலகம் 7 மணிக்குத்தான் வேலை நேரம் நிறைவுபெறும். பலதடவை அந்த காரியாலயத்தை தாண்டி செல்லும்போது அது திறந்தே காணப்படும்.
வாகன நெரிசலை கருத்திற்கொண்டு பின்னர் இடமாறி இருந்தனான். இந்த சம்பவம் நடக்கும் காலங்களில் எனது பணி நேரம் சற்று மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதாவது, அரை மணித்தியாலங்கள் முன்னதாகவே அலுவலகத்தை விட்டு வெளியேறிவிடுவேன். இப்படி இருக்கும்போது ஒரு தடவை வார இறுதி நாள் அன்று இன்னும் கொஞ்சம்
நேரத்துடனேயே புறப்பட்டிருந்தோம். அன்று எனது முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை மாற்றியமைக்க உத்தேசித்திருந்தேன். டுபாயிலிருந்து சாயா நெஷனல் பெயிண்ட் வரைக்கும் போய் அங்குதான் எனது இருப்பிடம், அங்கு எனது பயணச் சீட்டை எடுத்துக் கொண்டு சாயா ரொல்லாவிற்கு போகவேண்டும். வாகன நெரிசல் இல்லாவிட்டால் இவை அனைத்தும் 1 மணித்தியாலத்தில் முடித்துவிடக்கூடிய செயல்த் திட்டம். எனது இருப்பிடம் வரைக்கும் எதுவித இடையூறுமின்றி சென்றடைந்துவிட்டேன். அங்கிருந்து எனது பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு
ஷாயா ரொல்லாவை நோக்கி புறப்பட்டால் புறப்பட்டு கிட்டத்தட்ட 2 கி.மீற்றர்கள் சென்றிருப்பேன். வழமைக்கு மாறாக அன்று அதீத வாகன நெரிசல். நடந்து போயிருந்தாலும் வேளைக்கு போயிருக்கலாம். கிட்டத்தட்ட 20 கி. மீ வந்திருக்கும் :) (சும்மா. ). இப்ப வாகன நெரிசல் கலைந்து சீராகிவிடும், என்று நினைத்து நினைத்தே அண்ணளவாக இரண்டு மணித்தியாலங்கள் செலவழித்து அடைய வேண்டிய தலமைக் காரியாலயம் வந்தடைந்தேன். அங்கே இருந்த வரிசையில் ஆக மூன்றே மூன்றுபேர்தாங்க, நான் நாங்காவதாக இருந்தேன். வரிசையும் ஓவியனிற்கோ ஷி- நிசிக்கோ நடைபெற்றதைப்போல நத்தை வேகத்தில் இன்றி அட்டை வேகத்தில் நகர்ந்தது.
பத்து நிமிடங்களில் முகவரை அணுக அங்கு ஒரு சமிக்ஞை. வேலை நேரம் நிறைவுக்கு வந்துவிட்டதெனெ அறிவித்தது. எனது கடவுச் சீட்டையும் பயணச் சீட்டையும் வாங்கிக்கொள்ள கை தூக்கியிருந்தான். ஆனால் வாங்கவில்லை. அந்த வேளை பார்த்து அந்த ஒலி. உடனே, வேலை நேரம் முடிவடைந்து விட்டது நாளைக்கு வாருங்கள் என்று சொன்னான். என்ன செய்வது? அவர்களுடன் பேசிக்கொள்ள முடியுமா? பேசாமல் வந்துவிட்டேன். எனது ஆவணங்களை அவன் பெற்றுக்கொண்டிருந்த பின்னர் அந்த சமிக்ஞை ஒலி ஒலித்திருந்தால் எனது பணி அன்று முடிந்திருக்கும். எல்லாம் விதி......
இது எனக்கு முதற்தடவை இல்லை..... ஆனால் அண்மையில் நடந்ததில் ஒன்று :D .
ஏங்க எனக்குமட்டும் இப்படி.........

விகடகவி
06-05-2008, 06:01 AM
நல்ல செய்திகள்..
நானும் செய்திகளுடன் வருவதாக உள்ளேன்..
உந்தன் விசியங்களுக்கு இந்த அடியனின் நன்றி

ஓவியன்
06-05-2008, 08:01 AM
எல்லாம் விதி...... இல்லை விராடன் இதைத் தான் அதிஸ்டம் என்பார்கள்...!! :D:D:D

விகடன்
06-05-2008, 08:11 AM
இல்லை விராடன் இதைத் தான் அதிஸ்டம் என்பார்கள்...!! :D:D:D

யாருக்கு?
விமான சேவை நடத்துபவனுக்கா ?........(பயணத்திகதிக்கு அண்மித்து முன்பதிவு செய்ய பணம் அதிகப்படுமாதலால்.
அல்லது
என்னை அடுத்த முறை கொண்டு செல்ல இருக்கும் டாக்சி ரைவருக்கா?
அல்லது
தாமதித்து மாற்றஞ் செய்ய அடுத்த முறை முயற்சிக்கும் போது மறு நாள் இடமில்லாமையால் ஒரு வாரமளவில் தாமதமாக சென்றமையால் பணி புரிந்த கொம்பனிக்கா?
யாருக்க அதிஸ்ட்டம்?

ஓவியன்
06-05-2008, 08:19 AM
யாருக்க அதிஸ்ட்டம்?

இல்லை விராடா, அது நம் மன்ற மக்களின் அதிஸ்டம்...
இப்படி ஒரு சம்பவம் நடந்ததால் தானே, உங்களது மேற்படி பதிவு இங்கே வந்தது - அதனால் அது நம் அதிஸ்டமே...!! :spudnikbackflip:

அனுராகவன்
06-05-2008, 09:04 AM
பத்து நிமிடங்களில் முகவரை அணுக அங்கு ஒரு சமிக்ஞை. வேலை நேரம் நிறைவுக்கு வந்துவிட்டதெனெ அறிவித்தது. எனது கடவுச் சீட்டையும் பயணச் சீட்டையும் வாங்கிக்கொள்ள கை தூக்கியிருந்தான். ஆனால் வாங்கவில்லை. அந்த வேளை பார்த்து அந்த ஒலி. உடனே, வேலை நேரம் முடிவடைந்து விட்டது நாளைக்கு வாருங்கள் என்று சொன்னான். என்ன செய்வது? அவர்களுடன் பேசிக்கொள்ள முடியுமா? பேசாமல் வந்துவிட்டேன். எனது ஆவணங்களை அவன் பெற்றுக்கொண்டிருந்த பின்னர் அந்த சமிக்ஞை ஒலி ஒலித்திருந்தால் எனது பணி அன்று முடிந்திருக்கும். எல்லாம் விதி......
இது எனக்கு முதற்தடவை இல்லை..... ஆனால் அண்மையில் நடந்ததில் ஒன்று :D .
ஏங்க எனக்குமட்டும் இப்படி.........
ஐயா அவசர காலத்தில இப்படி நடக்கரது சகஜம்தான்,கூட்டம் ஒரு காரணமாக அமையுது,கூட்டத்துல நாம முட்டி அடித்து போக முடியாது ,ஏனா அங்க இருக்கிர எல்லோரும் வெளியிருக்கும் போகும் அவசரம் ,அனாவசிமான டென்சனும் வரும்..
அதை நாம நமக்கு ஒரு தடம் முன்னறே வந்தவர் டிக்கெட் வாங்கி போகிருவார்..ஆனா பாருங்க கடைசில நாமதான் முதல் ஆளா இருப்போம் ..உடனே நாளைக்கு வாங்க என்று அனுப்பிறுவாங்க..
எனக்கும் இப்படி நடந்திருக்கு..
ஒருதடவ நான் பெங்கலூரிந்து சென்னை போக ரயிவே நிலையத்தில வரிசையில நின்னேன் நின்னேன் நின்னுக்கிட்டே இருந்தேன் அடுத்த நாள் சாயங்கலாம் வரையில்..
அந்த சமயம் தீபாவளி ;எனக்கு என்னா செய்யிறதுனு தோனால. அடுத்தஇரண்டு நாள்ல ஊருல்ல முக்கியமானவருக்கு கல்யானம் .போகலனா அவங்க தப்பாக போசிருவாங்க..
உடனே என் முன்னே இருக்கவங்கிட்ட நான் அவரமாக ஊருக்கு போகனும் அதனால டிக்கெட் வேணும் என்று கேட்டேன்.. அவர் ஏன்மா..டிக்கெட் வேணுமுனா இரணடு நாளயிக்கு முன்னாடி வந்திருந்த கிடைச்சரிகுமே என்று சொன்னார்..ஆனால் அந்த போச்சு எனக்கு அலுப்பைதான் தந்தது..
வேற என்ன செய்ரது ஒரு வழியா அடுத்தநாள் சாயங்காலம் தான் கிடைத்தது..மிக நீண்ட வரிசை..காத்தே வராது..
இப்படி பல நடக்கும் ..இதலெல்லாம் நாம முன்னாடியே வந்திருந்தா போயிருக்கலாமுனு தோனும்..
அவசரத்தில வந்து நின்னா இப்படிதா நடக்கும்..

ஷீ-நிசி
06-05-2008, 02:02 PM
வீட்டை பூட்டிட்டு கிளம்பி 5 நிமிஷம் ஆனதுக்கப்புறம் வீட்டை பூட்டினோமானு சந்தேகம் வந்து தொலைக்குதே!

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

படம் பார்க்க தியேட்டருக்குப் போன எனக்கு முன்னாடி சீட்ல வந்து உட்காருகிறவன் மட்டும் ஏன் எப்பவுமே வளர்ந்தவனா இருக்கான்?!

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

சரியா கிளம்புற நேரம் 5.30 மணிக்கு பாஸ் வேலை கொடுப்பாரு.. சரின்னு வேலைய முடிச்சி பிரிண்ட் அவுட் எடுக்கப்போனா அதோட கம்ப்யூட்டரை சட் டவுண் பன்னிட்டு போயிருப்பான் கடமை தவறாத சக நண்பன். கஷ்டப்பட்டு போன் பன்னி லாகின் டீடெய்ல்ஸ் கேட்டு லாகின் பன்னிட்டு பிரிண்ட் அவுட் கொடுத்தா காட்ரிட்ஜ் காலி ஆகி... பிரிண்ட் அவுட் விட்டு விட்டு வருமே.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

வேகவேகமா வேலைய முடிச்சிட்டு கம்பெனி வேன் பிடிக்க போனா வேன் அப்பதான் கிளம்பி போகும். சரின்னு வேன் உள்ள இருக்கற நண்பனுக்கு போன் செய்து வண்டிய நிறுத்தலாம்னு போன் பன்னா, உங்களுடைய பேலன்ஸ் குறைவாக இருக்கிறது. உடனடியாக ரீஜார்ஜ் செய்யவும்னு. ஒரு லேடி பேசி அந்த வேனை பிடிக்கவே முடியாதபடி செய்யுதே?!

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?!

சூரியன்
06-05-2008, 03:34 PM
நன்றி பூ, ஆனாலும் பல நேரத்தில் உன் கருணை உள்ளத்தை கண்டு நான் அதிசயத்துள்ளேன்.

ஆனாலும் அந்த (கருப்பு வர்ணம்) வரியை கண்டு :D:D:D

:traurig001::traurig001::traurig001: எனக்காக சூரியனே கண்ணீர் சிந்துதே!!!

அக்காவுக்காக சூரியன் இது கூட செய்யாதா.:rolleyes:

சூரியன்
06-05-2008, 03:38 PM
நீங்க சொல்ரத பார்த்த எனக்கு நடந்த சொல்லுனும்னு தோனுது நானும் சொல்றேன் விரைவில்.:icon_b:

Keelai Naadaan
06-05-2008, 06:23 PM
எனக்கும் சொல்ல ஆசை மீறுது.

எனக்கு நிச்சயதார்த்தம் ஆன சமயம். என் மாமனார் வீட்டில் திருத்தணி கோவிலுக்கு செல்ல ஏற்பாடாகி அவர்களுடன் நானும் சென்றேன். மாமனார், அத்தை, பாட்டி, மைத்துனர் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர்.. சொல்ல மறந்தேனே..என் தேவதையும்.
மனசுக்குள்ள எத்தன பட்டாம்பூச்சி வட்டமடிச்சுதுன்னு சொல்ல வேண்டியதில்ல... எல்லோருக்கும் புரியும்.
சுவாமி தரிசனத்த (!!..?) முடிச்சிட்டு எல்லோரும் ஓரிடத்தில் சாப்பிட அமர்ந்தோம். புளியோதரை, வடை, கத்தரிக்காய் கூட்டு மற்றும் ஆளுக்கொரு ருமானி மாம்பழம். தையல் இலையில் பரிமாறினார்கள். தையல் எதிரில் அமர்ந்திருந்தாள். நல்ல பசி. எதிரெதிரே அமர்ந்திருந்ததால் சற்று கூச்சத்துடன் பதவிசாக சாப்பிட்டோம். மனசு உணவில் இல்லை. எல்லோரும் கிண்டல் செய்வதும் உபசரிப்பதுமாயிருந்தார்கள்.
எதிரில் வேறு மின்னல் வெட்டியது. அது அவள் பார்வை. கூடவே சிரிப்பு வேறு அவளுக்கு. என் பார்வை எதிரில் நிலைத்தது.
திடீரென யாரோ என் இலையை இழுத்தது போல் இருந்தது. ஒரு வினாடி சற்று பயந்து விட்டேன்.
என் இலையில் மாம்பழத்தை காணவில்லை. திரும்பி பார்த்தால் ஒரு குரங்கின் கையில் இருந்தது. எல்லோரும் சிரித்தார்கள். என்னைத் தவிர.
"இப்ப என்ன செய்வ" என்பது மாதிரியாக குரங்கு ஒரு பார்வை பார்த்தது பாருங்க...!!:fragend005:
"நீ சாப்பாட பாத்து சாப்பிடனும்" என மாமனாரின் சிரிப்பு கலந்த அட்வைஸ்.
தேவதை விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு பின்புறமாக அந்த குரங்கு வருவதை அவள் பார்த்தாளாம். அதனால் தான் சிரித்தாளாம்.
நான் என்னை பார்த்து சிரிப்பதாக நினைத்திருந்தேன்..:)
.....................................................................
இப்போதும் இதை எண்ணி சிரிப்பதுண்டு.:lachen001::lachen001:
........................................................................................
ஒரு சின்ன உரையாடல்
என் மனைவி: என்ன சாமி கம்ப்யூட்டர்ல உக்காந்திட்டிங்களா..?
நான்: ஆமா மேடம்... நம்ம திருத்தணி போனது பத்தி...
(படிக்கிறார்)
என் மனைவி: ம்ம்..க்கும்..தேவதை.!. இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல..

அன்புரசிகன்
06-05-2008, 06:32 PM
திடீரென யாரோ என் இலையை இழுத்தது போல் இருந்தது. ஒரு வினாடி சற்று பயந்து விட்டேன்.
என் இலையில் மாம்பழத்தை காணவில்லை. திரும்பி பார்த்தால் ஒரு குரங்கின் கையில் இருந்தது. எல்லோரும் சிரித்தார்கள். என்னைத் தவிர.
"இப்ப என்ன செய்வ" என்பது மாதிரியாக குரங்கு ஒரு பார்வை பார்த்தது பாருங்க...!!:fragend005:
"நீ சாப்பாட பாத்து சாப்பிடனும்" என மாமனாரின் சிரிப்பு கலந்த அட்வைஸ்.
தேவதை விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு பின்புறமாக அந்த குரங்கு வருவதை அவள் பார்த்தாளாம். அதனால் தான் சிரித்தாளாம்.
நான் என்னை பார்த்து சிரிப்பதாக நினைத்திருந்தேன்..:)

தற்பேது இந்த கதையை எனது அறையிலிருந்த நான்குபேருக்கு வாசித்துக்காட்டினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒருத்தனுக்கு புரக்கேறிவிட்டது. தண்ணீர் அருந்த வெளியே சென்றிருக்கிறான்... :D

விகடன்
07-05-2008, 11:04 AM
தேவதை விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு பின்புறமாக அந்த குரங்கு வருவதை அவள் பார்த்தாளாம். அதனால் தான் சிரித்தாளாம்.

தெரியாமல்த்தா கேற்கின்ற்றேன். முன்னப் பின்ன தெரியாத குரங்கைப்பார்த்து சிரித்த உங்கள் தேவதை முன்னால் இருக்கும் உங்களை பார்த்து ஏன் சிரிக்கவில்லையாம்....... :confused:

உங்க ந்நிலமை உண்மையிலேயெ கவலைக்கிடந்தான். :lachen001:

Keelai Naadaan
07-05-2008, 04:58 PM

நான்: மேடம், விராடன் கேள்விக்கு பதில் சொல்லுங்க
என் மனைவி: அழகா, சுறுசுறுப்பா இருக்கேன்னு சிரிச்சேன்.:lachen001::lachen001:

உங்களுக்கு இப்ப சந்தோஷம் தானே விராடன்?:mad: (சும்மா)

Keelai Naadaan
07-05-2008, 05:00 PM
தற்பேது இந்த கதையை எனது அறையிலிருந்த நான்குபேருக்கு வாசித்துக்காட்டினேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஒருத்தனுக்கு புரக்கேறிவிட்டது. தண்ணீர் அருந்த வெளியே சென்றிருக்கிறான்... :D

நன்றிகள் நண்பரே.

பூமகள்
07-05-2008, 05:23 PM
.....................................................................
இப்போதும் இதை எண்ணி சிரிப்பதுண்டு.:lachen001::lachen001:
........................................................................................
மலரும் நினைவுகளோ??!! :D:D
கீழை நாடான் அண்ணா,
உங்களின் பதிவு அருமை.. படித்ததும் சிரித்துவிட்டேன்..!! :lachen001::lachen001:
அந்த நேரத்தில் அப்படித்தான் இருந்திருக்கும்..!! :rolleyes::icon_rollout:
மிகவும் சுவையான சம்பவம்..!!
உங்களின் இல்லறத்தில் என்றும் இதே இனிமை மேலோங்க வாழ்த்த வயதில்லை... பிராத்திக்கிறேன்..!! :icon_b::icon_b:

என் மனைவி: ம்ம்..க்கும்..தேவதை.!. இதுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல..
அண்ணி, முகத்தை தோளில் இடித்து, அவரது கையால் உங்க கன்னத்தில் ஒரு செல்ல கிள்ளு கிள்ளியிருக்கனுமே??!!
அதை எப்படி சொல்லாம விட்டீங்க அண்ணா??!! :rolleyes::p:cool: :D:D

நல்லதொரு பகிர்வு.. மிக்க நன்றிகள் அண்ணா.

இது மாதிரி வேற நடந்திருந்தாலும் உச்ச நீதி மன்றத்தில் அனுமதி வாங்கிட்டு சொல்லுங்க அண்ணா...!! :icon_ush::icon_ush:

Keelai Naadaan
07-05-2008, 05:41 PM
மலரும் நினைவுகளோ??!! :D:D
கீழை நாடான் அண்ணா,
உங்களின் பதிவு அருமை.. படித்ததும் சிரித்துவிட்டேன்..!! :lachen001::lachen001:
அந்த நேரத்தில் அப்படித்தான் இருந்திருக்கும்..!! :rolleyes::icon_rollout:
மிகவும் சுவையான சம்பவம்..!!
உங்களின் இல்லறத்தில் என்றும் இதே இனிமை மேலோங்க வாழ்த்த வயதில்லை... பிராத்திக்கிறேன்..!! :icon_b::icon_b:

அண்ணி, முகத்தை தோளில் இடித்து, அவரது கையால் உங்க கன்னத்தில் ஒரு செல்ல கிள்ளு கிள்ளியிருக்கனுமே??!!
அதை எப்படி சொல்லாம விட்டீங்க அண்ணா??!! :rolleyes::p:cool: :D:D

நல்லதொரு பகிர்வு.. மிக்க நன்றிகள் அண்ணா.

இது மாதிரி வேற நடந்திருந்தாலும் உச்ச நீதி மன்றத்தில் அனுமதி வாங்கிட்டு சொல்லுங்க அண்ணா...!! :icon_ush::icon_ush:

போங்கம்மா வெட்கமா இருக்கு. :icon_rollout:
இன்னும் சில சம்பவம் இருக்கு அப்பறமா சொல்றேன்.

.............................................................................................................
என் மனைவி: உச்சநீதி மன்றத்தில மறுத்தா மட்டும் கேட்டிருவாராக்கும்..!! எல்லாம் சும்மா நடிப்பு மலரு, நம்பாத..:)

பாலகன்
07-05-2008, 06:05 PM
அன்புள்ள கீழை தங்களின் அனுபவமும் அதன் பின் வந்த உரையாடல்களும் மிக மிக ரசிக்க தகுந்த வகையில் அமைந்திருந்தது....... சரி ஆத்து தண்ணிய வெள்ளமா அடிச்சிட்டு போயிட போவுது,,,, ஏன் அவ்வளவு அவசரம்......... கொஞ்சம் பிகு செய்ய இயலாமல் போயிற்றா தங்களுக்கு?

பாருங்க குரங்கு கதாநாயகனாயிடுச்சி,,, இப்ப அண்ணி என்ன சொல்லபோறாங்கன்னு பார்ப்போம்,,,,,,,

தேவதை மேடம் ஆயிட்டாங்க,,,,,,,,,,,, அருமையான எதார்த்தம்,,,

அன்புடன்
பில்லா

பூமகள்
07-05-2008, 06:15 PM
என் மனைவி: உச்சநீதி மன்றத்தில மறுத்தா மட்டும் கேட்டிருவாராக்கும்..!! எல்லாம் சும்மா நடிப்பு மலரு, நம்பாத..:)
என்னது...?? மலரா??!! :eek::eek:
மலரு இந்தப்பக்கம் வந்தே ஒரு வாரம் இருக்குமே??!! :rolleyes::fragend005:

ஏங்க அண்ணா, நான் பூமகள்னு தெரியலையா??!! :confused::icon_ush: :traurig001::traurig001:

Keelai Naadaan
07-05-2008, 06:29 PM
அன்புள்ள கீழை தங்களின் அனுபவமும் அதன் பின் வந்த உரையாடல்களும் மிக மிக ரசிக்க தகுந்த வகையில் அமைந்திருந்தது....... சரி ஆத்து தண்ணிய வெள்ளமா அடிச்சிட்டு போயிட போவுது,,,, ஏன் அவ்வளவு அவசரம்......... கொஞ்சம் பிகு செய்ய இயலாமல் போயிற்றா தங்களுக்கு?

அன்புடன்
பில்லா

பில்லா, நீங்களும் அந்த வயசு தாண்டி தானெ வந்திங்க... உங்களுக்கு தெரியாதா..?:):):)

Keelai Naadaan
07-05-2008, 06:33 PM
என்னது...?? மலரா??!! :eek::eek:
மலரு இந்தப்பக்கம் வந்தே ஒரு வாரம் இருக்குமே??!! :rolleyes::fragend005:

ஏங்க அண்ணா, நான் பூமகள்னு தெரியலையா??!! :confused::icon_ush: :traurig001::traurig001:

sorryம்மா.
எனக்கு மலர்னு ஒரு தங்கை உண்டு. அந்த ஞாபகம்.
(பூமகள் என்றாலும் மலர் தானெ)

பாலகன்
07-05-2008, 06:43 PM
பில்லா, நீங்களும் அந்த வயசு தாண்டி தானெ வந்திங்க... உங்களுக்கு தெரியாதா..?:):):)

அய்யா கீழை நாடாரே,,,,,,,,,,, எனக்கு இது மாதிரி நடக்கலையே.................... நீங்க கொடுத்து வச்சவரு,,,,,, குரங்க வச்சி காமெடி பன்னாலும் அது ரொம்ப நல்லாயிருந்துது,,,,,,,

நான் பொன்னு பாக்க போன போது........... என்ன எல்லாரும் பொன்னு பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க,, நான் உடனே உம் என்று தலையாட்டிட்டேன்.... உடனே பக்கத்தில இருந்த சித்தப்பா என் தொடைய கிள்ளி விட்டுட்டு பொன்னு விட்டுகாரங்களிடம் வீட்டுக்கு போயி கடுதாசி போடுறோம்னு சொல்லிட்டார்,,,, இடைமறித்த எங்க அம்மா எனக்கும் பொன்னு புடிச்சிருக்குன்னு சொல்லி உடனே தட்டை மாத்திட்டாங்க,,,,,,,,,,

அன்புடன்
பில்லா

Keelai Naadaan
08-05-2008, 03:22 PM
நான் பொன்னு பாக்க போன போது........... என்ன எல்லாரும் பொன்னு பிடிச்சிருக்கான்னு கேட்டாங்க,, நான் உடனே உம் என்று தலையாட்டிட்டேன்....
அன்புடன்
பில்லா

ஆண்டவன் ஆண்களுக்கு தலையை படைத்ததே அதற்கு தானே. தவறில்லை.

அன்புரசிகன்
08-05-2008, 03:28 PM
ஆண்டவன் ஆண்களுக்கு தலையை படைத்ததே அதற்கு தானே. தவறில்லை.

ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கேள்................. :D

Keelai Naadaan
08-05-2008, 04:05 PM
ரொம்பத்தான் பாதிக்கப்பட்டிருக்கேள்................. :D

இன்னும் உங்களுக்கு திருமணமாகலையா..? அல்லது பக்கத்தில் ஆள் இல்லையா..?

Keelai Naadaan
09-05-2008, 03:41 AM
எங்க.... இந்த திரிப்பக்கம் யாரையும் காணும்.. ஏதாவது தவறா சொல்லிட்டேனா..?:confused: எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..??:confused:

பூமகள்
09-05-2008, 03:45 AM
இன்னும் உங்களுக்கு திருமணமாகலையா..? அல்லது பக்கத்தில் ஆள் இல்லையா..?
அவரது சிரிப்புப் பார்த்தே தெரியலை அண்ணா??!! :rolleyes::icon_rollout:
மாட்டிக்க இன்னும் கொஞ்ச நாள் தான்...!!:p:cool::icon_b: :lachen001::lachen001:

Keelai Naadaan
09-05-2008, 04:10 AM
[COLOR=DarkOrchid]அவரது சிரிப்புப் பார்த்தே தெரியலை அண்ணா??!! :rolleyes::icon_rollout:

அதுதானெ பார்த்தேன்.
நன்றி பூமகளே.

SathyaThirunavukkarasu
09-05-2008, 04:41 AM
ஒவ்வொறு நிகழ்ச்சியும் சம்பவும் வித்தியாசமாகவும் உள்ளன. தொடருங்கள்.

பாராட்டுகள் அனைவருக்கும்

ஓவியன்
13-05-2008, 03:14 PM
திரும்பி பார்த்தால் ஒரு குரங்கின் கையில் இருந்தது. எல்லோரும் சிரித்தார்கள். என்னைத் தவிர.
"இப்ப என்ன செய்வ" என்பது மாதிரியாக குரங்கு ஒரு பார்வை பார்த்தது பாருங்க...!!:fragend005:..

ஆமா கீழை நாடன் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...??? :lachen001:

நிரம்பவும் இரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி நண்பரே..!! :)

Keelai Naadaan
13-05-2008, 04:42 PM
ஆமா கீழை நாடன் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...??? :lachen001:

நிரம்பவும் இரசித்தேன் - பகிர்வுக்கு நன்றி நண்பரே..!! :)

நன்றி நன்பரே..
நல்ல திரியை ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள்.

இன்னொரு அனுபவம் இது.

சில வருடங்களுக்கு முன்னால் நான் வேலை பார்த்த ஒரு சிறிய அலுவலகத்திலே என் முதலாளி சொன்னார். "ஏப்பா கீழை ***** கம்பெனியில நாளைக்கு பேமெண்ட்
செக் தர்ரதா சொல்லியிருக்காங்க. அவரு சுகுமார், **** படத்துக்கு சினிமா டிக்கட் வாங்கி தர முடியுமான்னு கேட்டாரு. நீ நாளைக்கு என்ன பண்ற, வீட்டிலிருந்து நேரா
அந்த தியேட்டருக்கு போய் ஃபர்ஸ்ட் ஷோ-க்கு நாலு டிக்கட் வாங்கிட்டு வா" என்றார். அதற்கான பணமும் கொடுத்தார்.
(சுகுமாருக்கு புதிதாக திருமணமாகியிருந்தது. மனைவி மற்றும் மாமனார் மாமியாரோடு போக திட்டம் போலும்) நானும் அவர் சொன்னமாதிரி வீட்டிலிருந்து நேரா சினிமா தியேட்டருக்கு போய் டிக்கட் வாங்கி விட்டு (அந்த படம் பார்க்க எனக்கும் ஆசை. அடக்கி கொண்டு) அலுவலகம் போனேன்.
டிக்கட்டை வாங்கி பார்த்த என் முதலாளிக்கு முகம் மாறியது. எனக்குள் கலவரம். ஏன்னா என்னை திட்டுவதாயிருந்தால் அவர் முகம் அப்படித்தான் மாறும்.
என்ன சார்..? என்றேன்.
ஏப்பா நா ஒங்கிட்ட என்ன சொன்னேன்.
ஃபர்ஸ்ட் ஷோக்கு டிக்கட் வாங்க சொன்னிங்க.
நீ எதுக்கு வாங்கிட்டு வந்திருக்க
நானும் ஃபர்ஸ்ட் ஷோக்கு தான் வாங்கியிருக்கேன். பாருங்க.. லெவன் தர்ட்டி ஷோ-க்கு தான் வாங்கியிருக்கேன். என்றபடி சந்தேகத்துடன் அவர் கையிலிருந்த டிக்கட்டை பார்த்தேன். 11.30 காட்சி தான். மனசுக்குள் சற்று நிம்மதி.. நம்ம மேல தப்பில்ல
ஃபர்ஸ்ட் ஷோ-ன்னா 11.30 யா..? யாருப்பா சொன்னா..? கோபமாய் கேட்டார்
சார் மெட்றாஸ்ல எல்லா தியேட்டர்லயுமே ஃபர்ஸ்ட் ஷோ 11.30க்கு தான்.-நான் சந்தேகத்துடன் சொன்னேன்
யோவ்..ஃபர்ஸ்ட் ஷோ-ன்னா ஈவ்னிங் ஷோ-ய்யா.. நைட் ஷோ-வ செகண்ட் ஷோ-ன்னு கேள்விபட்டிருக்கியா இல்லையா..?
ஆமா கேள்விபட்டிருக்கேன் ஆனா அது ஃபோர்த் ஷோவாச்சே அதை ஏன் செகண்ட் ஷோ-ன்னு சொல்றாங்க..?:fragend005: நான் புரியாமல் கேட்டேன்.
இது அறியாமையால் நடந்த தவறு என புரிந்து கொண்டார். பிறகு விளக்கினார். இல்லப்பா ஊருங்கள்ள, டெண்ட் கொட்டகையில ஈவ்னிங் ஷோவும் நைட் ஷோவும் தான் இருக்கும் அதனால் அதை ஃபர்ஸ்ட் ஷோ, செகண்ட் ஷோன்னு சொல்லுவாங்க என்றார்.
ஓ... அப்படியா..:fragend005: என மனதில் நினைத்துக்கொண்டேன். பெரிய தங்கமலை ரகசியம் புரிஞ்ச திருப்தி எனக்கு
இதை வச்சு அவரு எப்படிப்பா 11.30க்கு போவாரு..? ஆபிஸ் இருக்குமே..!! என யோசித்தார். பிறகு, சரி எடுத்தாச்சு. கொண்டு போயி 11.30 ஷோ-ன்னு சொல்லிக்குடு. என்றார்.
நானும் அந்த அலுவலகம் போனேன். இன்முகத்துடன் என்னை வரவேற்றார் சுகுமார். நான் கேட்காமலேயே சந்தோசமாய் செக்கை தந்தார். சார் டிக்கட்...என தயங்கி கொடுத்தேன். சற்று தள்ளி இரு இருக்கைகளில் வேறு நபர்கள் இருந்தார்கள்.
அதனால் மெதுவாய் சொன்னேன். 11.30 ஷோ என்று. அவர் சங்கோஜத்துடன் வாங்கி கொண்டார்.
"தாங்ஸ்-னு சொல்லுங்க" என சற்று வழிந்தார்
நானும் வந்து விட்டேன். இரண்டு தினங்கள் கழித்து முதலாளி கோபமாய் கேட்டார். ஏப்பா அவர்கிட்ட 11.30 ஷோ-ன்னு சொன்னியா இல்லையா?
சொன்னேன் சார். ஏன் சார் என்னாச்சு.. என்றேன்
நேத்து சாயந்திரம் தியேட்டருக்கு போனாங்களாம். 11.30 ஷோ-டிக்கட்னு அங்க தியேட்டர்ல விடலயாம். ஹவுஸ் புல்-லாம். வீட்டுக்கு வந்துடாங்களாம். என்றவர் முகத்தில் சற்று சிரிப்பு.
சார் நான் சொன்னேன். அவரு தலய ஆட்டிகிட்டு வாங்கி வச்சுட்டாரு என்றேன்.
அந்த மனுஷர் டிக்கட்ட பாக்கமலா தியேட்டருக்கு போவாரு.. விடு.. இனிமே அவரு நம்ம கிட்ட டிக்கட் கேக்க மாட்டாரு என்றார்
அப்பாடா..!!! என ஆகிவிட்டது எனக்கு.:)
(அந்த நபரின் பெயர் சுகுமார் அல்ல)
நன்றிகள்

ஓவியன்
13-05-2008, 05:14 PM
பகிர்வுக்கு மிக்க நன்றி கீழை நாடன்...!!
_________________________________________________________________________________________________________________

இது கொஞ்சம் பரவாயில்லை, நீங்க நேரம் மாறித்தான் டிக்கெட் எடுத்திருக்கீங்க, ஆனா நம்மாளுங்க படம், தியட்டர் எல்லாம் மாறி டிக்கட் எடுத்து வந்திருக்காங்க...!! :D

Keelai Naadaan
14-05-2008, 02:45 AM
நீங்க நேரம் மாறித்தான் டிக்கெட் எடுத்திருக்கீங்க, ஆனா நம்மாளுங்க படம், தியட்டர் எல்லாம் மாறி டிக்கட் எடுத்து வந்திருக்காங்க...!! :D

சினிமா படம் விஷயத்தில, அந்த தப்பெல்லாம் செய்ய மாட்டோமில்ல..:D

arun
01-08-2008, 06:59 PM
தூரத்துல இருக்குற பொண்ணு நம்மளையே பாக்கற மாதிரி இருக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணோட ஆள் எங்க இருந்து தான் வருவானோ?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ?

சும்மா தான் நானும் எதுனா சொல்லனும்ல ......:D:D:D

ஓவியன்
02-08-2008, 02:08 AM
ஹீ, ஹீ.....!!

அனுபவத்தைப் பார்த்தால் 'சும்மா' மாதிரித் தெரியலையே...!! :D

kadalan
02-08-2008, 05:29 AM
ஆகா நல்ல நல்ல அனுபவங்கலெல்லாம் வருதே.

பூமகள்
02-08-2008, 06:07 AM
மருத்துவரைப் பார்க்கனாலும் சரி... வேற எங்கனாலும் சரி... ஒரு வரிசையில் நின்னு நம்ம முறை வரும் போது தான்..

நாம ஒரு 2 மணி நேரம் காத்திருந்து உள்ளே செல்ல எத்தனிக்கையில்..
அப்ப தான் வந்து 20 நிமிடமான ஒருவர்.. பரிசோதனை எடுக்கனும்.. பசிக்குது.. சாப்பிடாம எடுக்கனும்.. அப்படி இப்படின்னு சொல்லிட்டு உள்ளே நுழைவாங்க..

நாமலும்.. பாவம் பார்த்து இன்னும் அடுத்த அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ காத்திருந்தா.. அடுத்த ஆளும் வந்து... நிலைமை புரியாம அவுங்க உள்ளே போக கேட்பாங்க பாருங்க... அப்போ தோணும்..

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது??!!

(இன்னும் சொல்வேன்..!!)

சிவா.ஜி
02-08-2008, 06:12 AM
கோவில் கூட்டத்துல முட்டிமோதி சுண்டல் வாங்க கையை நீட்டினா....பாத்திரத்தைக் கவிழ்த்துக் காண்பித்து சொல்லுவார்.....தீர்ந்து போச்....
மன்னன் பட ரஜினி, கவுண்டமணி ரேஞ்சுக்கு சட்டையெல்லாம் நனைஞ்சு, கிழிஞ்சு டிக்கெட் வாங்க கையை நீட்டும்முன் போர்ட் சொல்லும் ஹவுஸ்ஃபுல்....

arun
04-08-2008, 06:32 PM
ஹீ, ஹீ.....!!

அனுபவத்தைப் பார்த்தால் 'சும்மா' மாதிரித் தெரியலையே...!! :D

இதெல்லாம் கண்டுக்க கூடாது ..:D

arun
04-08-2008, 06:35 PM
படம் பார்த்துட்டே இருக்கும் போது முக்கியமான நேரத்துல கரண்ட் போகும் அப்ப தான் சொல்ல தோணும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது(பொதுவாக எல்லோருக்கும் கூட)

அறிஞர்
04-08-2008, 06:42 PM
சினிமா டிக்கெட்டுகளில் எத்தனை விசயங்கள்.. எத்தனை அனுபவங்கள்..

கலக்குங்க... மக்கா...

அறிஞர்
04-08-2008, 06:42 PM
படம் பார்த்துட்டே இருக்கும் போது முக்கியமான நேரத்துல கரண்ட் போகும் அப்ப தான் சொல்ல தோணும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது(பொதுவாக எல்லோருக்கும் கூட)
கரண்ட் திரும்ப வந்ததும் பார்க்க தானே போறீங்க.. :D:D:D

arun
04-08-2008, 06:47 PM
கரண்ட் திரும்ப வந்ததும் பார்க்க தானே போறீங்க.. :D:D:D

தியேட்டர்ல இல்ல வீட்ல....:D :D

ஓவியன்
21-08-2008, 06:05 AM
படம் பார்த்துட்டே இருக்கும் போது முக்கியமான நேரத்துல கரண்ட் போகும் அப்ப தான் சொல்ல தோணும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது(பொதுவாக எல்லோருக்கும் கூட)

ஹீ, ஹீ...!!

வீடுகளில் பொதுவாக நடக்கும் இந்த விடயம், எனக்கு ஒரு தடவை தியேட்டரில் நடந்தது....

மின்சாரத் தடை வந்ததும் தியேட்டரில் ஜெனரேட்டரை இயக்கிப் பார்த்தார்கள், ஆனால் அதுவும் காலை வாரி விட பாதிப் படம் பார்த்த திருப்தியுடன்(!) வீடு வந்தேன்...!!

அந்தப் படம் மம்மூட்டி நடித்த ”ஆனந்தம்”..!!

arun
21-08-2008, 06:18 PM

ஆனந்தம் படம் பார்க்கப் போய் முழு ஆனந்தத்துடன் வீட்டுக்கு திரும்பவில்லையா?.. :D

ஓவியன்
22-08-2008, 03:32 AM
ஆனந்தம் படம் பார்க்கப் போய் முழு ஆனந்தத்துடன் வீட்டுக்கு திரும்பவில்லையா?.. :D

ம்ஹூம், மின்சாரத் தடையால் 'ஆனந்தம்' குறையில் நின்று விட...
என் ஆனந்தமும் இடை நடுவே நின்றுவிட்டது அன்று..!! :)

ஓவியன்
26-12-2008, 02:36 PM
ஒரு நாள் அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்பட, அருகிலிருந்த தானியங்கி பண இயந்திரத்தில் என்னுடைய தானியங்கி இயந்திரத்துக்குரிய அட்டையை இட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அழுத்தி விட்டுக் காத்திருந்தேன்...

பணம் எடுத்ததற்கான ரசீதை மட்டும் கொடுத்தது அந்த இயந்திரம், ஆனால் பணத்தை விழுங்கி விட்டு.... :eek:

ரசீதில் நான் பணம் எடுத்ததாகக் காட்டப் பட்டிருக்க, அவசரம் அவசரமாக என் வங்கிக்கு ஓடினேன், விடுமுறைகள் காரணமாக நேரத்துடன் வங்கி அலுவல்களை முடித்து விட்டோம் விடுமுறை கழிந்த பின் வாருங்கள் என வங்கி அறிவிக்க... :eek:

விடுமுறை கழியும் வரை காத்திருந்து, மறுபடி, மறுபடி பலதடவைகள் வங்கிக்குச் சென்று, பல விதமான நடைமுறைகளின் படி இயங்கி ஒரு வழியாக இயந்திரம் விழுங்கிய அந்த பணத்தை மறுபடியும் நான் பெற்றுக் கொண்டேன்...

ஆமாங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...??? :traurig001::traurig001:

arun
26-12-2008, 04:38 PM
மீதி சில்லறை காச கண்டக்டர் கிட்ட கேட்டா முறைக்கிறார்...:eek:

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? :fragend005:

ஓவியன்
26-12-2008, 04:44 PM
மீதி சில்லறை காச கண்டக்டர் கிட்ட கேட்டா முறைக்கிறார்...:eek:

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? :fragend005:

ஹா, ஹா...!! :D

பேசாம நம்மளைப் போலவே இறக்க வேண்டிய இடத்தில் இறங்காம மீதி சில்லறை காசுக்கும் பஸ்ஸில பயணம் போகலாமே...!! :D:D

arun
26-12-2008, 04:47 PM
ஒரு நாள் அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்பட, அருகிலிருந்த தானியங்கி பண இயந்திரத்தில் என்னுடைய தானியங்கி இயந்திரத்துக்குரிய அட்டையை இட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை அழுத்தி விட்டுக் காத்திருந்தேன்...

பணம் எடுத்ததற்கான ரசீதை மட்டும் கொடுத்தது அந்த இயந்திரம், ஆனால் பணத்தை விழுங்கி விட்டு.... :eek:

ரசீதில் நான் பணம் எடுத்ததாகக் காட்டப் பட்டிருக்க, அவசரம் அவசரமாக என் வங்கிக்கு ஓடினேன், விடுமுறைகள் காரணமாக நேரத்துடன் வங்கி அலுவல்களை முடித்து விட்டோம் விடுமுறை கழிந்த பின் வாருங்கள் என வங்கி அறிவிக்க... :eek:

விடுமுறை கழியும் வரை காத்திருந்து, மறுபடி, மறுபடி பலதடவைகள் வங்கிக்குச் சென்று, பல விதமான நடைமுறைகளின் படி இயங்கி ஒரு வழியாக இயந்திரம் விழுங்கிய அந்த பணத்தை மறுபடியும் நான் பெற்றுக் கொண்டேன்...

ஆமாங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது...??? :traurig001::traurig001:

எனக்கும் இது போல ஆகி இருக்கிறது ஆனால் கார்டு உள்ளே மாட்டிக் கொண்டது பணமும் வரவில்லை

வேறு ஒருவர் கார்டை நுழைக்கும்போது எனது நல்ல நேரம் கார்டு வெளியே வந்து விட்டது அதன் பின்னர் எதுக்கு ரிஸ்க் என்று அந்த மெசினில் பணம் எடுக்கவில்லை

ஓவியன்
26-12-2008, 04:52 PM

அருண், உங்கராசியும் என் ராசியும் ஒரே ராசிதான் போலிருக்கு... :icon_rollout:

ரங்கராஜன்
28-12-2008, 02:56 AM
இப்பொழுது தான் இந்த திரியை நான் கண்டேன். எனக்கு மட்டும் நடக்கும் ஒரு சம்பவம் இருக்கு

அதாவது நான் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது கண்டிப்பாக இரண்டு விஷயம் நடக்கும்.

1. என்னுடைய பக்கத்து சீட்டில் உக்கார்ந்து இருப்பவர் தூங்கி தூங்கி என் மேலே விழுவார். அதுவும் சாதாரணமாக இருக்காது, ஒன்று அந்த ஆள் குடித்து இருப்பார், இல்லை தலை நிறைய எண் தடவி இருப்பார், கண்டிப்பாக 1/2 லிட்டர் எண்னையாவது என் முகத்தில் பூசிவிட்டு தான் இறங்குவார்.

2. எனக்கு பக்கது சீட்டில் என்னை விட இரு மடங்கு குண்டான ஆள் வந்து உக்கார்ந்து விடுவார். பயணம் முடிவதற்க்குள் மூச்சு அடைத்து விடும், அதுவும் அவரை தாண்டி நான் நிறுத்தத்தில் இறங்குவதற்க்குள் கரும்பு ஜூஸ் மிஷினில் நசுக்கப்பட்ட கரும்பாகி விடுவேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது........................

ஓவியன்
28-12-2008, 04:18 AM
ஆஹா மூர்த்தி, பஸ்ஸில் பயணமாகும் போது நீங்கள் ஒரு வெறும் பாட்டிலையும் கையுடன் எடுத்துக் கொண்டு சென்றால் நலம், இலவசமாக எண்ணை பிடித்து வரலாம்... :D:D:D

சிவா.ஜி
28-12-2008, 04:24 AM
டக்ஸ்க்கு நேருவது...எனக்கும் நேர்ந்திருக்கிறது. பஸ்சில் ஏறும்போது டிப்டாப்பாக இருந்த டக்ஸ் இறங்கும் போது எண்ணை வழிய இருக்கும் கோலத்தை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

அதனால் பேசாமல் ஓவியன் சொன்னதைப் போல காலி பாட்டிலுடன் ஏறி எண்ணை பாட்டிலுடன் இறங்கிவிடுங்கள்...ஹா...ஹா...ஹா

arun
19-02-2009, 07:12 PM
இப்பொழுது தான் இந்த திரியை நான் கண்டேன். எனக்கு மட்டும் நடக்கும் ஒரு சம்பவம் இருக்கு

அதாவது நான் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது கண்டிப்பாக இரண்டு விஷயம் நடக்கும்.

1. என்னுடைய பக்கத்து சீட்டில் உக்கார்ந்து இருப்பவர் தூங்கி தூங்கி என் மேலே விழுவார். அதுவும் சாதாரணமாக இருக்காது, ஒன்று அந்த ஆள் குடித்து இருப்பார், இல்லை தலை நிறைய எண் தடவி இருப்பார், கண்டிப்பாக 1/2 லிட்டர் எண்னையாவது என் முகத்தில் பூசிவிட்டு தான் இறங்குவார்.

2. எனக்கு பக்கது சீட்டில் என்னை விட இரு மடங்கு குண்டான ஆள் வந்து உக்கார்ந்து விடுவார். பயணம் முடிவதற்க்குள் மூச்சு அடைத்து விடும், அதுவும் அவரை தாண்டி நான் நிறுத்தத்தில் இறங்குவதற்க்குள் கரும்பு ஜூஸ் மிஷினில் நசுக்கப்பட்ட கரும்பாகி விடுவேன்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது........................

இதெல்லாம் சகஜம் தக்ஸ் பஸ்ல மட்டும் இல்ல ட்ரைன்ல கூட இப்படி தான் நடக்குது :icon_rollout:

அறிஞர்
23-02-2009, 02:27 PM
இப்பொழுது தான் இந்த திரியை நான் கண்டேன். எனக்கு மட்டும் நடக்கும் ஒரு சம்பவம் இருக்கு

அதாவது நான் பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது கண்டிப்பாக இரண்டு விஷயம் நடக்கும்.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது........................ ஹிஹிஹி.... உங்களை நினைத்து அழுவதா.. சிரிப்பதா.. என யோசிக்கிறேன்...

நிரன்
23-02-2009, 02:43 PM
கரும்பு ஜூஸ்

ஆஹா மூர்த்தி, பஸ்ஸில் பயணமாகும் போது நீங்கள் ஒரு வெறும் பாட்டிலையும் கையுடன் எடுத்துக் கொண்டு சென்றால் நலம், இலவசமாக எண்ணை பிடித்து வரலாம்... :D:D:D

அப்படீன்னா கரும்பு ஜூஸ்ற்கு கப்பா கொண்டு போகணும்:confused::rolleyes::D

செல்வா
23-02-2009, 03:15 PM
ஹிஹிஹி.... உங்களை நினைத்து அழுவதா.. சிரிப்பதா.. என யோசிக்கிறேன்...
இதையே ரொம்ப யோசிச்சு ரெண்டையும் சேர்த்து செய்தீங்கண்ணு வச்சுக்கோங்க அப்புறம் அண்ணி நீங்க சொன்ன அதே வரியச் சொல்லுவாங்க...

நிரன்
23-02-2009, 03:21 PM
இதையே ரொம்ப யோசிச்சு ரெண்டையும் சேர்த்து செய்தீங்கண்ணு வச்சுக்கோங்க அப்புறம் அண்ணி நீங்க சொன்ன அதே வரியச் சொல்லுவாங்க...

:D:D:D செல்வா அண்ணா ரொம்பத்தான் குறும்பு ஹிஹிஹி...

ஓவியன்
25-02-2009, 01:35 PM
அலுவலக நாட்களில் அலாரம் வைத்தாலும் அலார சத்தம் கேட்காது..
ஆனால், ஓய்வு நாட்களில் நன்றாக உறங்க நினைத்து உறங்கினால், அலாரம் வைக்காமலேயே அலுவலக நாட்களில் துயிலெழும் அதே நேரத்துக்கு தூக்கம் கலைகிறதே....!!! :eek:

ஏங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..??

ஓவியன்
25-02-2009, 01:37 PM
இதையே ரொம்ப யோசிச்சு ரெண்டையும் சேர்த்து செய்தீங்கண்ணு வச்சுக்கோங்க அப்புறம் அண்ணி நீங்க சொன்ன அதே வரியச் சொல்லுவாங்க...

ஆமா, உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..?? :D:D:D

அறிஞர்
25-02-2009, 02:53 PM
அலுவலக நாட்களில் அலாரம் வைத்தாலும் அலார சத்தம் கேட்காது..
ஆனால், ஓய்வு நாட்களில் நன்றாக உறங்க நினைத்து உறங்கினால், அலாரம் வைக்காமலேயே அலுவலக நாட்களில் துயிலெழும் அதே நேரத்துக்கு தூக்கம் கலைகிறதே....!!! :eek:

ஏங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..?? எனக்கும் ஓய்வுநாட்களில்,
சில நேரம் செல்போன் அலாராம்....
தேவையில்லாத SMS செய்தி....
வந்து தொல்லை பண்ணும்.

அன்புரசிகன்
25-02-2009, 03:38 PM
எனக்கும் ஓய்வுநாட்களில்,
சில நேரம் செல்போன் அலாராம்....
தேவையில்லாத SMS செய்தி....
வந்து தொல்லை பண்ணும்.
இதுக்குத்தான் ஜி.கே ஐ டெவலப் பண்ணனுங்கிறது... அந்தக்காலத்து டப்பாக்களை வைத்து அலாரம் வைச்சா இப்படித்தான். புதுப்போன்கள வாங்குங்கண்ணே................ :lachen001:

குறுந்தகவல்களுக்கு ஒன்னுமே பண்ணமுடியாது... :icon_rollout:

அறிஞர்
25-02-2009, 05:41 PM
புதுப்போன்கள வாங்குங்கண்ணே................ :lachen001: குறுந்தகவல்களுக்கு ஒன்னுமே பண்ணமுடியாது... :icon_rollout: குறுந்தகவல் பற்றி கதை சொல்லுறேன்...
அமெரிக்காவில் குறுந்தகவல் கொடுக்க, பெற தனியாக $5 கட்டவேண்டும். எனக்கு அதில் நாட்டமில்லாததால் அந்த வசதி பெறவில்லை.
ஒருநாள் இந்தியாவிலிருந்து ஒரு குறுஞ்செய்தி... "உங்கள் முகவரியை தர இயலுமா" என...
நான் கண்டுக்கொள்ளவில்லை.
2 நாள் கழித்து.. "மதப்பிரச்சனை நடந்த இடத்தில் மக்களுக்கு உதவ பணம் தேவை. அது பற்றி தகவல் அனுப்ப உங்கள் முகவரி தேவை என"
அந்த நம்பருக்கு போன் பண்ணினால் யாரும் எடுக்கவில்லை. பின் கண்டுக்கொள்ளவில்லை.
2 நாள் கழித்து.. 5 குறுஞ்செய்திகள் "உங்கள் முகவரி தேவை தேவை" என...
மீண்டும் அந்த நம்பருக்கு போன் பண்ணினால் யாரும் எடுக்கவில்லை. பின் கண்டுக்கொள்ளவில்லை.
பிறகு ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு 10 குறுஞ்செய்திகள் ">???????///////////#######!!!!!!!!!!!-------------????????...>>>>>>>>>"
விட்டு பிடிப்போம் அடங்கி விடுவார்கள் என எண்ணினேன்.
3 வாரம் தொடர்ந்து ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு 10 குறுஞ்செய்திகள் ">???????///////////#######!!!!!!!!!!!-------------????????...>>>>>>>>>"

பிறகு நம்பரை பிளாக் பண்ணி.... தப்பினேன்.
---------
இவங்க எப்படி நம்ப நம்பரை பிடிக்கிறானுங்கோன்னு தெரியலை....
ஏன் இப்படி தொல்லை தரானுங்கன்னோ புரியலை....
-------------
என்னவோ எனக்கு இப்படி... ஹிஹிஹி.

arun
25-02-2009, 06:55 PM
குறுந்தகவல் பற்றி கதை சொல்லுறேன்...
.குறுஞ்செய்திகள் ">???????///////////#######!!!!!!!!!!!-------------????????...>>>>>>>>>"
குறுஞ்செய்திகள் ">???????///////////#######!!!!!!!!!!!-------------????????...>>>>>>>>>"

எல்லாம் சொன்னீங்க இத மட்டும் சொல்லலையே ?? ... :)

எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D :D

அன்புரசிகன்
26-02-2009, 01:04 AM
எல்லாம் சொன்னீங்க இத மட்டும் சொல்லலையே ?? ... :)

எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D :D
அது அவரோட குறியீட்டு மொழி. அவர் சார்ந்தவர்களால் மட்டுமே படித்து புரிவர். கேட்டுப்பாருங்க... அமரன் இதை ரொம்ப ஈசியாக படித்துவிடுவார்.....:D

(அவரோட கவிதை கதையிலும் இந்த குறியீட்டு மொழி பரவாயில்லை)

ஓவியன்
26-02-2009, 02:04 AM
அமரன் இதை ரொம்ப ஈசியாக படித்துவிடுவார்.....:D

ஹீ, ஹீ, ஹீ...!!

அமரூ, சீக்கிரமாக வந்து மொழிபெயர்ப்பு பண்ணிடுங்கோ...!! :D:lachen001::D

arun
26-02-2009, 04:37 PM
அது அவரோட குறியீட்டு மொழி. அவர் சார்ந்தவர்களால் மட்டுமே படித்து புரிவர். கேட்டுப்பாருங்க... அமரன் இதை ரொம்ப ஈசியாக படித்துவிடுவார்.....:D

(அவரோட கவிதை கதையிலும் இந்த குறியீட்டு மொழி பரவாயில்லை)

சீக்கிரம் வாங்க அமரன் அது என்னன்னு தான் தெரிஞ்சிக்கலாம் :D :D :D

அறிஞர்
26-02-2009, 04:38 PM
எல்லாம் சொன்னீங்க இத மட்டும் சொல்லலையே ?? ... :)

எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D :D

அது அவரோட குறியீட்டு மொழி. அவர் சார்ந்தவர்களால் மட்டுமே படித்து புரிவர். கேட்டுப்பாருங்க... அமரன் இதை ரொம்ப ஈசியாக படித்துவிடுவார்.....:D

(அவரோட கவிதை கதையிலும் இந்த குறியீட்டு மொழி பரவாயில்லை)

ஹீ, ஹீ, ஹீ...!!

அமரூ, சீக்கிரமாக வந்து மொழிபெயர்ப்பு பண்ணிடுங்கோ...!! :D:lachen001::D
இது தாங்க செய்தியே... வெறும் குறிகள் தான்..(">???????///////////#######!!!!!!!!!!!-------------????????...>>>>>>>>>")... குறுஞ்செய்தி (கிட்டத்தட்ட 30 செய்தி இது மாதிரி)... (வேறு மொழியில் இந்தி/தமிழில் கொடுத்தாரோ என்னவோ)
நம்மூரு ஆட்களுக்கு குறும்பு ஜாஸ்திதான்..
என்னப்பண்ணுவது

arun
26-02-2009, 04:44 PM

உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D

அறிஞர்
26-02-2009, 04:47 PM
உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D அதானே தலைப்பு... :D:D:D:D:D

அன்புரசிகன்
26-02-2009, 07:09 PM
உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ? :D
ம்.. ம்.. ம்... ஒருவேள அப்டி இருக்குமோ...

ம்.. ம்.. ம்.. ஒருவேள இப்டி இருக்குமோ??? :lachen001:

அறிஞர்
26-02-2009, 10:11 PM
ம்.. ம்.. ம்... ஒருவேள அப்டி இருக்குமோ...

ம்.. ம்.. ம்.. ஒருவேள இப்டி இருக்குமோ??? :lachen001: எப்படி சார்...

subashinii
26-02-2009, 10:13 PM
படித்தால் சிரிப்பு வருகிறது... தலைவிதி.. எப்படியோ அப்படி தான் நடக்கும்.

அறிஞர்
13-03-2009, 01:20 PM
கடந்த திங்கட்கிழமை... சிகாகோ போலாம் என காலையில் ஏர்போர்ட்டிற்கு புறப்பட்டேன். 10 மணிக்கு பிளைட்... 6.30மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்தால் பனிமழை (ஸ்நோ) வரவேற்றது. காரை நண்பர் வீட்டில் நிறுத்திவிட்டு... அவருடன்... (பனிமழையில் கார் ஓட்ட) கொஞ்சம் கடினப்பட்டு, 8.15க்கு ஏர்போர்ட் வந்தோம்.

பிளைட் தாமதமாக கிளம்புமா என சந்தேகம். அங்கு சென்றால், இது வரை எல்லா பிளைட்டும் நேரத்திற்கு செல்கிறது.. தங்கள் விமானமும் சரியான நேரத்திற்கு செல்லும் என்றனர். அப்பாடியோவ் என சந்தோசத்துடன் பாதுகாவல் பரிசோதனை முடித்து உள்ளே சென்றேன்.

9.00க்கு அறிவிப்பு.. உங்கள் விமானம் காலதாமதம் என.. ஆஹா கவுத்திட்டாங்களே.. என.. ஆதங்கம்...பின் கணினி மூலம் மன்றம் வந்தேன்..

9.30 மணிக்கு விமானம் சரியான நேரத்திற்கு புறப்படுகிறது என்று சொல்லி போர்டிங்க் பண்ணினார்கள்... அப்பாடியோவ் என உள்ளே ஓரச்சீட்டு பார்த்து உட்கார்ந்து.. பனிமழையை ரசித்துக் கொண்டிருந்தேன். ரசித்து கொண்டே இருந்தேன்.

விமான கிளம்பின பாடில்லை. காலதாமதம் என 1.30 மணி நேரம் உள்ளே உட்காரவைத்தனர். ஒழுங்கா ஏர்போர்ட்டிலே உட்கார வைத்திருந்தால்.. ப்ரீயா சுத்திக்கொண்டு இருக்கலாம். பிறகு கால தாமதத்துடன் ஊர் போய் சேர்ந்தேன்.

"நான் கிளம்புற நாள் பார்த்து தானா, பனி மழை பெய்து... என்னை விமானத்தில் சிறை வைக்கனும்"-என்னவோ எனக்கு இப்படி...

நிரன்
13-03-2009, 01:33 PM
ஹிஹிஹி.... ............ இதைப்படிக்கும் பொழுது அக்னியோட ஞாபகந்தான் தோன்றுகிறது:D:D

அக்னி வந்தால் இதற்குப் பொருத்தமாக இருக்கும்:lachen001::lachen001:

உங்களுக்கு மட்டும் ஏந்தான் இப்படி நடக்குதோ:D:D

ஓவியன்
24-03-2009, 03:01 PM
என்னவோ எனக்கு இப்படி...

ஹீ, ஹீ..!!

இப்படி சொல்லிக்கிறவங்களைப் பார்த்தால் ரொம்பவே குஷியாக இருக்கிறாது, நாம மட்டுமில்லை நம்மளைப் போலவே நிறையப் பேர் இருக்காங்களே என்று........!! :icon_rollout::icon_rollout::D:icon_rollout::icon_rollout:

அறிஞர்
24-03-2009, 03:29 PM
அடுத்த கதையை சொல்லலாமா..
---------
சிகாகோவில் பஸ்ஸில் போலாம் என நின்றேன். வெளியே வெப்பநிலை.. -15 C (காற்றுவீச்சினால் ஏற்படுவது -5 C).
நான் எதிர்பார்க்கும் பஸ்ஸை தவிர...மற்ற பஸ் எல்லாம் போகுது..
குளிருல்ல.. எனக்கு ஏங்க இப்படி??????

ஓவியன்
25-07-2009, 05:47 AM
சிகாகோவில் பஸ்ஸில் போலாம் என நின்றேன். வெளியே வெப்பநிலை.. -15 C (காற்றுவீச்சினால் ஏற்படுவது -5 C).
நான் எதிர்பார்க்கும் பஸ்ஸை தவிர...மற்ற பஸ் எல்லாம் போகுது..
குளிருல்ல.. எனக்கு ஏங்க இப்படி??????

பேசாம போகிற பஸ்ஸில ஏறிப் போக வேண்டியதுதானே...??!! :icon_rollout:

விகடன்
25-07-2009, 11:11 AM
அதுதானே. ஓவியன் சொல்வது போல பஸ்தரிப்பிடத்திற்கு போற பஸ்ஸாக பார்த்து ஏறி தரிப்பிடத்தை அடைந்து, அங்கே நீங்கள் செல்ல வேண்டிய பஸ்ஸில் நல்ல மூலை இருக்கையாக பார்த்து இருந்திருக்கவேண்டியதுதானே...

ஓவியன்
15-08-2009, 12:40 PM
இன்று காலையில் அலுவலகத்தில் நுளைகையில் ஒரு குரல், காலை வணக்கம் ஓவி...

அது நம்ம நிறுவனத்தின் ஓமான் நாட்டின் நிறைவேற்று இயக்குனரின் குரல், உடனே நானும் விறைப்பாகி பதில் வணக்கம் கூறி என்னே என்பதாக ஒரு பரிதாபப் பார்வை பார்த்தேன்...

நமக்கு ஒரு புதிய வேலை கிடைச்சிருக்கு தெரியும்தானே, இன்று அது தொடர்பான கலந்துரையாடலொன்று இருக்கு காலை 11 மணி போல ரெடியாக இரும், நம்மில் சிலர் இன்று அந்த கலந்துரையாடலுக்கு போகவேணும்...

ஓ சரி, ஓம் ஓமென தலையாட்டினேன் (மத்திய கிழக்கில் பொருளாதார நிலமை மோசமடைந்த பின் நான் அதிகமாக செய்யும் வேலை இதுதான், அதாவது மேலதிகாரி என்ன சொன்னாலும் பூம் பூமென தலையாட்டுவது..!! :D)

வேலையில் கவனமெடுத்து, அறிஞர் அண்மையில் தொடங்கிய திரியின் உதவியுடன் வேலை செய்வது போல பாவ்லா காட்டிக் கொண்டிருக்கையில் (:D:D:D) மனித வளப் பிரிவிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. இந்த நிறுவனத்தில் நான் புதியதாக இணைந்திருந்தமையால் என்னுடைய வதிவிட அனுமதியைப் புதுப்பித்தது போல என் மனைவியின் வதிவிட அனுமதியைப் புதிப்பிக்க வேண்டியிருந்தது. அது தொடர்பாக இன்று போகவேண்டுமென்றார்கள்.

இல்லை இன்று நான் 11 மணியளவில் வேறு வேலையாக வெளியே போக வேண்டியிருக்குமென கூற, இன்றுதான் தனக்கு ப்ரீயாக இருப்பதாகவும் இன்று முடிக்காவிட்டால் சில வாரங்கள் பொறுத்திருக்க வேண்டுமென அவர் பயமுறுத்த நான் அவரது சொல்லுக்கு அடங்க வேண்டிய நிலை வந்த்து.

என் நிலை அறிந்த மனிதவள அதிகாரி, பரவாயில்லை ஓவி இப்போது நேரம் 9.00 மணி தானே நாம் 11 மணிக்கு முன்னர் வந்து விடலாமென தெம்பூட்டி அழைத்துப் போனார்.

ஒரு வழியாக என் வீடு சென்று மனைவியை அழைத்துக் கொண்டு, வதிவிட அனுமதி வழங்கும் இடத்திற்கு சென்றால் நேரம் 9.30 ஆகியிருந்தது.

அங்கு நமக்கு கிடைத்த நுளைவுச் சீட்டெண் 886, இப்போது என்ன எண்ணை உள்ளே அனுமதிக்கிறார்களென பார்த்த போது 437 எனக் காட்டிய போது நான் அப்படியே சோர்ந்து போய் அமர்ந்து விட்டேன்.:sauer028:

அப்போது அருகே வந்த ஒருவர் கூறினார் அது ஆண்களுக்குரிய பகுதி, பெண்களுக்கு வதிவிட அனுமதி வழங்கும் பகுதியில் எங்களது நுளைவெண்ணை எதிர்பார்க்கும் படி, சரியென அங்கு பெண்களுக்கான பகுதியில் தற்போது என்ன எண்ணினை அனுமதிக்கிறார்களென பார்த்த போது, 775 எனக் காட்ட கொஞ்சம் மன நிம்மதியுடன் காத்துக் கொண்டிருந்தேன்.

நேரம் 9.40 ஆகும் போது 775 திடிரென 881 ஆக மனதில் சந்தோசம் நிறைந்தது :)

ஆனால் 9.45 ஆகும் போதும் 881 காட்ட இது என்னடா நம்ம நேரம் வழமை போல ஸ்டார்ட் ஆகிட்டுதோ என நினைத்தேன். :confused:

நேரம் 9.50 ஆக அதே 881

நேரம் 10.00 ஆகவும் அதே 881

நேரம் 10.15 ஆகவும் அதே 881

என் பொறுமை காற்றில் ஏற... :traurig001:

என்ன செய்வதென்று தெரியாமல் துடிக்க வேண்டியதாயிற்று, இந்த நிலமையில் எப்படி 11 மணிக்குள் அலுவலகத்தில் இருப்பதென...

நேரம் 10.30 ஆக அதே 881 காட்ட, என்னடா இதுவென உள்ளே நுளைந்து விட்டேன், என்ன ஏதென விசாரிக்க அந்த இயந்திரம் பழுதடைந்து விட்டது அதுக்கு நாமென்ன செய்யவென பதில் வர, அதனை வெளியே அறிவிப்பதில்லையாவெனக் கடிந்து மள மளவென நம் வேலைகளை முடித்தோம்.

வேலை முடிந்து மீண்டும் அலுவலகத்தில் ஓட்டமும் நடையுமாக ஓடி நுளைந்த போது நேரம் 11.10, இன்று திட்டு வாங்குவது உறுதியென உள்ளே நுளைந்தால் அவரவர் தத்தம் வேலைகளுடன் அமைதியாக இருந்தனர்.

என்னவோ ஏதோ நடந்திருக்கென கணினி முன்னமர்ந்து அலுவலக மெயிலைத் தட்டித் திறக்க, நம் நிறைவேற்று இயக்குனரிடமிருந்து ஒரு மெயில் வந்து சிரித்துக் கொண்டிருந்தது...

இன்றைய ஒன்று கூடல் தவிர்க்க முடியாத காரணங்களால் சில நாட்களுக்கு தள்ளிப் போடப் பட்டிருப்பதாக...

மெயிலை படித்து முடித்ததும் ஓவென கத்த வேண்டும் போலிருந்தது,

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறதென...........???:traurig001::traurig001:

கலைவேந்தன்
15-08-2009, 03:18 PM
ம்ம்ம்ம்.. உங்க பரபரப்புல காலை 9.30க்குப் பிறகு 9.10 , 9.15 என நேரம் கூட தலைகீழாக கொஞ்ச நேரம் பின்னோக்கி நகர்ந்ததையும் என்ன வென்று சொல்வது...? :)

இப்படி எல்லாருக்குமே நடக்குது என்பது உங்களுக்கு ஒரு குட் நியூஸ்....! :)

ஓவியன்
15-08-2009, 03:39 PM
ஹீ, ஹீ கலை அண்ணாத்தே...!!

அது காலை நேர பரபரப்புக் காரணமல்ல :rolleyes:,
மாலை நேர பர பரப்பான வேலையின் காரணம்..!! :D:D:D

கலைவேந்தன்
15-08-2009, 04:34 PM
அவன் தன் மூன்று சகோதரிகளைக் கரையேற்றி கடனில் மூழ்கி இருந்தான்.

வருடம் 2000 டிசம்பர் மாத இறுதி.

அப்போது எதாவது எதாவது அதிசயம் நிகழாதா கடன்களிலிருந்து விடுபட முடியாதா என்று கலக்கமுடன் காத்திருந்தான் வாய்ப்புக்காக.

அவனுக்கு ஏற்கனவே இருமுறை ஐஏஎஸ் தேர்வு எழுதி ( கோட்டையும் விட்டு ) அனுபவம் இருந்ததால் பொது அறிவில் பிரகாசமாக இருந்தான்.

அப்போதுதான் அமிதாப்பச்சனின் கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஒட்டு மொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்கவைத்துக் கொண்டு இருந்தது.

அட இதில் என்றாவது வாய்ப்பு கிடைத்தால் குறைந்தது 25 லட்சம் தட்டிக்கொண்டு வந்துவிடலாமே... எல்லா கடன்களும் அடைபட்டு விடுமே என்று அந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்குமுன்னேயே சரியான விடை யோசித்து எழுதி தனக்குள் சபாஷ் போட்டு கனவுடன் காத்திருந்தான்.

அப்போது தான் பிரிட்டானியா பிஸ்கட் நிறைய தின்னுங்க... ரேப்பரை சேர்த்து கடையில் கொடுங்க... கூப்பன் வாங்கி சுரண்டுங்க... K B C எழுதிக் கிடைத்தால் நீங்க நேரடியாக போனில் கேட்கும் நாலு கேள்விகளுக்கு பதில் சரியாக சொல்லி நேரடியாக ஹாட் சீட்டுக்கு போய் உக்காந்துக்கலாம் என்று ஒட்டு மொத்த இந்தியாவையும் பிஸ்கட் சாப்பிடச்சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர்.

ஏற்கனவே எப்போது போன் லைன் திறந்தாலும் பாய்ந்து டயல் செய்து அதின் இனிமையான டோன் கேட்கும் வரை சில சமயம் தூங்கிவிழுந்து கூட விடாமல் நள்ளிரவு நேரத்திலும் விழித்திருந்து போன் செய்து களைத்துப்போயிருந்ததால் அவன் நிறைய பிரிட்டானியா பிஸ்கட் வாங்கி தன் குழந்தைகளுக்கும் பக்கத்து வீட்டுக்குழந்தைகளுக்கும் ஏன் தெருநாய்களுக்கும் கூட தந்து ரேப்பர்களை கலெக்ட் செய்து கொடுத்து கார்ட் வாங்கி சுரண்டி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் படித்து விரக்தியின் உச்சிக்கே போய் இருந்தான்.

இவனது அடாத முயற்சியைக் கண்ட பிரிட்டானியா பிஸ்கட் ஏஜண்ட் இவனை ஒரு நாள் தனியாக அழைத்து உனக்கு நேரடி சீட் கிடைத்தால் எத்தனை லட்சம் வரை வெல்வாய் என்று கேட்டார். இவனும் தன்னம்பிக்கையுடன் 25 லட்சம் நிச்சயம் என்று கூற எனக்கு ஐந்து லட்சம் தருவாயா உனக்கு கிடைத்தால் என்று கேட்க விநோதமாக அவரைப்பார்த்து நான் ஏன் உங்களுக்குத் தரவேண்டும் மிஸ்டர் ..... குப்தா எனக்கேட்க அவரோ ஏன் என்றால் நான் உன்னை அந்த சீட்டுக்கு அனுப்பப் போகிறேன் என்று சொல்ல இவனுக்கு ஒரு கணம் சுவாசம் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வந்தது.

சரி என்று சம்மதித்தவுடன் அவர் எடுத்துக் கொடுத்த ஒரு கார்டை சுரண்டியபோது ஆச்சரியம்.... அதில் கே பி சி எழுதி இருந்தது,

சரி இந்த விண்ணப்பத்தில் உங்கள் போட்டோ மற்றும் விபரங்களும் உங்களுடன் யாரை அழைத்துப் போபப்போகிறீர்கள் என்ற விவரமும் நிறைத்துக் கொடுக்கும் படி கேட்டதும் அவனுக்கு ஆகாயம் தரையிலும் பூமி அவனுக்கு அருகிலும் சுற்றத்தொடங்கியது....!

- மூச்சு விட்டுக்கொண்டு தொடரட்டுமா...?

கலைவேந்தன்
15-08-2009, 05:07 PM
விண்ணப்பத்தை அனுப்பிய பின் தனது வாழ்நாளில எந்தப் பரீட்சைக்கும் இதற்குமுன்னால் தயார்செய்திராத கெடுபிடியுடன் மும்முரமாக உட்கார்ந்த்து தயார் செய்தான் அவன்.

அவனுக்கு மும்பையிலிருந்து போன் காலும் வந்தது.

உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டது பிபரவரிமாதம் 26 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு உங்கள் வீட்டு தொலைபேசியில் அழைப்பு வரும். அப்போது நான்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கு சரியான விடையளிக்கும் பட்சத்தில் உங்கள் நுழைவு நிச்சயம் என்று கூறிய போது அவன் ஐயத்துடன் கேட்டான். கேள்விகள் கடுமையாகக் கேட்டு இங்கேயே எலிமினேட் செய்வார்களா என்று. இல்லை உங்கள் இடம் நிச்சயம் உண்டு. எளிமையான கேள்விகள் தான் கேட்கப்படும் என்று சொல்லப்பட்டதும் அவன் ஆனந்தக் கூத்தாடினான்.

இது நடந்தது ஜனவரி மாத நடு. அன்றிலிருந்து மேலும் நம்பிக்கையுடன் தீவிரமாக தயார் செய்து கொண்டு ஆவலுடன் அந்த பிப்ரவரி மாத 26 ஆம் தேதிக்காக காத்திருந்த போது...

பிபரவரி மாதம் 21 ஆம் தேதி இரவு அவனது தங்கையிடமிருந்து போன் கால். நம்ம அப்பாவுக்கு சர்க்கரை ரொம்பவே முற்றி சிறுநீரகம் பழுதடைந்து டாக்டர் இன்னும் ஒரு வாரம் தான் தாக்குப்பிடிக்கும் என்று கூறிவிட்டார். உடனே வாங்கண்ணா என்ற அழைப்பு வந்தபோது திரைப்படத்தை விட நம்ப இயலாத வண்ணம் தன் வாழ்க்கையில் நடைபெறும் இந்த விசித்திர விபரீததை எண்ணி நொந்தபடி அன்று மறுநாள் அதிகாலை விமானத்தில் அவன் தான்இருக்கும் இடத்திலிருந்து தனது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லும் வழியில் இந்த துரதிருஷ்டத்தை எண்ணி அழுவதா தன் தந்தைநிலை குறித்து அழுவதா என்று முடிவு செய்யமுடியும்முன் ஊர் போய்ச் சேர்ந்தான்.

அங்கே தன் தந்தையின் நிலை மோசமாக இருக்க ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த போது அந்த குப்தாவிடம் இருந்து போன். ஏன் இப்படி செய்துவிட்டாய். எத்தனை அரிய வாய்ப்பு உனக்கு தந்தேன் என்று மனம் வருந்த ( ஐந்து லட்சம் !) என்ன செய்ய குப்தா.. இதைத்தான் விதியென்று சொல்லி அந்த பிப்ரவரி 26 ஐக் கழித்தான் தன் தந்தையுடன்....

மார்ச் மாதம் 11 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டு தந்தை காலமாகும்போது அருகில் இருந்து எல்லா காரியங்களையும் செய்துவிட்டு ஏப்ரல் மாதம் திரும்பி மீண்டும் அந்த கேபிசி வாய்ப்பைப் பற்றி கேட்கையில் எல்லாம் முடிந்துபோயிற்று என்ற பதிலை அவன் காதால் கேட்டபோது......

இப்படித்தான் கேட்டுக்கொண்டான்.....

எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது....?

அமரன்
15-08-2009, 09:41 PM
இரு வேறு துருவங்களில் அனுபவங்கள்.

தொடருங்கள் தோழர்களே.

இன்றைக்கு டிஸ்னி லாண்ட் போயிருந்தேன். முத முதல்ல ஸ்பேஸ் மிஸன்-2 என்கிற செயின்வீலுக்குப் போயாச்சு. நம் டிக்கட்டுக்கு முன்பதிவு செய்யும் வசதி இருந்துச்சு. எந்த சோவுக்கு முன்பதிவு செய்யலாம்னு பார்த்தல் அது மதியம் தாண்டி என்று காண்பிச்சுது. முன்பதிவு செய்றதை விட வரிசையில் நின்று உள்ள போயிடலாம்னு நினைச்சு கிட்டத்தட்ட 1 மணிநேரம் வரிசையில் நின்று நுழைவாசலை அண்மித்த போது...... தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருச்சுன்னாங்க. என்னடான்னு சலிச்சுக்கிட்டு பின்னேரம் 4 மணிக்கு முன்பதிவு செஞ்சிட்டு மற்ற இடங்களை எல்லாம் உலவினோம்.

நாலு மணிக்கு ஸ்பேஸ்மிஸன் - 2 ஐ முடிச்சுட்டு ஸ்ஸ்டார் வார்ஸ்ஸுக்கு வரிசையில் நின்னோம். ஸ்பேஸ்மிஷன் - 2 காலைல என்ன மாதிரி அனுபவத்தை தந்திச்சோ அதே போன்ற அனுவத்தை ஸ்டார்ஸ் வார்சும் தர.. ஓவியந்தான் நினைவுக்கு வந்தான்.

ஓவியன்
16-08-2009, 04:13 AM
நான் தாமஷூக்காகத்தான் இந்த திரியை ஆரம்பித்தேன் கலை, இதில் இதுவரை வந்த நிகழ்வுகள் பெரிதாக நெஞ்சத்தைக் கலங்கடிக்கவில்லை ஆனால் உங்கள் பதிவினைப் பார்த்ததும் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை கலை...

என்னதான் திறமை இருந்தாலும் வாழ்க்கையில் கொஞ்சம் அதிஸ்டமும் வேண்டுமென்பதை நான் ஏற்றுக் கொள்வதில்லை, ஆனால் அடிக்கடி எனக்கும் என் நண்பர்களுக்கும் நடக்கும் இது போன்ற சம்பவங்கள் அதிஸ்டத்தையும் நம்ப வைக்கின்றன...

எல்லாவற்றுக்கும் ஆறுதலாக உங்களைப் பெற்று ஆளாக்கிய தந்தையுடன் அவரது இறுதி மணித் துளிகளை ஒரு மகனாக இருந்து கவனித்தீர்களே, அது போதும், அந்த நிறைவு உங்களை வாழ வைக்கும்...

அன்புரசிகன்
16-08-2009, 07:02 AM
சிரிப்பு திரியில் சீரியஸ் விடையம் தந்து கலங்கவைத்துவிட்டீர்கள்...

சில தருணங்களில் அதிருஷ்டம் இல்லாவிட்டால் நாம் தவறவிடுவது தவிர்க்கஇயலாதது. ஆனால் நம் தூரதிஷ்டத்தால் இன்னொருவருக்கு நிச்சயம் நன்மைகிடைத்திருக்கும்... அதை நினைத்து பெருமூச்சு விடுவது தான் எனது வழமை...

போக்கிரி திரைப்படத்தில் சிறுவன் ஒருவன் சொல்லுவான். Its all fate. நம்ம கையில் ஒண்ணுமில்ல....

அன்புரசிகன்
16-08-2009, 07:06 AM
அதுசரி ஓவியரே... ஓவென்று கத்தினீர்களா??

பரஞ்சோதி
17-08-2009, 09:04 AM
இது என்னுடைய விசித்திர அனுபவங்கள்.

பூஜ்யத்திற்கு மதிப்பே கிடையாது, அது சரி, அதுக்கு அடுத்து வரும் ஒன்றிற்கு மட்டும் எப்படி அதிக மதிப்பு இருக்க போகுது, கிடையாது தானே. அதுவே ஆயிரம், இலட்சம், கோடி என்றால் அதிக மதிப்பு தானே.

ரஜினி கூட ஒரு படத்தில் குழந்தையிடம் ஒரு சாக்லெட் வேண்டுமா? இரண்டு சாக்லெட் வேண்டுமா என்று கேட்டால் குழந்தை இரண்டை தான் விரும்பும், ஆக ஒன்று என்பது அதிக மதிப்பில்லாதது தானே.

ஆனால் என் வாழ்க்கை அந்த ஒன்று என்னை எப்படி எல்லாம் பாடாய் படுத்தியிருக்குது தெரியுமா?

சின்ன வயசில் ஒரு பைசா கூட என் கையில் இருக்காது, அத்தனை ஏழை.

பள்ளியில் படிக்கும் போது தெலுங்கு பாடத்தை ஒன்றாம் வகுப்பில் படிச்சேன், அதே ஒன்றாம் வகுப்பை தமிழில் அடுத்த ஆண்டு படிச்சேன், அந்த ஒரு ஆண்டு மாறியதால் என் வாழ்க்கையே மாறியது என்பது தனிக்கதை.

அதன் பின்னர் ஒன்று என் வாழ்க்கையில் பல்லாங்கு ஆடியிருக்குது, சின்ன வயசில் தாயம் விளையாடும் போது ஒன்று விழாமல் என்னை பாடாய் படுத்தியிருக்குது. அதுவே கூட ஒன்று விழுந்தாலோ, ஒன்று குறைவாக விழுந்தாலோ என் காய்கள் எல்லாம் பழமாகி நான் வென்றிருப்பேன், அப்படி தோற்றதால் ஆட்டங்களை கலைச்சிட்டு கெட்ட பெயரும், தோல்விகளை ஏற்க முடியாதவன் என்ற பெயரும் பெற்றிருக்கிறேன்.

அது விளையாட்டில் தான் அப்படி என்றால் படிப்பில், பத்தாவது படிக்கும் போது ஆண்டு இறுதி தேர்வில் என் கணித கேள்விகளை மடமடவென்று எழுதி 45 நிமிடங்கள் முன்னரே முடிச்சிட்டேன், மீண்டும் ஒருமுறை பார்த்தேன், எல்லாம் சரியாக இருந்தது. கடைசி அரை மணி நேரம் என் தோழர்களிடம் என் தேர்வு தாட்கள் பயணித்தது, பலரும் என்னால் பாஸ் ஆனார்கள், நான் பீஸாகி போனேன். ஆமாம், தேர்வு முடிந்து முடிவுகள் வந்த பின்னர் என்னுடைய கணித மதிப்பெண் 99/100 என் தோழன் தங்கதுரை மட்டுமே 100 எடுத்தான், அவனுக்கு இணையாக நானும் கணிதத்தில் 100/100 என்ற பெயர் வாங்க முடியவில்லை, அதாவது போகுதுன்னு பார்த்தால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியலில் கூட ஒரு மதிப்பெண்ணால் முதலிடத்தை இழந்தேன். அதே வெறுப்பிலும் வேறு சில காரணங்களாலும் ஆங்கில வழி பள்ளிக்கூடம் மாறினேன், பாதை மாறியது.

ஒன்றாம் வகுப்பை இருமுறை படிச்ச காரணத்தால் என்னவோ மிகச் சரியாக நான் 10வது முடிக்கவும், அதுவரை ஆங்கில பாடத்திட்டம் இருந்த பள்ளியில் மீண்டும் தமிழ் பாடத்திட்டம் வந்தது, 11வது வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் வந்தது, புத்தகங்கள் கைக்கு கிடைப்பதற்குள் அரையாண்டு போய் விட்டது, அது தான் போச்சுது, 12வது வகுப்பு பாட புத்தகமாவது கிடைக்கும் என்றால் அதுவும் அரையாண்டு தேர்வுக்கு பின்னரே எங்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக கொடுக்க முடிஞ்சது, மதிப்பெண்கள் குறைந்தது, வாழ்க்கை பாதை மாறியது.

சரி வாழ்க்கையில் தான் அப்படி என்றால் வேலை செய்யும் போது கூட, ஒரு நாள் முன்னாடி ஊருக்கு சென்றிருந்தால் அந்த வேலை கிடைச்சிருக்கும், இந்த ஆளை பார்த்திருக்கலாம் என்ற சோதனை.

பின்னர் விற்பனைபிரதிநிதியாக சேர்ந்த காலத்தில் அந்த ஒரே ஒரு மிஷின் கூட விற்க முடியாமல் அழுத நாட்கள் பல, என்னால் இது கூட முடியவில்லையே என்ற வேதனை. கடைசியில் எப்படியோ விற்ற பின்னர் மேலும் ஒரே ஒரு மிஷின் விற்றால் 500 ரூபாய் கமிசன் கிடைக்குமே என்ற ஏக்கம். கடைசியில் ஆண்டவன் போல் என் பாஸ் என் பெயரில் ஒரு மிஷின் சேர்த்ததும், நானே கூட கடைசி நிமிடத்தில் நம்பிக்கையோடு போராடி அதை விற்று, 5+1 = 6 என்ற சாதித்தது தனிக்கதை.

அது சரி, அப்புறம் எனக்கு பிடிச்ச கிரிக்கெட்டில் எத்தனை எத்தனை முறை அந்த ஒரு ரன் எடுக்க முடியாமல் டக் அவுட் ஆகி அவமானப்பட்டு வந்திருக்கிறேன்.

பலமுறை முறை ஒரு ரன்னால் கோப்பைகளை இழந்திருக்கிறேன், எங்க கம்பெனியில் நடந்த முதலாம் ஆண்டு போட்டியில் கூட ஒரு ரன் சோதனையால் தோற்றோம்.

இந்த ஆண்டு கூட ஒருவழியாக தேற்றிய அணியை வைச்சி, சூப்பர் எட்டு நிலைக்கு தேர்வாகி, கடைசியில் லீக் போட்டியில் சென்ற ஆண்டு இரண்டாம் பரிசு பெற்ற அணியிடம் ஒரு ரன்னால் தோற்க அரையிறுது வாய்ப்பு போனது.

இன்னும் இன்னும் எத்தனை முறை அந்த ஒன்று என்ற எண்ணால் என் தோல்விகள் தொடருமோ தெரியவில்லை

ஆனால் அந்த ஒன்றை வைத்து ஆரம்பித்து வென்ற வரலாறு பெரிய வரலாறு தான், பல வெற்றிகள் ஒன்றின் ஆரம்பத்தினால் தான் பெற்றிருக்கிறேன், ஆக அந்த ஒன்றை நான் வெறுக்கவே மாட்டேன். ஒன்றாவது இல்லை என்றால் நான் இரண்டாவது, இல்லை என்றால் மூன்றாவது இப்படி எந்த நிலை என்றாலும் எனக்கு மகிழ்ச்சியே !!!!

ஒன்றிற்கு நன்றி கூட விடை பெறுகிறேன். நன்றி.

- ஒன்றினால் ஒன்றிப் போன

ஓவியன்
17-08-2009, 09:39 AM
ஹா, ஹா பரம்ஸ்ணா,
ஒன்று மட்டும் புரியுது,
அந்த ஒன்று மட்டும்
இல்லைனா நீங்க எங்கேயோ போயிருப்பீங்க,
ஆனா அந்த ஒன்று இங்கே வந்திருக்காது..!!:icon_rollout:

ஓவியன்
17-08-2009, 09:41 AM
அதுசரி ஓவியரே... ஓவென்று கத்தினீர்களா??

நான் ஓவென்று கத்துவதில் எத்தனை பேருக்கு சந்தோசம் பாருங்க..!! :rolleyes:

அன்புரசிகன்
17-08-2009, 01:26 PM
ஒன்றினால் இழக்கும் போது மனம் கோணினாலும் அதிலும் ஒரு கிக் இருக்குல்லே.... இவ்வாறான அனுபவம் ஒரு சில உண்டு. ஆனால் அதே ஒன்றினால் மேலேறிய அனுபவமும் உண்டு. அது தான் எனக்கு அவ்வப்போது ஏற்படும் அதிருஷ்டம் போல.. (கேட்க்க கடுப்பாக உள்ளதா, :D)

பாலகன்
17-08-2009, 02:37 PM
ஆகா அந்த ஒன்று உங்க வாழ்வில் இவ்வளவு மாற்றங்களை தந்ததா பரம்ஸ் அண்ணா...

ஓவியன் உங்க ஒன்னு என்னான்னு எனக்கு புரியல... ஆனா அன்பு சொல்லுறதை பார்த்தா நீங்க எங்கேயோ சிக்கிட்டு தப்பிச்சிருக்கீங்கன்னு தெரியுது :)

இளசு
17-08-2009, 11:20 PM
அன்பு கொளுத்திய திரியை இன்றுதான் முழுக்க வாசித்தேன்..

கீழைநாடனின் யதார்த்த சுவை நிகழ்வுகளில் இருந்து
கலைவேந்தரின் கலங்கவைக்கும் கைநழுவல் வரை
''ஒன்று'' கூட விடாமல் வாசித்தேன்..

என் கதையா?

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

மஞ்சுபாஷிணி
18-08-2009, 06:26 AM
அருமையான திரி...

எல்லோருடைய பதிவுகளையும் வாசித்தேன்... மிக அருமையான திரி இது...

ஓவியன்
19-09-2009, 07:14 AM
என் கதையா?

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?

மிக்க நன்றி இளசு அண்ணா,
அவற்றில் ஒன்று இரண்டை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே..!! :)