PDA

View Full Version : மொபைல்போன்: இந்தியா உலகின் நெம்பர் 2



mgandhi
03-05-2008, 07:07 PM
மொபைல்போன்: இந்தியா உலகின் நெம்பர் 2

புதுடில்லி: மொபைல் போன் பயன்படுத்துவோர் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக எண்ணிக்கையில், மொபைல் போன் இணைப்பு கொண்ட நாடாக சீனா, முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்கா இருந்தது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த கணக்கெடுப்பில், இந்தியாவில், கடந்த மார்ச் மாதம் ஒரு கோடி போன் இணைப்பு அதிகரித்ததை அடுத்து, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தியாவில் மொபைல் போன் இணைப்பு மொத்த எண்ணிக்கை 26 கோடியே 11 லட்சம். சாதா போன் இணைப்பு எண்ணிக்கையையும் சேர்த்தால் 30 கோடியை எட்டுகிறது. மொபைல் போன் இணைப்பு, கடந்த பிப்ரவரி மாதம் 85 லட்சம் அதிகரித்தது; மார்ச் மாதம் ஒரு கோடி இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இதில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தான் அதிக அளவில் இணைப்பு அளித்துள்ளது. இந்த நிறுவனம், மார்ச் மாதம் மட்டும் 23 லட்சம் புது வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது; ரிலையன்ஸ் நிறுவனம், 16 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. 'இதே எண்ணிக்கையில் அதிகரித்தால், சீனாவை இந்தியா நெருங்கும் நாள் அதிகமில்லை' என்று இந்த கணக்கெடுப்பை நடத்திய மத்திய அரசின் தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் 'டிராய்' கூறியுள்ளது.

அனுராகவன்
16-05-2008, 05:53 AM
நன்றி மோகன் அவர்களே!!

rmskanna
19-05-2008, 05:04 PM
இந்தியா மற்றும் சீனா மக்கள் தோகையில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருப்பதால் கைபேசி பயன்படுத்துவோர் என்னிக்கையும் அதிகமாக உள்ளது

அறிஞர்
19-05-2008, 07:52 PM
இப்பொழுது விலை மலிவு...

அனைவரிடமும் செல் போன்...

மக்கள் தொகையை போல பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிறது..

aren
01-03-2009, 02:16 AM
எத்தனை பேரிடம் செல்போன் இருப்பது என்று சொல்வதைவிட எத்தனை பணம் இதனால் நிறுவனங்களுக்கு கிடைக்கிறது என்று பார்த்தால் இந்திய மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது.

ஆதவா
01-03-2009, 03:09 AM
சினாவுல 3G முடிஞ்சு 4G வந்தாச்சு!!!

நம்மாளுங்க இப்போத்தான் 3G ஆரம்பிச்சிருக்காங்க.. (இன்னமும் போய் சேரலை)

தொழில் நுட்பத்தில அவங்க முன்னுக்க,.... எல்லாத்திலையும் நாம பின்னுக்க...

இந்தியா நம்பர் 1 , நம்பர் 2//// இந்த ஜாக்கி நம்பர்லாம் நமக்கு பிடிக்காது!!!