PDA

View Full Version : தேன் கூட்டில் ஓர் நாள்...!! - நிறைவு



பூமகள்
03-05-2008, 04:00 PM
தேன் கூட்டில் ஓர் நாள்..!



ஒரு பெரிச வாசல்.. அதன் முற்றமெங்கும் அலங்கார தோரணங்கள்.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள்.. எதையோ தீவிரமாக செய்யும் முனைப்பில்..

மிகப் பெரிய கதவின் முன்னால், ஓர் காக்கி உடுப்பு பணியாளர்.. பவ்வியமாக சிரித்து வணங்குகிறார்.. வண்டி நிறுத்திய இருவர்.. விவரம் பகிர்ந்து உள்ளே நுழைகின்றனர்..

வலப்புற அலுவலகம் நோக்கி அகக்காவல் பணியாளர் கை காட்டிய திசையில் நான்கு கால்களும் விரைகிறது..!!

மெல்லிய புன்னகையோடு ஒரு பெண் பொறுப்பாளர் வரவேற்கிறார்… அமரச் செய்து.. வருவதாகக் கூறி செல்கிறார்.

அமைதியான அந்த சின்ன அறையில்.. நான்கு விழிகளும் துலாவுகின்றன.. சுவர்களில் காட்டிய சித்திரங்கள்.. அறிவியலாளர் அப்துல் கலாம் முதல் முதல்வர் கருணாநிதி வரை வருகை தந்தமையைப் பறைசாற்றுகின்றன.. மனம் நெகிழ்ந்து அவர்களின் கண்கள் விரிகிறது..

சிறிது நேரத்தில் அப்பெண் வந்தமர்கிறார்.. “இன்னும் பத்து நிமிஷத்தில் கிளம்ப ரெடியாயிருங்க..” என்ற ஒரு வாக்கியம் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

சிறிது நேரத்தில் சமிஞை வர கிளம்புகிறார்கள் இருவரும்..!!

ஒரு பெரிய அறையினை நோக்கி பயணப்படுகிறது.. அங்கே பொறுப்பாளர்களில் முக்கியமானவர்.. இருவரையும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் அமரச் செய்கிறார்.

எதிரில் ஒரு பெரிய குழந்தைகள் கூட்டம்.. வரிசையாக அமர்ந்து சிரித்து, சிணுங்கி, எங்கோ பார்த்து பயந்து, தலை குனிந்து.. தலை நிமிர்ந்து… பக்கத்திலிருப்பவரைப் பார்த்து.. இப்படி பல விதங்களில் குழந்தைகள்..!!

மாலை 6.30 மணி ஆகியிருந்தது.. பொறுப்பாளர்.. கடவுள் வாழ்த்து பாடச் சொல்கிறார். அனைவரும் எழுந்து நிற்க..

அனைத்து விதமான புல்லாங்குழல்களும் ஒருங்கே எல்லா ராகத்தையும் வாசித்தால் என்ன சங்கீதம் பிறக்குமோ.. அவ்வகை சங்கீதம் இருவரின் காதுகளையும் அடைமழை அமுதமாக நுழைகிறது.

கண் மூடி நின்று பிஞ்சுகளுக்காக பிராத்தித்து விழிக்கையில்.. இருவரின் கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது.. அங்கே… உடல் குறைபாட்டினால் மனம் குறைபடாத குழந்தைகள்..

பாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளில்..

தனக்கென சுதி அமைத்த குழந்தைகள்.. பாடுவோரை வேடிக்கை பார்த்தபடியே.. மௌனத்தில் இசையமைத்த குழந்தைகள்.. இப்படி ஒவ்வொரு வடிவில்.. நூற்றுக்கணக்கான பிஞ்சுகள்..!

பிராத்தனை முடிந்ததும்.. பொறுப்பாளர் பேச ஆரம்பிக்கிறார்.

“திருவாளர் பெயர் கூறி, அவர்களின் இனிய உள்ளத்தால் இன்று நமக்கு இவ்வேளை உணவு பறிமாறப்படுகிறது. அவர்களின் குடும்பமும் அவர்களும் என்றும் வளமோடு வாழ பிராத்திப்போம்..!”

இப்படி கூறியதும்.. மறுபடி வானை எட்டும் குரலோசையில்.. வாழ்த்துப் பாடல் பாடப்படுகிறது..!! மெல்லிய குயில்களுக்குள் இத்தனை வலிமையா??!!

பார்த்துக் கொண்டிருந்த இருவரின் மனமும்.. ததும்பி பரவச நிலையில் உடல் சிலிர்த்து நிற்கிறது.

அதுவரைக் கண்டிராத ஓர் உன்னத நிலையில்.. குழந்தைகளின் மொழி கேட்டு
கற்பாறை உடைந்து கண்கள் கலங்குகிறது. பாடுவது நமக்காக என்ற பெருமுதத்தில் அல்ல.. பாடப்படும் அக்குழந்தைகளின் உள்ளதினைக் கண்டு..!!

பொறுப்பாளர் பேச அழைக்கிறார். இவருவருமே வார்த்தைகளற்ற மௌன நிலையில் அசைவற்று நிற்க.. அங்கே 'நா' எழ மறுத்து அழ வைக்கிறது.

தலையசைத்து இருவரும் மறுக்க, பிராத்தனை முடிக்கப்படுகிறது.


(அடுத்த பாகத்தில் முடியும்)

பூமகள்
04-05-2008, 06:59 AM
தேன் கூட்டில் ஓர் நாள் - நிறைவு


“ அக்கா… உங்க பேரு என்னக்கா??” ஓடி வந்து கை கொடுக்கும் ஆவலோடு சின்ன சின்ன மழலை முத்துகள்..!!

“என் பேரு… ****** உங்க பேரு என்ன? என்ன படிக்கிறீங்க??” இருவரில் ஒருவர் கேட்க.. கை பிடித்து குலுக்கிய மகிழ்ச்சியில்.. மழலை கண்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.

முறைத்த படியே சில குழந்தைகள்… பார்த்து பயந்தபடியே சில குழந்தைகள்:.. அழகாக சிரித்து பேச விரும்பிய சில குழந்தைகள்.. இன்முகத்துக்கு பூட்டிட்டு.. சலிப்புப் பார்வையில் சில பிஞ்சுகள்..!!

அப்பப்பா.. எத்தனை எத்தனை பரிதவிப்புகள் ஒவ்வொருவர் முகத்திலும்..??!!

இருவர் உள்ளமும் இனம் புரியாத புதிய உணர்வில் சிலிர்ந்து நிற்கிறது..

இரவுணவு பரிமாற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வரிசையாக குழந்தைகள் தட்டெடுத்துக் கொண்டு அமர்கிறார்கள்.. . நம் கையால் பரிமாறி, பிஞ்சுகள் உண்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும்.. அத்தகையதொரு பரவச உணர்வு பெற்ற மகிழ்ச்சியுடன் இன்முகம் மாறாமல் “லட்டு” இனிப்பு இருவராலும் பரிமாறப்படுகிறது.

ஓராயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாக அமர்ந்து மலர் வனத்தில் தேனமுதை உண்பதைப் போல ஒரு தோற்றம்..!!

இரு முதிய பாட்டிகள்..!! அவள் பார்க்க.. கண்கள் அறியாமலே கலங்கி நிற்கிறது. குழந்தைகளும் முதியவரும் ஒன்றே தான்..!!

பரிமாறி முடிந்ததும்.. சுற்றிக் காட்டப் படுகிறது..!! அழகிய வகுப்பறைகள்.. பூச்செடிகள்.. கிளிகள்… படுக்கை அறைகள்..

எல்லாம் கடந்து அவர்களின் அன்பான மனம்.. எதையெதையோ சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருந்தது.

விடைபெற்று கிளம்புகின்றனர்.. இருவரும்..!!

போக மனம் இல்லாவிடினும்.. பயணம் தவிர்க்க இயலாததாகிவிடுகிறது.

முற்றத்தில் அழகிய வண்ணக்கோலம் போடத் தயாராகும் பெண்கள்..!! ஏற்கனவே, வண்ண எண்ணங்களால் மனம் நெகிழ்ந்த இருவரும்.. மகிழ்ச்சியோடும் ஒரு வித துயரம் அப்பிய கணத்த மனத்தோடும் வெளிப்படுகின்றனர்.

நேரம் 7.30.. மணி…

ஒரு மணி நேரப் பயணத்தின் போதும்.. ஒன்றுமே பேசாமல் அந்தி வானம் பார்த்தபடியே பயணம் தொடர்கிறது.

கீழ்வானத்தில் சூரியன் உறங்க… விழிப்பு நிலையில் மனத்தினுள் மனசாட்சி ஓங்கி பேசியபடியே வந்தது..!!

உடம்பை உரசிய தென்றல் காற்று… மனத்தினுள் சுகந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறவில்லை..!!
குருமபாளையம் குழந்தைகள் காப்பகத்திலிருந்து இத்தனை உணர்வையும் ஆட்கொண்ட இருவரும்.. கடைசியில் பூவின் இல்லம் அடைய..

அது வரை நிகழ்ந்த அத்தனையும் அம்மாவிடம் ஒப்புவிக்கும் பூவைப் பார்த்த தந்தை மென்சிரிப்போடு மௌனமாகி ரசிக்கிறார்..!!


(முற்றும்)


------------------------------------------------


குறிப்பு:
இத்தனையும் நிகழ்ந்தது.. மன்றத்தில் அடியெடுத்து வைத்த ஒரு சில நாட்களில்.. ஆமாங்க..

14 ஆகஸ்ட் 2007 அன்று தான்..

ஓராயிரம் உணர்வுகளின் கலவையை உணர வைத்த அந்த நாள் என்னால் என்றைக்குமே மறக்க முடியாது.. பலவித கேள்விகளை என்னுள் ஏற்படுத்திய நாள் அது..!

இந்த மாதிரி உணர்வு முதல் முறை என்பதால் மனத்துக்கு அதனை கையாளும் வலிமை கூட இல்லாமலிருந்தது.

வெகு நாட்களாக மனதை பாதித்த ஓர் நல்ல உணர்வை பதிவாக்க எண்ணி கைவிட்டுக் கொண்டே இருந்தேன்..!! "வலக்கை கொடுப்பது, இடக்கைக்குக் கூட தெரிய கூடாது" என்ற பழமொழியின் சத்தியத்தால்..!!

ஆனால், நான் அடைந்த அந்த சிறந்த நுட்பமான உணர்வுகளை என் மனசாட்சிக்குக் சொல்வதாக எண்ணி இங்கு தெரிவிக்கிறேன்.


இது நடந்து வெகுநாட்களாகியும் அந்த குழந்தைகளின் முகமும் அவர்களுக்கு நம்மால் இன்னும் என்னென்ன செய்ய முடியுமென்ற கேள்வியும் என்னில் எழுந்து கொண்டே தான் இருக்கிறது..!! :icon_rollout:

அன்புரசிகன்
04-05-2008, 03:55 PM
ஒருகணம் அப்படியே அனைத்தும் கண்முன்னே வந்து சென்றது போல் இருந்தது. உண்மையில் எனக்கு இந்த அனுபவம் இல்லை. திரைப்படங்களில் தான் பார்த்திருக்கிறேன்.

நல்லநாள் பெருநாளில் கடவுள் உண்மையாக குடியிருக்கும் ஒரு இடம் சென்று வந்திருக்கிறீர்கள்.

பகிர்வுக்கு நன்றி....

ஓவியன்
04-05-2008, 05:21 PM
எங்கோ ஒரு திரைப்படத்தில் கேட்ட வரிகள் இவை...

நாம் நான்கு பேர் சந்தோசத்துக்காக சாப்பிடும் பணத்தில்,
நாற்பது பேர் வயிராற சாப்பிடுவார்களே...!!

கேட்க நன்றாக இருக்கும் வரிகள், ஆனால் இலகுவில் எல்லோராலும் நடைமுறைப்படுத்த இயலுவதில்லை....

ஏன் என்னாலும் தான்....

ஆனால் உங்களால் முடிந்திருக்கிறது பூமகள்,
மனதார வாழ்த்துகிறேன்...
எல்லாச் சிறப்பும் பெறுகவென...!!

பூமகள்
05-05-2008, 04:41 AM
இப்படியான இடங்களுக்கு அடிக்கடி சென்று வர வேண்டும்... ஏதாவது செய்யனும்னு தீராத அவா.. நிச்சயம் எதிர்காலத்தில் செய்யனும்னு விருப்பம்..
உங்க பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அன்பு அண்ணா.

--------------------
எத்தனை பணம் நமக்காக செலவு செய்தாலும், இவ்வகையில் செலவு செய்ததன் மகிழ்வும் மன நிறைவும் என்றுமே கிடைக்காது ஓவியன் அண்ணா.
ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும்.. எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையில்... நடைபோடுகிறேன்.

நல்ல ஒரு பின்னூட்ட ஊக்கத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஓவியன் அண்ணா. :)

சுகந்தப்ரீதன்
05-05-2008, 06:44 AM
எனக்கு உங்க கட்டுரையை படித்ததும் என்ன பின்னூட்டம் இடுவதென்று புரியவில்லை...!!

ஒருமணி நேர பயணத்தில் நீங்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் வந்ததைப்போலத்தான் இப்போது என் நிலையும்...!!

நீங்கள் காட்சிகளை விவரிக்கும் பொழுதுகளில் அப்பிஞ்சுகள் நெஞ்சில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை..!!

நான் முன்பே ஒருமுறை சொன்னது போலத்தான்... எங்கே தேடினாலும் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காத நிம்மதி ஒரு குழந்தையை கொஞ்சும்போது நிச்சயம் கிடைத்துவிடும் யாருக்கும்...!!

ஆனால் அந்த கொஞ்சல் கொஞ்சம்கூட கிடைக்காத குழந்தைகளை நினைக்கயில் மனசு கலங்கத்தான் செய்கிறது...!! இறைவன்மீது எனக்கு இந்த விசயத்தில் எப்போதுமே கோபம் உண்டு...!!

ஓவிய அண்ணா சொன்னது போலத்தான் நம் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடையே மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசத்தில்தான் நாம் எல்லோரும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்..!!

சூழ்நிலைகள் சுகநிலைகள் ஆகும்போது நாம் இதுபற்றி சற்றேனும் சிந்தித்து பார்த்தால் அப்பிஞ்சுகளின் விழிசிந்தும் நீரை சிறிதேனும் கட்டுப்படுத்த முடியும்...!!

உணர்வுப்பூர்வமான இந்த பதிவினை தந்த பூமகளுக்கு எனது நன்றியும் பாராட்டும்...!!

பூமகள்
05-05-2008, 09:46 AM
சுகந்தப்ரீதனிடமிருந்து ரொம்ப ஆழமான விமர்சனம் கண்டு நிஜமாவே உள்ளம் சந்தோஷத்தில் குதிக்கிறது..!

சந்தர்ப்பம் வாய்த்தால் இவ்வகை இடங்களுக்கு செல்லுங்கள்..!!
உங்களால் முடிந்த உதவிகளை உங்களின் குடும்பத்தாரின் சுப நாட்களின் போதோ.. உங்களின் பிறந்த நாள், திருமண நாளின் போதோ இப்படி செய்தால் அந்த ஆத்மார்த்தமான மகிழ்ச்சிக்கு ஈடு இருக்காது என்பது என் தாழ்மையான கருத்து..!!

ஒரு முறை போய் பாருங்களேன்...!! அப்புறம், பூவை மறக்கவே மாட்டீங்க...!! ;)

அழகான கருத்து சொன்ன, சுகந்தப்ரீதனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!!

aren
07-05-2008, 09:18 AM
முழுவதுமாக படித்துவிட்டு பின்னர் பின்னூட்டம் எழுதுகிறேன்.

பூமகள்
07-05-2008, 09:25 AM
ஆற... அமர.. சுவைத்து.... பின்னூட்டமிடுங்கள் அரென் அண்ணா. :)
தங்களின் பணிகளுக்கு இடையிலும் வந்து பூந்தங்கை மேல் கொண்ட அளவில்லா அன்பினால் வந்து பின்னூட்டமிட்டமைக்கு மிகுந்த நன்றிகள்..!!


(அமரன் அண்ணாவை இந்தப் பக்கம் இன்னும் காணோமே??!!:icon_ush:)

சிவா.ஜி
07-05-2008, 10:52 AM
நெகிழ்வான அனுபவத்தை நேர்த்தியாய், நிறைவாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறாய் பூ. உண்மையிலேயே அது ஒரு பரவசமான மணித்துளிகளாய் இருந்திருக்குமென்று என்னால் உணர முடிகிறது. அந்த நெகிழ்வில்தான் நீங்கள் இருவரும் பேச முடியாமல் மௌனம் சுமந்து வீடு வரை வந்திருக்கிறீர்கள்.

அந்த உணர்வை வருடந்தோறும் உணர்பவன் என்பதால் எனக்கு இந்தப் பதிவைப் படித்ததுமே நெஞ்சம் நிறைந்து தங்கையின் மேல் மரியாதை தோன்றுகிறது. இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நல்லுதாரணமாய் உன்னைப் பார்க்கிறேன் பூம்மா.

அருமையான பதிவு. வித்தியாசமான நடை. நெகிழச் செய்துவிட்டது. உணவு ஒன்றுதான் மனதார போதும் என்று சொல்லக்கூடியது. அப்படிப்பட்ட உயர்ந்த உதவியை செய்து அந்த உள்ளங்களை மகிழ்வித்ததற்காக என்னுடைய மனம் நிறைந்த பாராட்டுகள்ம்மா.

அமரன்
07-05-2008, 11:26 AM
எழுத்து மெருகடைந்துள்ளது. பாராட்டுகள்.

நீங்கள் உணர்ந்த நுட்பமான உணர்வுகளை, வாசிக்கும் உள்ளங்கள் பூரணமாக உணரச் செய்யும் வகையில் எழுத, இன்னும் சாதகம் செய்யுங்கள். நிச்சயம் உங்களால் முடியும்.

நல்லது செய்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தங்க(ள்) மனசுக்கு..

வாசித்து முடித்ததும், அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்திருப்பார்கள்; காப்பகங்களில் இல்லாமல் இன்னும் எத்தனை குழந்தைகள் வெளியே.. என எல்லாம் சேர்ந்து மனதைக் கனக்கவைத்து விட்டன.

பூமகள்
07-05-2008, 04:56 PM
அந்த உணர்வை வருடந்தோறும் உணர்பவன் என்பதால் எனக்கு இந்தப் பதிவைப் படித்ததுமே நெஞ்சம் நிறைந்து தங்கையின் மேல் மரியாதை தோன்றுகிறது. இன்றைய இளைஞர் சமுதாயத்தின் நல்லுதாரணமாய் உன்னைப் பார்க்கிறேன் பூம்மா.
அருமையான பதிவு. வித்தியாசமான நடை. நெகிழச் செய்துவிட்டது.
உங்க தங்கை என்ற போதே இத்தகைய சிந்தனை எனக்கு இருப்பதில் வியப்பே இல்லையே சிவா அண்ணா. :icon_rollout::icon_rollout:
எனது தமையன் சொல்லித் தராமலே செயலில் கற்றுத் தந்த பாடம் இது அண்ணா. அவரது கல்லூரிக் காலத்திலேயே, தன் நண்பர்களோடு ஒன்றாக இணைந்து.. கல்லூரியின் விழாவில் பரிமாறாமல் வீணாகும் எல்லா உணவுகளையும் இவ்வில்லத்துக்கு பரிமாறுவர்.

அதே செயலை, எங்களின் ஒவ்வொரு விழாவிலும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம். உதாரணமாக, எங்கள் வீட்டு புதுமனை புகுவிழா. இதனால், அவ்விழாவில் இரட்டிப்பு மகிழ்ச்சியும் நிம்மதியும் உருவாவதை வார்த்தைகளால் விளக்கவே முடியாது.

ஆனால், தற்பொழுதெல்லாம், வெளிப்புற உணவுகளை குழந்தைகளின் உடல் நலன் கருதி அந்த இல்லத்தின் பொறுப்பாளர்கள் ஏற்பதில்லை. ஆகையால், அவர்களே சமைத்து கொடுக்கின்றனர்.. நாம் வெறும் பணம் என்ற காகிதத்தைத் தான் கொடுத்து வர வேண்டியுள்ளது.

நல்ல தரமான இனிப்பு வகைகள் கூட அவர்கள் ஏற்பதில்லை. அவர்களின் செயலும் நல்லது தானே.. குழந்தைகளின் உடல் நலன் தானே முக்கியம்..??!:icon_rollout:

பூவின் இந்த புகழுரைக்கெல்லாம் தகுதியானவர் உங்களைப் போன்ற நல்நெஞ்சுடைய எனது தமையனே..!!

மனம் நிறைந்து பாராட்டி ஊக்கமளித்த சிவா அண்ணாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா. :)

பூமகள்
07-05-2008, 05:11 PM
வாசித்து முடித்ததும், அடுத்தவேளை உணவுக்கு என்ன செய்திருப்பார்கள்; காப்பகங்களில் இல்லாமல் இன்னும் எத்தனை குழந்தைகள் வெளியே.. என எல்லாம் சேர்ந்து மனதைக் கனக்கவைத்து விட்டன.
உண்மையில் அந்த அளவுக்கு கவலைப்பட வேண்டியதில்லை அமரன் அண்ணா. எப்படியும் உணவு எல்லா வேளைகளுக்கும் குழந்தைகளுக்கு கிட்டிவிடும்..

நாங்கள் சென்றது.. எங்கள் வீட்டின் முக்கிய உறுப்பினரின் பிறந்த நாளுக்காக உணவு கொடுத்து குழந்தைகளை மகிழ்விக்க..!!

அடுத்த நாள் இந்தியாவின் சுதந்திர தினம் என்பதால், பலரும் முந்திக் கொண்டு, முந்தைய நாள் முதலே... தங்களின் பங்களிப்பை முன்பதிவு செய்து கொண்டனர்.. ஆகவே, கவலைப்படும் அளவு மனிதம் இன்னும் செத்துவிடவில்லை என ஆறுதல் அடையலாம் அமரன் அண்ணா.

நல்லவேளையாக, எங்களுக்கு ஒருவேளையேனும் பரிமாற வாய்ப்பு கிட்டியது. அதற்கு உண்மையிலேயே நாங்கள் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். :traurig001::traurig001:

-----------------------------------
எனது எழுத்து இன்னும் செதுக்கப்பட வேண்டும்.. தங்களின் விமர்சனம் மிகச் சரி அமரன் அண்ணா.. இன்னும் நுட்பமான உணர்வுகளை உங்களில் உருவாக்க விரும்புகிறேன்.. நிச்சயம் அதை நோக்கி முனைவேன்..!!

தங்க(ள்) மனசுடன் வாழ்த்தியமைக்கு நன்றிகள்..!! :icon_rollout:

Keelai Naadaan
07-05-2008, 06:57 PM
அருமையான விஷயத்தை அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
நன்றிகள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

நாங்கள் ஒருமுறை முதியோர் இல்லத்துக்கு போயிருந்தோம். அதுவும் மறக்க முடியாதது.

மதி
08-05-2008, 03:33 AM
அழகான நடையில் அமைந்த அருமையான பதிவு.. வேகமாய் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் இம்மாதிரி சில இளைப்பாறல்கள் மனநெகிழ்வை தரும்.

நல்லதொரு நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றி.

lolluvathiyar
11-05-2008, 08:34 AM
ஆனால், நான் அடைந்த அந்த சிறந்த நுட்பமான உணர்வுகளை என் மனசாட்சிக்குக் சொல்வதாக எண்ணி இங்கு தெரிவிக்கிறேன்.

அருமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்க பெற்றது. அதை நினைத்து பூரித்து போனேன். இது போன்ற அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருகிறது. ஆனால் உன்னை போல அந்த உனர்ச்சியை அழகாக எழுத தெரியவில்லை பூமகள். உன்னுடை பதிப்பு வாழ்த்துவதற்க்கு பதில் இந்த புனித கடமையை தொடர்ந்து செய்து சந்தோசத்தை அனுபவி என்று சொல்லி கொள்கிறேன்.

யவனிகா
11-05-2008, 10:56 AM
தாமதமாகத் தான் பூவின் இப்பதிவைக் கண்டேன்.

சில பதிவுகள் பாக்கும் போது ஆரவாரமாகப் பின்னூட்டம் இடத் தோன்றும். சில பதிவுகள் கிண்டலாக பின்னூட்டம் எழுதச் சொல்லும். சில பதிவுகள் நம்மை கலங்கச் செய்து, அதையே எழுத்தில் தொனிக்க வைக்கும்....சில பின்னூட்டம் போட வேண்டாம்...மௌனமான அங்கீகாரமே இதற்கு நல்ல பின்னூட்டம் என்ற நினைப்பைத் தோற்றுவிக்கும்....

ஆழமான பதிவுகள்...அழகான பின்னூட்டங்களால்...இன்னும் மிளிர்கின்றன.
சில பதிவுகள்...படிப்பவர் நெஞ்சில் பதிந்து....அவர்களின் மௌனத்தையே பின்னூட்டமாய் பெற்று...இன்னும் ஆழமாகின்றன.அப்படியான ஒரு பதிவு.

பூவின் வார்த்தைப் பிரயோகங்கள் நன்றாய் அமைந்துள்ளன.

இந்த மாதிரி உணர்வு முதல் முறை என்பதால் மனத்துக்கு அதனை கையாளும் வலிமை கூட இல்லாமலிருந்தது.

இந்த வாக்கியத்தை ரசித்தேன் பூ. சில உணர்வுகள் ஆயிரம் தரம் அனுபவிக்கப்பட்டிருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும்...மனம் கையாளத் தடுமாறத்தான் செய்கிறது.

வாழ்த்துக்கள் பூ....ஆரவாரமில்லாத அழகான செதுக்கலாய் இந்தப் பதிவுவுக்காக.

பூமகள்
11-05-2008, 11:19 AM
நாங்கள் ஒருமுறை முதியோர் இல்லத்துக்கு போயிருந்தோம். அதுவும் மறக்க முடியாதது.
வாய்ப்புகள் ஏற்படுத்தி, அடிக்கடி சென்று வாருங்கள் அண்ணா..!!:icon_rollout::icon_rollout:
நம்மால் நாற்பது பேரை சிரிக்க வைக்க முயன்றோம் என்ற ஆறுதலும் மன நிறைவும் இன்னும் நூறாண்டுகள் நம்மை நலமுடன் நிச்சயம் வாழ வைக்கும்..!!:icon_b::icon_b:


இன்னும் இன்னும் எத்தனையோ நல்லுள்ளங்கள் சொல்லாமலே ஆயிரம் நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர்...

எனது இந்த சின்னஞ்சிறிய செயலுக்கு இத்தனை பெரிய பாராட்டுகள் அதிகமெனக் கருதுகிறேன்..!! வெட்கமாகவும் இருக்கிறது...:icon_rollout:

பின்னூட்டத்துக்கு நன்றிகள் அண்ணா.

வேகமாய் எதையோ நோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் இம்மாதிரி சில இளைப்பாறல்கள் மனநெகிழ்வை தரும்.
உண்மையாக அனுபவித்து சொல்கிறேன் மதி... இந்த மாதிரியான நிமிடங்கள் நிச்சயம் ஒருவருக்குக் கட்டாயம் தேவை..!!:icon_ush:
பின்னூட்டத்துக்கு நன்றிகள் மதி.

பூமகள்
11-05-2008, 11:26 AM
உன்னுடை பதிப்பு வாழ்த்துவதற்க்கு பதில் இந்த புனித கடமையை தொடர்ந்து செய்து சந்தோசத்தை அனுபவி என்று சொல்லி கொள்கிறேன்.
வெகு நாட்களுக்குப் பிறகு வாத்தியார் அண்ணாவின் பார்வையில் எனது பதிவு...!!
நலமாக இருக்கீங்களா வாத்தியார் அண்ணா?? :)
-------------------------------------------------
உங்களின் வார்த்தைகளை நிச்சயம் பின்பற்ற முயல்வேன்..!! :icon_rollout:
இத்தகைய நல்ல உணர்வு இன்னும் அமரன் அண்ணா சொன்னது போல
அழகாக செதுக்கியிருக்கலாம்...

மன்றம் தந்த மகத்தான பாடசாலையில் இன்னும் கற்றுக் கொண்டே இருக்கும் குழந்தை நான்..!!

எழுத்துகள் மேம்பட்டிருப்பதாக சொல்லியிருப்பது சற்று ஆறுதல்.. இன்னும் எனது எழுத்துகள் சரியான முகவரியை அடையவில்லையென்பதை என்னால் உணர முடிகிறது... நிச்சயம் அதை நோக்கி எனது பயணம் தொடரும்..!!

இந்த குட்டிப் பூ செய்த இந்த மிகச் சிறிய செயலால்....
உங்களின் மனம் நெகிழ்ந்த பாராட்டுக்கு தகுதியானவளா என்ற கேள்வியும் என்னுள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது...:icon_ush::confused:

ஆயினும்.. உங்க அன்பின் வெளிப்பாட்டுக்கு நிச்சயம் நான் தலைவணங்குகிறேன்..!! :traurig001::traurig001:

மிக்க நன்றிகள் வாத்தியார் அண்ணா.

பூமகள்
11-05-2008, 11:43 AM
சில பதிவுகள்...படிப்பவர் நெஞ்சில் பதிந்து....அவர்களின் மௌனத்தையே பின்னூட்டமாய் பெற்று...இன்னும் ஆழமாகின்றன.அப்படியான ஒரு பதிவு.
ரொம்ப அழகா சொன்னீங்க அக்கா..:icon_b::icon_b:

அத்தகைய படைப்புகள் தருபவரிடமிருந்தே இப்படி ஒரு பாராட்டு பெறத் தகுதியானவளாக என்னை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது நீண்ட நாள் குறிக்கோள்..!!

ஒரு படி அதில் முன்னேறியிருப்பதாக மட்டும் கொள்ளலாம்.. இன்னும் இன்னும் தங்களைப் போன்ற படைப்பாளிகளை அடைய பயணப்படும் உயரம் இமயம் போல இருக்கிறது...

மடுவிலிருந்து பார்த்து எழுத்துப் பழகி வருகிறேன்.. உங்களின் அன்பான ஆசிகளோடும் வாழ்த்துகளோடும் இன்னும் எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையோடு உங்கள் கை பிடித்து வழி நடக்கிறேன்..:icon_rollout:

மனம் நிறைந்து பாராட்டியதற்கு நன்றிகள் யவனி அக்கா.:)

mukilan
13-08-2008, 04:56 PM
பூவின் மனம் மட்டுமல்ல நம் அனைவரையும் நெகிழச் செய்த அந்த சந்திப்பிற்கான தினம் நாளைதான்.

மீண்டுமொருமுறை அந்தக் குழந்தைகளைக் காணப்போகும் சந்தோசம்.. இல்லையா பூ!

உள்ளத்து உணர்ச்சிகளை நேர்த்தியாக நீ சொல்வதே தனி அழகுதான். காட்சிகள்

படிப்பவர் மனம் முன் விரிய எழுதுவது அரிய கலை அல்லவா!

சில நேரங்களில் ஆடம்பரமான விழாக்களை விட இப்படி ஆதரவு இல்லாத குழந்தைகளுடன் கொண்டாடும் எளிய விழாவே மன நிறைவைத் தரும்.

ஓராண்டுகட்கு முன் மன்றத்து சொந்தங்கள் என்ன உணர்வில் இருந்தார்களோ அதே உணர்வோடு இன்று நான்.

சிந்திக்க தூண்டிய பதிவு.

பூமகள்
13-08-2008, 05:32 PM
உண்மை தான் முகிலண்ணா...

மீண்டும் குழந்தைகளைக் காணச் செல்வதே ஒரு புது விதமான எண்ணக் கலவையை மனதில் வடிக்கிறது..

இந்த முறை எந்தெந்த வெளி/உள் மாற்றங்கள் அங்கு நிகழப் போகின்றன என்று சென்று வந்த பின் பகிர்கிறேன்..

மேன்மையானவர்கள் முன் இந்தத் திரியைச் சமர்ப்பிப்பதையே பெரும் மன நிறைவைத் தருகிறது.

நன்றிகள் முகிலண்ணா. :)

இளசு
13-08-2008, 05:50 PM
என் இதயத்துக்கு இன்னும் நெருக்கமாகிவிட்ட பாமகளுக்கும், பாசக்குடும்பத்துக்கும்
என் நெஞ்சின் நெகிழ்ச்சியை அன்புக்காணிக்கையாக அளிக்கிறேன்..

அடைமழை அமுதம், முதியவர்களும் குழந்தைபோல், இதயம் கையாள இயலா உணர்ச்சிப் பெருக்கு,
பலவகை இசைக்கருவிகளின் சேர்ந்திசைபோல், கைகுலுக்கியதில் பூரிப்பு ---

உணர்வுகளை சரளமான வரிகளில் வடித்த பாமகளுக்கு சிறப்புப் பாராட்டுகள்!

நல்லுணர்வுகளைத் தட்டி எழுப்பும் இவ்வகைப் பதிவுகளுக்கு
அதிதீவிர ஆதரவாளன் நான்..

என் அன்பும் ஆசியும் ஆதரவான ஊக்கமும் தங்கைக்கு!

தயங்காமல் இவ்வகைப் பதிவுகளை பகிர என் அன்புக்கட்டளை!

பூமகள்
13-08-2008, 06:01 PM
அண்ணலின் கடைக்கண் பார்வைக்காக இப்பதிவு இத்தனைக் காலம் காத்திருந்தது வீண் போகவில்லை...!!

எழுதப்படாமலே போயிருந்தால்.. இதயத்துக்கு நெருக்கமானவர்களை இனம் கண்டிருக்க இயலாது போயிருக்குமோ... நல்லவேளை... காலத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

பெரியண்ணாவின் பூரிப்பில் மனம் நிறைகிறது..

நல்லுணர்வை தட்டி எழுப்பும் எப்படைப்பாயினும் இந்த தங்கையின் ஆதரவும் அங்கிருக்கும்... இந்த விசயத்தில் பெரியண்ணா போலவே இருப்பதில் சின்ன ஆத்ம திருப்தி..

நல்லவர்கள் உடன் இருக்க.. வாழ்க்கை இனிமையாகுமென்று நம்பிக்கை பிறக்கிறது..

இவ்வகை பூரிப்பை அடிக்கடி உங்கள் முகத்தில் ஏற்படுத்தும் ஆவலுடன் பெரியண்ணாவின் கட்டளையை நிறைவேற்றுவேனென உறுதி கூறுகிறேன். :)

விகடன்
17-08-2008, 08:15 AM
நல்லதோர் பதிவு.
எம்மையும் அந்தக் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டிருந்தீர்கள்.

நீங்கள் சொல்லும்போது, எனக்கும் ஓர் அனுபவம் ஞாபகத்திற்கு வருகிறது. அதை கதையாக எழுதுவதை விட இரத்தினச் சுருக்கமாக இதிலேயே தெரிவிப்பது சிறந்தது எனக்கருதுகிறேன். :D

இறுதியாக ஆட்டிப்படைத்த சுனாமியால் பல குடும்பங்கள் நிர்க்கதியாகியதை அறிந்திருப்பீர்கள். அதில் தன்னுடமை, உறவினர்கள அனைவரையும் இழந்தவர்கள் பலர். அவர்களில் சிலர் எமது பிரதேசத்திலிருக்கும் அரசினர் மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் இன்றும் என்னில் மலர்ச்சியுடன் இருக்கின்றனர்.
ஒருவர், தன் சகல சொந்தங்களையுமிழந்து தனியே சிறு காயங்களுடன் அனுமதைக்கப்பட்டவர். அந்த வார்ட்டில் பலர் தமது இழப்புக்களை சொல்லும்போது ஆறுதல் சொல்லி, பல நகைச்சுவைக்கதைகள் சொல்லி கதைப்பதிலும் நகைச்சுவையினை கையாண்டவர். எம்மில் சிலர் அவரை சுற்றி இருந்து அவரின் நகைச்சுவையை இரசிப்பதுடன், அங்கிருப்பவர்களுடனும் கதைத்துவந்தோ. ஒருதடவை தற்செயலாக வார்ட்டின் பின்புறத்திற்கு நானும் எனது நண்பனும் சென்றிருந்தபோது அவர் அழுதவண்ணமிருந்தார். ஏன்? என்றி விசாரித்தபோதுதான் நமெக்கே தெரியும், அவர்மட்டுந்தான் சுனாமியால் எஞ்சியிருபது.

இரண்டாவது நபர்...
உடலில் பல ரணங்களுடன் படுத்தபடுக்கையிலிருந்தவர். ஆரம்ப காலத்தில் நாமும் அவருடன் செலவழித்த குறைவுதான். அதேவேளை எம்முடைன் வந்திருந்தபலர் அவரை ஒதுக்கியே வைத்தாற்போல் நடந்துகொண்டனர். அதனால் என்னுடன் இன்னும் சிலர் அவருடன் சற்றே செலவழிக்கும் நேரத்தை அதிகப்படுத்துக் கொண்டோம். பெரிதாக ஒன்றுமில்லைங்க. அலட்டல்த்தான். அவரின் தனிமையுணர்வை மறக்கடிப்பது... அப்போது அவர் சில வரிகள் சொன்னார். "இப்பதாங்க மனம் ரொம்ப சந்தோஷமாய் இருக்கு. என்னோட ஒருத்தரும் கதைக்க விரும்புவதில்லை. நானும் இப்படியாகீட்டேன். இனி இருந்தென்ன? செத்தென்ன ? என்று விரக்தியிலிருந்தேன். நீங்கள் எல்லாரும் என்னோடு சந்தித்தது மிகசும் மனதிற்கு சந்தோஷமாய் இருக்கிறது..." என்று சொன்னார்.

இது இரண்டும் என் மனதில் பதிந்திட்ட நிகழ்வுகள். ஏதோ சொல்லவேண்டும் போலிருந்தது. அலட்டிவிட்டேன் :D