PDA

View Full Version : சிறை வாசம்



நாகரா
03-05-2008, 02:02 PM
இந்த சிறைக்குள்
இன்னும்
எத்தனை நாள்?!

நூலிழைக் கம்பிகளை
ஓர் நொடியில்
அறுக்க முடியும்.

அங்கங்களை அசைக்கத்
தலை
உத்தரவிட்டால் போதும்.

தலையோ
வேறு யாருக்கோ
அடங்கிக் கிடக்கிறது
அங்கங்களெல்லாம்
முடங்கிக் கிடக்க.

யாரோ
ஏதோ
உத்தரவிட
தலை
யோசிக்காமல்
ஆடிக் கொண்டிருக்கிறது.

சிறை வாசம் தொடர்கிறது.

ஆட வைத்து
ஆட வைத்து
தலை கழற்ற
சதி நடக்கிறது.

விதியென்று
கதி கெட்டு
மதி நம்ப
ஆட்டுவோரைத்
துதி செய்து
சிறை வாசம் தொடர்கிறது.

ஓவியன்
03-05-2008, 02:22 PM
தலமை தக்கதாயிருந்தால்...
இலகுவில் இயல்பாய்,
நிறைவேறிடும் காரியங்கள்...!!

சிறைகளிலிருந்து மீள மட்டுமல்ல
வாழ்வின் பல பரிமாணங்களுக்கும்
பொருந்தும் இந்த உண்மை...!!

நாகரா
03-05-2008, 03:46 PM
தலைமை தக்கதாயிருந்தால்...
இலகுவில் இயல்பாய்,
நிறைவேறிடும் காரியங்கள்...!!

சிறைகளிலிருந்து மீள மட்டுமல்ல
வாழ்வின் பல பரிமாணங்களுக்கும்
பொருந்தும் இந்த உண்மை...!!

தலைமை பற்றிய உம் கருத்து முற்றிலும் உண்மை, ஓவியன். நன்றி

விகடகவி
06-05-2008, 06:10 AM
சிரைகள் இன்னும்
சிரைப்பட்டு உள்ள
சிவந்த தாமரை
இதழ்; தூக்கி எறிய
எப்படி மனம்
வந்ததடி
பூங்குயிலே!!

உந்தன் கவிக்கு என் நன்றி

kampan
08-05-2008, 09:56 AM
சிங்கத்தைதான் சிறையிலீடுவார்கள்
குரங்கனை யாரும் சிறையிலிடுவார்களா?

நீ சிங்கமடா
சிறைகளெலெல்லாம் உனக்கு
குகைகளாகும் காலம்
சிக்குமடா பொறுத்திரு

பாலகன்
08-05-2008, 10:32 AM
அருமையான கவிதை நண்பரே,,,,,,,,,,, வாழ்த்துக்கள். நாகரா

தலைக்குள் ஒன்னுமில்லாதவனை மட்டுமே தலைமை சிறை பிடிக்குமோ?

அன்புடன்
பில்லா

நாகரா
09-05-2008, 06:28 AM
விகடகவி, கம்பன், பில்லா, உம் பின்னூட்டங்களுக்கு நன்றி

ஆதவா
19-06-2008, 10:06 AM
இந்தக் கவிதையினைப் படிக்கும் போது ஏதோ ஒரு ஜனநாயகநாட்டின் ஏதோ ஒரு முண்டாசுப் பிரதமரே ஞாபகத்திற்கு வந்தார்.......... :D

நல்ல கவிதை...

நாகரா
19-06-2008, 03:06 PM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி ஆதவரே!